என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேஷன் அரிசி பறிமுதல்"

    • ஈரோடு கிருஷ்ணம்பாளையம் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று ஆள் இல்லா ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு கிருஷ்ணம் பாளையம் கக்கன்நகர் பகுதியில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ் பெக்டர் பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் சம்பவயிடத்திற்கு விரைந்து சென்று ஆள் இல்லா ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.

    அங்கு 1,440 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து ரேஷன் அரிசியை பதுக்கியது யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஆயிரத்து115 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
    • கள்ள சந்தையில் வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.

    திருப்பூர் : 

    திருப்பூர் அடுத்த காங்கேயத்தில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு கூடுதல் விலைக்கு விற்பதாக திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு தகவல் வந்தது.

    இதனையடுத்து சார்பு ஆய்வாளர் கார்த்தி மற்றும் போலீசார் காங்கேயம் அருகில் ரேசன் பொருட்கள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுப்பு சம்பந்தமாக சந்தேகத்தின் அடிப்படையில் லட்சுமி நகர் 2 வது வீதியில் வாகன சோதனை செய்தனர்.

    அப்போது அங்கு வந்த ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அதில் ஆயிரத்து115 கிலோ ரேசன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வாகனத்தை ஓட்டி வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். 

    அதில் அவர் காங்கேயம் பகுதியை சேர்ந்த வெங்கடேஷ் (47) என்பதும், அவர் பொது மக்களிடம் ரேசன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி கள்ள சந்தையில் வடமாநிலத்தவர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது. பின்னர் வெங்கடேசை கைது செய்து அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்தனர்.

    • குடிமைப்பொருள் போலீசார் அர்ஜுனனை கைது செய்தனர்.
    • 1,650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் ஈரோடு மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதில் ரேஷன் அரிசி கடத்தி வருபவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த ஒத்தக்கடை பகுதியில் நேற்று இரவு குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை போலீசார் வாகன சோதனை ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

    அப்போது அந்த வழியாக ஆம்னி கார் ஒன்று வந்தது. காரை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது அதில் 1,650 கிலோ ரேஷன் அரிசி கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    காரில் இருந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியபோது அவர் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த பாப்பம்பாளையம் பகுதியை சேர்ந்த அர்ஜுனன் (24) என்பதும், வட மாநிலத்தவர்களுக்கு கூடுதல் விலையில் ரேஷன் அரிசியை விற்பதற்காக கடத்தி வந்தததையும் ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து குடிமைப்பொருள் போலீசார் அர்ஜுனனை கைது செய்தனர். அவரிடமிருந்து 1,650 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்தனர்.

    • குடோனில் சட்டவிரோதமாக 12.5 டன் ரேஷன் அரிசி குருணை, 1 டன் ரேஷன் அரிசி ஆகியவை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • 3 பேரை கைது செய்த போலீசார் மினி லாரி மற்றும் குருணை ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள மூப்பக்கோவில் பகுதியில் ஒரு குடோனில் ரேஷன் அரிசி, குருணை ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக குடிமை பொருள் குற்ற புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மேற்பார்வையில் புதுக்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் செல்வமணி தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு மினி லாரியில் 3 பேர் மூட்டைகளை குடோனுக்கு இறக்கி கொண்டிருந்தனர்.

    உடனடியாக போலீசார் அவர்களை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதையடுத்து அந்த குடோனில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் சட்டவிரோதமாக 12.5 டன் ரேஷன் அரிசி குருணை, 1 டன் ரேஷன் அரிசி ஆகியவை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இது குறித்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் மூப்பக்கோவில் அப்துல் கலாம் நகரை சேர்ந்த அருள் (வயது 19), அஜித்குமார் (24), கீழத்தெருவை சேர்ந்த ஆசைகுமார் (20) என்பதும், அந்த குடோனை லிங்கதுரை என்பவர் வாடகைக்கு எடுத்து ரேஷன் பொருட்களை பதுக்கி வைத்து அவற்றை மாடுகளுக்கு தீவனமாக பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து போலீசார் அருள், அஜித்குமார், ஆசைகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து மினி லாரி மற்றும் குருணை ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த தயாராக வைத்திருந்த 2500 கிலோ அரிசி மூட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • பறிமுதல் செய்யப்பட்ட 2500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பொன்னேரி அடுத்த பஞ்சட்டியில் உள்ள அரசு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளில் இருந்து அதிக அளவில் ரேஷன் அரிசி மூட்டைகள் ரெயில் மூலம் ஆந்திராவுக்கு கடத்தப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீவிர சோதனை செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் மீஞ்சூர் அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம் செல்லியம்மன் கோயில் அருகே முட்புதரில் 2500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்து ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த இருப்பதாக மீஞ்சூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் விரைந்து சென்று அனுப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே சோதனை செய்தனர். அப்போது அங்கு ஆந்திராவுக்கு ரெயிலில் கடத்த தயாராக வைத்திருந்த 2500 கிலோ அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக அனுப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்த குமார் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட 2500 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பொன்னேரி அடுத்த பஞ்சட்டியில் உள்ள அரசு நுகர் பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இது குறித்து ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு பிரிவு தனிப்படை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    • 2022-ம் ஆண்டு 2,113 நபர்கள் மீது 1,981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 19 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    • வரும் ஆண்டான 2023-ம் ஆண்டும் பொது வினியோக திட்ட பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பதுக்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வழக்குகள் பதிவு செய்யப்படும்.

    மதுரை:

    பொதுமக்களுக்கு அரசு வழங்கும் ரேஷன் அரிசி, கோதுமை, சீனி உள்ளிட்ட பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பதுக்குபவர்களை பிடிக்க உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன்படி மதுரை மண்டலத்திலுள்ள மொத்தம் 10 மாவட்டங்களில் அரசின் பொது வினியோக திட்ட ரேஷன் பொருட்களான ரேஷன் அரிசி, மண்எண்ணெய், கோதுமை, பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய பொருட்கள் அடிதட்டு மக்களுக்கு சென்று சேரும் வகையிலும் உணவுப் பொருட்கள் கடத்தல் மற்றும் பதுக்கலை தடுக்க வேண்டி மதுரை மண்டலம் போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா தலைமையில் 10 மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறையில் பணிபுரியும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

    அதில் 2022-ம் ஆண்டு 2,113 நபர்கள் மீது 1,981 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 19 நபர்கள் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதில் ரூ. 11 கோடியே 40 லட்சம் மதிப்புள்ள 1,405 டன் ரேஷன் அரிசி, 2,676 லிட்டர் மண்எண்ணெய், கோதுமை, பருப்பு மற்றும் பாமாயில் ஆகிய இதரப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளது. குடிமைப்பொருட்கள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் மொத்தம் 695 கைப்பற்றப்பட்டு பொது ஏலத்தில் விடப்பட்டுள்ளது. இது போல் வரும் ஆண்டான 2023-ம் ஆண்டும் பொது வினியோக திட்ட பொருட்களை கடத்துபவர்கள் மற்றும் பதுக்குபவர்களை தீவிரமாக கண்காணித்து வழக்குகள் பதிவு செய்யப்படும் என்று மதுரை மண்டல போலீஸ் சூப்பிரண்டு சினேகபிரியா எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

    • பெருமாள் கோவில் மேற்கு தெருவில் உள்ள கருப்பண்ண பிள்ளை என்பவர் வீட்டில் சோதனையிட்டபோது, 16 மூட்டைகளில் சுமார் 830 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
    • அரிசியை பறிமுதல் செய்த போலீசார், அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்த மோகனூர் ஆலம்பட்டியை சேர்ந்த கருப்பண்ண பிள்ளை என்பவரை கைது செய்தனர்.

    நாமக்கல்:

    தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை கூடுதல் காவல் துறை இயக்குனர் அருண் உத்தரவின் படி, தமிழக அரசால் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொதுவிநியோகத் திட்ட அரிசி, மண்ணெண்ணெய் கலப்பட டீசல் கடத்துதல், பதுக்குதல் தொடர்பாக ஆங்காங்கே வாகன சோதனை மூலம் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கூடுதல் காவல் துறை இயக்குனர் உத்தரவின் பேரில், நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு உதவி ஆய்வாளர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் மோகனூர் அருகே வளையபட்டி பகுதியில் ஈடுபட்டனர்.

    அப்போது பெருமாள் கோவில் மேற்கு தெருவில் உள்ள கருப்பண்ண பிள்ளை என்பவர் வீட்டில் சோதனையிட்டபோது, 16 மூட்டைகளில் சுமார் 830 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனை பறிமுதல் செய்த போலீசார், அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்த மோகனூர் ஆலம்பட்டியை சேர்ந்த கருப்பண்ண பிள்ளை என்பவரை கைது செய்தனர்.

    • வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 41 மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரேஷன் அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் கிருஷ்ணகிரி அரசு கலைக்கல்லூரி பின்புறம் திருமலை நகரில் ஒரு வீட்டில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அதில் அந்த வீட்டில் 50 கிலோ எடை கொண்ட 41 மூட்டைகளில் மொத்தம் 2 ஆயிரத்து 50 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.

    விசாரணையில் அந்த அரிசி, காட்டிநாயனப்பள்ளி, பெத்தனப்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்களிடம் வாங்கி,அதை அதிக விலைக்கு விற்பனை செய்ய வைத்திருந்தது தெரிய வந்தது-. அந்த ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக கிருஷ்ணகிரி திருமலை நகரை சேர்ந்த மணி என்கிற மணிவண்ணன் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

    • வாகனத்தில் 86 மூட்டைகளில் சுமார் 4300 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    தருமபுரி,

    ரேசன் அரிசி கடத்தலை தடுக்கும் பொருட்டு காவல் துணைக் கண்காணிப்பாளர் விஜயகுமார் வழிகாட்டுதல்படி தருமபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் உதவி ஆய்வாளர் மோகன் தலைமையில் தலைமை காவலர்கள் வேணுகோபால் மற்றும் கோவிந்தன் ஆகியோர் பென்னாகரம் முள்ளுவாடி பகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது முஸ்லீம் சுடுகாடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக வந்த லாரியை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் 86 மூட்டைகளில் சுமார் 4300 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.

    அப்போது வாகனத்தில் இருந்த ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். பிறகு விசாரணை செய்ததில் தப்பி ஓடிய நபர் பாலக்கோட்டை சேர்ந்த யாக்கோபு சாய்பு மகன் முஜமில் (28), அரிசி கடத்தலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளான பாலக்கோடு பகுதியை சேர்ந்த நவாப் ஜான் மகன் இம்ரான், நூருல்லா மகன் நவாப் ஜான் மற்றும் பென்னாகரம் மகபூப் பாஷா ஆகியோர் மீது சிவில் சப்ளை சிஐடி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவு குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

    கைப்பற்றப்பட்ட ரேசன் அரிசியை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

    • பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது.
    • பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் அருகே ஒலிமுகமதுபேட்டை ஹாஜி நகர் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக காஞ்சிபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், குடிமைப்பொருள் மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஏ.டி.எஸ்.பி.அருண், கண்காணிப்பாளர் கீதா, துணை கண்காணிப்பாளர் நாகராஜன் ஆகியோர் ரேஷன் அரிசி கடத்தலை தீவிரமாக கண்காணிக்க உத்தரவிட்டனர்.

    அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சதீஷ் தலைமையில் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ஒலிமுகமதுபேட்டை அருகே ஹாஜி நகர் பகுதியில் உள்ள பிலால் என்பவரது வீட்டிற்கு சென்றனர். வீட்டில் உள்ள அறைகளில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் சுமார் 1,500 கிலோ ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து பொதுமக்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி மொத்தமாக, வெளிமாநிலங்களுக்கு கடத்த வைத்திருப்பது தெரியவந்தது. எனவே, ஒலிமுகமதுபேட்டையை சேர்ந்த பிலால் (வயது 37), இடைதரகர்களாக செயல்பட்ட அதே பகுதியை சேர்ந்த மொய்தீன் அப்துல் காதர் (52), திருக்காலிமேட்டை சேர்ந்த நாராயணமூர்த்தி (35) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அங்கு பதுக்கி வைத்திருந்த ரேஷன் அரிசி மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

    • 200 மூட்டை ரேசன் அரசி, பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டு ரெயில் நிலையம், மீஞ்சூர் மற்றும் தடப்பெரும்பாக்கம் ,கிருஷ்ணாபுரம், பகுதியில் பொன்னேரி வட்ட வழங்கல் அலுவலர் ஜெய்கர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 200 மூட்டை ரேசன் அரசி, பருப்பு மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவற்றை பஞ்செட்டியில் உள்ள நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைத்தனர். ரேசன் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கருணாகரன் (37) என்பவரை பிடித்து, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    • குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலம் பங்கார்பேட்டையில் அதிக விலைக்கு இக்கும்பல் விற்று வந்தது தெரிந்தது.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க பல்வேறு கண்காணிப்பு குழுக்களை மாவட்ட கலெக்டர் சரயு அமைத்துள்ளார்.

    மாவட்ட வழங்கல் அலுவலர் சுகுமார் மேற்பார்வையில், பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான வருவாய்துறையினர் மாவட்டத்தில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதை பல்வேறு குழுக்களாக பிரிந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பறக்கும் படை தாசில்தார் இளங்கோ தலைமையிலான வருவாய்துறை அதிகாரிகள் கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவல்படி குருபரப்பள்ளி அருகே கிருஷ்ணகிரி ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் வந்த கன்டெய்னர் லாரியை மடக்கினர்.

    அதில், 25 கிலோ அளவிலான, 600 சாக்கு பைகளில், 15 டன் ரேஷன் புழுங்கல் அரிசி இருந்தது தெரிந்தது. இதையடுத்து கன்டெய்னர் லாரியை ஓட்டி வந்த திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கத்தை சேர்ந்த கருணாகரன் (37) என்பவரை பிடித்து, உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    விசாரணையில் திருவண்ணாமலை சுற்று வட்டார பகுதிகளில் குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடக மாநிலம் பங்கார்பேட்டையில் அதிக விலைக்கு இக்கும்பல் விற்று வந்தது தெரிந்தது.

    பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி, கன்டெய்னர் லாரியும் தமிழ்நாடு வாணிப நுகர்பொருள் கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக அரிசி ஆலை உரிமையாளர்கள், ஏஜெண்டுகள் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ×