search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "என்.ஜி.ஓ.காலனி"

    • 3 பேர் மீது கொலை முயற்சி வழக்கு
    • சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை

    கன்னியாகுமரி:

    என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள கீழ குஞ்சன்விளை பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (61). இவர் என்.ஜி.ஓ. காலனியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். முருகேசன் தினமும் காலையில் நிதி நிறுவனத்திற்கு மோட்டார் சைக்கிளில் வந்து விட்டு பின்னர் இரவு 8 மணிக்கு வீட்டிற்கு செல்வது வழக்கம்.

    சம்பவத்தன்று முருகே சன் இரவு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரை 3 பேர் கொண்ட கும்பல் தொடர்ந்து வந்தனர். முருகேசன் வீட்டிற்கு வந்ததும் மோட்டார் சைக்கி ளை நிறுத்தி விட்டு வீட்டிற்கு செல்ல முயன்றார்.

    அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 3 பேர் கும்பலில் 2 பேர் மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி அவதூறாக பேசி முருகேசனை சரமா ரியாக தாக்கினர். இதில் காயமடைந்த முருகேசன் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டனர். இதனால் அங்கிருந்து 3 பேரும் தப்பி சென்றனர். காயமடைந்த முருகேசனை மீட்டு நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்து முருகேசன் சுசீந்திரம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயி லெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் ஆகியோர் கொலை முயற்சி உள்பட 3 பிரிவுகளின் கீழ் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிரா காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செல்போன் பேசி கொண்டிருந்தபோது பரிதாபம்
    • சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி:

    நாகர்கோவில் அருகே என்.ஜி.ஓ. காலனி குஞ்சன் விளையைச் சேர்ந்தவர் மகேஷ் வயது 32 வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவர் நேற்று வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தார். வீட்டின் 2-வது மாடியில் நின்று மகேஷ் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் தவறி கீழே விழுந்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அவரது உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தினர் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

    இதையடுத்து மகேஷ் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து சுசீந்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார்
    • சுசீந்திரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    என்.ஜி.ஓ. காலனி அருகே உள்ள சின்ன ணைந்தான்விளையை சேர்ந்தவர் சுயம்பையா (வயது 50) கட்டிட தொழிலாளி.

    இவர் சம்பவத்தன்று என். ஜி.ஓ.காலனி அருகே உள்ள முகிலன் விளையில் உள்ள அவரது பெரியம்மா தங்கநாடாச்சி வீட்டிற்கு சென்று அவருக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் இரவு நிறுத்திவிட்டு. மறுநாள் அதிகாலையில் பார்க்கும்போது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை காணவில்லை.

    அக்கம்பக்கத்தில் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியாததால் இது குறித்து சுயம்பையா சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் சுசீந்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஆஷாஜெபகர் வழக்குப் பதிவு செய்து மோட்டார் சைக்கிளை திருடி சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றார்.

    • சொத்தவிளை சிவராம் பீச் ஹவுசில் நடந்தது
    • முன்னாள் மாணவ, மாணவிகள் 30 பேர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
    • நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

    நாகர்கோவில்:

    என்.ஜி.ஓ.காலனி அருகே உள்ள சீயோன்புரம் எல். எம். எஸ். மேல்நிலைப் பள்ளியில் 1992 -1994 கல்வியாண்டில் பிளஸ்-2 பயின்ற முன்னாள் மாணவர்களும், அவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த முன்னாள் ஆசிரியர்கள், குடும்ப சந்திப்பு நிகழ்ச்சி "சுவடுகள் பதிப்போம்" என்று சொத்தவிளை சிவராம் பீச் ஹவுசில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் புவிராஜன் அனைவரையும் வரவேற்றார். முன்னாள் மாணவர் சசிகுமார், மாணவி ரெஸா ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். கலந்துரையாடலில் முன்னாள் மாணவ, மாணவிகள் 30 பேர் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.

    இவர்களுக்கு பாடம் நடத்திய முன்னாள் ஆசிரியர்கள் சார்லஸ் தேவசிகாமணி, சஜீவ பிரகாசதாஸ், புனிதவதி, ஷீலாஷியாம், வசந்தா அன்னபெல், கிரேஸ்லின் சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    தொடர்ந்து முன்னாள் மாணவ மாணவிகள் தங்களது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.விழாவில் சிறுவர் சிறுமியர்களுக்கான கலை நிகழ்ச்சிகள் நடத்தப் பட்டது. பின்னர் ஆசிரியர்களுக்கும், மாண வர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.

    இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டது அவர்களுக்குள் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.முன்னாள் மாணவர் வழக்கறிஞர் ராஜேஷ் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவ, மாணவிகள் செய்திருந்தனர்.

    ×