என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பணியினை"
- பெரிய குளத்தில் படர்ந்துள்ள ஆகாய தாமரைகளை நவீன இயந்திரம் மூலம் அரவை செய்து உரமாக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- பெரிய குளத்தின் கரைகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நாகர்கோவில்:
மாநகராட்சிக்குட்பட்ட சுசீந்திரம் பெரிய குளத்தை மறுசீராக்கம் மேற்கொள்ளும் பணியினை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
கலெக்டர் அரவிந்த் தலைமையில், மேயர் மகேஷ் முன்னிலை வகித்தார். இது குறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறு கையில்:
கன்னியாகுமரி மாவட்ட த்தினை முழுமையான பசுமை மாவட்டமாக மாற்றிடும் நோக்கில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவ னங்கள் வாயிலாக பல்வேறு முன்னெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சுசீந்திரம் பகுதியிலுள்ள பெரிய குளத்தில் பட ர்ந்துள்ள ஆகாய தாமரை செடி மற்றும் அதன் கொடிகளை முழுமையாக அகற்றி குளத்தினை தூய்மை ப்படுத்துவதோடு குளத்தில் இருந்து அகற்றப்பட்ட ஆகாய தாமரை களை நவீன இயந்திரம் மூலம் அரவை செய்து உரமாக்குவதற்காக முயற்சியும் மேற்கொள்ளப்ப ட்டுள்ளது.
மேலும் பெரிய குளத்தின் கரைகளை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை உலக சுற்றுசூழல் தினத்தன்று துவக்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைவதோடு. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தூர் வாரும் பணியினை சுற்றுசூழல் ஆர்வலர்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளார்கள்.
இப்பணிகளை 5 மாதத்திற்குள் துரிதமாக முடித்திட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் மனோ தங்கராஜ் கூறினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வன அலுவலர்இளையராஜா, நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன், மாவட்ட வருவாய் அலுவலர் (நிலமெடுப்பு) ரேவதி. மாவட்ட வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம், அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் சேகர், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள். உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.