search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையநல்லூர்"

    • தஞ்சாவூரிலிருந்து, கடையநல்லூருக்கு வேலை விஷயமாக வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.
    • பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சிலருக்கு கொரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்யப்பட்டது.

    இதில் கடையநல்லூர், வார்டு 17, 15, 31 உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    மேலும், தஞ்சாவூரிலிருந்து, கடையநல்லூருக்கு வேலை விஷயமாக வந்த ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே போல், கடையநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட மங்களபுரம், பாலஅருணாசலபுரம் பகுதியைச் சேர்ந்த 2 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து, கடையநல்லூர் நகராட்சி சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர்கள் சக்திவேல், சிவா , கண்ணன் மற்றும் அதிகாரிகள் தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கும் பணியை தொடங்கினர்.

    மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. அந்தப் பகுதிகளில் காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ள நபர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் ஆலோசனை பெறவும் நகராட்சி நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டது.

    இதைத் தொடர்ந்து அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீர் விநியோகிக்கப்பட்டது. தொற்று உள்ள வீடுகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வீட்டில் உள்ளவர்கள் தனிமைப் படுத்தப் பட்டுள்ளனர்.

    • இந்திய வரைபடத்தின் நடுவில் படுத்து தனது கை, கால், தலையில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி யோகாசனம் செய்தார்.
    • கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை முகம்மது ஹபீபு வழியுறுத்தினார்.

    கடையநல்லூர்

    கடையநல்லூரில் உலக யோகாசன தினத்தை முன்னிட்டு உலக நன்மைக்காகவும், உலக அமைதிக்காகவும் கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும் இந்திய வரைபடத்தின் நடுவில் தீபம் மூலம் யோகாசனம் நடந்தது.

    உலகம் முழுவதும் இன்று உலக யோகாசன தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கடையநல்லூரில் இன்டர்நேஷனல் பள்ளியின் தாளாளரும், ரோட்டரி கிளப் ஆப் கோல்டன் முன்னாள் தலைவருமான முதியவர் முகம்மது ஹபீபு நேற்று இந்திய வரைபடத்தின் நடுவில் படுத்து தனது கை, கால், தலையில் அகல்விளக்கில் தீபம் ஏற்றி கொரோனா மீண்டும் வராமல் தடுப்பதற்கு மூச்சுப் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்தியும், உலக நன்மைக்காக சிறப்பு யோகாசனங்களை செய்து காண்பித்தார்.

    • தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூரில் நடந்தது
    • தினகரனுக்கு கே.டி.சி. நகரில் பிரமாண்டமான வரவேற்பு அளிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கடையநல்லூர்:

    கடையநல்லூரில் தென்காசி வடக்கு மாவட்ட அ.ம.மு.க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கடையநல்லூர் நகர அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் ஹைதர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட இணைச்செயலாளர் சுமதி, துணைச் செயலாளர்கள் கோமதி, அருணகிரி சாமி, சுப்பிரமணியசுவாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நகர செயலாளர் வேல்சாமி பாண்டியன் வரவேற்றார். கூட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் ராமச்சந்திர மூர்த்தி என்ற வினோத் சிறப்புரையாற்றினார்.

    வருகிற 10-ந்தேதி (வெள்ளிக்கிழமை) தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு நெல்லை வழியாக வருகை தரும் பொதுச்செயலாளர் தினகரனுக்கு கே.டி.சி. நகரில் தென்காசி வடக்கு மாவட்டத்தின் சார்பில் பிரமாண்டமான முறையில் வரவேற்பு அளிப்பது,

    வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நகர, பேரூர், ஒன்றிய, கழகத்துக் உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் அதிக அளவு உறுப்பினர் சேர்க்கையை தீவிரப்படுத்தல் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் நகர செயலாளர்கள், பேரூர் செயலாளர்கள், ஒன்றிய செயலாளர்கள், மாவட்ட சார்பு அணி நிர்வாகிகள் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×