search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228048"

    • மத்திய அரசு திட்டங்கள் குறித்து மக்களிடம் எடுத்து கூற வேண்டும் என பா.ஜ.க. கட்சி மாநில நிர்வாகி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கான மானியம் ரூ.50 ஆயிரம் வழங்குவது குறித்து எடுத்துரைத்தார்.

    ஆர்.எஸ்.மங்கலம்

    பா.ஜ.க. கட்சி மாநில நிர்வாகி வேலூர் இப்ராஹிம் ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

    நேற்று ஆர்.எஸ்.மங்கலம் தாலுகா திருப்பாலைக்குடி பகுதிக்கு வருகை தந்தார். அவருக்கு ஆர்.எஸ்.மங்கலம் பா.ஜ.க. கட்சியின் ஒன்றிய தலைவர் நரசிங்கம் தலைமையில் சிறுபான்மை அணி மாநில துணைத்தலைவர் அஜ்மல்கான், ராமநாதபுரம் மாவட்ட எஸ்.சி.எஸ்.டி. அணியின் முன்னாள் பொதுச்செயலாளர் சசி கனி, ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய பொதுச்செயலாளர்கள் செந்தில்குமார், கிஷோர், ஒன்றிய பொருளாளர் பாண்டித்துரை ஆகியோர் முன்னிலையில் திருப்பாலைக்குடி பழங்கோட்டை பஸ்நிறுத்தம் அருகில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து திருப்பாலைக்குடி ஊராட்சி மன்ற அலுவலகத்தில் சென்று ஊராட்சி மன்ற தலைவர் முகமது உமர் பாரூக் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களை சந்தித்து பிரதம மந்திரியின் முத்ரா கடன் திட்டம் மற்றும் முஸ்லீம் சிறுபான்மை பிரிவினருக்கான திட்டம், மகளிர்குழு தொழில் தொடங்குவதற்கான மானியத்துடன் கூடிய கடன் திட்டம் குறித்து விளக்கினார்.சிறுபான்மையினருக்கான ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் படிக்கும் மாணவர்களுக்கான மானியம் ரூ.50 ஆயிரம் வழங்குவது குறித்து எடுத்துரைத்தார்.

    இதனைத் தொடர்ந்து திருப்பாலைக்குடி பாண்டி கோவிலில் ஆடிப்பெருக்கை முன்னிட்டு திருப்பாலைக்குடி மாரியம்மன்கோவில் காந்திநகர் கிராம தலைவர் தமிழ்கண்ணன், செயலாளர் ஆதிரைமன்னன் ஆகியோர் தலைமையில் மீனவர்சங்கம் சார்பாக வேலூர் இப்ராஹிம்க்கு பரிவட்டம் கட்டப்பட்டது.

    பின்னர் அ.தி.மு.க. நகர செயலாளர் குட்லக் ரஹ்மத்துல்லாவை சந்தித்து மத்திய அரசு முஸ்லீம் சிறுபான்மையினருக்கான கொண்டு வந்துள்ள திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து இத்திட்டங்கள் குறித்து முஸ்லிம் மக்களிடையே எடுத்துரைக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சசிகுமார், ஆர்.எஸ்.மங்கலம் இளைஞரணி தலைவர் தம்பிதுரை, ஊடகப்பிரிவு செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வார்டு வாரியாக, மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.
    • மக்களுக்கு தெரியப்படுத்தினால், அதிக அளவு மக்கள் பயன் பெறுவர்.

    அவிநாசி:

    மக்களின் வசதியை கருத்தில் கொண்டு வீடு தேடி சென்று மருத்துவம் பார்க்கும் வகையில் வீடு தேடி மருத்துவம் என்ற திட்டத்தை அரசு செயல்படுத்தி வருகிறது.அதன்படி உள்ளாட்சி நிர்வாகங்கள் மற்றும் சுகாதாரத்துறையினர் இணைந்து வார்டு வாரியாக, மருத்துவ முகாம் நடத்தி வருகின்றனர்.

    இதில் சர்க்கரை நோய் பரிசோதனை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட அடிப்படை மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.இம்மருத்துவ முகாமில், கொரோனா தடுப்பூசியும் செலுத்தப்படுகிறது. பரபரப்பான வாழ்க்கை சூழலில் இத்தகைய மருத்துவ முகாம்களை மக்கள் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

    வேலைக்கு செல்வோர் சில நிமிடம் ஒதுக்கி மருத்துவ முகாமுக்கு சென்று ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் பரிசோதனை செய்து கொள்கின்றனர். குறிப்பாக வீடுகளில் உள்ள முதியவர்கள், ஓய்வூதியம் பெறுவோருக்கு இம்முகாம் பயனளிக்கிறது.இத்தகைய முகாம்களில் வயது முதிர்ந்தவர்களையே அதிகம் பார்க்க முடிகிறது. இருப்பினும் இம்முகாம் நடத்தப்படுவது குறித்து, மக்களுக்கு தெரிவதில்லை.

    எனவே முகாம் நடக்கும் விவரம் குறித்து முன்கூட்டியே அந்தந்த வார்டு உறுப்பினர்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்தினால், அதிக அளவு மக்கள் பயன் பெறுவர். எனவே அதற்கேற்ப நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.
    • ஜூலை 2022 மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.

    உடுமலை:

    உடுமலை ராகல்பாவி, மலையாண்டிபட்டணம், சுண்டக்காம்பாளையம் மின் நுகர்வோர் கடந்த மே மாத கட்டணத்தையே ஜூலை மாதத்திற்கும் செலுத்துமாறு, மின் வாரியம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து உடுமலை மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் அறம்வளர்த்தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், உடுமலை மின் பகிர்மான வட்டம் உதவி மின் பொறியாளர் மேற்கு பிரிவுக்குட்பட்ட ராகல்பாவி, மலையாண்டிபட்டணம், சுண்டக்காம்பாளையம் பகிர்மான இணைப்புகளுக்கு, நிர்வாக காரணங்களினால் ஜூலை 2022 மாதத்திற்கான மின் கணக்கீடு செய்ய இயலவில்லை.எனவே மேற்படி பகிர்மான மின் நுகர்வோர்கள் மே 2022 மாதம் செலுத்திய மின் கட்டண தொகையையே ஜூலை மாதத்திற்கான மின் கட்டண தொகையாக அறிவிப்பு செய்யப்பட்ட, 20 நாட்களுக்குள் செலுத்த வேண்டும்.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதனால் பாதுகாப்பு நலன் கருதி நீரளவு குறையும் வரை மோட்டார் இயக்கம் நிறுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ளது.
    • வெள்ளகோவில் நகராட்சி பொதுமக்கள் நிலைமை சீராகும் வரை குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    வெள்ளக்கோவில்:

    வெள்ளகோவில் நகர் மன்ற தலைவி மு.கனியரசி மற்றும் ஆணையாளர் ஆர்.மோகன்குமார் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    காவிரி ஆற்றை ஆதாரமாகக்கொண்டு இயங்கும் முத்தூர், காங்கயம் குடிநீர் திட்டம் இயக்கப்படும் தலைமை நீரேற்றம் செய்யும் நிலையங்களை சுற்றி வெள்ள அளவு அதிகமாக உள்ளது. அதனால் பாதுகாப்பு நலன் கருதி நீரளவு குறையும் வரை மோட்டார் இயக்கம் நிறுத்த தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் பயன் பெறும் 6 பேரூராட்சி. 3 நகராட்சி மற்றும் 1,790 ஊரக குடியிருப்புகளுக்கு நிலைமை சீராகும் வரை குடிநீர் வினியோகம் இருக்காது என்று இதன்மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.எனவே வெள்ளகோவில் நகராட்சி பொதுமக்கள் நிலைமை சீராகும் வரை குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்–பட்–டுள்–ளது.

    • உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது.
    • தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் வந்தால் சரி என்றனர்.

    திருப்பூர்:

    தனியார் மருத்துவமனைகளில் மட்டுமே செலுத்தப்பட்டு வந்த கொரோனா தடுப்பு பூஸ்டர் தடுப்பூசி நாட்டின் 75வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு 75 நாட்களுக்கு இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.அதன்படி, திருப்பூர் கலெக்டர் அலுவலகம், தலைமை அரசு மருத்துவமனை, தாராபுரம், உடுமலை, காங்கயம், பல்லடம், அவிநாசி, மடத்துக்குளம் உள்ளிட்ட அனைத்து தாலுகா அளவிலான அரசு மருத்துவமனைகளில் பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடந்தது.

    இது குறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில் 10 லட்சம் பேருக்கு பூஸ்டர் செலுத்த வேண்டியுள்ளது. 2 தவணை தடுப்பூசி செலுத்தி 6 மாதம் அல்லது 26வாரம் நிறைவு பெற்றவர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி வைக்கப்பட்டிருக்கும். அவர்கள் தங்கள் ஆதார் அட்டை, குறுஞ்செய்தி காண்பித்து பூஸ்டர் டோஸ் செலுத்திக் கொள்ளலாம். வெளிநாடு செல்வோர் இருதவணை தடுப்பூசி செலுத்தி 90 நாட்கள் ஆனால் பூஸ்டர் செலுத்திக்கொள்ளலாம். கைவசம் 2.5 லட்சம் தடுப்பூசி உள்ளது. தட்டுப்பாடு என்ற பேச்சுக்கே இடமில்லை. மக்கள் வந்தால் சரி என்றனர்.

    • வரும் 4ந் தேதி வரை, தாங்கள் படித்த பள்ளிக்குச்சென்று விண்ணப்பிக்கலாம்.
    • தனித்தேர்வர்களும், அரசு தேர்வுத்துறையின் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    உடுமலை:

    கடந்த 2021-22ம் கல்வியாண்டுக்கான 10, 11 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்படுகிறது.

    அதன்படி பிளஸ் 2 துணைத்தேர்வு வருகிற 25 -ந்ேததி முதல் ஆகஸ்டு 1-ந்தேதி வரையிலும், பிளஸ் 1 தேர்வு, ஆகஸ்டு 2ந்தேதி முதல் 10-ந் தேதி வரையிலும், பத்தாம் வகுப்புக்கு ஆகஸ்டு 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரையிலும், துணைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.அதில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராத மாணவர்கள், வரும் 4ந் தேதி வரை, தாங்கள் படித்த பள்ளிக்குச்சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேநேரம் உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தனித்தேர்வர்கள், மாணவர்கள் துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க மையமும் அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி பலரும் ஆர்வமுடன் துணைத்தேர்வுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

    இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பிக்காதவர்கள் வரும் 5-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை கூடுதல் கட்டணம் செலுத்தி தக்கல் சிறப்பு திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப எண்ணை பாதுகாப்பாக வைத்திருந்து அதை வைத்து ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம்.புதிதாக தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்களும், அரசு தேர்வுத்துறையின் சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.ஏற்கனவே பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கும், பிளஸ் 2வுக்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம். துணைத்தேர்வு அட்டவணை மற்றும் விதிமுறைகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றனர்.

    • நகரை சுத்தமாக வைத்து கொள்ள குப்பைகளை தொட்டியில் கொட்ட வேண்டும் என மேயர்-கமிஷனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • செல்லூர்கழிவு நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    மதுரை

    மதுரை மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. செல்லூர்கழிவு நீரேற்று நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டு கழிவுநீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள், புதிதாக கட்டப்பட்டுள்ள கழிவுநீரேற்று தொட்டிகள், மின்மோட்டார்கள், பாதுகாப்பு உபகரணங்கள், சுத்திகரிக்கப்படும் முறைகள் உள்ளிட்ட பணிகள் குறித்து இன்று மேயர் இந்திராணி, கமிஷனர் சிம்ரன்ஜித் சிங் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    தொடர்ந்து செல்லூர் வைகை ஆற்றின் கரைப்பகுதியில் பூங்கா அமைய உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டு அதற்கான பணிகளை விரைந்து மேற்கொண்டு முடிக்குமாறு சம்பந்தப்பட்ட அலுவலருக்கு உத்தரவிட்ட னர்.

    முன்னதாக 34-வது வார்டு அண்ணாநகர் எஸ்.எம்.பி. காலனி பகுதி களில் தீவிர தூய்மை பணிகள் நடைபெறுவதை அவர்கள் பார்வையிட்டனர். அப்பகுதியில் சேரும் குப்பைகளை உடனுக்குடன் அகற்றுமாறும், காலனியில் உள்ள பொதுமக்கள் குப்பைகளை அருகில் உள்ள குப்பைத் தொட்டிகளில் போடுமாறும், காலனி பகுதியினை தொடர்ந்து தூய்மையாக வைத்துக் கொள்ள அப்பகுதி பொதுமக்களும் ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக் கொண்டனர்.

    இந்த ஆய்வின்போது துணை மேயர் நாகராஜன், மண்டலத் தலைவர் சரவண புவனேஸ்வரி, உதவி ஆணையாளர்கள் அமிர்த லிங்கம், சுரேஷ்குமார் மக்கள் தொடர்பு அலுவலர் மகேஸ்வரன், உதவி நகர்நல அலுவலர் தினேஷ்குமார் பொறியாளர்கள் ரவிச்சந்திரன், கந்தப்பா, சந்தனம், ஆரோக்கிய சேவியர், அலெக்ஸ்சாண்டர், சுகாதார ஆய்வாளர்கள் முருகன், சுப்புராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பணியாளர்களுடன் இணைந்து பொதுமக்களும் ஒத்துழைக்க வேண்டும் என ஆணையாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    • தரம் பிரித்து வாங்கப்பட்டு அந்தந்த உரக்கூடங்களில் உரமாக்கும் பணி நடந்து வருகிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டு பகுதிகளில் சேரும் குப்பைகளை தினந்தோறும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வெள்ளக்கல் குப்பை சேகரிக்கும் மையத்திற்கு கொண்டு சென்று பிரிக்கப்பட்டு உரமாக்கப்பட்டு வருகிறது.

    மாநகராட்சியின் நுண்ணுயிர் உரக்கூடங்களில் மக்கும் குப்பைகள் மட்டும் தரம் பிரித்து வாங்கப்பட்டு அந்தந்த உரக்கூடங்களில் உரமாக்கும் பணி நடந்து வருகிறது.

    மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள உணவகங்கள், தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், குடியிருப்புகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைவரும் குப்பைகளை முறையாக பிரித்து வழங்க வேண்டும். பொதுமக்கள் வீடுகளில் சேரும் குப்பைகளை தரம் பிரித்து தெருக்களில் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களிடம் வழங்க வேண்டும்.

    மேலும் இரவு நேர சாலையோர உணவகங்களில் சேரும் உணவு கழிவுகளை சாலைகள், மழைநீர் வடிகால்கள், வாய்க்கால்களில் கொட்டாமல் அவற்றை முறையாக அகற்ற வேண்டும். கடந்த வாரத்தில் மட்டும் சாலைகளில் குப்பைகளை கொட்டிய 2 தனியார் திருமண மண்டப உரிமையாளர்களுக்கு தலா ரூ.10ஆயிரம் மாநகராட்சியால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்று சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் வகையில் சாலைகளில் குப்பைகள் கொட்டுபவர்கள் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே மதுரை மாநகரை தூய்மையான மாநகராக வைத்துக் கொள்ளுவதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு தருமாறு மதுரை மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வேண்டுகோள் விடுத்தார்.

    ×