என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229894"

    • பிளாஸ்டிக் தவிர்ப்போம், கடைகளுக்கு மஞ்சள்பை எடுத்துச் செல்வோம்.
    • மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம்பிரித்து தூய்மை பணியாளரிடம் கொடுக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சயின் சார்பில்ராஜாஜி பூங்காவில் என் குப்பை என் பொறுப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி எற்பு நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை வகித்தார் நகராட்சி ஓவர்சியர் குமரன் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில்நகராட்சி துணைத் தலைவர் மங்களநாயகி, நகர மன்ற உறுப்பினர்கள் உமா, மயில்வாகனன், செல்வம், பொறியாளர் முகமது இப்ராஹிம், நகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள்கலந்து கொண்டனர்

    பின்பு என் குப்பை என் பொறுப்பு என்ற உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ராஜாஜி பூங்காவில் இருந்து பேரணி புறப்பட்டு மேல வீதி வடக்கு வீதி வழியாக நகராட்சி சென்றடைந்தது. பேரணியில் குப்பைகளை தரம் பிரித்து வழங்க வேண்டும். பிளாஸ்டிக் தவிர்ப்போம், கடைகளுக்கு மஞ்சள் பை எடுத்து செல்லவேண்டும் என்று முழக்கங்களை எழுப்பி கடைகள், வீடுகளுக்கும் பாதசாரிகளுக்கும் துண்டு பிரசுரங்களை வழங்கினர்.

    நகராட்சி பகுதியில் வைக்கப்பட்டுள்ள பச்சை நிற கூடைகளில் மக்கும் குப்பை களையும் நீல நிறக் கூடைகளில் உலர் கழிவுகளையும் மக்காத குப்பைகளை சிவப்பு நிற கூடைகளிலும் கொட்ட வேண்டும்.

    மேலும் வீடுகள், கடைகளில் மக்கும் குப்பை மக்காத குப்பைகளை தரம் பிரித்து தினசரி குப்பை எடுக்க வரும் நகராட்சி தூய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும் எனவும் குப்பைகளை ரோட்டில் கொட்டி வைக்க கூடாது தூய்மையான நகரமாக திகழ பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் நகராட்சி ஆணையர் ஹேமலதா கேட்டு கொண்டார்.

    • பள்ளியில் படித்த வகுப்பில் மீண்டும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி தங்களுடைய ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.
    • மேம்பாட்டுக்கான பணிகளை செய்வது என உறுதிமொழி ஏற்றனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த புத்தூரில் பழமை வாய்ந்த அரசு உதவி பெறும் வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது.

    இப்பள்ளியில் 1974-75 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவ, மாணவிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுமார் 48 ஆண்டுகளுக்குப் பிறகு நண்பர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தினரோடு சந்தித்து தங்கள் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

    பள்ளியில் தங்கள் அமர்ந்து படித்த வகுப்பில் மீண்டும் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தி தங்களுடைய தற்போதைய சூழ்நிலைகள் குறித்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து தங்கள் படித்த பள்ளியின் மேம்பாட்டிற்காக ஏதேனும் செய்ய வேண்டுமென முடிவு செய்து அதன்படி தனி வாட்ஸ் அப் குழு அமைத்து அதன் மூலம் முன்னாள் மாணவர்களையும் ஒன்றிணைத்து பள்ளி மேம்பாட்டுக்கான பணிகளை செய்வது என உறுதிமொழி ஏற்றனர்.

    இப்பள்ளியின் முன்னாள் மாணவரும், தற்போதைய தலைமை ஆசிரியருமான நாராயணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் நாகராஜன் நன்றி தெரிவித்தார்.

    • அவனியாபுரத்தில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
    • போக்குவரத்து காவல்துறை சார்பில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களிடம் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அவனியாபுரம்

    மதுரை விளாங்குடி பகுதியைச் சேர்ந்த மாணவன் பிரபாகரன் பஸ் படிக்கட்டில் பயணம் செய்தபோது தவறி விழுந்து பலியானார். இதையடுத்து போக்குவரத்து காவல்துறைதுணை ஆணையர் ஆறுமுகசாமி, கூடுதல் துணை ஆணையர் திருமலை குமார், உதவி போக்குவரத்து காவல் ஆணையர் செல்வின் ஆகியோரது அறிவுரையின்படி மதுரை மாவட்டம் முழுவதும் போக்குவரத்து காவல்துறை சார்பில் பஸ் படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்களிடம் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    அவனியாபுரம் பெரியார் சிலை முன்பு போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் தங்கபாண்டியன், பஸ் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்க வைத்தார். இதில் ஆர்.டி.ஓ. சித்ரா, திருப்பரங்குன்றம் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பூர்ணா கிருஷ்ணன், போக்குவரத்து கழக கிளை மேலாளர் முத்துமணி, உதவி பொறியாளர் கண்ணன், இன்ஸ்பெக்டர் இளங்கோவன், போக்குவரத்து சிறப்பு சார்பு ஆய்வாளர் செல்வம், காவலர்கள் அழகு முருகன், சதீஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி பிறந்த நாள் விழாவை யொட்டி, மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
    • ராஜுவ்காந்தி புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, மத நல்லிணக்க உறுதி மொழி எடுத்துகொண்டனர். தொடர்ந்து, தேசபக்தி பாடல்கள், மும்மத பிராத்தனைகள் நடைபெற்றது

    காரைக்கால்: 

    காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி பிறந்த நாள் விழாவை யொட்டி, மத நல்லிணக்க உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. விழாவிற்கு, கலெக்டர் முகம்மது மன்சூர் தலைமை தாங்கினார். புதுச்சேரி போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு லோகேஸ்வரன், துணை கலெக்டர்கள் ஆதர்ஷ், பாஸ்கரன், போலீஸ் சூப்பி ரண்டு சுப்பிரமணியன், சமாதான கமிட்டி உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட, ராஜுவ்காந்தி புகைப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி, மத நல்லிணக்க உறுதி மொழி எடுத்துகொண்டனர். தொடர்ந்து, தேசபக்தி பாடல்கள், மும்மத பிராத்தனைகள் நடைபெற்றது.

    • நற்சிந்தனை களையும், நல்லொழு க்கத்தையும், எடுத்துச் சொல்லும் கருத்துக்களை ஏற்கும் மனப்பக்குவத்தை கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
    • எல்லா விதமான கருத்து க்களையும் மாணவர்கள் அறிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் முனைப்பு காட்டப்பட வேண்டும்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி, கல்லூரி முதல்வர் ராமஜெயம் தலைமையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாணவ- மாணவிகள் மற்றும் பேராசிரியர் கலந்து கொண்டனர்.

    மத நல்லிணக்கம் குறித்தும், சகிப்புத் தன்மை குறித்தும், பிற மத உணர்வுகளை மதிக்கும், நல்லெண்ணத்தை வளர்க்கும், வகையில், ஒவ்வொரு ஆண்டும் மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அதன்படி இந்த ஆண்டும் நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பேசிய கல்லூரி முதல்வர் ராமஜெயம், மாணவ மாணவிகளிடையே, மதநல்லிணக்கத்தை பேணிக்காக்கும் நல் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். பிற மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், இந்தியாவின் சிறப்பு ஆகிய வேற்றுமையில் ஒற்றுமை என்பதின் பெருமையை கட்டு காக்கப்படவேண்டும்.

    மேலும் நற்சிந்த னை களையும், நல்லொழு க்கத்தையும், எடுத்துச் சொல்லும் கருத்துக்களை ஏற்கும் மனப்பக்குவத்தை கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    எல்லா விதமான கருத்து க்களையும் மாணவர்கள் அறிந்து கொள்ளவும் தெரிந்து கொள்ளவும் முனைப்பு காட்டப்பட வேண்டும். அன்பு அகிம்சை சகோதரத்துவம், இரக்கம், பிறருக்கு உதவுதல், துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தல், இவற்றின் அடிப்படையிலேயே அனைத்து மதங்களும் இயங்குகின்றன.

    ஏற்றத் தாழ்வையும், விருப்பு வெறுப்பு இன்றி ஏற்கும் மனப்பக்குவத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அனைவரிடத்திலும் அன்பாகவும், சகோதர உணர்வோடும் பழக வேண்டும் என பேசினார்.

    • அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என சுதந்திர தின விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
    • அனைவரும் கைகளில் தேசியக்கொடி ஏந்தியபடி சுதந்திரத்தை பேணி பாதுகாக்கவேண்டும்

    தஞ்சாவூர்:

    நாட்டின் 75-வது சுதந்திர தினவிழாவை முன்னிட்டு இல்லம் தோறும் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி தஞ்சையில் மீனாட்சி மருத்துவமனை ஊழியர்கள் தேசியக்கொடி ஏந்தி விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து கொண்டனர்.

    அனைவரும் கைகளில் தேசியக்கொடி ஏந்தியபடி சுதந்திரத்தை பேணி பாதுகாக்கவேண்டும். அனைவரது வீடுகளிலும் தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் என சுதந்திர தின விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

    இதில் தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர். பாலமுருகன், மக்கள் தொடர்பு அலுவலர் மணிவாசகம், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    • தொண்டி அரசு ஆண்கள் பள்ளியில் போதை மருந்து தடுப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.
    • 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது உள்பட பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.


    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் உள்ள செய்யது முகமது அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் போதை எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் நடந்தது. இப்பள்ளியைச் சேர்ந்த 260 மாணவர்கள் மற்றும் ஆசிரிய, ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

    இதில் மாணவர்கள் போதை பழக்கத்துக்கு ஆளாககூடாது. 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது, பள்ளிப்பருவத்தில் செல்போன் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள், முதல் தகவல் அறிக்கை உள்பட பல்வேறு விழிப்புணர்வு தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.


    • செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.
    • முதலமைச்சர் கொண்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு மாணவர்களாகிய நீங்கள் தான் விழிப்புணர்வை எல்லோருடைய மத்தியிலும் கொண்டு சேர்க்க வேண்டும்.

    மயிலாடுதுறை :

    மயிலாடுதுறை மாவட்டத்தில் செயின்ட் பால்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதிமொழி மாவட்ட கலெக்டர் லலிதா, முன்னிலையில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

    போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதி மொழி எடுத்துக் கொள்ளப்படுகிறது. போதைப்பொருள் என்பது வாழ்க்கையை சீரளிக்கும், உடலை அழிக்கக்கூடியது, எதிர்காலத்தை வீணடிக்கும், இந்த போதைப்பழக்கத்தில் உள்ளவர்களை நாம் அனைவரும் ஒன்றிைணந்து திருத்த வேண்டும். குறிப்பாக நீங்கள் முன்னோடியாக இருந்து போதைப் பழக்கத்தில் உள்ளவர்களை அதிலிருந்து விடுபட சொல்லித்தர வேண்டும்.

    அப்படி யாராவது இருந்தால் நல்வழியில் கொண்டு வர முன்வர வேண்டும். உங்களுடைய எதிர்காலத்தை சிறப்பாக கொண்டுவர நீங்கள் பாடுபட வேண்டும். முதலமைச்சர் கொண்டு வரும் போதைப்பொருள் ஒழிப்பிற்கு மாணவர்களாகிய நீங்கள் தான் விழிப்புணர்வை எல்லோருடைய மத்தியிலும் கொண்டு சேர்க்க வேண்டும். இந்த போதைப்பொருள் எதிர்ப்பு தின உறுதி மொழியை ஒரு நாள், ஒரு வாரம் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

    உறுதி மொழி எடுக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ரேணுகா, தலைமை ஆசிரியை லீமா ரோஸ் மற்றும் 1300-க்கும் பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், தலைைமயில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் திரு.வி.க அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.
    • போதைப் பழக்கத்தால் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து கொண்டு போதைப் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது.

    திருவாரூர்:

    முதலமைச்சரால் போதைப்பொருள் ஒழிப்பு திட்டமானது காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது.

    இத்திட்டத்தின் கீழ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன், தலைைமயில் பூண்டி கலைவாணன் எம்.எல்.ஏ. முன்னிலையில் திரு.வி.க அரசு கலை கல்லூரி மாணவ-மாணவிகள் எடுத்துக் கொண்டனர்.

    பின்னர் கலெக்டர் தெரிவித்தாவது:-

    முதலமைச்சர் ஆணைக்–கிணங்க போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்படுகிறது. போதைப்பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு வாரத்தினை முன்னிட்டு அனைத்து பள்ளி, கல்லூரிகளிலும், அரசு அலுவலகங்களிலும், போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிெமாழியானது எடுத்துக்கொள்ளப்பட்டது.

    போதைப் பழக்கத்தால் தீய விளைவுகளை முழுமையாக அறிந்து கொண்டு போதைப் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது.

    குடும்பத்தினர், நண்ப ர்களுடன் ஒன்றிணைந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகளில் முன்நின்று செயல்பட வேண்டும். அேதபோன்று, போதைப் பழக்கத்திற்கு பங்களிப்பும் மிக முக்கியமானது.

    போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவ ற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள ப்படும் என தெரிவித்தார்.

    இதில் மாவட்ட போலிஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், மண்டல இணை இயக்குநர் (உயர் கல்வித்துறை) எழிலன், உதவி ஆணையர் (கலால்) அழகிரிசாமி,

    திரு.வி.க. அரசு கலை கல்லூரி முதல்வர் கீதா, ஆர்.டி.ஓ. சங்கீதா, தாசில்தார் நக்கீரன், நகர்மன்ற குழு உறுப்பினர் பிரகாஷ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    • குழந்தைகளை போதையின் பிடியிலிருந்து காப்பாற்ற பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றார்.
    • பேசும்போது, பான்மசாலா, கஞ்சா, புகையிலை பயன்பாட்டால் 28 வகையான ரசாயனங்கள் உடலில் சேர்வதால் கேன்சர் ஏற்படும், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்படும்.

    திருத்துறைப்பூண்டி:

    தமிழக அரசு போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி பள்ளி கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகாமலிருக்க, பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த திருவாரூர் மாவட்ட கலெக்டர் ஆலோசனையின் படி திருத்துறைப்பூண்டியில் விழிப்புணர்வு பிரச்சார கருத்தரங்கம் நகராட்சி பொறியாளர் பிரதான் பாபு தலைமையிலும், முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியன், முன்னிலையிலும் நடைப்பெற்றது.

    நிகழச்சியில் நகர்மன்ற தலைவர் கவிதாபாண்டியன் விழா பேருரையாற்றினார். அப்போது குழந்தைகளை போதையின் பிடியிலிருந்து காப்பாற்ற பெற்றோர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டுமென்றார். பாலம் தொண்டு நிறுவன செயலாளர் செந்தில்குமார் திட்ட விளக்கவுரையாற்றினார்.

    உணவு பாதுகாப்பு அலுவலர் முதலியப்பன், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌரி ஆகியோர் போதையின் தீமை குறித்து கருத்துரையாற்றினார்கள்.

    அவர்கள் பேசும்போது, பான்மசாலா, கஞ்சா, புகையிலை பயன்பாட்டால் 28 வகையான ரசாயனங்கள் உடலில் சேர்வதால் கேன்சர் ஏற்படும், கல்லீரல், நுரையீரல் பாதிக்கப்படும். போதையினால் மனநல பாதிப்பு, பாலியல் சீண்டல்கள் சமூக சீர்கேடுகள் ஏற்படும். எனவே நாம் ஒன்றிணைந்து போதை யில்லா தமிழ்நாட்டை உருவாக்குவோம் என்றனர்.

    குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் கண்ணகி, வட்டார கல்வி அலுவலர்கள் அறிவழகன், , நகர்மன்ற துணை தலைவர் ஜெயப்பிரகாஷ், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள், போதை தடுப்பு குறித்து உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    முன்னதாக நகராட்சி மேலாளர் சிற்றரசு வரவேற்றார், நகர்மன்ற தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார் நன்றி கூறினார், நிகழ்ச்சியில் அங்கன்வாடி, மருத்துவ பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், கலந்துக்கொண்டனர்.

    • ஏ.ஆர்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.
    • கல்லூரி தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் தலைமையில், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முன்னிலையில் சுமார் 280 மாணவ -மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    மன்னார்குடி:

    மன்னார்குடி ஏ.ஆர்.ஜெ. பாலிடெக்னிக் கல்லூரியில் தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க போதைப்பொருள் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு கல்லூரி தாளாளர் டாக்டர் ஜீவகன் அய்யநாதன் தலைமையில், பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் முன்னிலையில் சுமார் 280 மாணவ -மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    போதைப் பழக்கத்தின் தீய விளைவுகளையும் அதனால் ஏற்படும் பாதிப்புகளையும் பற்றி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் கணேஷ்குமார் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல்துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
    • போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்க உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல்துறை சார்பில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பரமத்தி வேலூர் டி.எஸ்.பி. கலையரசன் தலைமை வகித்து போதை பழக்கத்திற்கு அடிமையானவர்கள் குறித்தும், போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் விளக்க உரையாற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் முன்னிலை வைத்தார். நிகழ்ச்சியில் வேலூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி மூர்த்தி, துணைத்தலைவர் ராஜா,வேலூர் வர்த்தகர்கள் சங்கத் தலைவர் சுந்தரம், கரூர் அரசு மகளிர் கல்வி நிறுவனங்களின் தலைவர் நடேசன், வேலூர் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார், அரசு மகளிர் கல்வி நிறுவன மாணவிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    ×