search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொன்முடி"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார்.
    • வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர்.

    வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மற்றும் அவரது மனைவி மீது தொடரப்பட்ட வழக்கில் இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோனது.

    இதையடுத்து, சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக பொன்முடி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்தார்.

    இவ்வழக்கை இன்று விசாரித்த நீதிபதிகள், தண்டனை தீர்ப்பை நிறுத்தி வைக்க வேண்டுமா? என கேள்வி எழுப்பினர். இதையடுத்து வழக்கு தொடர்பான கூடுதல் விபரங்கள், தீர்ப்பு விபரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணை மார்ச் 18ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நீதிமன்றத்தில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.
    • பொன்முடி தாக்கல் செய்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    புதுடெல்லி:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

    இதையடுத்து 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்தும், நீதிமன்றத்தில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

    இந்நிலையில் பொன்முடி தாக்கல் செய்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை இடைக்காலமாக நிறுத்தி வைக்க மறுப்பு தெரிவித்தது.

    • வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
    • 4 பேர் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.

    விழுப்புரம்:

    தமிழ்நாட்டில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

    இதுதொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரால் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.


    இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், ஆகிய 3 பேர் மட்டும் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன் ஆகிய 4 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர்.

    மேலும் நேற்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதனிடையே இவ்வழக்கில் அரசு தரப்பு சாட்சிகள், அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்து வருவதால் அரசு தரப்புக்கு உதவியாக விசாரணைக்கு தங்களை அனுமதிக்கக்கோரி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி மனு தாக்கல் செய்த நிலையில் அம்மனு மீதான உத்தரவு தெரிவிப்பதற்காக நாளை (அதாவது இன்று) இவ்வழக்கின் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இன்று அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது ஜெயக்குமாரின் கோரிக்கையை விழுப்புரம் மாவட்டம் முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா நிராகரித்தார். மேலும் ஜெயக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டார்.

    • 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்தும், நீதிமன்றத்தில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.
    • பொன்முடி தாக்கல் செய்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

    இதையடுத்து 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்தும், நீதிமன்றத்தில் சரண் அடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் பொன்முடி தாக்கல் செய்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது சொத்துகுவிப்பு வழக்கில் சரணடைவதில் இருந்து முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு விலக்கு அளித்து உச்சநீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

    • பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
    • 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி வழக்கு தாக்கல் செய்து இருந்தார்.

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சிக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.

    இதையடுத்து 3 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொன்முடி மனு தாக்கல் செய்து இருந்தார். இந்நிலையில் பொன்முடி தாக்கல் செய்த மனு நாளை மறுநாள் அதாவது வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வர உள்ளது.

    • பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012-ம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    சென்னை:

    தமிழ்நாட்டில், 2006-2011-ம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தார்.

    அப்போது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுக்கப்பட்டதாகவும், அதன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து, பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீது, 2012-ம் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விழுப்புரம் மாவட்ட கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

    இந்த வழக்கை அடிப்படையாகக் கொண்டு அமலாக்கத்துறையினர், அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி, செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனைகள் மூலம் வெளிநாடுகளில் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகவும் கூறி, முக்கிய ஆவணங்களும், 13 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரிட்டன் பவுண்ட்கள் உள்பட 81 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், 41 கோடியே 90 லட்சம் ரூபாய் வங்கி நிரந்தர வைப்பீடு முடக்கப்பட்டுள்ளதாகவும் அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

    இந்தச் சூழ்நிலையில், சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தில் கள்ளக்குறிச்சி தி.மு.க. எம்.பி. கவுதம சிகாமணி, கே.எஸ்.ராஜ மகேந்திரன், வி.ஜெயசந்திரன், கே.சதானந்தம், கோபிநாத் மற்றும் கே.எஸ். பிசினஸ் ஹவுஸ் நிறுவனம் ஆகிய 6 பேருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் ஆகஸ்டு மாதம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் 90 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது.

    இதையடுத்து இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள சிறப்பு அமர்வு நீதிமன்ற நீதிபதி மலர் வாலண்டினா முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, கவுதம சிகாமணி தவிர மற்றவர்கள் அஜராகி இருந்தனர்.

    குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ராஜ மகேந்திரன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சி.எஸ்.எஸ்.பிள்ளை, தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஆவணங்களில் ஒரு சில பக்கங்களில் உள்ள விவரங்கள் தெளிவில்லாமல் இருப்பதாகவும், அதுகுறித்து அமலாக்கத்துறை தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வாதிட்டார்.

    இதையடுத்து வழக்கின் விசாரணையை ஜனவரி 24-ந்தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

    • இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.
    • தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி குற்றவாளி என டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

    மேலும் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறியும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டு இருந்தார்.

    இந்த நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் பொன்முடி மேல்முறையீடு செய்துள்ளார்.

    • திமுக ஆட்சி அமைத்து 1967-ல் இருந்து பதவியில் இருக்கும் ஒரு அமைச்சர் தண்டனை பெற்றது இதுவே முதல்முறை
    • 3 ஆண்டு சிறைத்தண்டனையுடன் 50 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது

    மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவையில் முக்கிய இடம் பிடித்திருந்தார் பொன்முடி. முக்கியமான உயர்க்கல்வித்துறை இலாக்கா பொன்முடிக்கு கொடுக்கப்பட்டிருந்தது. அரசியல் கட்சி தலைவர்கள் இருந்தால் அவர்கள் மீது வழக்குகள் போடப்படும். அதில் வியப்பு ஏதும் இல்லை. ஆனால், சில வழக்கு அவர்கள் அரசியல் வாழ்க்கையை அஸ்தமிக்க செய்துவிடும்.

    அப்படித்தான் பொன்முடிக்கு எதிராக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு அமைந்துள்ளது.

    2006 முதல் 2011 வரை தமிழகத்தில் திமுக ஆட்சி நடைபெற்றது. அப்போது பொன்முடி அமைச்சராக இருந்தார். அந்த காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கை விழுப்புரம் நீதிமன்றம் விசாரித்தது. விசாரணை முடிவில் பொன்முடியை விடுதலை செய்தது. இதனை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துத்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

    மேல்முறையீடு தொடர்பான விசாரணை முடிவடைந்து வழக்கு அப்படியே கிடப்பில் போடப்பட்டது. டிசம்பர் 19-ந்தேதி பொன்முடி குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்து, தண்டனை விவரம் 21-ந்தேதி வழங்கப்படும் எனத் தெரிவித்தது. அதன்படி 21-ந்தேதி பொன்முடிக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

    இதனால் பொன்முடி தனது எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். அமைச்சர் பதவியையும் இழந்தார்.

    தமிழகத்தில் அமைச்சராக இருந்தபோது தண்டனை பெற்று பதவியை இழந்த 3-வது அமைச்சர் பொன்முடி ஆவார். முதன்முறையாக திமுக அமைச்சர் ஒருவர் பதவியை இழந்த நபரும் இவர்தான்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் அமைச்சர் பொன்முடி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
    • மு.க.அழகிரி, மு.க.தமிழரசு ஆகியோர் பொன்முடியை இன்று சந்தித்து பேசினர்.

    சென்னை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர் பொன்முடி நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

    இந்நிலையில், பொன்முடியுடன் மு.க.அழகிரி சந்தித்து பேசினார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பொன்முடியின் இல்லத்தில் மு.க.அழகிரி, மு.க.தமிழரசு ஆகியோர் பொன்முடியை சந்தித்து பேசிவிட்டு புறப்பட்டு சென்றனர்.

    • பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை பொறுப்பை அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
    • சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் சந்திப்பானது நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடிக்கும், அவரது மனைவி விசாலாட்சிக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்து பொன்முடி வகித்து வந்த உயர்கல்வித்துறை பொறுப்பு அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் பொன்முடி சந்தித்து பேசி வருகிறார். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் சந்திப்பானது நடைபெற்று வருகிறது.

    சந்திப்பின் போது வழக்கு தொடர்பாக அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடைபெறலாம் என கூறப்படுகிறது.

    • சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை.
    • சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் நீண்ட காலம் ஆகிவிட்டதால் தலையிட முடியாது.

    சென்னை:

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.

    மேலும் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறியும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

    இந்நிலையில், பொன்முடியின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதில்:-

    சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் நீண்ட காலம் ஆகிவிட்டதால் தலையிட முடியாது. மீண்டும் முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்க தள்ளுபடி உத்தரவு தடையாக இருக்காது. இதனால் இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மற்றொரு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார்.
    • ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க பொன்முடி மேற்கொண்ட முயற்சிகளை குறிப்பிட்டு ஐகோர்ட்டே அதிர்ச்சி தெரிவித்தது.

    கோவை:

    பாரதிய ஜனதா மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தற்போது தண்டனை பெற்றுள்ள அமைச்சர் பொன்முடி மீதான மற்றொரு சொத்து குவிப்பு வழக்கு, விழுப்புரம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அதை திடீரென வேலூர் மாவட்ட நீதிமன்றத்துக்கு மாற்றி 2022-ல் சென்னை ஐகோர்ட்டு, அலுவல் ரீதியான உத்தரவை பிறப்பித்தது. அதை தொடர்ந்து சொத்து குவிப்பு வழக்கில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார்.

    இது பெரும் சர்ச்சையான நிலையில், இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் எடுத்துக் கொண்டுள்ளது. இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ள நிலையில் தான் மற்றொரு வழக்கில் பொன்முடி தண்டனை பெற்றுள்ளார். ஆட்சி அதிகாரம் உள்ளிட்ட அனைத்தையும் பயன்படுத்தி ஊழல் வழக்கிலிருந்து தப்பிக்க பொன்முடி மேற்கொண்ட முயற்சிகளை குறிப்பிட்டு ஐகோர்ட்டே அதிர்ச்சி தெரிவித்தது.


     தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா இருந்த போது அவர் மீதான ஊழல் வழக்கை, பெங்களூருவுக்கு மாற்ற தி.மு.க. தொடர்ந்த வழக்கே காரணம். இப்போது தி.மு.க அரசில் அமைச்சர்களாக உள்ள பலர் மீது ஊழல் வழக்கு விசாரணையில் உள்ளது. எனவே, ஏற்கெனவே தி.மு.க.வே உருவாக்கிய முன்னுதாரணத்தின் படி தி.மு.க. அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை, தி.மு.க. கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்யாத வேறொரு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக, அவர் நிருபர்களிடம் கூறுகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சிறைக்கு சென்றபோது அவரை பதவியில் இருந்து நீக்காமல், இலாகா இல்லாத அமைச்சராக இன்று வரை தொடரச் செய்து வருகின்றனர். இது மிகப்பெரிய அவமானம். குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, அவர்கள் அனைவரையும் அமைச்சர் பொறுப்பில் இருந்து நீக்கிவிட்டு, மாநிலத்தின் முதலமைச்சர், தான் நடத்துவது நேர்மையான ஆட்சி என்பதை நிரூபிக்க வேண்டும். நீதித்துறையில் நல்ல நபர்கள், எதற்கும் பயம் இல்லாத நபர்கள் இருக்கும் போது நல்ல தீர்ப்புகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது என்றார்.

    ×