search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்முதல்"

    • அவிநாசி அருகே தத்தனூர் ஊராட்சி, சாவக்காட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவு தொழிலில் 3,000 குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.
    • கூட்டுறவு சங்கம் வாயிலாகவே வாங்கிக்கொடுத்து, தயாரிப்பு சேலைகளை கோ- ஆப்டெக்ஸ் வாயிலாகவே விற்பனை செய்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.

    அவினாசி:

    அவிநாசி அருகே தத்தனூர் ஊராட்சி, சாவக்காட்டுப்பாளையத்தில் கைத்தறி நெசவு தொழிலில் 3,000 குடும்பத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு சிறுமுகை, புளியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பட்டு சேலை வியாபாரிகள் ஆர்டர் வழங்குவர்.தங்கள் தேவையின் அளவு பொருத்து, பாவு நூல் வழங்கி சேலையை நெய்து வாங்கிக் கொள்வர். அதற்கான கூலியை, நெசவாளர்களுக்கு வழங்குவர். சமீப காலமாக ஆர்டர் இல்லாததால் நெசவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இது குறித்து கைத்தறி நெசவாளர்கள் கூறியதாவது:- ஒவ்வொரு குடும்பத்திலும் கணவன், மனைவி, பிள்ளைகள் என ஒரு குடும்பமே நெசவு தொழிலில் ஈடுபட்டால் தான் ஒன்றரை நாளில் ஒரு சேலையை நெய்து முடிக்க முடியும். வாரத்துக்கு 3,4 சேலைகள் ஆர்டர் கிடைக்கும். ஒரு சேலைக்கு 1,000 முதல் 1,200 ரூபாய் வரை வருமானம் கிடைத்தது. தற்போது வாரத்துக்கு ஒரு சேலை மட்டுமே ஆர்டர் கிடைக்கிறது. வருமான பற்றாக்குறையால் பெரும் சிரமத்தை எதிர்கொள்கிறோம். ஆர்டர் வழங்கும் வியாபாரிகள் தங்களுக்கு வியாபாரம் இல்லை என்ற காரணத்தை கூறுகின்றனர்.எனவே அரசின் சார்பில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை அங்காடிகளுக்கு தேவையான சேலையை, எங்களிடம் கொள்முதல் செய்ய வேண்டும் என்றனர்.

    தத்தனூர் ஊராட்சி தலைவர் விஜயகுமார் கூறியதாவது:-

    சாவக்கட்டுப்பாளையத்தில் நெசவாளர்களை உள்ளடக்கி 4 கூட்டுறவு சங்கங்கள் இருந்தன. நிர்வாக குளறுபடியால் அவை செயல்படாமல் போயின. தற்போது நெசவாளர்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு 100 நெசவாளர்களை உள்ளடக்கி புதிதாக கூட்டுறவு சங்கம் அமைக்க திட்டமிட்டு அதற்கான அனுமதி கேட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். நிர்வாக அனுமதிக்காக காத்துள்ளோம். கூட்டுறவு சங்கம் அமைக்க அனுமதி கிடைக்கும் பட்சத்தில் சேலை நெய்வதற்குரிய பாவு, நூல் உள்ளிட்டவற்றை கூட்டுறவு சங்கம் வாயிலாகவே வாங்கிக்கொடுத்து, தயாரிப்பு சேலைகளை கோ- ஆப்டெக்ஸ் வாயிலாகவே விற்பனை செய்வதற்குரிய வாய்ப்பு கிடைக்கும்.

    இதனால் நெசவாளர்களின் வாழ்வாதாரம் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

    • 1,000 டன் நெல் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலை யத்துக்கு எடுத்து வரப்பட்டன.
    • நெல் மூட்டைகள் சரக்கு ரெயிலின் ஏற்றப்பட்டு அரவைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சி யமாக விளங்கி வரும் தஞ்சையில் விளைவி க்கப்படும் நெல் தமிழகத்தின் பல்வேறு இடங்களுக்கு அரவைக்காக அனுப்ப ப்பட்டு பொதுவி னியோக திட்டத்தின் கீழ் அரிசி வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நெல் மூட்டைகள் லாரிகள் மற்றும் சரக்கு ரெயில் மூலம் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு அரவைக்காக அனுப்ப ப்பட்டு வருகின்றன.

    அதன்படி இன்று தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 1,000 டன் நெல் ஏராளமான லாரிகளில் தஞ்சை ரெயில் நிலை யத்துக்கு எடுத்து வரப்பட்ட ன. பின்னர் நெல் மூட்டை கள் சரக்கு ரெயிலின் 21 வேகன்களில் ஏற்றப்பட்டு அரவைக்காக கோவைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இதேபோல் ஆந்திராவில் இருந்து 1300 டன் டி.ஏ.பி. உரம் சரக்கு ரயில் மூலம் தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டது.

    • கொப்பரை தேங்காய் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்.
    • ஏக்கர் ஒன்றுக்கு 291 கிலோ கொள்முதல் செய்யப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 108.60 வீதம் வழங்கப்பட்டு வருகிறது.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் மற்றும் நகர்ப்புறங்களில் ஏராளமான தென்னை சாகு படி செய்யப்பட்டுள்ளது. கரும்பு பயிருக்கு மாற்றாக கரும்பு தோட்டங்கள் உள்ள இடங்களில் தென்னை மரங் கள் நடவு செய்யப்பட்டுள் ளது.

    இந்நிலையில் தேங்காய் விலை படு பாதாளத்தை நோக்கி சென்றுவிட்ட நிலை யில் தென்னை விவசாயிகள் மாற்று வழி தெரியாத நிலை யில் கவலையில் உள்ளனர். தேங்காய்க்கு விலை நிர்ண யம் செய்ய இயலாத நிலை யில் தமிழக அரசு அறிவித் துள்ள கொப்பரை தேங்காய் தற்போது கிலோ ஒன்றுக்கு ரூ. 108.60 வீதம் ஒழுங்குமுறை விற்பனை கூடம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    தென்னை விவசாயிகளி டம் ஏக்கர் ஒன்றுக்கு 291 கிலோ கொள்முதல் செய் யப்பட்டு கிலோ ஒன்றுக்கு ரூபாய் 108.60 வீதம் வழங்கப் பட்டு வருகிறது. இது வெளி மார்க்கெட் ரேட்டை விட மிகவும் அதிகமாகும். என வே ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தென்னை விவசாயி கள் கொப்பரை தேங்காயை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விற்க மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இந்நிலையில் தமிழக அரசு ராஜபாளையம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 300 மெட்ரிக் டன் கொள்முதல் என்று இருந்த தை தற்போது 200 மெட்ரிக் டன் மட்டுமே கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயித் துள்ளது. ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 500 மெட்ரிக் டன் வரை கொப்பரை தேங்காய் கொள்முதல் செய்ய இருக் கும் நிலையில் 200 ஆக குறைத்து இருப்பது தென்னை விவசாயம் இடை யே மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே தமிழக அரசு பரிசீலனை செய்து ராஜபாளையம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு 500 மெட்ரிக் டன் கொள்முதல் செய்ய இலக்கு நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டுமாய் தென்னை விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.

    • கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது.
    • முட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் சுமார் 7 கோடி முட்டைக் கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தினசரி சுமார் 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்பட்டு, தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளி நாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் போக மீதமுள்ள முட்டைகள், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் லாரிகள் மூலம் தினசரி விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.

    முட்டை விலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர, கடந்த மே மாதம் முதல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்.இ.சி.சி), வியாபாரிகளுக்கு ரொக்க விற்பனைக்கு, மைனஸ் இல்லாத விற்பனை விலையை நாள்தோறும் அறிவித்து வருகிறது. இந்த விலையை அனைத்து பண்ணையாளர்களும் பின்பற்றி வருகின்றனர்.

    கடந்த ஜூன் 21-ந் தேதி முதல் ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.5.50 ஆக இருந்தது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை 10 பைசா குறைக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, ஒரு முட்டையின் பண்ணைக்கொள்முதல் விலை ரூ.5.40 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    மீன்பிடி தடை காலம் முடிந்து மீன்வரத்து அதிகரித்து வருவதால் முட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

    முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை-610, பர்வாலா-473, பெங்களூர்-600, டெல்லி-490, ஹைதராபாத்-540, மும்பை-605, மைசூர்-603, விஜயவாடா-535, ஹொஸ்பேட்-560, கொல்கத்தா-570.

    முட்டைக்கோழி ஒரு கிலோ ரூ.95-க்கும் விற்கப்பட்டது. நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், அதன் விலையை ரூ.2 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து முட்டை கோழி கிலோ ரூ.97 ஆக உயர்ந்தது.

    பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ. 120 ஆக பிசிசி அறிவித்துள்ளது.

    • மோட்டார் பம்புசெட் உள்ள பகுதிகளில் இந்த சாகுபடி நடைபெற்றது.
    • நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3-ம் பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தின் நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் (தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை) குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் நெல் சாகுபடி நடைபெறும். மேலும் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும்.

    இந்த ஆண்டு மேட்டூர் அணை கடந்த 12-ந்தேதி திறக்கப்பட்டது. அந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்ததையடுத்து கல்லணையில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    இந்த நிலையில் முன்பட்ட குறுவை எனப்படும் கோடை நெல் சாகுபடி தஞ்சை மாவட்டத்தில் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டது. மோட்டார் பம்புசெட் உள்ள பகுதிகளில் இந்த சாகுபடி நடைபெற்றது.

    தஞ்சை மாவட்டத்தில் மட்டும் கோடை நெல் சாகுபடி 70 ஆயிரம் ஏக்கர் வரை நடைபெற்றது. இதில் பெரும்பாலான பகுதிகளில் தற்போது அறுவடை பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    குறிப்பாக தஞ்சை, ஒரத்தநாடு, அம்மாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் தற்போது அறுவடை பணிகள் எந்திரங்கள் மூலம் நடைபெற்று வருகிறது.

    மேலும் தஞ்சாவூர் மண்டலத்தில் நடப்பு பருவத்துக்கு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு மூன்றாம் பருவ நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

    விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பயோ மெட்ரிக் கருவி பொருத்தி விரல் ரேகை பதிவு செய்யும் முறை கொண்டு வரப்பட்டுள்ளது.

    இதன் மூலம் நெல் வியாபாரிகள் உள் நுழையாமல் தடுப்பதுடன் விவசாயிகள் மட்டும் பயன்பெறும் வகையில் நெல்லை கால தாமதமின்றி உடனுக்குடன் கொள்முதல் செய்யப்படும். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.
    • முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது.

    மேலசொக்கநாதபுரம்:

    இந்திய உணவுக்கழகம் விவசாயிகளிடமிருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்கிறது. தமிழகத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் நெல்கொள்முதல் செய்கிறது. பல்வேறு இடங்களில் போதிய கிடங்கு வசதி இல்லாததால் தானியங்கள் திறந்த வெளியில் வைக்கப்படுகின்றன.

    இதனால் மழையில் நனைந்து வீணாகி வருவதால் விவசாயிகளுக்கு பெரும் இழப்பு ஏற்படுகிறது. நாடு முழுவதும் 33 கோடி டன் உணவு தானியங்களை உற்பத்தி செய்து வரும் நிலையில் அதனை சேமித்து வைக்க போதிய கிடங்கு வசதி இல்லை.

    இதனால் தானியங்கள் வீணாகி வருகின்றன. இதனை தடுக்க மத்திய கூட்டுறவு அமைச்சகம் சார்பில் நாடு முழுவதும் 7 கோடி டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட உள்ளன. இதற்காக ரூ.1 லட்சம் கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

    வேளாண் அமைச்சகம் மற்றும் உணவு, பொது வினியோக அமைச்சகம் பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து கூட்டுறவு அமைச்சகம் சார்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    முதல் கட்டமாக நாடு முழுவதும் 10 மாவட்டங்களில் இத்திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட உள்ளது. அதில் ஒன்றாக தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டி தொடக்க கூட்டுறவு கடன் சங்கம் வாயிலாக 1000 டன் கொள்ளளவில் சேமிப்பு கிடங்கு கட்டப்பட உள்ளது.

    இதற்காக 4 ஏக்கர் நிலம் அடையாளம் காணப்பட்டு 1 ஏக்கரில் கிடங்கு கட்டுவதற்கான வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தை தேசிய வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியின் துணை நிறுவனமான நாப்கான் ஆய்வு செய்துள்ளது. விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்ததும் ரூ.2 கோடி செலவில் சாலைப் போக்குவரத்து உள்பட அனைத்து வசதிகளுடன் கூடிய கிடங்கு கட்டப்படும். இங்கு போடி மற்றும் சில்லமரத்துப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் உணவு தானியங்கள் இருப்பு வைக்கப்படும்.

    ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் வாயிலாக கிடங்கு அமைக்கப்படுவதால் நாடு முழுவதும் பரவலாக சேமிப்பு வசதிகள் கிடைக்கும். விவசாயிகள் விளைவிக்கும் தானியங்கள் உள்ளூரிலேயே உடனுக்குடன் பாதுகாப்பாக இருப்பு வைக்கப்படும். தானியங்கள் வீணாவது தடுக்கப்படுவதுடன் விவசாயிகளுக்கு போக்கு வரத்து செலவு குறையும்.

    மேலும் விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்க வழிவகை செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • நாகை மாவட்டத்தில் முதல்முறையாக இந்த நவீன அரிசி ஆலை அமைக்கப்படுகிறது.
    • நெல்கள் வெளிமாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் செலவு குறையும்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் பொரவச்சேரி கிராமத்தில் தமிழக அரசின் நீட்ஸ் திட்டத்தின் கீழ் நவீன அரிசி ஆலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    மஞ்சகொல்லை ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்றது. ஒரு ஏக்கர் பரப்பளவில் 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ள நவீன அரிசி ஆலைக்கான அடிக்கல்லை தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் நட்டு கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் முதல்மு றையாக அமைக்கப்படும் இந்த நவீன அரிசி ஆலை மாவட்ட வளர்ச்சியில் முக்கிய பங்கு வைக்கும் எனவும், ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்பட உள்ள இந்த நவீன அரிசி ஆலை பயன்பாட்டிற்கு வரும் பொழுது நாகை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்கள் வெளி மாவட்டங்களுக்கு அரவைக்கு அனுப்பும் செலவு குறையும் எனவும் கௌதமன் தெரிவித்தார்.

    இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. நாகை தெற்கு ஒன்றிய செயலாளர் ஆனந்த், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் கணேசன், அரிசி ஆலையின் நிர்வாக இயக்கு னர் கணேசன் ஆறுமுகம் மற்றும் வணிகர்கள் விவசாயிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ஆவின் பால் கிடைக்காததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்
    • பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 வீதம் உயர்த்தி, பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    சென்னையில் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் பெரும்பான்மையான பகுதிகளில் ஆவின் பால் வழங்கப்படவில்லை என்றும், சில பகுதிகளில் மிகவும் தாமதமாக பால் வழங்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. ஆவின் பால் கிடைக்காததால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பால் வழங்கலில் ஆவின் நிறுவனம் அலட்சியமாக நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது.

    ஆவின் நிறுவன சிக்கலில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலையிட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆவின் நிறுவனத்தின் பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 வீதம் உயர்த்தி, பால் கொள்முதலை அதிகரிக்க வேண்டும். ஆவின் பால் வணிகத்தையும் பெருக்கி தமிழ்நாட்டின் பால் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்கை 50 சதவீத அளவுக்கு உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூட்டைகள் குறித்து ஆய்வு செய்தார்.
    • அம்மன்பேட்டையில் உள்ள நவீன அரிசி ஆலையில் ஆய்வு செய்தார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் உழவர் சந்தையில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு செய்தார்.

    அப்போது அவர், காய்கறிகள் வரத்து, விலை நிர்ணயம் குறித்து கேட்டறிந்ததுடன் உழவர் சந்தை காய்கறி கழிவுகளை உரமாக்கும் எந்திரத்தின் செயல்பாட்டை யும் பார்வையிட்டார்.

    மேலும் அவர், உழவர் சந்தையில் உள்ள விவசாயிகள், மகளிர் சுயஉதவிக்குழு கடைகளுக்கு சென்று விற்பனை நிலவரத்தை கேட்டறிந்தார்.

    தொடர்ந்து அவர், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில் செயல்படும் மாநில அக்மார்க் ஆய்வகத்தின் செயல்பாடு குறித்தும், சேமிப்பு கிடங்கில் உள்ள நெல் மூட்டைகள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    பின்னர் ஒரத்தநாடு ஒன்றியம் ஈச்சங்கோட்டை யில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு சென்ற கலெக்டர் தீபக் ஜேக்கப், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    இதையடுத்து அவர், ஈச்சங்கோட்டையில் உள்ள நாற்றாங்கால் பண்ணை, திருவையாறு ஒன்றியம் அம்மன்பேட்டையில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக நவீன அரிசி ஆலை ஆகியவற்றிலும் ஆய்வு செய்தார்.

    ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, வேளாண்மை துணை இயக்குனர் வித்யா, உதவி பொறியாளர் கலைமாமணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

    • சில்லரை வணிகத்தில் டெஸ்ட் பர்சேஸ் சோதனை கொள்முதல் முறையை நீக்க வேண்டும்.
    • அரிசி, கோதுமை போன்றவற்றிற்கு விதிக்கப்படும் 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும்.

    பாபநாசம்:

    பாபநாசத்தில் வணிகர்கள் சங்க பொதுக்குழு கூட்டம் சங்கத் தலைவர் குமார் தலைமையில் நடைபெற்றது. பொருளாளர் ராமராஜ் முன்னிலை வகித்தார்.

    சங்க செயலாளார் கோவிந்தராஜ் அனைவரையும் வரவேற்று பேசி வணிகர் சங்க பொதுக்குழு தீர்மானங்களை வாசித்து ஒப்புதல் பெற்றார்.

    கூட்டத்தில், சில்லரை வணிகத்தில் டெஸ்ட் பர்சேஸ் சோதனை கொள்முதல் முறையை நீக்க வேண்டும், அத்தியாவசிய பொருள்களான அரிசி, கோதுமை, ரவா, தயிர் போன்றவற்றிற்கு விதிக்கப்ப டும் 5 சதவீத ஜி.எஸ்.டி வரியை நீக்க வேண்டும்.

    பாபநாசம் ரெயில் நிலைய த்தில் நிறுத்தப்பட்ட அனைத்து விரைவு ரெயில்களையும் மீண்டும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    முடிவில் செயற்குழு உறுப்பினர் அசோகன் நன்றி கூறினார்.

    • அரசு ஓழுங்குமுறை விற்பனைகூடத்தில் கொப்பறை தேங்காய் கொள்முதல்
    • அமைச்சர் மெய்யநாதன் தொடங்கி வைத்தார்

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ராஜேந்திரபுரத்தில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் மூலம் அரவை கொப்பரைத் தேங்காய் கொள்முதலுக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு விவசாயிகளிடமிருந்து முதல் கொள்முதலை தொடங்கி வைத்தார்.

    • 19,122 மெட்ரிக்டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.35.67 கோடி விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.
    • மேற்கண்ட விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் விருதுநகர் மாவட்டத்தில் 2022-23 கொள்முதல் பருவத்தில், இதுவரை 19 ஆயிரத்து122 மெட்ரிக்டன் நெல் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதலுக்கான தொகை ரூ.35.67 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 3,537 விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.

    நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக புகார்கள் இருப்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், விருதுநகர், இலவச அலைபேசி எண். 1077 துணை ஆட்சியர் / மண்டல மேலாளர், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் விருதுநகர் தொலைபேசி எண். 04562-252607 ஆகிய எண்ணிற்கு புகார் செய்யலாம் என்று விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

    ×