search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 228238"

    • வியாபாரம் களைகட்டியது
    • கடைகளுக்கு முன்வைப்பு தொகை கிடையாது என அறிவிப்பு

    அரியலூர்,

    அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் அமைக்கப்பட்ட உழவர் சந்தையை 2000ஆம் ஆண்டு மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் ஆட்சிக்கு வந்தவர்கள் உழவர் சந்தையை மூடிமறைத்தனர். மீண்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில் வியாபாரிகளும், பொதுமக்களுக்கும் பயன்பெறும் திட்டமான உழவர் சந்தையை மீண்டும் திறந்தனர்.கடைகளுக்கு முன்வைப்பு தொகை கிடையாது. வாடகை, மின்சார கட்டணம், குடிநீர் கட்டணம் அனைத்தும் கிடையாது. தினசரி கொண்டு வரும் காய்கறிகளை மிகவும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம். தராசு படிகற்களும் வழங்கப்படுகின்றது.அரியலூர் வார சந்தை ஒவ்வொரு ஞாயிற்று கிழமைகளிலும் நடைபெறும். பல்வேறு பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள். நூற்றுக்கணக்கான ஆடுகள் விற்பனையாகும். வாரச்சந்தை கடைகள் கட்டுமான பணிகள் நடைபெறுவதால் வாரசந்தை ஞாயிற்றுகிழமை நடைபெறாமல் ஏலம் உரிமம் ரத்து செய்யப்படும் என நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.பம்பர் அடித்தது போல் யோகம், உழவர் சந்தை வியாபாரம் களைகட்டி வருகின்றது. தினசரி காய்கறிகள் கொண்டுவருவதால் சர்யான எடையில், சரியான விலையில் விற்பனை நடைபெறுவதால் வியாபாரிகளும், பொதுமக்களும் மிகவும் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள்.

    • சோழவந்தானில் அ.தி.மு.க. சார்பில் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
    • ஆர்.பி.உதயகுமார் பங்கேற்றார்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் அ.தி.மு.க. மேற்கு மாவட்டம் தெற்கு ஒன்றியம் சார்பில் வ.உ.சி. சிலை அருகில் அமைக்கப்பட்டிருந்த நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் திறந்து வைத்து புதிய உறுப்பினர் படிவங்களை வழங்கினார்.

    இதில் யூனியன் சேர்மன் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா, ஒன்றிய செயலாளர் கொரியர்கணேசன், பேரூர் நிர்வாகிகள் முருகேசன், கவுன்சிலர்கள் ரேகா ராமசந்திரன், கணேசன், மாவட்ட கவுன்சிலர் ஜெயக்குமார், ெபாதுக்குழு நாகராஜ், மாவட்ட மகளிர் அணி லட்சுமி, கூட்டுறவு சங்க தலைவர் ராமன், மணிகண்டன், மன்னாடிமங்கலம் கிளை செயலாளர் ராஜபாண்டி, முன்னாள் சேர்மன் முருகேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் 4-வது வார்டில் அங்கன்வாடி மையத்தை நகரசபை தலைவர் திறந்து வைத்தார்.
    • ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நகராட்சி 4-வது வார்டில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2020-21 நிதியின் கீழ் யானைகல் வீதியில் அங்கன்வாடி மையம் ரூ. 9 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டது. புதிய கட்டிடம் கட்டப்பட்டு ஓராண்டுக்கும் மேலாக திறக்கப்படாமல் இருந்தது.

    4-வது வார்டு கவுன்சிலர் தனபாண்டியம்மாள் அங்கன்வாடி மையம் கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று நகராட்சி கவுன்சில் கூட்டத்தில் வலியுறுத்தினார்.

    இதையடுத்து நகராட்சி சேர்மன் ஆர்.கே.கார்மேகம், துணை சேர்மன் டி.ஆர்.பிரவீன் தங்கம் ஆகியோரது முயற்சியால் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் ஏற்பாட்டில் அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் இதன் திறப்பு விழா நடந்தது.

    நகராட்சி சேர்மன் ஆர்.கே. கார்மேகம் அங்கன்வாடி மையம் கட்டிடத்தை திறந்து வைத்தார்.4-வது வார்டு கவுன்சிலர் தனபாண்டி யம்மாள், துணை சேர்மன் டி.ஆர்.பிரவீன் தங்கம், கமிஷனர் (பொறுப்பு) லட்சுமணன் முன்னிலை வகித்தனர். பொறியாளர் சுரேந்திரன், உதவி பொறியாளர் செல்வகுமார், மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர். ஜே.ஆர்.பி.மணிகண்டன் நன்றி கூறினார்.

    • மாவட்ட கலெக்டர் கவிதா ராமு திறந்து வைத்தார்
    • இயற்கை சார்ந்த பனை பொருட்கள் வாங்கி பயன்பெற அழைப்பு

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் (காதிகிராப்ட்) -ன் சார்பில், பனைப்பொருட்கள் விற்பனை நிலையத்தினை, மாவட்ட கலெக்டர் கவிதா ராமு திறந்து வைத்தார்.தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியம் (காதிகிராப்ட்), தமிழ்நாடு மாநில பனைவெல்லம் மற்றும் தும்பு விற்பனை கூட்டுறவு இணையம் சார்பில், இயற்கை சுவைநீர் பதநீர், பனை வெல்லம், பனங்கற்கண்டு, சுக்குகாபி, சுக்கு பனங்கற்கண்டு மிட்டாய், சில்லு கருப்பட்டி, பனம்பழச்சாறு, பனை ஓலைப் பொருட்கள், தூரிகை வகைகள், அழகிய பனை ஓலை விசிறிகள், கதர் கிராம கைத் தொழில் பொருட்கள், தேன் மற்றும் இயற்கை சார்ந்த பாரம்பரிய உடல் நலத்திற்கு மிகவும் தேவையான இயற்கை ஊட்டச்சத்துக்கள் அடங்கிய பனைப் பொருட்கள், கதர் கிராம கைத் தொழில் பொருட்கள் மிக குறைந்த விலையில் கிடைக்கிறது. எனவே இயற்கை சார்ந்த இத்தகைய பனைப் பொருட்கள் மற்றும் உணவுகளை அனைவரும் வாங்கி பயன்பெற வேண்டும் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தெரிவித்தார்.இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) து.தங்கவேல், உதவி இயக்குநர் (கதர் கிராமத் தொழில்கள்) கோபாலகிருஷ்ணன், புதுக்கோட்டை பனைப் பொருள் திட்ட அலுவலர் என்.ஆறுமுகம், கதர் அங்காடி மேலாளர் என்.கருப்பையா, பனைத் தொழில் வல்லூநர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    • நியாய விலை கடையை தி.மு.க. மாவட்டச் செயலாளர் திறந்து வைத்தார்.
    • 1000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை மாநகராட்சி 99-வது வார்டுக்கு உட்பட்ட பாம்பன் நகரில் நியாய விலை கடை திறப்பு விழா நடந்தது. தி.மு.க. பகுதி செயலாளர் உசிலை சிவா தலைமை தாங்கினார். மண்டல தலைவர் சுவிதா விமல் முன்னிலை வகித்தார்.புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நியாய விலை கடையை திறந்து வைத்தார்.

    மேலும் அவர் முதியோர்களுக்கு உதவித்தொகை, 1000-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சிவனம்மாள், கள்ளிக்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் மதன்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் தென்பழஞ்சி சுரேஷ், வட்டச்செயலாளர் சாமிவேல், பரமேஷ் பாபு, இளங்கோவன் சுந்தரராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உதயநத்தம் கிராமத்தில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது
    • ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்றது

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த உதயநத்தம் கிராமத்தில் கோடைகால வெயிலின் தாக்கத்தை தணிக்க நீர்மோர் தண்ணீர் பந்தல் திறப்பு விழா ஆம் ஆத்மி கட்சியின் தா பழூர் ஒன்றிய செயலாளர் பிஎம் ஜீவா தலைமையில் நடைபெற்றது.இவ்விழாவில் ஆம் ஆத்மி கட்சியின் மாநில மகளிர் அணி செயலாளர் ஸ்டெல்லா மேரி, மண்டல பொறுப்பாளர் டாக்டர் தேவகுமார், மாநில தலைவர் வசிகரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினர். இவ்விழாவில் ஆம் ஆத்மி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார்.
    • மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வும். அமைச்சருமான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடங்கள் கட்ட அனுமதி வழங்கினார்.

    இதில் மத்திய தொகுதிக்கு உட்பட்ட மதுரை மாநகராட்சி 22-வது வார்டு பகுதியில் உள்ள திரு.வி.க. நகரில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பொது சுகாதார வளாகம் கட்டப்பட்டது. அதனை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார்.

    பின்னர் 58-வது வார்டு ஆரப்பாளையம் பகுதியில் பொதுமக்களுக்கு பல்வேறு குடும்ப நிகழ்ச்சிகளை நடத்தும் வகையில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சமுதாய கூடத்தை திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சிரமமின்றி அத்தியாவசிய பொருட்க ளை பெறுகின்ற வகையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய நியாய விலை கடை கட்டிடத்தை திறந்து வைத்து குடும்ப அட்டைதா ரர்களுக்கு அத்தியாவசிய பொருட்க ளை வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையர் சிம்ரன்ஜீத் சிங், மதுரை மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் குரு மூர்த்தி, மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பாளையபாடி கிராமத்தில் 10ஆண்டுக்கு பிறகு திறக்கப்பட்டதால் விவசாயிகள் உற்சாகம்
    • திறப்பு விழாவில் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்


    திருமானூர்,

    அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாளையப்பாடி கிராமத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று பாளையபாடி பஸ் நிலையம் அருகில் அரசு நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது .விவசாயிகள் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் திறப்பு விழாவில் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.முன்னாள் பால்வளத்துறை தலைவர் பாலை திருநாவுக்கரசு அரசு அதிகாரிகளுக்கு பொன்னாடை அணிவித்து நன்றி தெரிவித்துக் கொண்டார்.நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பாளை அமரமூர்த்தி கலந்து கொண்டு இந்த நெல் கொள்முதல் நிலையத்தை விவசாயிகள் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.நிகழ்ச்சியில் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தராஜ், மாரியப்பன், பாளை பழனிச்சாமி, ரவிசங்கர், கோவிந்தராஜ். சுபாஷ், பழனியப்பன் , மணியன், கருப்பையன், வினோத் ராஜ் மற்றும் கிராம பொதுமக்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் ஸ்வீட் காரம் மற்றும் தேநீர் வழங்கப்பட்டது




    • கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. நிதியில் கட்டப்பட்டது
    • ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டிருப்பதை எம்எல்ஏ சின்னத்துரை திறந்து வைத்தார்

    கந்தர்வகோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் ரூ.40 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை, பள்ளி சுற்றுச்சுவர், கலையரங்கம், மற்றும் ஸ்மார்ட் வகுப்பறைகளை எம்எல்ஏ சின்னத்துரை திறந்து வைத்தார்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியத்தில் கந்தர்வ கோட்டை கோமாபுரம் தச்சங்குறிச்சி, காட்டு நாவல், அண்டனூர், அரியாணிப் பட்டி, மஞ்ச பேட்டை. நெப்புகை, புதுநகர் உள்ளிட்ட ஊராட்சி களில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகள், பயணியர் நிழற்குடை, கலையரங்கம் ஆகியவற்றின் திறப்பு விழா நடைபெற்றது.கோட்டாட்சியர்செல்வி முன்னிலையில் கந்தர்வ கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் சின்னத்துரை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன், வடக்கு ஒன்றிய செயலாளர் தமிழ் அய்யா, ஒன்றிய குழு தலைவர் கார்த்திக் மழவராயர், வட்டாட்சியர் ராஜேஸ்வரி ஆணையர்கள் திலகவதி, நளினி, நகரச் செயலாளர் ராஜா, ஊராட்சி மன்ற தலைவர்கள் தமிழ்ச்செல்வி, ஆரஞ்சு பாப்பா குணசேகரன், அன்பு, இளங்கோவன், முல்லை ஆறுமுகம், முருகேசன், மணிகண்டன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், பாரதி பிரியா அய்யாதுரை, கலிய பெருமாள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


    • அலங்காநல்லூர் அருகே புதிய ரேஷன் கடையை வெங்கடேசன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
    • செயல் அலுவலர் ஜீலான் பானு, துணை சேர்மன் சுவாமிநாதன், நகர் செயலாளர் ரகுபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர்

    அலங்காநல்லூர் அருகே உள்ள அ.கோவில்பட்டி ஊராட்சி வைகாசிபட்டி கிராமத்தில் ரூ.5 லட்சம் மதிப்பில் நியாய விலை கடை கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடந்தது. சோழவந்தான் எம்.எல்.ஏ. வெங்கடேசன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்.

    அய்யூர் கூட்டுறவு சங்க தலைவர் அழகர்சாமி தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் தன்ராஜ், பரந்தாமன், ஊராட்சி மன்ற தலைவர் நித்யா பழனிநாதன், ஒன்றிய கவுன்சிலர் விமலாதேவி தயாளன், துணைத் தலைவர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டுறவு சங்க செயலாளர் பாஸ்கரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் முத்தையன், விவசாய அணி நடராஜன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அலங்காநல்லூர் பேரூராட்சிக்கு புதிதாக வழங்கப்பட்ட 9 பேட்டரி வாகனங்களையும், வெங்கடேசன் எம்.எல்.ஏ. கொடியசைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் தலைமை தாங்கினார்.

    செயல் அலுவலர் ஜீலான் பானு, துணை சேர்மன் சுவாமிநாதன், நகர் செயலாளர் ரகுபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட பெரிய கடை வீதி பகுதியில் சில தினங்களுக்கு முன்பு 5-க்கும் மேற்பட்ட கூரை கடைகள் தீ பற்றி எரிந்தன.

    இதனை பார்வையிட்ட வெங்கடேசன் எம்.எல்.ஏ. கடை உரிமையாளர்களுக்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் கூறினார். இதில் தி.மு.க. அவைத் தலைவர் பாலசுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலர் தேவி, பேரூராட்சி சேர்மன் சுமதி பாண்டியராஜன், துணைச் சேர்மன் ராமராஜ், நகர் செயலாளர் மனோகரவேல் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் போராட்ட அறிவிப்பு
    • அப்பகுதிகளுக்கு அணை நீர் செல்லாததால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

    கன்னியாகுமரி:

    குளச்சல் அருகே உள்ளது லட்சுமிபுரம் சானல். பேச்சிப்பாறை அணை நீர் இந்த சானல் வழியாக லட்சுமிபுரம், கருமங்கூடல், நடுவூர்க்கரை, மண்டைக்காடு, உடையார்விளை, செம்மண்குளம், அஞ்சாலி, சிராயன்விளை, கோணங்காடு ஆகிய விவசாய நிலங்களுக்கு பாய்ச்சப்படுகிறது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு திறந்து விடப்பட்ட அணை நீர் உடையார்விளை, செம்மண்குளம், அஞ்சாலி ஆகிய பகுதிகளுக்கு செல்லவில்லை. லட்சுமிபுரம் சானலில் குளச்சல் பிரிவு ஷட்டர் திறக்கப்படாததே இதற்கு காரணம் என அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்தனர். தற்போது கோடைக்காலம் தொடங்கிய நிலையில் அப்பகுதிகளுக்கு அணை நீர் செல்லாததால் விவசாயிகள் கவலையடைந்தனர். இந்நிலையில் குளச்சல் பிரிவு ஷட்டரை திறந்து அப்பகுதிக்கு தண்ணீர் விட வேண்டும் என வலியுறுத்தி கல்லுக்கூட்டம் பேரூராட்சி கவுன்சிலர்கள் டோமினிக் ததேயூஸ், ரூபன் பொன்மணி ஆகியோர் தலைமையில் பொதுமக்கள் லட்சுமிபுரம் சானல் சந்திப்பில் போராட்டம் நடத்த கூடினர்.

    இது குறித்து தகவலறிந்த பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு அதிகாரிகள் குளச்சல் பிரிவு ஷட்டரை திறந்து தண்ணீர் விட உத்தரவிட்டனர். இதையடுத்து சானல் ஊழியர் குளச்சல் பிரிவு ஷட்டரை திறந்து விட்டார். இதனால் செம்மண்குளம், உடையார்விளை, அஞ்சாலி, சிராயன்விளை, கோணங்காடு ஆகிய பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    • அமைச்சர் ரகுபதி திறந்து வைத்தார்
    • ந.புதூரில் புதிய ரேஷன் கடை திறக்கப்பட்டது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ந.புதூர் நியாயவிலைக் கடையினை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி திறந்து வைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு உணவுப் பொருட்களை வழங்கினார்.பின்னர் அவர் பேசும் போது,தமிழ்நாடு முதலமைச்சர் பொதுமக்களின் நலனுக்காக பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். அதன்படி பொதுமக்களுக்கு தேவையான இடங்களில் புதிய நியாயவிலை கடைகள் திறந்து வைப்பதன் மூலம் வீண் அலைச்சலை தவிர்ப்பதுடன் தரமான உணவு பொருட்களை வழங்கவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். அதன்படி தற்போது திருமயம் அருகே கோட்டூர் ரேஷன் கடையில் இருந்து 519, ரேஷன் கார்டுகளை பிரித்து, ந.புதூரில் புதிய ரேஷன் கடை அமைக்கப்பட்டது.இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திரபிரசாத், ஒன்றியக்குழு உறுப்பினர் அழகு (எ) சிதம்பரம்ரூபவ் அறந்தாங்கி சரக துணைப்பதிவாளர் ஆறுமுக பெருமாள், துணை பதிவாளர் (பொ.வி.தி) கோபால்ரூபவ் லெம்பலக்குடி, ஊராட்சிமன்றத் தலைவர் பாலு, அறங்காவலர் குழு உறுப்பினர் துரைராஜா மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×