search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 227938"

    • முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிக்கு புதுக்கோட்டை கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார்
    • விளையாட்டு வீரர்கள் பதிவு செய்வதற்கான கால அவகாசம் 29ம்தேதி (ஞாயிற்று கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது.தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி பொதுப்பிரிவில் (15 வயது முதல் 35 வயது வரை) உள்ள ஆண்கள் மற்றும் பெண்களுக்கு மாவட்ட அளவில் கபாடி, சிலம்பம், தடகளம், இறகுபந்து, கையுந்துபந்து, கிரிக்கெட் போன்ற போட்டிகள் நடத்தப்படும்.

    பள்ளி (12 வயது முதல் 19 வயது வரை) மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு (17 வயது முதல் 25 வயது வரை) மாவட்ட அளவில் கபாடி, சிலம்பம், தடகளம், கூடைபந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துப்பந்து மற்றும் மேசைப்பந்து, கிரிக்கெட் போட்டிகளும், மண்டல அளவில் டென்னிஸ், பளுதூக்குதல், கடற்கரை கையுந்துபந்து போட்டிகள் ஐந்து பிரிவுகளின் கீழ் நடத்தப்படும்.

    புதுக்கோட்டை மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளின் பதிவுகளை அதிகரிக்கும் பொருட்டு, விளையாட்டு வீரர்கள் பதிவு செய்வதற் கான கால அவகாசம் வரும் 29-ந் தேதி (ஞாயிற்று கிழமை) வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள விளையாட்டு வீரர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் இணையதளத்தில் பதிவு மேற்கொள்ள கேட்டுக்கொள்ள ப்படுகிறது. நேரடியாக போட்டிகளில் பங்குபெற அனுமதி இல்லை. கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரை 7401703498 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.


    • ஏர் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டி
    • செங்குந்தபுரத்தில் நடைபெற்றது.

    கரூர் செங்குந்தபுரத்தில் துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. ஏர் ரைபிள் ரக துப்பாக்கியில் இலக்கை நோக்கி சுடும் பல்வேறு பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சுட்டனர். 

    • மாவட்ட அளவில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டத்தில், பள்ளி கல்வித் துறை சார்பில் கடந்த நான்கு நாள்களாக நடைபெற்று வந்த மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நிறைவடைந்தது. கீழப்பழுவூரில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் 38 மாவட்டங்களில் இருந்து 14, 17, 19 வயதுடைய பள்ளி மாணவ, மாணவிகள் 3,500 பேர் கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுகளை வழங்கி, படிப்புடன் இதர திறமைகளையும் மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். போட்டிகள் நிறைந்த உலகில் தனித் திறன்கள் நமக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.

    போட்டிக்கான ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், உடற்கல்வி இயக்குநர் வேல்முருகன், உடற்கல்வி ஆசிரியர்கள் அருண்மொழி, ரமேஷ், திருமூர்த்தி, சேகர், ஷாயின்ஷ, ரவிச்சந்திரன், மோகன்தாஸ், மரிய பிரிட்ஜித், வீரபாண்டியன், பாண்டியன், ஜாக்குலின் உஷா, மேரி, கரோலின், கண்ணன், சுப்ரமணியன், குறிஞ்சிவேந்தன், வினோத்குமார், தர்மலிங்கம் வந்தியத்தேவன், ரவி, அறிவழகன் ஆகியோர் செய்திருந்தனர்.


    • அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூரில் நடைபெற்ற மாநில அளவிலான சாலையோர சைக்கிள் போட்டியில் மாணவிகள் சாதனை படைத்தனர்
    • இதில் 38 மாவட்டத்தை சார்ந்த 198 மாணவ, மாண–விகள் கலந்து கொண்டனர்.

    அரியலூர்:

    தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் சார்பாக மாநில அளவிலான சைக்கிள் போட்டி அரியலூர் மாவட்ட கல்வி துறையின் சார்பாக கீழப்பழுவூரில் காலை 7.00 மணியளவில் தொடங்கி நடைபெற்றது. இதில் 38 மாவட்டத்தை சார்ந்த 198 மாணவ, மாண–விகள் கலந்து கொண்டனர். போட்டிகள் 14 வயது, 17 வயது மற்றும் 19 வயது மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியே நடைபெற்றது.

    போட்டியை திருமானூர் ஒன்றிய குழு தலைவர் சுமதி சக்கரவர்த்தி, கீழப்பழுவூர் ஊராட்சி மன்றத்தலைவர் தனலெட்சுமி மருதமுத்து, பாஸ்கர், கோவிந்தசாமி ஆகியோர் தொடங்கி வைத் தனர். இந்நிகழ்ச்சியில் அரி–யலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலு–வலர் விஜயலெட்சுமி, மாவட்ட கல்வி அலுவலர் ஜெயா, முதன்மைக்கல்வி அலுவலரின் நேர்முக உத–வியாளர்கள் ராஜப்பிரி–யன், குணசேகரன், பள்ளித் துணை ஆய்வாளர்கள் பழனிச்சாமி, செல்வக் குமார், சரவணன், முதன்மைக்கல்வி அலுவலக கண்காணிப்பாளர் ஆகி–யோர் கலந்து கொண்டனர்.

    போட்டி ஏற்பாடுகளை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜேந்திரன், உடற்கல்வி ஆசிரியர்கள் அருண்மொழி, ரமேஷ், திருமூர்த்தி, சேகர், கண்ணன் ஆகியோர் செய்தி–ருந்தனர்.போட்டியில் வெற்றி–பெற்ற–வர்கள் விபரம் வருமாறு:- 14 வயதுக்குட்பட்டோர் மாணவிகள் பிரிவில் மதுரை அரசு பள்ளி மாணவி பானுஸ்ரீ முதலிடமும், கோவை கோடாநத்தம்பட்டி பள்ளி மாணவி சாதனாஸ்ரீ இரண்டாமிடமும், சிவ–கங்கை பாலாம்பட்டி அரசு பள்ளி மாணவி மதுமிதா 3-ம் இடமும் பெற்றனர்.

    17 வயதுக்கு உட்பட் டோருக்கான மாணவிகள் பிரிவல் கோவை பள்ளி மாணவி கார்த்தியாயினி முதலிடமும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் லயன்ஸ் மெட்ரிக் பள்ளி மாணவி சுவாதிகா இரண்டாமிடமும், கரூர் பசுபதிபாளையம் பள்ளி மாணவி ரமணி மூன்றாமி–டமும் பெற்றனர். 19 வயதுக்கு உட்பட் டோர் மாணவிகள் பிரி–வில் புதுக்கோட்டை பள்ளி மாணவி கோகிலா முதலிடமும், தஞ்சாவூர் அய்யம்பேட்டை பள்ளி மாணவி கீர்த்தனா இரண்டாமிடமும், கரூர் பஞ்சம்பட்டி பள்ளி மாணவி ஜனனி மூன்றாமிடமும் பெற்றனர்.

    • 12-ம் வகுப்பு படிக்கும் மாணவி கனிகா தேர்வு.
    • மாநில அளவிலான சாலையோர சைக்கிள் போட்டிக்கு 11-ம் வகுப்பு மாணவி ஷமீனராகவி தகுதி.

    சீர்காழி:

    தமிழ்நாடு மாநில அளவிலான குடியரசு மற்றும் பாரதியார் தின புதிய விளையாட்டுப் போட்டிகள் அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

    இப்போட்டியானது கம்பு சண்டை, ஒற்றை கம்பு, இரட்டை கம்பு என அனைத்து வயது பிரிவினருக்கும் இப்போட்டி நடைபெற உள்ளது.

    இப்போட்டிக்கு 13 மாணவ, மாணவிகள் சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியிலிருந்து தகுதி பெற்றுள்ளனர். 6-ம் வகுப்பு மாணவி யாழினி, 7-ம் வகுப்பு மாணவி யுவேத்திதா, 9-ம் வகுப்பு மாணவி தீபிகா,

    கீர்த்தனா , 11-ம் வகுப்பு மாணவி ஷாமிலி, 12-ம் வகுப்பு மாணவி கனிகா, எட்டாம் வகுப்பு மாணவர்கள் ரிஷிகாந்த், ஆதவன், நீசார்தின் 9-ம் வகுப்பு மாணவன் சபரிநாதன் மற்றும்

    10-ம் வகுப்பு மாணவர்கள் அஜய், சிவப்பிரவின் ஆகியோர்கள் சிலம்பம் மாநிலப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

    மேலும் மாநில அளவிலான சாலையோர சைக்கிள் போட்டிக்கு 11-ம் வகுப்பு மாணவி ஷமீனராகவி தகுதி பெற்றுள்ளார்.

    மாநில போட்டிக்கு தகுதி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி பள்ளி உதவி தலைமை ஆசிரியர்கள் வரதராஜன், துளசிரங்கன், மேலும் உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன், சக்திவேல், ஹரிஹரன், ராகேஷ் மேலும் பள்ளியின் முன்னாள் செயலர் பாலசுப்பிர மணியன், பள்ளி செயலர் ராமகிருஷ்ணன், பள்ளி குழு தலைவர் சொக்கலிங்கம் ஆகியோர் வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர்.

    • பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு போட்டி நடைபெற்றது.
    • நகராட்சி ஆணையர் தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சியின் சார்பில் நம்ம ஊரு திருவிழாபிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை வலியுறுத்தி 8 கி.மீமாரத்தான் ஓட்டம் நடைபெற்றது. இந்த மாரத்தான் ஓட்டப்பந்தயத்தில் ஆண் பெண்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

    வேதாரண்யம் ராஜாஜி பூங்காவில் தொடங்கிய மாரத்தான் ஓட்டப்பந்தயத்தை நிகழ்ச்சிக்கு நகரமன்ற தலைவர் புகழேந்தி தலைமை வகித்தார்

    வேதாரண்யம் கோட்டாட்சியர் ஜெயராஜ் பவுலின் பெண்கள் கான மாரத்தான் ஒட்ட பந்தயத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார் பின்பு ஆண்களுக்கான 8 கி.மீ ஓட்டப்பந்தயத்தை டிஎஸ்பி முருகவேல் துவக்கி வைத்தார். ஒட்டபந்தயதில் 1500-க்கும் மேற்பட்ட ஆண் பெண்கள் கலந்துகொண்டனர்

    நிகழ்ச்சியில்நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர் நிகழ்ச்சியில்கோடியக்கரை வணச்சரகர் அயூப் கான் நகராட்சி பொறியாளர் முகமது இப்ரஹீம் கூட்டுறவு சங்க இயக்குனர் உதயம் முருகையன், ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் நகரமன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பொதுமக்கள்கலந்து கொண்டனர்வெற்றி பெற்ற வீரர்களுக்கு நகர மன்ற தலைவர் புகழேந்தி பரிசுகளை வழங்கினர்.

    • விளையாட்டுப் போட்டியில் புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் நர்சிங் கல்லூரி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்
    • 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றார்.

    புதுக்கோட்டை:

    டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகம் சென்னை கிழக்கு மண்டல கல்லூரிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் மௌண்ட் சீயோன் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவியர்கள் பங்கேற்று சாதனை படைத்தனர். இறுதியாண்டு மாணவர்கள் ஆர்.விக்ரமன் நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கபதக்கமும், 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப்பதக்கம் வென்றார்.

    எம்.ஜீவா 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும், குண்டு எறிதல் போட்டியில் வெள்ளி பதக்கமும் வென்றார். ஆர்.மோகன் பிரசாத் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கமும், நீளம் தாண்டுதல் போட்டியில் வெண்கலப்பதக்கமும் வென்றார். இரண்டாம் ஆண்டு மாணவி வி.கீர்த்தியா நீளம் தாண்டுதல் போட்டியில் தங்கபதக்கம் வென்றார். இரண்டாம் ஆண்டு மாணவர் எஸ்.அப்துல்லா அசீஸ் 800 மீட்டர் ஒட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதகம் வென்றார்.

    போட்டிகளில் உற்சாகமாக பங்கேற்று பதக்கங்கள் வென்ற சாதனையாளர்களை மௌண்ட் சீயோன் கல்வி நிறுவனங்களின் தலைவர் பிளாரண்ஸ் ஜெயபாரதன், கல்லூரியின் இயக்குனர், முனைவர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன், கல்லூரியின் ஒருங்கினைப்பாள பேராசிரியை விவியன் ஜெய்சன், கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜாஸ்மின் ஷீலா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    • பள்ளி மாணவர்களுக்கான வாலிபால் போட்டி நடந்தது
    • போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழிங்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்,

    விருதுநகர் மாவட்ட கைப்பந்து கழகம், ஜி.எஸ். இந்து மேல்நிலைப்பள்ளி மற்றும் ஜி.எஸ். பாய்ஸ் வாலிபால் கிளப் இணைந்து பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட வாலிபால் சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது.

    இந்து மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியினை பள்ளியின் செயலர் கிருஷ்ணன் தொடங்கி வைத்தார். போட்டியில் 15 பள்ளி அணிகள் பங்கு பெற்றனர். இறுதிப் போட்டியில் இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி அணியினரும், ஸ்ரீவில்லிபுத்தூர் குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி அணியினரும் விளையாடினர். இதில் இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளி அணி மாணவர்கள் 3-க்கு 2 என்ற கணக்கில் முதலிடம் பெற்று கோப்பையை வென்றனர். குருஞான சம்பந்தர் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இராண்டாமிடம் வென்றனர். வெற்றி பெற்ற வீரர்களுக்கு காவல்துறை துணை கண்காணிப்பாளர் சபரிநாதன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். போட்டியில் பங்குபெற்ற மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழிங்கப்பட்டது.

    • பொங்கலையொட்டி ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும்
    • இளைஞர்களுக்குள் கடும் போட்டி நிலவியது

    புதுக்கோட்டை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை - தஞ்சை மாவட்ட ங்களின் எல்லை கிராமங்களான மேற்பனைக்காடு, செரியலூர், வேம்பங்குடி, பைங்கால், ஆவணம், குருவிக்கரம்பை, சனாகரை, குலமங்கலம், நெயாவத்தெளி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் போர் தேங்காய் எனப்படும் தேங்காய் உடைக்கும் போட்டி நடைபெறுவது வழக்கம். அதே போல் இந்த ஆண்டும் போட்டிகள் நட ந்து வருகிறது.

    எதிர் எதிர் திசையில் இருவர் தங்கள் கைகளில் தேங்காய்களை நேருக்கு நேராக மோதிக் கொள்வதும், இந்த மோதலில் உடையும் தேங்காயை மோதி உடைத்தவர் எடுத்துக் கொள்வார். இந்த மோதலுக்கான ஒரு போர் தேங்காய் ரூ.300 முதல் ரூ.500 வரை விலை கொடுத்து வாங்கி வருகின்றனர். ஒரே தேங்காயயை ெ காண்டு பல தேங்காய்களை உடைத்து செல்பவர்களும் உண்டு. இதற்கென்றே தனித்துவம் வாய்ந்த தேங்காய்களை பொங்கலுக்கு மூன்று மாதங்களுக்கு முன்பே போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் வா ங்கி தயார் செய்துவிடுவார்கள்.

    இந்த போட்டியில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த இளைஞர்கள் பைகளில் தேங்காய்களுடன் வந்து விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு தேங்காய்களை நேருக்கு நேர் மோத வைத்தனர்.

    இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    • திருச்செங்கோடு நந்தவனம் தெரு பகுதியில் ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டுபல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம்.
    • அதன்படி அவர்களுக்கு கோழி பிடிக்கும் போட்டி நடத்தப்பட்டது. ஒரு திடலில் வட்டம் வரைந்து அதன் நடுவே போட்டியாளரை நிற்க வைப்பார்கள்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நந்தவனம் தெரு பகுதியில் ஆண்டுதோறும் பொங்கலை முன்னிட்டுபல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளை அடக்கி வருகின்றனர். பெண்கள் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள முடியாது என்பதால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு புதுமையான போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி அவர்களுக்கு கோழி பிடிக்கும் போட்டி நடத்தப்பட்டது. ஒரு திடலில் வட்டம் வரைந்து அதன் நடுவே போட்டியாளரை நிற்க வைப்பார்கள்.

    போட்டியாளரின் கண்கள் கட்டப்பட்டு அவரது ஒரு காலில் கயிறு கட்டப்படும். கயிறின் மற்றொரு முனை கோழியின் ஒரு காலில் கட்டப்படும். வட்டத்தை தாண்டாமல் போட்டியாளர் கோழியை பிடிக்க வேண்டும் என்பதே விதி. குறிப்பிட்ட நேர அளவிற்குள் கோழியை பிடிக்க வேண்டும்.

    கோழியை பிடிக்கச் செல்லும்போது வட்டத்தை தாண்டி சென்று விட்டாலோ அல்லது குறிப்பிட்ட நேரத்திற்குள் கோழியை பிடிக்க முடியாமல் இருந்தாலோ அவர்கள் தோல்வி அடைந்ததாக கருதப்படுவார்கள். குறிப்பிட்ட கால அளவுக்குள் வட்டத்தை தாண்டாமல் கோழி பிடிப்பவர்கள் வெற்றியாளர்களாக கருதப்படுவார்கள். இந்த போட்டியில் குழந்தைகள், பெண்கள் என பலரும் கலந்து கொண்டு கோழியை பிடித்தனர்.

    இந்த போட்டிக்கு திருச்செங்கோடு பகுதியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக கொரோனா கெடுபிடிகளால் இந்த போட்டிகள் நடைபெறாமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் விளையாட்டு களைகட்ட தொடங்கியுள்ளது. 

    • வடகாடு-மாங்காடு ஏவி பாய்ஸ் அணியினர் முதல் பரிசு
    • வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது

    புதுக்கோட்டை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆலங்குடி பகுதிகளில் பல்வே று கிராமங்களில் வழுக்கு மரம் ஏறும் போட்டி பாரம்பரியமாக நடத்த ப்பட்டு வருவ து வழக்கம். அதன்படி நேற்று பொங்கல் விழாவை முன் னிட்டு மாங் காடு கிராமத் தில் அப்பகுதி இளைஞர்களால் நடத்தப்ப ட்ட வழுக்கு மரம் ஏறும் போட்டியில் சுமார் 40 அடி உயரம் கொண்ட கிரீ ஸ்,விளக் கெண்ணெய், சோற்றுக்கற்றாழை மற்றும் வழுக்கும் தன் மை கொண்ட எண்ணெய்கள் ஊற்றப்பட்ட மரம் போட்டிக்காக அமை க்கப்பட்டிருந்தது. இந்த போட்டியில் ஒரு குழுவுக்கு ஐந்து பேர் வீதம் 4 குழுக்களை சேர்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டனர். போட்டியின் இறுதியில் மிகுந்த பார்வையாளர்களின் உற்சாகத்தோடு வடகாடு-மாங்காடு ஏவி பாய்ஸ் அணியினர் வெற்றி பெற்று 5000 ரூபாய் பரிசை வென்றனர்.

    • சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்புகள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்படுத்தப்படும்.
    • குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் அறிவிப்பு

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு காவல்துறை சார்பில் 4 தலைப்புகளில் ஓவியப்போட்டி கடந்த ஆண்டு நடந்தது. அப்போது சுமார் 3 ஆயிரம் ஓவியங்கள் கிடைக்க பெற்று 12-7-2022 அன்று பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டு சிறப்பான முறையில் ஓவியங்கள் வரைந்தவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதேபோல இந்த ஆண்டும் போட்டிகள் நடக்கின்றன.

    கல்வியின் நோக்கம் ஒருவரின் சொந்த வாழ்க்கையை மேம்படுத்துவது மட்டுமல்ல மற்றவர்களின் வாழ்க்கையையும் மேம்படுத்துவதும் ஆகும். சமூகமும், உலகமும் தற்போது இருப்பதை விட சிறந்த இடத்தில் இருப்பதை உறுதி செய்வதும் ஆகும். எனவே காவல்துறை தொடர்பான பல்வேறு அம்சங்களை பொறுத்து மாணவர்களிடையே பங்கேற்பு கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் வகையில் இந்த ஆண்டு வரைதல், ஓவியம், சுவரொட்டி ஆகிய போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்.

    "போதை பொருட்கள் நமக்கு வேண்டாம், பெண்கள் மற்றும் குழந்தைகள் உரிமைகள், மூத்த குடிமக்கள்-நமது பொக்கிஷம் மற்றும் நமது பெருமை, சைபர் கிரைம் குற்றங்களில் கவனமாகவும், பாதுகாப்பாகவும் இருங்கள், காவல்துறை வழங்கும் சேவைகள் பற்றிய எனது பார்வை" ஆகிய தலைப்புகளில் போட்டியானது நடக்கும். 1-ம் வகுப்பு முதல் 7-ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை ஒரு பிரிவாகவும், அனைத்து கல்லூரி மாணவர்களுக்கு ஒரு பிரிவாகவும் என 3 பிரிவுகளாக போட்டி நடக்கும். ஒரு மாணவர் அதிகபட்சம் 3 தலைப்புகளில் பங்கேற்கலாம்.

    மாணவர்கள் அவரவர் விருப்பப்படி ஒன்றுக்கு மேற்பட்ட கருப்பொ ருள்களில் பங்கேற்கலாம். மாணவர்களின் படைப்பு களை பெறுவதற்கான கடைசி தேதி வருகிற 20-ந்தேதி ஆகும். மாணவர்களின் படைப்புகளை ஒவ்வொரு கல்லூரியும், பள்ளியும் அனைத்து ஓவியங்களையும் சேகரித்து அதனை ஒரு கவர் கடிதத்துடன் அனுப்ப வேண்டும். நேரடி யாகவோ அல்லது தபால் மூலமாகவோ நாகர்கோவி லில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்துக்கு அனுப்ப வேண்டும். 3 உறுப்பி னர்களை கொண்ட குழு மாண வர்களிடம் பெறப்பட்ட அனைத்து படைப்பு களையும் ஆய்வு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த படைப்புகளுக்கு வெகுமதிகள் வழங்கப்படும்.

    முடிவுகள் 25-ந்தேதி அறிவிக்கப்படும். சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்பு கள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும்.லும் சிறந்த தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் படைப்பு கள் மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்கள் மற்றும் பிற அலுவலக வளாகங்களில் காட்சிப்ப டுத்தப்படும். மேலும் சந்தேங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 94981 03903 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×