search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யூடியூபர்"

    • கலால் விதிகளின்படி பார்கள் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை.
    • முகேஷ் நாயர் மீது கொல்லம் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிந்திருந்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கலால் விதிகளின்படி பார்கள் விளம்பரம் செய்ய அனுமதி இல்லை. இந்நிலையில் கேரளாவின் பிரபல யூ-டியூபரான முகேஷ் நாயர் பார்களில் மது விற்பனையை ஊக்குவித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிட்டிருந்தார். மது அருந்துவதை ஊக்குவிக்கும் வகையில் இடம் பெற்றிருந்த அந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். இது குறித்து முகேஷ் நாயர் மீது கொல்லம் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிந்திருந்தனர்.

    இந்நிலையில் அவர் மீது மேலும் 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருவனந்தபுரம் மற்றும் கொட்டாரக்கரா போலீஸ் நிலையங்களில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

    • ஹேமலதா தனது யூடியூப் சேனலில் ஒருசில வர்த்தக முதலீட்டு விளம்பரங்கள் போட்டார்.
    • ஹேமலதா கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி இருக்கலாம்.

    கோவை,

    கோவையில் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி, லட்சக்கணக்கில் பணமோசடி செய்ததாக, மாடர்ன் மம்மி யூடியூப் சேனல் நிர்வாகி ஹேமலதா, கணவர் ரமேஷ், கேமராமேன் அருணாச்சலம் ஆகிய 3 பேரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டனை சேர்ந்த ஹேமலதா கடந்த 2000-ம் ஆண்டு மாடர்ன் மம்மி என்ற பெயரில் யூடியூப் சேனலை தொடங்கி உள்ளார். இவர் ஆரம்பத்தில் பதிவிட்ட வீடியோக்கள், நடுத்தர இல்லத்தரசிகளிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இதனால் அவரது சேனலை ஆயிரக்கணக்கானோர் பார்க்கத் தொடங்கினர். மாடர்ன் மம்மி சேனலுக்ககான அளப்பரிய வரவேற்பு, ஒருசில வணிக நிறுவனங்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

    எனவே அவர்கள் தங்களின் விற்பனை பொருட்களை பிரபலப்படுத்தும்படி கேட்டு கொண்டனர். அதன்படி ஹேமலதாவும் வீடியோ பதிவிட்டார். ஹேமலதா போட்ட விற்பனை பதிவுகள், வாடிக்கையாளரை மிகவும் கவர்ந்தது.

    ஹேமலதாவின் யூடியூப் சேனலை நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான் அதிகம் பார்த்து வருகின்றனர். எனவே அவர்களை மேலும் கவரும் வகையில் யூடியூப் சேனலில் சுய லாபத்துடன் கூடிய வர்த்தக விளம்பரங்களை பதிவு செய்வது என்று முடிவு செய்தார்.

    அப்போதுதான் அவருக்கு ஆன்லைன் மூலம் முதலீட்டு விளம்பரம் செய்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் யோசனை வந்தது. இதன்படி அவர் தனது யூடியூப் சேனலில் ஒருசில வர்த்தக முதலீட்டு விளம்பரங்கள் போட்டார். இது வாடிக்கையாளர்களிடம் ஈர்ப்பை ஏற்படுத்தியது.

    எனவே அவர்கள் ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினர். அப்போது அவர்களுக்கு முதிர்வு தேதியில் ஏற்கெனவே சொன்னபடி ஹேமலதா பணத்தை அனுப்பி வைத்து உள்ளார். இது வாடிக்கையாளர்களிடம் கூடுதல் ஆர்வத்தை தூண்டியது. எனவே சின்ன மண்புழுவை போட்டு பெரிய மீனை பிடிப்பது என்று ஹேமலதா முடிவு செய்தார்.

    இதனை தொடர்ந்து அவர் மாடர்ன் மம்மியில், எங்களிடம் ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாட்களில் ரூ.1500 வழங்கப்படும் என்று வீடியோ பதிவு செய்தார். ஹேமலதா ஏற்கனவே முந்தைஅறிவுப்புகளுக்கு பேசியபடி பணம் கொடுத்து உள்ளதால், வாடிக்கையாளர்கள் முண்டியடித்து கொண்டு பணம் கட்டினர்.

    இந்த வகையில் ஹேமலதாவுக்கு லட்சக்கணக்கில் பணம் சேர்ந்து உள்ளது. இந்த நிலையில் பணமுதிர்வு காலம் வந்தது. அந்த நேரத்தில் ஹேமலதா செல்போனை சுவிட்ச்ஆப் செய்து தலைமறைவானார். இது வாடிக்கையார்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனவே பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், இது தொடர்பாக கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.

    எனவே போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது தான் ஹேமலதா முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பலரை ஏமாற்றி கோடிக்கணக்கில் பணம் வசூலித்த விவரம் தெரிய வந்து உள்ளது.

    இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், யூடியூபர் ஹேமலதா கிட்டத்தட்ட 595 வீடியோக்களை சேனலில் பதிவிட்டு உள்ளார். இவருக்கு 1.59 லட்சம் பார்வையாளர்கள் உள்ளனர். ஹேமா பதிவிட்ட அனைத்து வீடியோக்களையும் சுமார் ஒரு கோடியே 89 லட்சத்து 21 ஆயிரத்து 371 பேர் பார்த்து உள்ளனர்.

    எனவே ஹேமலதா கோவை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை ஏமாற்றி இருக்கலாம் என்று கருதுகிறோம். எனவே மாடர்ன் மம்மி சேனல் மூலம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் இதுதொடர்பாக போலீசாரிடம் புகார் தரவேண்டும். அப்போதுதான் பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை திரும்ப பெற்றுத்தர முடியும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளனர்.

    மேலும் கைதான யூடியூ பர் ஹேமலதா, அவரது கணவர் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்கான நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகிறார்கள்.

    • ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாட்களில் ரூ.300 சேர்த்து அந்த பணம் ரூ.1500 ஆக திருப்பி வழங்கப்படும் என தெரிவித்தார்.
    • ஹேமலதா உள்பட 3 பேரிடமும் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கோவையில் யூடியூப் மூலம் பழகி முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக கூறி பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்ததாக, விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் பகுதியை சேர்ந்த ஹேமலதா (வயது 38) என்பவரை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.

    ஹேமலதா கடந்த 2020-ம் ஆண்டு மாடர்ன் மம்மி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கினார். அப்போது அவர் முதலில் பொழுது போக்கு அம்சங்களை மையமாக கொண்டு வீடியோ பதிவுகளை வெளியிட்டு வந்தார். இதற்கு பார்வையாளர்களிடம் ஓரளவு ஆதரவு கிடைத்து வந்தது.

    இந்நிலையில் ஹேமலதாவை ஒரு ஆடை வடிவமைப்பு நிறுவனம் தொடர்பு கொண்டு, தங்களின் உற்பத்தி பொருட்களை யூடியூப் சேனல் மூலம் பிரபலப்படுத்தும்படி கேட்டு கொண்டது. எனவே அவரும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் தயாரிப்புகளை ஆகா ஓகோவென புகழ்ந்து, அதனை சமூகவலை தளத்தில் வீடியோவாக பதிவு செய்தார். இதற்காக அவருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் ஊதியம் வழங்கியது.

    இது ஹேமலதாவிடம் விளம்பரம் மூலம் பணம் சம்பாதிக்கும் ஆசையை தூண்டிவிட்டது. எனவே அவர் கோவையில் உள்ள பல்வேறு நிறுவனங்களை தொடர்பு கொண்டு அங்கு உள்ள பொருட்களை யூடியூப் மூலம் பிரபலப்படுத்தினார். இதில் அவருக்கு பணம் கொட்டியது.

    யூடியூப் மூலம் மேலும் மேலும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசையே, ஹேமலதாவை இன்றைக்கு சிறைக்கம்பிகளுக்கு பின்னால் தள்ளி உள்ளது. ஹேமலதா சமீபத்தில் யூடியூபில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார். அதில் எனது நிறுவனத்தில் முதலீடு செய்யுங்கள். உங்களின் பணத்துக்கு கூடுதல் வட்டி கிடைக்கும் என்று வாக்குறுதி கொடுத்தார். ரூ.1200 முதலீடு செய்தால் 20 நாட்களில் ரூ.300 சேர்த்து அந்த பணம் ரூ.1500 ஆக திருப்பி வழங்கப்படும் என தெரிவித்தார்.

    இதனை நம்பி 100-க்கும் மேற்பட்டோர் பணத்தை முதலீடு செய்தனர். ஆனால் முதிர்வு காலத்துக்கு பிறகும் ரொக்கத்தொகை வந்து சேரவில்லை. எனவே அதிர்ச்சி அடைந்த பன்னிமடை பாரதி நகரை சேர்ந்த ரமா என்பவர் கோவை குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது தான் ஹேமலதா கணவர் ரமேஷ் மற்றும் உதவியாளர் அருணாச்சலம் ஆகியோருடன் கூட்டு சேர்ந்து யூடியூப் மூலம் போலி வாக்குறுதி கொடுத்து பண மோசடி செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து யூடியூபர் ஹேமலதா, கணவர் ரமேஷ் மற்றும் அருணாச்சலம் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் இருந்து 45 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி, ரூ.10 ஆயிரம் ரொக்கம், ஸ்கூட்டர், டிஜிட்டல் கேமிரா மற்றும் 7 செல்போன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.

    கோவை குற்றப்புலனாய்வு போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் ஹேமலதா தலைமையிலான கும்பல் முதலீட்டுக்கு அதிக வட்டி தருவதாக, வாடிக்கையாளர்கள் 44 பேரிடம் ரூ.41 லட்சத்து 88 ஆயிரம் மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் ரூ.1½ கோடி வரை மோசடி செய்திரு க்கலாம் என போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    எனவே ஹேமலதா உள்பட 3 பேரிடமும் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சார்லியின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என கருதிய ப்ரெண்ட் ரிவேரா தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார்.
    • வீட்டில் சார்லி மற்றும் ப்ரெண்ட் ரிவேரா இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    சொந்த வீடு கட்ட வேண்டும் என்பதே பலருக்கும் கனவாக இருக்கும் நிலையில் அமெரிக்காவில் பிரபல யூடியூபர் ஒருவர் தனது செல்லப் பிராணிக்கு ரூ.16.5 லட்சத்தில் வீடு கட்டி கொடுத்துள்ளார்.

    அவரது பெயர் ப்ரெண்ட் ரிவேரா. நாய்கள் மீது பிரியமாக இருக்கும் ப்ரெண்ட் ரிவேரா வளர்த்து வந்த பேக்கர் என்ற நாய் இறந்து போனது. இதனால் வேதனையில் இருந்த அவர் அடுத்ததாக சார்லி என்ற பெயரில் ஒரு நாயை வளர்த்தார்.

    இந்நிலையில் சார்லியின் முதல் பிறந்தநாளை முன்னிட்டு ஏதாவது பரிசு கொடுக்க வேண்டும் என கருதிய அவர் தனது நண்பர்களிடம் ஆலோசனை கேட்டார். அதன்படி நாய் சார்லிக்கு ஒரு சொகுசு வீட்டை கட்டும் பணியில் ஈடுபட்டார். தனது வீட்டிற்கு அருகிலேயே நாய் சார்லிக்கும் வீட்டை கட்டினார். அந்த வீட்டில் மனிதர்கள் பயன்படுத்தும் டி.வி., சோபா, மெத்தை, பிரிட்ஜ், தலையணைகள் என அனைத்தும் உள்ளன. வீட்டிற்கு வெளியே இது சார்லியின் வீடு என்ற பலகையும் வைக்கப்பட்டுள்ளது. வீட்டில் சார்லி மற்றும் ப்ரெண்ட் ரிவேரா இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • இவரது குற்றத்திற்கு சிறையில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
    • விமானம் விபத்தில் சிக்கும் வீடியோவை இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர்.

    யூடியூப் வியூசை அதிகப்படுத்த தனது விமானத்தை வேண்டுமென்றே வெடிக்கச் செய்த யூடியூபருக்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட இருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனம் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் டிரெவர் ஜேக்கப் என்ற நபர் வேண்டுமென்றே விபத்தை ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட காரணத்தால் விசாரணைக்கு உட்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். இவர் செய்த குற்றத்திற்கு சிறையில் அதிகபட்சம் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.

    இவர் படமாக்கிய விமானம் விபத்தில் சிக்கும் வீடியோவை இதுவரை சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர். 29 வயதான டிரெவர் செய்த செயலுக்காக அவருக்கு வழங்கப்பட்டு இருந்த தனியார் விமானத்தை இயக்கும் உரிமத்தை அமெரிக்க விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

     

    டிசம்பர் 2021 ஆண்டு கலிஃபோர்னியாவில் உள்ள லாஸ் பட்ரெஸ் காட்டுப்பகுதியில் இவர் சிறிய என்ஜின் கொண்ட விமானத்தை வேண்டுமென்றே வெடிக்க செய்திருக்கிறார் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து, 'நான் எனது விமானத்தை வெடிக்கச் செய்தேன்' எனும் தலைப்பில் யூடியூபில் வீடியோ வெளியிட்டு இருந்தார் டிரெவர் ஜேக்கப். அந்த வீடியோவில் விமானம் விபத்தில் சிக்கும் காட்சிகள் மற்றும் அதில் இருந்து பாராஷூட் அணிந்தபடி டிரெவர் தப்பிக்கும் காட்சிகளும் இடம்பெற்று இருந்தது. இந்த வீடியோ அதிக பார்வையாளர்களை ஈர்த்ததோடு, சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த விவகாரம் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் டிரெவர் ஜேக்கப் தன்பக்க விளக்கத்தை நீதிமன்றத்தில் சமர்பிக்க இருக்கிறார். வரும் வாரங்களில் வழக்கு விசாரணை நிறைவு பெற்று விடும். அதன்பின் இவருக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இரு மனுக்கள் மீதான விசாரணையையும் ஜூன் 13-ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    • கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் திருப்பணிக்கு மக்களிடம் ரூ.33 லட்சம் நன்கொடை வசூலித்து மோசடி செய்ததாக யூடியூபர் கார்த்திக் கோபிநாத் மீது வழக்கு தொடரப்பட்டது.

    இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி யூடியூபர் கார்த்திக் கோபிநாத் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இதற்கிடையே, கார்த்திக் கோபிநாத்தை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை சார்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த இரு மனுக்கள் மீதான விசாரணையையும் ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

    மேலும், தனிப்பட்ட வங்கிக் கணக்கின் விவரங்களை தாக்கல் செய்ய கார்த்திக் கோபிநாத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ×