என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மின்கம்பம்"
- மஹிந்திரா தார் எஸ்யூவியின் பின்னால் இருந்து ஹோண்டா அமேஸ் கார் மோதியுள்ளது.
- காரை ஓட்டிச்சென்ற பெண் காயங்களின்றி உயிர் தப்பினார்.
அரியானா மாநிலம் குருகிராம் பகுதியில் ஒரு கார் ஒன்று மின்கம்பத்தில் ஏறி அதில் சிக்கிக் கொண்டது. பின்னால் அதிவேகமாக வந்த மற்றொரு கார் மோதியதால் விபத்து நடந்துள்ளது.
மஹிந்திரா தார் எஸ்யூவியின் பின்னால் இருந்து ஹோண்டா அமேஸ் கார் மோதியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த மஹிந்திரா தார் எஸ்யூவி மின்கம்பத்தில் ஏறி, சாய்ந்த நிலையில் அதில் சிக்கியது.
உள்ளூர் மக்களின் உதவியால் காரை ஓட்டிச்சென்ற பெண் காயங்களின்றி உயிர் தப்பினார். மின்கம்பத்தில் ஏறிய காரின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.
விபத்து ஏற்படுத்திய ஹோண்டா அமேஸ் காரில் இருந்த இருவரும் அங்கிருந்து உடனே தப்பிச் சென்றுவிட்டனர்.
விபத்து குறித்து தகவல் அறிந்த குருகிராம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தனியாா் காற்றாலை நிறுவனத்தினா் மின் கம்பங்களை அமைப்பதற்காக, ஆற்றின் கரைகளை சேதப்படுத்தி உள்ளனா்.
- நீா் வழிப்பாதைகளை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தாராபுரம்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள நல்லதங்காள் ஓடை நீா் வழிப்பாதையில் தனியாா் காற்றாலை நிறுவனத்தின் மின் கம்பங்களை அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து தாராபுரம் வட்டாட்சியா் கோவிந்தசாமியிடம், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் திருப்பூா் கிழக்கு மாவட்ட அமைப்பு செயலாளா் ரா.பால சுப்பிரமணியன் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
தாராபுரம் வட்டம், பொன்னிவாடி ஊராட்சிக்கு உட்பட்ட நல்லதங்காள் ஓடையின் நீா் வழிப்பாதையில் தனியாா் காற்றாலை நிறுவனத்தினா் மின் கம்பங்களை அமைப்பதற்காக, ஆற்றின் கரைகளை சேதப்படுத்தி உள்ளனா். ஆற்றின் கரைகளை சேதப்படுத்துதல் மற்றும் தண்ணீரின் போக்கை திசை திருப்புதல் போன்ற செயல்கள் தண்டனைக்குரிய குற்றமாகும்.
எனவே நல்லதங்காள் ஓடை நீா் வழிப்பாதையில் தனியாா் காற்றாலை நிறுவனம் மின் கம்பங்களை அமைப்பதற்கு உடனடியாக விதிக்க வேண்டும். மேலும் நீா் வழிப்பாதைகளை பாதுகாக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அப்பகுதியில் ஒரு சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
- சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தி போக்குவதற்கு வசதி செய்து கொடுத்தனர்.
விழுப்புரம்:
மரக்காணத்தில் புதுச்லைசேரி சாலையில் உள்ள ஆலமரம் நள்ளிரவில் விழுந்து 3 மின்கம்பம் உடைந்தது. இதனால் அப்பகுதியில் ஒரு சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலை பணியாளர்கள், பொதுப்பணி துறையினர், மரக்காணம் பேரூராட்சி கவுன்சிலர்கள் மற்றும் உதவியாளர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடனடியாக மரங்களை அப்புறப்படுத்தி போக்குவதற்கு வசதி செய்து கொடுத்தனர்.
- சூறாவளி காற்றுடன் மழை பெய்தது
- மின் இணைப்பு துண்டிக்கபட்டன
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கபட்டன.
மேலும் ஆரணி பழைய ஆற்காடு ரோடு அருகே சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ந்ததால் சாலை ஓரமாக இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பம் மீது விழுந்தது.
இதனால் மின்கம்பம் உடைந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டன.
இதனையடுத்து தகவலறிந்த வந்த ஆரணி தீயணைப்பு துறை மற்றும் மின்சார வாரியதுறையினர் மின் இணைப்பை துண்டித்து விழுந்து கிடந்த மரத்தை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
- விளைநிலங்களின் வழியாக செல்லும் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது.
- எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படலாம்.
சீர்காழி:
மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.
இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளன. இந்த விளைநிலங்களின் வழியாக செல்லும் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது.
இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம். இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மின்சார வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்துள்ளனர்.
ஆனாலும் அது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கடந்த 3 மாதத்திற்கு மேலாக சாய்ந்த நிலையில் உள்ள இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படலாம்.
அதற்கு முன்னதாகவே விழித்துக் கொண்டு மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.
- எண்ணூர், அண்ணா நகர், சாஸ்தி நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மேல் உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன.
- வீடுகள் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
வடசென்னை அனல் மின் நிலையத்தில் இருந்து எண்ணூர் ரெயில்வேக்கு ராட்சத உயர் மின் கோபுரம் மூலம் உயர் அழுத்த மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது.
இதற்காக எண்ணூர், அண்ணா நகர், சாஸ்தி நகர் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மேல் உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. இந்த நிலையில் நேற்று இரவு இடி மின்னலுடன் பலத்த மழை பெய்த போது உயர் மின் அழுத்த கோபுரத்தில் இருந்த மின்கம்பி திடீரென அறுந்து அருகில் இருந்த வீடுகள் மீது விழுந்தது.
இதனால் அந்த இடத்தில் லேசாக தீப்பிடித்ததோடு அந்த பகுதியில் ஒரு மணி நேரம் மின்சாரம் தடைப்பட்டது. மின் கம்பி அறுந்து விழுந்ததும் மின்சப்ளை துண்டானதால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. வீடுகள் மீது மின்கம்பி அறுந்து விழுந்ததால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே மாற்று இடம் வழியாக மின் கம்பிகளை கொண்டு செல்ல வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- பலத்த காற்று வீசும் போது இன்சுலேட்டர்கள் பழுதாகி மின் தடை ஏற்படுகிறது.
- மின் கம்பங்களில் புதிய இன்சுலேட்டர்கள் பொருத்தும் பணி நடந்தது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட திருவெண்காடு, மங்கை மடம், பெருந்தோட்டம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மழை, பலத்த காற்று வீசும் போது இன்சுலேட்டர்கள் பழுதாகி மின் தடை ஏற்படுகிறது.
வரும் மழைக்காலத்தில் இதேபோன்று பழுதுகள் ஏற்பட்டு மின்தடை ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு திருவெண்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 150 புதிய இன்சுலேட்டர் கருவிகள் பொருத்தும் பணி நடந்தது.
இந்த பணியில் உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையில், ஆக்க முகவர் குணசேகரன், மின்பாதை ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்த பணிகள் சரியாக செய்யப்படுகிறதா என சீர்காழி உட்கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் விஜய பாரதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதேபோல் பூம்புகார் மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட மேலையூர் மின் பாதையில் சுமார் 200 இன்சுலேட்டர்கள் பொருத்தும் பணியில் பூம்புகார் உதவி பொறியாளர் தினேஷ், ஆக்க முகவர் சேகர் ஆகியோர் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.
- 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன.
- மின்கம்பங்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் விழும் அபாயம் உள்ளது.
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை தாலுகா கிழாய் ஊராட்சி சந்தன கருப்பு கோவில் அருகே மணல்மேடு சாலையில் மின்கம்பங்கள் உள்ளன. அந்த மின்கம்பங்களில் அடுத்தடுத்து வரிசையாக உள்ள 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன.
இந்த மின்கம்பங்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் சாய்ந்து வயலில் விழும் அபாயம் உள்ளது. இந்த மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.
இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை புகார் கொடுத்தும், இது வரையிலும் சீரமைக்கப்படவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொது மக்களின் நலன் கருதி, ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக, மேற்கண்ட பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- தினமும் சுமார் 3 ஆயிரம் பேர் அந்த வழியாக சென்று வருகின்றனர்.
- மின் கம்பம் சாயாமல் இருக்க அதன் அருகே தாங்கிப் பிடிக்கும் கம்பம் அமைக்கப்பட்டது.
பல்லடம்:
பல்லடம் காந்தி ரோட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இதன் நுழைவாயில் எதிரே அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம் ஒன்று, தாங்கிப் பிடிக்கும் கம்பம் மற்றும் கம்பிகளில்லாமல், எந்த நேரமும் விழும் அபாய நிலையில் இருந்தது.அரசு கல்லூரி மற்றும் அதன் அருகிலேயே பெண்கள், ஆண்கள் மேல்நிலைப் பள்ளிகள் இரண்டும் அமைந்துள்ளன.
இதனால் தினமும் சுமார் 3 ஆயிரம் பேர் அந்த வழியாக சென்று வருகின்றனர். எனவே மின் கம்பம் சாய்ந்து விடும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து மாலைமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனைப் பார்த்த மின்வாரிய அதிகாரிகள் நேற்று அந்த அபாயம் மின் கம்பத்தை மாற்றி அமைத்தனர்.
மேலும் மின் கம்பம் சாயாமல் இருக்க அதன் அருகே தாங்கிப் பிடிக்கும் கம்பம் அமைக்கப்பட்டது. அபாயம் மின் கம்பத்தை மாற்ற பொதுமக்களின் கோரிக்கையை செய்தியாக வெளியிட்ட மாலைமலர் நாளிதழுக்கும் நடவடிக்கை எடுத்த மின்வாரிய அதிகாரிகளுக்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.
- சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
- சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள் அகற்றாமல் சாலை போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.
திருப்பூர்:
திருப்பூா் நெடுஞ்சாலைத் துறை உதவி பொறியாளா் ராஜேஷிடம், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட குழு உறுப்பினா் ஆா்.சிகாமணி அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-
திருப்பூா் மாநகராட்சி வாா்டு எண்-5 வாவிபாளையம் பகுதியில் பேருந்து நிறுத்தம் முதல் பெருமாநல்லூா் ஊத்துக்குளி சாலை வரை சாலையின் இருபுறமும் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே சாலை விரிவாக்கம் செய்யும் பணிக்காக கடந்த ஒரு மாதம் முன்பு சாலையின் ஒரு புறம் குழி தோண்டப்பட்டது. அடுத்த கட்டப் பணி எதுவும் செய்யாத நிலை இருந்தது. இதனால் சாலை குறுகலானதால் இப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடியும், அவ்வப்போது விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில், சாலையின் நடுவில் உள்ள மின் கம்பங்கள் அகற்றாமல் சாலை போடும் பணி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எனவே, சாலையின் நடுவே உள்ள மின் கம்பங்களை உடனடியாக அகற்றி பின்னா் சாலை அமைக்கும் பணியை வேகப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கரும்பு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று செம்மேடு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது.
- இச்சம்பவம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்:
மேல்மலையனூர் அருகே கரடிக்குப்பம் கிராமத்திலிருந்து நேற்று மாலை கரும்பு ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று செம்மேடு சர்க்கரை ஆலைக்கு சென்று கொண்டிருந்தது. அவலூர்பேட்டை செல்லியம்மன் கோவில் அருகில் சென்ற போது எதிர்பாரதவிதமாக சாலை ஓரம் இருந்த சிமெண்ட் மின்கம்பத்தில் மோதியது. இதனால் மின்கம்பம் முறிந்தது.இதுகுறித்து தகவலறிந்த மின்சார துறையினர் விரைந்து செயல்பட்டு மின் இணைப்பை துண்டித்தனர். இதனால் பெரும் மின் விபத்து தடுக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து அவலூர்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூதராயநல்லூர் கிராமத்தில் வயல்வெளிகளில் இரும்பு கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது.
- சிறிய மின் கம்பத்திற்கு இடையில் மரம் ஒன்று முளைத்து கிளை விட்டு உயர்ந்து வளர்ந்து நிற்கிறது.
பூதலூர்:
பூதலூர் அருகே உள்ள பூதராயநல்லூர் கிராமத்தில் வயல்வெளிகளில் இரும்பு கம்பங்கள் நட்டு மின்சாரம் கொண்டு வரப்படுகிறது. 30 அடி உயரமுள்ள மின்கம்பத்தில் அடியில் இருந்து 6 உயரத்திற்கு சிறிய அளவிலான மற்றொரு இரும்பு கம்பம் நடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரிசையாக நடப்பட்டுள்ள மின் கம்பங்களில் ஒன்றில் பெரிய மின் கம்பத்துக்கும் அதற்கு பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ள சிறிய மின் கம்பத்திற்கு இடையில் மரம் ஒன்று முளைத்து கிளை விட்டு உயர்ந்து வளர்ந்து நிற்கிறது.
இந்த மின்கம்பம் அமைந்துள்ள வயல் தற்போது தரிசாக காணப்படுகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் வயலில் தண்ணீர் பாய்ச்சி விவசாய பணிகள் தொடங்கிவிடும். அப்போது இதில் வளர்ந்துள்ள மரம் மேலே உள்ள மின்சாரக் கம்பியை தொடுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் இந்த மின்சார வயர்களின் வழியாக செல்லும் கிராமங்களில் மின்தடைஏற்படுவதற்கும் வாய்ப்பு உள்ளது.
எனவே பூதராய நல்லூர் கிராமத்தின் அருகில் வயல்வெளியில் உள்ள மின்சாரக் கம்பத்தில் வளர்ந்துள்ள மரத்தை அகற்றி சீரான மின்விநியோகத்திற்கும் எதிர்காலத்தில் மின் பாதிப்புகளில் இருந்து காத்துக் கொள்ளவும் வழி செய்ய வேண்டும் என்று விவசாயிகள். சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்