search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாவூர்சத்திரம்"

    • வட்டாலூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • சின்டெக்ஸ் தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீரேற்றும் மின் மோட்டார் பழுதாகியதாக கூறப்படுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள வட்டாலூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சின்டெக்ஸ் தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் சின்டெக்ஸ் தொட்டிக்கு நீரேற்றும் மின் மோட்டார் பழுதாகியதாக கூறப்படு கிறது. இதனால் கடந்த 10 நாட்க ளுக்கு மேலாக தண்ணீர் சரி வர கிடைக்காததால் இதனை சரி செய்து முறையான தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வட்டாலூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் கீழப்பாவூர் பேரூ ராட்சியின் தலைவர் பி.எம்.எஸ். ராஜன் மற்றும் செயல் அலுவலர் மாணிக்க ராஜாவை சந்தித்து மனு வழங்கினர். அப்போது உடனடியாக சம்பந்தப்பட்ட ஊழியர்களை அழைத்து மின் மோட்டாரை சரி செய்து மீண்டும் வழக்கம் போல் தண்ணீர் வழங்கப் படும் என உறுதி அளித்தனர்.

    • மாநில அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
    • 17 வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் சி.இ.ஓ.ஏ. மதுரை அணியினர் முதல் பரிசை பெற்றனர்

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள மடத்தூர் இந்து நடுநிலைப்பள்ளி முன்னாள் நிர்வாகி எஸ்.கே.பி. குத்தாலிங்க நாடார் நினைவு கைப்பந்து போட்டி நேற்று மடத்தூரில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    மாநில அளவில் நடைபெற்ற இப்போட்டியில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. இதில் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில் மதுரை மேட்டுப்பட்டி அணியினர் முதல் பரிசும், சி.இ.ஓ.ஏ. மதுரை அணியினர் 2-வது பரிசும், மடத்தூர் இந்து நடுநிலைப் பள்ளி அணியினர் 3-ம் பரிசும், நான்காம் பரிசை மம்சாபுரம் அணியினரும் பெற்றனர்.

    மாணவிகள் பிரிவில் முதல் பரிசு பரமகல்யாணி பள்ளி அணியினரும், 2-வது பரிசை எஸ்.என். அகாடமி அணியினரும், 3-ம் பரிசினை அழகர் கோவில் அணியினரும், 4-வது பரிசினை மடத்தூர் இந்து நடுநிலை பள்ளி மாணவிகளும் பெற்றனர். 17 வயதுக்கு உட்பட்டவர் பிரிவில் முதல் பரிசை சி.இ.ஓ.ஏ. மதுரை அணியினரும், 2-வது பரிசினை மம்சாபுரம் அணியினரும், 3-ம் பரிசை ஸ்ரீவில்லிபுத்தூர் அணியினரும், 4-ம் பரிசை ராமேஸ்வரம் அணியினரும் பெற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடு களை பிரவீன் அகஸ்டின் செய்திருந்தார்.

    • கடந்த வாரம் வாழை இலை கட்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.
    • விலை அதிகரிப்பால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பெருந்தலைவர் காமராஜர் தினசரி மார்க்கெட்டில் காய்கறிகள் மற்றும் வாழைத்தார், வாழை இலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு கடந்த வாரம் வரை 200 இலைகள் அடங்கிய வாழை இலை கட்டு ரூ.300 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.இந்நிலையில் தற்போது அவற்றின் விலை 2 மடங்காக உயர்ந்து ரூ. 600-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் கோழிக்கூடு, நாடு, மட்டி உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த வாழைத்தார்கள் விலையும் 2 மடங்காக அதிகரித்துள்ளது.

    வாழைத்தார் மற்றும் வாழை இலைகளின் விலை அதிகரிப்பால் வாழை பயிரிட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டம் முழுவதும் தற்போது காற்று சீசன் தொடங்கி உள்ளதால் வாழைத்தார் மற்றும் வாழை இலை களின் விலையானது அதிகரித்து ள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ஈஸ்டர் ராஜ் ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார்.
    • தனியாக இருந்த ஈஸ்டர் ராஜ் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள செல்லத்தாயார்புரத்தை சேர்ந்தவர் அருள் தாமஸ். இவரது மகன் ஈஸ்டர் ராஜ்(வயது 34). இவர் டிப்ளமோ படித்து விட்டு ஏ.சி. மெக்கானிக்காக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி செல்வ மெர்ஸி என்ற மனைவியும், 2 வயதில் ஒரு மகனும் உள்ளனர்.இந்நிலையில் கணவன்-மனைவி 2 பேருக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று பாவூர்சத்திரம் அருகே மருதடியூரில் தனது மாமனார் வீட்டுக்கு ஈஸ்டர் ராஜ் சென்றுள்ளார். அங்கு யாரும் இல்லாத நிலையில், தனியாக இருந்த ஈஸ்டர் ராஜ் அங்குள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.தகவல் அறிந்து பாவூர்சத்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அரசு பஸ் ஒன்று பாவூர்சத்திரத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்டது.
    • டிரைவர் பஸ்சை நிறுத்தும் முன்பே மூதாட்டி இறங்கியதால் தவறி விழுந்தார்.

    தென்காசி:

    தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக நெல்லை செல்லும் அரசு பஸ் ஒன்று பாவூர்சத்திரம் பஸ் நிலையத்தில் பயணிகளை ஏற்றிக்கொண்டு நெல்லைக்கு புறப்பட்டது.

    இந்நிலையில் நெல்லை- தென்காசி 4 வழிச்சாலையில் பாவூர்சத்திரம் பிரதான பகுதியில் சென்று கொண்டிருந்த போது அந்த பஸ்சில் வழி தவறி ஏறிய சுமார் 80 வயது உள்ள மூதாட்டி ஒருவர் அவசரமாக இறங்குவதற்கு முயற்சித்துள்ளார்.

    இந்நிலையில் பஸ் டிரைவர் நிறுத்துவதற்கு முன்பே அந்த மூதாட்டி பதட்டத்தில் இறங்கியதால் தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது. உடனே பஸ் நிறுத்தப்பட்டது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இந்நிலையில் அந்த மூதாட்டிக்கு தலையில் அடிபட்டதால் தனது பெயர், அவரது ஊர் மற்றும் உறவினர்கள் பெயரை சொல்ல முடியாமல் திணறினார். சம்பவம் அறிந்து விரைந்து வந்த பாவூர்சத்திரம் போலீசார் அந்த மூதாட்டியை 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மூலம் சிகிச்சை கொடுத்து பின்னர் அவரை அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றனர். ஆம்பு லன்சில் ஏறுவதற்கு மறுத்த மூதாட்டியை பெண் போலீஸ் ஒருவர் கரிசனையுடன் பேச்சு கொடுத்து அவரை 108 ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காகவும், மூதாட்டியின் உறவினர்கள் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காகவும் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியாக பார்க்கப்பட்டது. அந்த பெண் போலீசுக்கு பாராட்டுகளும் குவிகிறது. இந்நிலையில் மூதாட்டியின் சொந்த ஊர் மடத்தூர் என்பது தெரியவந்தது.

    • ராஜேஷ்குமார் மோட்டார் சைக்கிளில் தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி வந்துள்ளார்.
    • எதிரே வந்த மினி லோடு ஆட்டோ மோதி ராஜேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பொடி யனூர் மேற்கு தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் ராஜேஷ்குமார்(வயது 20). என்ஜினீயரிங் பட்டதாரி.

    இவர் நேற்று தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். பாவூர் சத்திரம் அருகே ராமச்சந்திரபட்டினம் பகுதியில் வந்தபோது முன்னால் சென்ற காரை முந்தி செல்ல அவர் முயன்றுள்ளார். அப்போது எதிரே வந்த மினி லோடு ஆட்டோ மோதி ராஜேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார்.

    நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிலையில் பாவூர்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகள் எதுவும் மேற்கொள்ளாததே விபத்துகள் அதிகம் ஏற்படுவதற்கு காரணம் எனவும், நான்கு வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து செல்வதால் வாகன ஓட்டிகள் பெரிதும் குழப்பம் அடைந்து விபத்து ஏற்பட்டு விடுகிறது எனவும் சமூக ஆர்வலர்கள் புகார் கூறுகின்றனர்.

    நேற்று ராஜேஷ் குமார் விபத்தில் இறந்ததற்கும் ராமச்சந்திரபட்டணம் விளக்கு அருகே நான்கு வழிச்சாலையில் இருபுறமும் வாகனங்கள் அணிவித்து சென்றது தான் காரணம். லோடு ஆட்டோவானது நான்கு வழிச்சாலையில் இடதுபுறம் உள்ள சாலையில் சென்றிருந்தால் நேற்றைய விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும் என சமூக ஆர்வலர்கள் தெரி வித்துள்ளனர். எனவே உரிய பாதுகாப்பு உபகரணங்களை பயன் படுத்தாமல் அலட்சியமாக பணி புரிந்து வரும் நான்கு வழிச்சாலை ஒப்பந்ததாரர்கள் மீதும், அதனை கண்டு கொள்ளாத அரசு அலுவலர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    • ரெயில் நிலையத்தில் உள்ள குப்பைகள், செடி, கொடிகளை மாணவ, மாணவிகள் அகற்றினர்.
    • முகாமில் அரிமா சங்க நிர்வாகிகள், ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் பாவூர்சத்திரம் சென்ட்ரல் அரிமா சங்கத்தின் சார்பாக ஐன்ஸ்டீன் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மாணவர்கள் மற்றும் மாணவிகள் 40 பேர் குழுவாக சேர்ந்து பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் உள்ள குப்பைகள் மற்றும் தேவையற்று வளர்ந்திருக்கும் செடி, கொடிகளை அகற்றினர். இருக்கை களை சீர்படுத்தி சுத்தப்படுத்தினர். பாவூர்சத்திரம் ரெயில்வே நிலையத்தின் நிலைய அதிகாரிகள் ஒத்துழைப்போடு அரிமா சங்கம், ஊராட்சி தலைவர் மற்றும் சமூக ஆர்வலர்களுடன் ஐன்ஸ்டீன் கல்லூரி மாணவர்கள் இணைந்து இந்தப் பணியில் ஈடுபட்டனர். ஏற்பாடுகளை ஐன்ஸ்டீன் கல்லூரி நிர்வாக இயக்குனர் ஆலடி எழில்வாணன்,லயன்ஸ் கிளப் கே.ஆர்.பி.இளங்கோ, லட்சுமி சேகர், பரமசிவன், தளிர் தங்கராஜ், பாண்டியராஜா ஆகியோர் செய்திருந்தனர்.

    • சந்தனகுமார்பட்டியில் தனி நபர் ஒருவர் ஊரின் பெயர் பலகை வைத்ததாக கூறப்படுகிறது.
    • காலையில் தொடங்கிய போராட்டமானது மாலை 5 மணி வரை நீடித்தது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாடியனூர், சந்தனகுமார்பட்டி ஆகிய பகுதி பொதுமக்கள் இடையே ஊர் பெயர் பலகை வைப்பது தொடர்பாக கடந்த சில மாதங்களாக பிரச்சினை இருந்து வருகிறது.

    தென்காசி தாசில்தார் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் ஏற்கனவே சமாதான கூட்டம் நடத்தப்பட்ட நிலையில் கூட்டத்தில் அரசு அனுமதி இன்றி வேறு பலகை வைக்க கூடாது என முடிவு எடுக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சந்தனகுமார்பட்டியில் தனி நபர் ஒருவர் ஊரின் பெயர் பலகை வைத்ததாக கூறப்படுகிறது. அதனை உடனடியாக அகற்ற வேண்டும் என கூறி 40-க்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஒன்று கூடி திடீரென நேற்று உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் பொறுப்பு ரமேஷ் கண்ணன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    எனினும் தாசில்தார் வந்து முழுமையான தகவல் தெரிவித்தால் தான் கலைந்து செல்வோம் என தெரிவித்ததால் காலையில் தொடங்கிய போராட்டமானது மாலை 5 மணி வரை நீடித்தது. தென்காசி தாசில்தார் சுப்பையன்,வருவாய் அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அதிகாரி கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு 25 நாட்களுக்குள் பெயர் பலகை தொடர்பாக தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கிருந்து உண்ணாவிரதத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • அம்மனுக்கு விசேஷ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • ஞாயிற்றுக்கிழமைகளில் காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்படும்

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற அருணாப்பேரி அழகுமுத்து மாரியம்மன் கோவிலில் ஆடி மாத பூஜை நேற்று தொடங்கியது. இதையொட்டி அம்மனுக்கு விசேஷ அலங்காரத்துடன் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து ஆடி மாதம் முழுவதும் தினந்தோறும் அம்மனுக்கு கூழ் படைத்து சிறப்பு பூஜையுடன் வழிபடும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஆடி மாத ஞாயிற்றுக்கிழமைகளில் மதியம் 12.30 மணிக்கும், மாலை 6.30 மணிக்கும் பூஜைகள் நடைபெறும். மேலும் காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா எம்.எஸ்.சிவன்பாண்டி தலைமையில் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    • காங்கிரஸ் கட்சி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டது.
    • நிகழ்ச்சியில் திப்பணம்பட்டி ஊராட்சி தலைவர் ஐவராஜா, பள்ளி ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    பெருந்தலைவர் காமராஜரின் பிறந்த நாளை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப்போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள், கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் பழனி நாடார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் கல்வி உபகரணங்களை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சுப்பிர மணியன், கீழப்பாவூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் குமார் பாண்டியன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பெத்தநாடார்பட்டி வைகுண்டராஜ், கீழப்பாவூர் ஒன்றிய கவுன்சிலர் மேரி மாதா, திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஐவராஜா மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • யூனியன் அலுவலகம் அருகே காமராஜ்நகர் பஸ் நிலையம் இயங்கி வந்தது.
    • மாணவர்கள் அரை கிலோமீட்டர் தூரம் பள்ளிக்கு நடந்து செல்லும் நிலை உள்ளது.

    தென்காசி:

    நெல்லை- தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 2 வருடமாக நடைபெற்று வரும் சூழ்நிலையில் பாவூர்சத்திரம் யூனியன் அலுவலகம் அருகே காமராஜ் நகர் வடக்கு- தெற்கு என இரு பகுதிகளுக்கும் சேர்த்து காமராஜ்நகர் பஸ் நிலையம் இயங்கி வந்த நிலையில் தற்பொழுது அதனை அகற்றியுள்ளனர்.

    ½ கிலோ மீட்டர்

    பாவூர்சத்திரம் காமராஜ்நகர் பகுதி பொது மக்கள் மற்றும் கீழப்பாவூர் யூனியன் அலுவலகம் த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நி லைப்பள்ளி மாணவ ர்கள் அனைவரும் காமராஜ் நகர் பஸ் நிலையத்தை பயன்படுத்தி வந்த நிலையில் தற்பொழுது நான்கு வழிச் சாலை பணி முடிவுற்ற நிலையில் காமராஜ்நகர் பகுதியில் புதிய பஸ் நிலையத்தை அமைக்காமல் அதிலிருந்து கிழக்கே ½ கிலோ மீட்டர் தொலைவில் பாரத ஸ்டேட் வங்கிக்கு எதிரே புதிய பஸ் நிலையம் அமைக்கப் பட்டுள்ளது.

    இதனால் அரசு பள்ளிக்கு பஸ்கள் மூலம் வரும் மாணவர்கள் அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஸ் நிலையத்தில் இறங்கி நடந்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.

    கோரிக்கை

    எனவே குடியிருப்புகள் மற்றும் அரசு அலுவலகம் பள்ளி இருக்கும் பகுதியில் பஸ் நிலையத்தை மாற்றி அமைக்க வேண்டும் என பாவூர்சத்திரம் த.பி. சொக்கலால் அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் காமராஜ் நகர் குடியிருப்பு வாசிகளின் சார்பில் கோரி க்கை வைக்கப்பட்டுள்ளது.

    எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • சந்தைக்கு வரும் பொதுமக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • கழிப்பிடங்கள் அனைத்தும் துர்நாற்றம் வீசி வருகிறது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் அமைந்துள்ள பழைய மார்க்கெட்டில் ஒவ்வொரு வியாழக்கிழமையும் காய்கறிகள் சந்தை நடத்தப்பட்டு வந்தது.

    கால்நடை சந்தை

    இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே மார்க்கெட்டுக்குள் வைத்து ஆடு மற்றும் மாடுகள் சந்தையும் புதிதாக தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இதனால் சந்தைக்கு பொருட்கள் மற்றும் ஆடு, மாடுகள் வாங்க வரும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதியாக பாவூர்சத்திரம் பழைய மார்க்கெட் பகுதி இருப்பதால் பொது மக்களின் கழிப்பிட வசதிக்காக போர்வெல் அமைத்து தண்ணீர் வசதியுடன் கூடிய கழிப்பிட கட்டிடம் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக சரியாக பராமரிபபு இல்லாமல் தண்ணீர் வசதியின்றி கழிப்பிடங்கள் அனைத்தும் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் அதனை மார்க்கெட்டுக்கு வரும் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது.

    சமூகஆர்வலர்கள் கோரிக்கை

    இதனால் சந்தை நடை பெறும் நேரங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கீழப்பாவூர் ஊராட்சி நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் வியா பாரிகளின் நலன் கருதி பாவூர்சத்திரம் பழைய மார்க்கெட்டுக்குள் இயங்காமல் இருக்கும் கழிப்பிட கட்டிடத்தில் தண்ணீர் வசதியை ஏற்படுத்தி புதுப்பித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப் பட்டுள்ளது.

    ×