search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228109"

    • சமரச நாள் விழிப்புணர்வு பேரணியை முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி சாய் பிரியா தொடங்கி வைத்தார்.
    • மையத்தில் வைக்கப்படும் பிரச்சினைகள் குறித்த ரகசியம் காக்கப்படும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் சமரச நாள் விழிப்புணர்வு பேரணி தொடக்க விழா நடந்தது. முதன்மை மாவட்ட நீதிபதி ஆ.சுமதி சாய் பிரியா தலைமை தாங்கி பேரணியை தொடங்கிவைத்தார்.

    அவர் பேசும் போது, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 10-ந் தேதி சமரச நாள் கடைப்பிடிக்கப்படு கிறது. சமரச மையத்தில் வரக்கூடிய பிரச்சினைக்கு இருதரப்பினரையும் வைத்து சுமூகமாக பேசி தீர்வு காணப்படும். இந்த மையத் தில் வைக்கப்படும் பிரச் சினைகள் குறித்த ரகசியம் காக்கப்படும். பிரச்சினை களுக்கு அவசரம் காட்டாமல் இரு தரப்பினர் சம்மதத்து டன் அமைதியாக தீர்வு காணப்படும். தீர்வு உங்கள் கையில் என்றார்.

    பேரணியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சத்திய தாரா, நிரந்தர மக்கள் நீதிமன்ற நீதிபதி பக்தவச் சலு, குடும்ப நல நீதிபதி முத்துக்குமரன், போக்சோ நீதிபதி சரத்ராஜ், தலைமை குற்றவியல் நீதிதுறை நடுவர் சுதாகர், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதிகள் பரமேஸ்வரி, சுந்தரராஜ், மாவட்ட உரிமை யியல் நீதிபதி இனியா கருணாகரன், கூடுதல் மகிளா நீதிபதி ஆப்ரின் பேகம், குற்றவியல் நீதிதுறை நடுவர்கள் அனிதா கிரிஸ்டி, சத்திய நாராய ணன் மற்றும் சமரசர்கள், வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், வழக்காடிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
    • இந்த பேரணி யில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் ஒன்றிய, நகர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் கலையமுதன் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் சேகர், ஒன்றிய பொருளாளர் சின்னதுரை, நகர செயலாளர் சீனு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சட்டமன்றத் தொகுதி செயலாளர் மதியழகன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் தமிழ்மாறன் கலந்து கொண்டு வருகிற ஏப்ரல் 14- ந் தேதி புரட்சியாளர் அம்பேத்கரின் 132-வது பிறந்தநாள் அன்று கள்ளக்குறிச்சி மாவட்ட தலைநகரில் மத்திய அரசை கண்டித்து ஜனநாயகம் காப்போம் என்பதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் அணிவகுப்பு பேரணி நடைபெற உள்ளது. இதில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என ஆலோசனை வழங்கினார். அப்போது மாநில இளைஞரணி செயலாளர் சங்கத்தமிழன், மாநில தொண்டரணி செயலாளர் கூத்தக்குடி பாலு, மாநில இளைஞர் அணி துணை செயலாளர் பொன்னிவளவன், மாவட்டத் துணைச் செயலாளர் ராமமூர்த்தி, மாவட்ட செய்தி தொடர்பாளர் அனிச்சமலரவன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர் மக்கா கலீல் மற்றும் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, முகம் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் கிளை செயலாளர் ஆதிகர்ணன் நன்றி கூறினார்.

    • அரியலூரில் தூய்மைக்கான மக்கள் விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது
    • பேரணியானது, பிரதான கடைவீதி மற்றும் தெரு வழியாகச் சென்று, நகாட்சி அலுவலகத்தில் நிறைவ டைந்தது.

    அரியலூர்:

    அரியலூரில், தூய்மைத் திருவிழா மற்றும் தூய்மைக்கான மக்கள் இயக்கம் குறித்த விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.சத்திரம் அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நகர் மன்றத் தலைவர் சாந்திகலைவாணன், தூய்மைப் பணியாளர்களின் விழிப்புணர்வுப் பேரணி கொடியசைத்து தொடக்கி வைத்தார்.பேரணியானது, பிரதான கடைவீதி மற்றும் தெரு வழியாகச் சென்று, நகாட்சி அலுவலகத்தில் நிறைவ டைந்தது.

    பேரணியில் கலந்து கொண்ட தூய்மைப் பணியாளர்கள், குப்பைகளை பொது வெளியில் கொட்டி உங்களது தெருக்களையும் நகரத்தையும் அசுத்தமாக்க வேண்டாம், நெகிழிப் பொருள்களை சாலையில் போடுவதால் ஏற்படும் பிரச்னைகள், தூய்மையான இடம் இறைவன் குடியிருக்கும் இடமாகும் என்று வலியுறுத்தி விழிப்பு ணர்வை ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், நகர் மன்ற துணைத் தலைவர் கலியமூர்த்தி, நகராட்சி ஆணையர் தமயந்தி மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.





    • ஊர்வலத்தை சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் தொடங்கி வைத்தார்.
    • கலெக்டர் அலுவலகம் வரை நடைபெற்றது

    பெரம்பலூர்

    பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தினர் நேற்று கவன ஈர்ப்பு ஊர்வலத்தில் ஈடுபட்டனர். பெரம்பலூர் பாலக்கரை ரவுண்டானா அருகே புறப்பட்ட ஊர்வலத்தை சங்கத்தின் மாவட்ட செயலாளர் கணேசன் தொடங்கி வைத்தார். தலைவர் குணசேகரன், பொருளாளர் கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டத்தில் உள்ள தொடக்க கூட்டுறவு வங்கிகளில் பணிபுரியும் பணியாளர்கள் நேற்று ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். அவர்கள், ஓய்வூதியம் வழங்க வேண்டும். விடுமுறை நாட்களில் ஆய்வு செய்வதை ரத்து செய்ய வேண்டும். பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கங்களுக்கு ஏற்பட்ட நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். நகைக்கடன் ஏலத்தில் நஷ்டம் என்று பணியாளர்களை பழிவாங்குவதை கைவிட வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு கால தாமதமின்றி கருணை ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஊர்வலமாக கோஷங்களை எழுப்பியவாறு சென்று, பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஊர்வலம்

    https://www.dailythanthi.com/News/State/inaugural-cooperative-bank-employees-attention-procession-934791

    • மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் பேரணியாக சென்றனர்.
    • சாலை பாதுகாப்பு குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே உள்ள மோகூர் விநாயகா பப்ளிக் பள்ளி, மதுக்கூர் ரோட்டரி சங்கம், காவல்துறை இணைந்து நடத்திய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் பேரணியாக சென்றனர்.

    இந்த பேரணியை மதுக்கூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் மதுக்கூர் ரோட்டரி சங்க தலைவர் தவசு மணி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    மதுக்கூர் போலீஸ் நிலையம் முன்பு இருந்து தொடங்கிய பேரணி பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    இதற்கு விநாயக பப்ளிக் பள்ளியின் தலைவர் ராமலிங்கம், தாளாளர் அய்யநாதன், முதல்வர் ஜான்பால், துணை முதல்வர் பொன். கார்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதனை அடுத்து வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது. சாலை பாதுகாப்பு பற்றிய துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.இதில் மதுக்கூர் தி.மு.க மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், காவல் துறையினர், பள்ளி ஆசிரியை ஆசிரியர்கள், மதுக்கூர் ரோட்டரி சங்க நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

    • கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்
    • முக்கிய கடைவீதிகளில் பேரணி நடைபெற்றது

    அரியலூர், 

    அரியலூரில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கத்தின் சார்பில் 12 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை பேரணி நடைபெற்றது. காமராஜர் திடலில் இருந்து, மாவட்ட தலைவர் சக்திவேல் தலைமையில் தொடங்கிய இந்த பேரணியானது, முக்கிய கடைவிதி வழியாக அண்ணா சிலை அருகில் முடிவடைந்தது. பேரணி கோரிக்கைகள் குறித்து கலந்து கொண்டவர்கள் கூறும்போது, உறுப்பின ர்கள் கொடுத்த கட ன்கள் விதிமீறல்கள் என தெரிவிக்கப்பட்டு பணியாளர்கள் மீது எடுக்கப்பட்டுள்ளநடவ டிக்கைகளை முழுமை யாக விலக்கிக் கொள்ள ப்படவேண்டும்கடன் தள்ளுபடி அனுமதி க்கப்பட்ட பயிர்கடன், நகைக் கடன், மகளிர் சுய உதவிக்குழுக் கடன்கள் அனைத்துக்கும் உரிய தெகையை வட்டி இழப்பின்றி அனைத்து சங்கங்களுக்கும் வரவு வைக்கப்பட்டு சங்கங்களுக்கு ஏற்பட்டு நிதி நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும். தவணை தவறிய நகைக்கடன்கள் மீது ஏல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டத்தில் ஏற்பட்டுள்ள இழப்புத் தொகைக்கு சங்கச்செய லாளர்கள் மற்றும்ப ணியா ளர்கள் பொறு ப்பாக்கப்பட்டு, ஓய்வு கால நிதி பயனை நிறுத்தி வைக்கும் தவறான நடவடிக்கையை உடனடியாக கைவிடப்பட்டு, இழப்புத் தொகையை நட்ட கணக்குக்கு எடுத்துச் செல்ல நிபந்தனையற்ற தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும். நகர கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களுக்கு ஊதிய ஒப்பந்தம் 31.12.2021 முடிவடைந்து விட்ட நிலையில், 01.01.2022 முதல் புதிய ஊதியம் வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கேரளம் மாநிலத்தில் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவது போல், அதே போன்று தமிழகத்திலும் வழங்க வேண்டும் என்று தெரிவித்துனர். மாவட்ட செயலாளர் தமிழ்மணி, மாவட்ட பொருளாளர் பழனிவேல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.  

    • அடைக்கல அன்னை ஆலயம் சார்பில் குருத்தோலை பவனி நடைபெற்றது
    • ஓசன்னா கீதங்கள் பாடியபடி கைகளில் குருத்தோலை ஏந்தி பவனி நடைபெற்றது

    திருமானூர்,

    இயசு கிறிஸ்து சிலுவைப்பாடுகளை சுமந்து உயிர்நீத்த தினம் கிறிஸ்தவர்களின் புனித வெள்ளியாக அனுசரிக்கப்படுகிறது. இதற்கு முன்னதாக பாஸ்கா விழாவில் பங்கேற்க பெத்தலஹோம் நகரில் நுழைந்த இயேசுவை, யூதர்களின் ராஜாவாக அறிவித்து, அவரை மக்கள் கைகளில் ஆலிவ் இலை ஏந்தி வரவேற்றனர். இந்நாளை நினைவு கூரும் வகையில் குருத்தோலை ஞாயிறாக கிறிஸ்தவர்கள் அனுசரித்து வருகின்றனர்.அதன்படி அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருக்காவலூர் என்று அழைக்கப்பட்ட ஏலாக்கு றிச்சி புனித அடைக்கல அன்னை ஆலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள தேவாலயங்களில் தவக்காலமான கடைசி ஞாயிறு குருத்தோலை பவணி ஊர்வலம் நடைபெற்றது.அப்போது குருத்தோலைகளை கைகளில ஏந்தியவாறு ஓசானா பாடல் பாடிவாறு கிறிஸ்தவர்கள் சென்றனர். ஏலாக்குறிச்சி பழைய பேருந்து நிலையத்தில் ஒரு குருத்தோலைகள் மந்திரிக்கப்பட்ட ஜெபம் செய்து ஊர்வலமாக சென்று ஆலயத்தை அடைந்தனர். இந்த நாளை ஒட்டி திருமானூர் மற்றும் ஏலாக்குறிச்சி ஆலயங்களில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. ஏலாக்குறிச்சி அடைக்கல அன்னை ஆலயத்தில் பங்குதந்தை அதிபர் தங்கசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. சுற்றுவட்டார பகுதிகளுக்கு கிறிஸ்தவர்கள் மற்றும் பிற மதத்தினர் கலந்துகொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகளைப் பாடி பவனியாக வீதி உலா வந்தனர்தவக்காலத்தின் முக்கிய நாட்களான பெரிய வியாழன் வரும் 6-ந் தேதியும், புனித வெள்ளி வரும் 7-ந் தேதியும் கடைப்பிடி பிடிக்கப்படுகிறது. தொடர்ந்து 9-ந் தேதி இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பு பெருவிழாவான ஈஸ்டர் தினம் கொண்டாடப்படவுள்ளது.

    • முக்கிய வீதிகள் வழியாக சீர்காழி பழைய பஸ் நிலையத்தில் பேரணி முடிவடைந்தது.
    • பொதுமக்களிடம் துண்டு பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    சீர்காழி:

    சீர்காழியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பாக போதைப் பொருட்கள் பயன்பாடு மற்றும் போதைப்பொருட்கள் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணிக்கு சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார் தலைமை வகித்தார். சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் லாமெக், மாவட்ட கலால் துறை அலுவலர் ஹரிதரன், தேர்தல் துணை வட்டாட்சியர் ரஜினி, பெஸ்ட் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துணை முதல்வர் செல்வமுத்துக்குமாரசாமி, உதவி பேராசிரியர்கள் பிரவினா, பிரகாஷ், பேரணி ஒருங்கிணைப்பாளரும், அரிமா மாவட்ட தலைவருமான சக்திவீரன் முன்னிலை வகித்தனர்.

    சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கிய விழிப்புணர்வு பேரணியை வருவாய் கோட்டாட்சியர் உ.அர்ச்சனா கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி முக்கிய வீதிகள் வழியே சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

    போதை பொருள் பயன்பாட்டுக்கு எதிரான விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    • பேரணியை மாவட்ட நீதிபதி மற்றும் பலர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
    • இப்ேபரணி ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஊட்டி அரசினர் கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.

    பேரணியை மாவட்ட நீதிபதியும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவருமான நீதிபதி ஆர்.ஸ்ரீதரன், காவல்துறையின் துணை கண்காணிப்பாளர் யசோதா, நகர மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வனக்குமார், கனகராஜ், அரசினர் கலைக்கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊட்டி அரசினர் கலைக்கல்லூரியில் துவங்கிய இந்த பேரணி ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

    • விழிப்புணர்வு பேரணி நடந்தது
    • உலக காசநோய் தினத்தை முன்னிட்டு

    அரியலூர்:

    உலக காசநோய் தினத்தை முன்னிட்டு, அரியலூரில் நேற்று விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. அரியலூர் அண்ணா சிலை அருகிலிருந்து புறப்பட்ட பேரணியை ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தொடங்கி வைத்தார். இந்தப் பேரணி மார்க்கெட் தெரு, எம்.பி.கோயில் தெரு, திருச்சி சாலை உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, ஒற்றுமைத்திடல் முன்பு நிறைவடைந்தது.

    பேரணியில் அரியலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் அ.முத்துகிருஷ்ணன், கோட்டாட்சியர் மு.ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விழிப்புணர்வு வாசகங்கள் கைகளில் ஏந்தி பேரணி நடைபெற்றது
    • பதுவனேரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி சார்பில் உலக வனம் நாள் விழிப்புணர்வு பேரணி மற்றும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஜெயங்கொண்டம் நகராட்சி சுகாதார ஆய்வாளர் ஷாம் கர்ணல் அனைவரையும் வரவேற்றார். ஜெயங்கொண்டம் ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் காஞ்சனா சரவணன் தலைமை தாங்கினார். பரப்ரம்மம் ஃபவுண்டேஷன் நிறுவனரும் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களின் தாளாளருமான முத்துக்குமரன் பேரணியை துவக்கி வைத்து விளக்க உரையாற்றினார்.பேரணியில் நகராட்சி ஊழியர்கள் நர்சிங் மாணவிகள் பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை கையில் ஏந்தி கோசமிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.பேரணியானது ஜூப்லி ரோடு, நான்கு ரோடு, பேருந்து நிலைய சாலை வழியாகச் சென்று செந்துறை ரோடு, ஜெயங்கொண்டம் அன்னை தெரசா கல்வி நிறுவனங்களில் பேரணி நிறைவுற்றது.பேரணியில் தூய்மை இந்தியா திட்ட மேற்பார்வையாளர் ரமேஷ், ஏசிஏ சர்ச் ஜோஸ்வா, டெங்கு ஒழிப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், தூய்மை பணி மேற்பார்வையாளர் வெங்கடேசன், தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியின் இறுதியில் ஜூபிலி ரோடு பதுவனேரியில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

    • தாராசுரம் காய்கறி வணிக வளாகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தாா்.
    • இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்திய செஞ்சிலுவைச் சங்கம், கும்பகோணம் மாநகராட்சி ஆகியவை சாா்பில் நெகிழி மாசில்லா தஞ்சாவூா் மாவட்டம் என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

    கும்பகோணம் மாநகரின் முக்கிய வீதி வழியாக சென்ற பேரணி நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் முடிந்தது.

    இதில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த ஏராளமான மாணவிகள் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.

    பின்னா், தாராசுரம் காய்கறி வணிக வளாகத்தில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரத்தை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தொடக்கி வைத்தாா்.

    மாவட்ட நிா்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியத்தின் மூலம் அமைக்கப்பட்ட இந்த இயந்திரத்தில் பொதுமக்கள் ரூ.10 நாணயத்தை செலுத்தி மஞ்சப்பைப் பெறலாம்.

    இந்த நிகழ்ச்சியில் கும்பகோணம் மாநகராட்சி ஆணையா் செந்தில் முருகன், கும்பகோணம் கோட்டாட்சியா் பூா்ணிமா, துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமாா், தமிழ்நாடு மாசுக் கட்டுபாடு வாரிய மாவட்டச் சுற்றுச்சூழல் பொறியாளா் ரவிச்சந்திரன், உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் சித்ரா, இந்திய செஞ்சிலுவைச் சங்க மாவட்டத் துணைத் தலைவா் முத்துக்குமாா் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனா்.

    ×