search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரி"

    • தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.
    • வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வடுகபாளையம் புதூர் ஊராட்சி திருவள்ளுவர் நகரில் வசிப்பவர் பெருமாள் சாமி( வயது 48), வியாபாரி. இந்த நிலையில் இவரது வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்து, காரைகள் பெயர்ந்து இருந்தது. இது குறித்து மின்வாரியத்தில் தகவல் தெரிவித்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில்,கடந்த 11 ந் தேதியன்று வளர்ப்பு நாயை அழைத்துக் கொண்டு வெளியே சென்ற போது மின் கம்பத்தின் காரை திடீரென பெயர்ந்து பெருமாள் சாமி தலை மீது விழுந்தது. இதனால் அவரது மண்டை உடைந்தது. அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தலையில் 7 தையல்கள் போடப்பட்டதாக கூறப்படுகிறது.

    இது குறித்து பெருமாள் சாமி குடும்பத்தினர் கூறியதாவது:- வீட்டின் முன்புறம் உள்ள மின்கம்பம் பழுதடைந்தது குறித்து மின்வாரிய அலுவலகத்தில் தகவல் தெரிவித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மின்கம்பத்தின் காரைகள் பெயர்ந்து விழுந்ததில், அவருக்கு மண்டை உடைந்து 7 தையல்கள் போட்டு, ரூ.25 ஆயிரத்திற்கு மேல் செலவானது. இதனால் வீண் அலைச்சல் மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது என்றனர்.

    • மணல் குடோனில் சிறுநீர் கழித்ததை, சத்தியாகு கண்டித்துள்ளார்.
    • ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் கீழ ஆசாரிபள்ளம் சானல் கரையை சேர்ந்தவர் சத்தியாகு (வயது 61). இவர் சாக்கு வியாபாரம் செய்து வருகிறார்.

    சத்தியாகு நேற்று மேல ஆசாரிபள்ளத்தில் மணல் குடோன் ஒன்றுக்கு சென்றார். அப்போது அங்கு அதேபகுதியை சேர்ந்த மர ஆசாரி சேவியர் (55) வந்துள்ளார். அவர், மணல் குடோனில் சிறுநீர் கழித்ததை, சத்தியாகு கண்டித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சேவியர், தான் வைத்திருந்த உளியால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில், சத்தியாகுவுக்கு தலை, மார்பு மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது.

    அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் திரண்டதால், சேவியர் அங்கிருந்து ஓட்டம் எடுத்தார். அப்போது ஆசாரிபள்ளத்தை சேர்ந்த அருள்சேவியர் (47) என்பவர் இரு சக்கர வாகனத்தில் வந்துள்ளார். அவரது வாகனத்தில் ஏறி சேவியர் தப்பிச்சென்று விட்டார்.

    காயம் அடைந்த சத்தி யாகு சிகிச்சைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்ற னர். இதுகுறித்த புகாரின் பேரில் ஆசாரிபள்ளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வியாபாரி மாயமானார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருே உள்ள கூமாபட்டியை சேர்ந்தவர் ஜெகபர்சாதிக் (42). இவர் திருப்பூரில் வியாபாரம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதத்தில் குடும்பத்துடன் கூமாபட்டிக்கு வந்தார். இந்த நிலையில் ராஜபாளையம் செல்வதாக கூறி சென்றவர் அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதைத்தொடர்ந்து ஜெகபர்சாதிக்கின் மனைவி அபிராஜ் பேகம் கொடுத்தபுகாரின்பேரில் கூமாபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ஜோசப் இரும்பு கம்பிகள் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்து வந்தார்.
    • தொழிலில் ஜோசப்புக்கு ரூ. 8 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி கதிர்வேல் நகரை சேர்ந்தவர் ஜோசப் (வயது 60). இவர் இரும்பு கம்பிகள் மற்றும் காப்பர் போன்றவற்றை இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செய்தும், சில்லரை வியாபாரமும் செய்து வந்தார்.

    இந்நிலையில் மில்லர்புரத்தை சேர்ந்த துரை என்பவருடன் சேர்ந்து இரும்பு வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது காப்பர் லோடு எடுத்து வியாபாரம் செய்தால் நல்ல லாபம் பெறலாம் என கூறியதாகவும், அதன் அடிப்படையில் வியாபாரம் செய்த போது தொழிலில் ஜோசப்புக்கு ரூ. 8 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தன்னுடைய தொழில் நஷ்டத்திற்கு துரை தான் காரணம் எனவும், இதனால் அதிக பேரிடம் வட்டிக்கு பணம் வாங்கி விட்டதாகவும் கூறி வந்துள்ளார்.

    இந்நிலையில் ஜோசப் எட்டையாபுரம் ரோட்டில் ஒரு தனியார் கல்லூரி பின்புறம் உள்ள இரும்பு குடோனில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட னர். ஜோசப் தற்கொலை செய்து கொண்டதற்கான எந்த தடயமும் இல்லாததால் சாவில் மர்மம் இருப்பதாக அவரது குடும்பத்தினர் புகார் கூறினர். இது குறித்து போலீசார், ஜோசப் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது கொலையா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் வியாபாரி-முதியவர் தற்கொலை செய்தனர்.
    • பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள அத்திக்குளத்தை சேர்ந்தவர் மயிலரசன் (வயது 41). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவர் வீட்டுக்கு செலவுக்கு பணம் கொடுப்பதில்லை என கூறப்படுகிறது. ஒரு வாரமாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேேய இருந்துள்ளார். அதுகுறித்து அவரது மனைவி அவரிடம் கேட்டுள்ளார். இதனால் கோபித்துக் கொண்டு மயிலரசன் வீட்டைவிட்டு வெளிேய சென்றார். ஆனால் மீண்டும் வீடு திரும்பவில்லை.

    இந்த நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் திருமுக்குளம் அருகே மயிலரசன் விஷம் குடித்து மயங்கி கிடப்பதாக தகவல் வந்தது. உடனடியாக உறவினர்கள் அங்கு சென்று அவரை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து மயிலரசன் மனைவி செண்பகவல்லி கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவ செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் அருகே உள்ள கட்டையாபுரத்ைத சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (69). இவரது மனைவி ஏற்கனவே இறந்து விட்டார். உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் வீட்டில்யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உறவினர் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • மற்றொருவரை பிடிக்க தனிப்படை தீவிரம்
    • 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அருகே வடக்குச் சூரங்குடி தட்டான் விளை பகுதியைச் சேர்ந்த வர் பிரேம் ஆனந்த் (வயது 30). இவர் நாகர்கோ வில் ராமன்புதூர் பகுதியில் பழக்கடை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று பிரேம் ஆனந்த் அவரது சகோதரி யின் கணவர் ஆனந்த் இருவரும் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு செல்வ தற்காக தயாரானார்கள். அப்போது புன்னைநகரை சேர்ந்த நவீன் குமார், தட்டான்விளையை சேர்ந்த சஞ்சய் (23) ஆகியோர் தங்களுக்கு பழம் வேண்டும் என்று கேட்டு தகராறு செய்தனர்.

    மேலும் ஆத்திரமடைந்த இருவரும், பிரேம்ஆனந்த் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். படுகாயம் அடைந்த பிரேம் ஆனந்த் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து ஆனந்த் நேசமணி நகர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் நவீன் குமார், சஞ்சய் இருவர் மீதும் கொலை முயற்சி உட்பட 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வந்தனர்.அவர்களை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட் டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சஞ்சயை போலீசார் பிடித்தனர். பிடிபட்ட அவரை நேசமணி நகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினார்கள். விசாரணை யில் பழம் கொடுக்காத ஆத்திரத்தில் பிரேம்ஆனந்த் மீது தீ வைத்ததாக கூறினார்.

    இதை தொடர்ந்து போலீ சார் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். தலைமறைவாகியுள்ள நவீன்குமாரை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • வியாபாரியை சரமாரியாக அடித்து உதைத்த 5 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சுதந்திரமாக வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    மதுரை

    மதுரை அனுப்பானடி பஸ் நிலையம் பகுதியில் 5 பேர் கொண்ட கும்பல் ஒருவரை நடுரோட்டில் சரமாரி தாக்கி வேட்டியை உருவி, விரட்டு அடிப்பது போன்ற காட்சி கடந்த சில நாட்களாக சமூக வலை தளத்தில் வேகமாக பரவியது. நடுரோட்டில் நடந்த இந்த சம்பவத்துக்கு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

    இந்த நிலையில் இந்த வீடியோ குறித்து போலீ சாரின் கவனத்துக்கு வந்தது. அதன் அடிப்படை யில் தெப்பக்குளம் போலீ சார் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், தாக்கப்பட்டவர் மதுரை காமராஜர் சாலை சீனிவாச பெருமாள் கோவில் தெருவை சேர்ந்த சுந்தர் (வயது 27) என தெரியவந்தது.நுங்கு வியாபாரியான இவர் சம்பவத்தன்று வியா பாரத்துக்காக மோட்டார் சைக்கிளில் அனுப்பானடி பஸ் நிலைய பகுதிக்கு வந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிள் முன்னால் நின்றிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது தவறுதலாக லேசாக உரசியுள்ளது.

    உடனே மோட்டார் சைக்கிளில் இருந்த அனுப்பானடி அம்பேத்கார் நகரை சேர்ந்த போஸ் மகன் செந்தில்குமார் (20), சகோதரர்கள் அருண்குமார் (23), செல்வகுமார் மற்றும் ராஜீவ் காந்தி நகரை சேர்ந்த அழகன் மகன் கார்த்திக் பிரபு (23), முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த காமராஜ் மகன் தீபக்ராஜா (23) ஆகியோர் சுந்தரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட தோடு தரக்குறைவாக பேசியுள்ளனர்.

    மேலும் சுந்தரை நடுரோட்டில் சரமாரியாக தாக்கி, அவரது வேட்டியை உருவி விரட்டி அடித்தனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இதையடுத்து போலீசார் மேற்கண்ட 5 பேரையும் கைது செய்தனர்.

    மதுரை நகரில் அண்மைக்காலமாக இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. சாலையோரத்தில் கடை வைத்து பிழைப்பு நடத்தும் சிறுவியாபாரிகள் ரவுடிகளால் தாக்கப்பட்டு பணம் பறிக்கும் சம்பவம் சர்வ சாதரணமாக நடந்து வருகிறது. எனவே போலீசார் கூடுதல் கவனம் செலுத்தி வியாபாரிகள் சுதந்திரமாக வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • ஜவுளிக்கடை வியாபாரியை வீடு புகுந்து தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • வீடு புகுந்து வாசுதேவனை தாக்கினர்.

    மதுரை

    மதுரை வெங்கலக்கடை தெருவை சேர்ந்தவர் வாசு தேவன் (வயது 58). இவர் அந்த பகுதியில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இவருக் கும், இவரது சகோதரர்க ளுக்கும் இடையில் ஏற்கனவே சொத்து சம்பந்தமாக முன்விரோதம் உள்ளது.

    இந்த நிலையில் வாசு தேவன் சம்பவத்தன்று மதியம் வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த அவரது சகோதரர் மாதவன், அவரது மனைவி காஞ்சனா மற்றும் சாரதா ஆகிய 3 பேர் வீடு புகுந்து வாசுதேவனை சரமாரியாக தாக்கினர்.

    இது தொடர்பாக வாசு தேவன் விளக்குத்தூண் போலீசில் புகார் செய்தார். இதனடிப்படையில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து மாதவன், காஞ்சனா, சாரதா ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதே வழக்கில் காஞ்சனா கொடுத்த புகாரின் அடிப் படையில் வாசுதேவன், ஜெயராஜ் ஆகிய 2 பேரை யும் போலீசார் கைது செய்தனர்.

    • ஜெகநாதன் உடல் மிதப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்துள்ளனர்.
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட முழங்குழி பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் (வயது 88).

    இவர் சாமியார்மடம் பகுதியில் பலசரக்கு கடை நடத்தி வந்தார். சம்பவத்தன்று காலை ஜெகநாதன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனை தொடர்ந்து குடும்பத்தினர் அவரை தேட தொடங்கினர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் அந்த பகுதியில் உள்ள குளத்தில் ஜெகநாதன் உடல் மிதப்பதை அந்த வழியே சென்றவர்கள் பார்த்துள்ளனர். இதுபற்றி அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சம்பவ இடம் வந்தனர்.

    இதுகுறித்து குழித்துறை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து ஜெகநாதன் உடலை மீட்டனர். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதனர். பின்னர் ஜெகநாதன் உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் கால் தவறி குளத்தில் விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி பொருட்கள் வாங்க வந்துள்ளார்
    • சிறுமிக்கு சிவானந்தன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    கன்னியாகுமரி :

    குமரி மாவட்டம் பழவிளை அருகே உள்ள எறும்புக்காடு அகதிகள் முகாமில் பெட்டிக் கடை நடத்தி வருபவர் சிவானந்தன் (வயது 54).

    இவரது கடைக்கு சம்பவத்தன்று 4-ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி பொருட்கள் வாங்க வந்துள்ளார். அப்போது யாரும் இல்லாததை பயன்படுத்தி, அந்த சிறுமிக்கு சிவானந்தன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது.

    இதனால் பயந்த சிறுமி, வீட்டிற்கு சென்று தனது தாயாரிடம் கூறி உள்ளார். அவர், உடனடியாக கன்னியாகுமரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு மாணவியை அழைத்து சென்று புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வியாபாரி சிவானந்தனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மதுரை அருகே வியாபாரியை தாக்கிய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • கடையில் பூக்கள் திருடுபோவது தொடர்பாக இவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது.

    மதுரை

    மதுரை வளர் நகர் அம்பலக்காரன் பெட்டியை சேர்ந்தவர் ராமன் (55). இவர் மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.அங்கு வண்டியூரைச்சேர்ந்த லெட்சுமி எனபவரும் வியாபாரம் செய்கிறார். கடையில் பூக்கள் திருடுபோவது தொடர்பாக இவர் களுக்குள் முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் லட்சுமி யின் உறவினர்களான வண்டியூர் செம்மண் சாலையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் மனைவி மேனகா (37) , ராமசாமி மனைவி சாந்தி (50),சோனை மகள் ரேணுகா (39) ஆகிய 3 பேரும் ராமனை ஆபாச மாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து ராமன் மாட்டுத்தாவனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்தனர்.

    மதுரை தென்னோ லைக் காரத் தெருவை தெருவை சேர்ந்தவர் அன்புமணி. இவரது மனைவி பூர்ணிமா (38).இவர் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தெற்கு வாசலில் உள்ள அரிசி கடைக்கு பூர்ணிமா சென்றிருந்தார். அப்போது அவரு க்கும் அங்கு வந்த ஆரப் பாளையம் ராஜேந்திரா மெயின்ரோடு கணேசன் மனைவி நிஷா காந்தி (45) என்பவருக்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நிஷா காந்தி, பூர்ணிமாவை ஆபாசமாக பேசி தாக்கினார். இந்த சம்பவம் குறித்து பூர்ணிமா தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து நிஷா காந்தியை கைது செய்தனர்.

    • தந்தை, மகனான மகேந்திரன், சதிஷ் ஆகியோர் பழக்கடை நடத்தி வருகின்றனர்.
    • அங்கமங்கலம் தோணிபாலம் அருகே சதிஷ் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    குரும்பூர்:

    ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூர் அடுத்த மாரியம்மாள்புரத்தை சேர்ந்தவர் மகேந்திரன் மகன் சதிஷ் (வயது 23). இவரும், இவரது தந்தையும் திருச்செந்தூர் கே.டி.சி. டெப்போ அருகே பழக்கடை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் மகேந்திரன், அதே பகுதியை சேர்ந்த மாசானமுத்து (25) என்பவரிடம் ரூ.1 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் சதிஷ் பைக் வாங்குவதற்காக திருச்செந்தூர் வங்கியில் ரூ.1 லட்சம் கடன் வாங்கி கொண்டு வங்கியிலிருந்து வெளியே வந்துள்ளார். அப்போது இவரை பின் தொடர்ந்து வந்த மாசானமுத்து, உன் தந்தை என்னிடம் வாங்கிய கடன் ரூ.1 லட்சத்தை தரவில்லை என்று தகராறு செய்து, அந்த பணத்தை பறித்து கொண்டு சென்றுள்ளார். இதனால் மனமுடைந்த சதிஷ் அங்கமங்கலம் தோணிபாலம் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அப்போது அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு பாளை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாசானமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×