search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229919"

    • மதிப்பீடு மற்றும் கணக்கெடுப்பு பெறுவதற்கான விழிப்புணர்வு நடைபெற்றது.
    • 3 முதல் 6 மாதம் ஆராய்ச்சி துறையுடன் இணைந்து தரவுகள் பற்றி கணக்கெடுப்பார்கள்.

    திருப்பூர் :

    திருப்பூருக்கு நிகர பூஜ்ய கார்பன் கிளஸ்டர்ஸ் சான்றிதழ் மத்திய அரசிடம் இருந்து பெறுவதற்கு டிஐஎப்ஏசி .உடன் இணைந்து தரவு மதிப்பீடு மற்றும் கணக்கெடுப்பு பெறுவதற்கான விழிப்புணர்வு மற்றும் கல்லூரி மாணவர்களின் பங்களிப்பு கருத்தரங்கம் நிப்ட்-டீ கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் இன்குபேஷன் மையத்தில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினர்களாக டிஐஎப்ஏசி .துறையின் ஆராய்ச்சி ஆய்வாளர்கள் தீபக்குமார் மற்றும் மணீஷ் குமார் கலந்து கொண்டனர். கல்லூரியின் முதல்வர் கே.பி.பாலகிருஷ்ணன் வரவேற்றார். இதில் ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்பத் துறை தலைவர் அருள் செல்வன், இன்குபேஷன் மைய மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் மற்றும் கல்லூரியின் முதன்மை வழிகாட்டி ராஜா சண்முகம் பேசும்போது "கார்பன் வெளியிடும் தன்மை மற்றும் அதற்கு ஈடான பசுமை ஆற்றல் உருவாக்கம் மற்றும் கழிவு மறுசுழற்சி காரணமாக இவை இரண்டும் சமமாக உள்ள காரணத்தால் நிகர பூஜ்ஜிய கார்பன் வெளியிடும் கிளஸ்டர் என திருப்பூரை அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று ஆராய்ச்சியாளர் குழுவினர் வந்துள்ளனர். அவர்கள் 3 முதல் 6 மாதம் ஆராய்ச்சி துறையுடன் இணைந்து தரவுகள் பற்றி கணக்கெடுப்பார்கள். இதன் மூலம் திருப்பூர் கிளஸ்டர் முதல் நிகர பூஜ்ய கார்பன் கிளஸ்டர்ஸ் என்ற சான்றிதழ் பெற ஏதுவாக இருக்கும்" என்றார்.

    • தொழில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல் கருத்தரங்கு நடந்தது.
    • மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரியின் மின்னணுவியல் மற்றும் தொலை தொடர்பியல் ஐ.இ.டி.இ. மாணவர் அமைப்பு ''தொழில் முன்னேற்றத்திற்கான வழிகாட்டுதல்'' என்ற தலைப்பில் கருத்தரங்கை நடத்தியது.

    பி.எஸ்.ஆர். கல்வி குழுமங்களின் தாளாளர் ஆர். சோலைசாமி தலைமை தாங்கினார். இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார். முதல்வர் விஷ்ணுராம், டீன் மாரிச்சாமி ஆகியோர் பேசினர்.

    மின்னணுவியல் துறைத்தலைவர் வளர்மதி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தின் திண்டிவனம் பொறியியல் உறுப்புக்கல்லூரி வேலை வாய்ப்புத்துறை அதிகாரி ஜெ.லட்சுமி கலந்து கொண்டார்.

    அவர் பேசுகையில், மாணவர்கள் பணி நிறுவனங்களின் நேர்காணலின் போது சுயவிவரத்தை எவ்வாறு தயார் செய்யவேண்டும் என்பதை பற்றி எடுத்துரைத்தார். சுயவிவரம்-பயோடேட்டா இவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் என்ன என்பதை விளக்கினார்.

    நேர்காணலின்போது சம்மந்தப்பட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள், விண்ணப்பித்த பதவிக்கான தேவைகள், தகுதி ஆகியவற்றை நன்றாக வளர்த்து கொண்டு அதன் பிறகு நேர்காணலில் பங்கேற்க வேண்டும் என்றார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், மின்னணுவியல் துைற பேராசிரியர்கள் மற்றும் ஐ.இ.டி.இ. மாணவர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்களான பேராசிரியர்கள் பாலசுப்பிரமணியன், தனம், பாலகிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பள்ளி மாணவர்களுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சனைகள், தற்கொலை தடுப்பு ஆலோசனை நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
    • எதற்கும் கவலை படாமல் துணிச்சலோடு பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி விவேகா னந்தா மெட்ரிக்மேல்நி லைப்பள்ளியில் மயிலாடு துறை மாவட்ட காவல்துறை, சீர்காழி உட்கோட்ட காவல் நிலையத்துடன் இணைந்து பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உளவியல் ரீதியிலான பிரச்சனைகள், தற்கொலை தடுப்புஆலோ சனை நிகழ்வு பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு விவேகானந்தா கல்வி குழுமங்களின் தலைவர் கே.வி.ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். சீர்காழி டி.எஸ்.பி. லாமேக், இன்ஸ்பெக்டர் மணிமாறன், சப்-இன்ஸ்பெக்டர் அசோக் குமார், மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ராதாபாய் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் உளவியல் மற்றும் பாலியல் தொட ர்பான மனநல ஆலோசகர் டாக்டர் அசோக் பங்கேற்று மாணவ-மாணவிகளிடம் கலந்துரையாடி பேசுகையில், பருவவயதில் எதி ர்பால் ஈர்ப்பு என்பது இயல்பானது.அதற்காக அதில் மூழ்கிவிடாமல் மனதை ஒருநிலைப்படுத்தி கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வய தில் தான் மாணவ-மாணவிகள், பள்ளி மற்றும் பொதுவெளியில் தங்களுக்கோ, தங்களை சார்ந்தவர்களுக்கோ நடந்த, பார்த்த எந்த நிகழ்வுகளாக இருந்தாலும் எவ்வித தயக்கமுமின்றி அன்றாடம் தங்களது பெற்றோர்களுடன் மனதை திறந்து கலந்துரையாடவேண்டும். தற்காலிக பிரச்சனைக்கு மனதை குழப்பிக்கொண்டு தற்கொலை என்னத்தை எட்டும் நிலைக்குவரக்கூ டாது. எதற்கும் கவலை படாமல் துணிச்சலோடு பிரச்சனைகளை எதிர்கொள்ளவேண்டும் என்று பேசினார். நிறைவில் தலைமை காவலர் கவிதா நன்றி கூறினார்.

    • காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு, வாழப்பாடி வட்டாட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது.
    • காச நோய் பிரிவு துணை இயக்குனர் கணபதி, காசநோய் பரவும் விதம், தடுப்பு முறைகள், காச நோயாளிகளுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி வட்டாரத்தி லுள்ள கிராம ஊராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கான, காசநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு, வாழப்பாடி வட்டாட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம் தலைமை வகித்தார். வாழப்பாடி துணை வட்டாட்சியர் ஜெயலட்சுமி முன்னிலை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை வரவேற்றார்.

    சேலம் மாவட்ட காச நோய் பிரிவு துணை இயக்குனர் கணபதி, காசநோய் பரவும் விதம், தடுப்பு முறைகள், காச நோயாளிகளுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் குறித்து விழிப்புணர்வு கருத்துரை வழங்கினார்.உலக சுகாதார நிறுவனத்தின் காச நோய் பிரிவு ஆலோசகர் மருத்துவர் பிரபு, காச நோயின் வீரியம், உரிய சிகிச்சை எடுக்காவிடில் ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்தும், பேளூர் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ராகுல், காசநோயின் பரிசோதனை முறைகள் , ஊட்டச்சத்து உணவுகள் குறித்தும், காச நோய் மேற்பார்வையாளர் சதாசிவம் மாத்திரைகள் உட்கொள்ளும் வழிமுறை கள் குறித்தும் விளக்கினர்.

    வாழப்பாடி பேரூராட்சி தலைவர் கவிதா சக்கர வர்த்தி, பேளூர் பேரூராட்சி தலைவர் ஜெயசெல்வி பாலாஜி மற்றும் வாழப்பாடி ஒன்றியத்திலுள்ள 20 கிராம ஊராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.வட்டார சுகாதார மே ற்பார்வையாளர் சீனிவாசன், சுகாதார ஆய்வாளர்கள் செல்வபாபு, சுந்தரம், கந்தசாமி, பேளூர் வட்டார காச நோய் பிரிவு

    மேற்பார்வையாளர் ராஜ்கு மார் கருத்தரங்கி ற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். நிறைவாக, மாவட்ட காச நோய் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டியராஜன் நன்றி கூறினார்.

    • மதுரையில் சிலம்பம்-வளரி கருத்தரங்கு நடந்தது.
    • மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.

    மதுரை

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக தமிழ் இயல் துறை மற்றும் மருது வளரி சங்கம், இண்டர்நேஷனல் மாடர்ன் மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆகியவை ஒருங்கிணைந்து கேரள மாநிலம், கொழிஞ்சாம் பாறையில் சிலம்பம்- வளரி தொடர்பாக 2 நாள் பயிற்சி வகுப்பை நடத்தியது.

    இதில் தமிழ் பண்பாட்டு மரபுச் செல்வங்கள் நடுவ இயக்குனர் சத்தியமூர்த்தி, இண்டர்நேஷனல் மார்டன் மார்ஷியல் ஆர்ட்ஸ்- மதுரை மருது வளரி சங்க மதுரை மாவட்ட செயலாளர் முத்துமாரி, கொழிஞ்சாம்பாறை பாரதமாதா கல்லூரி முதல்வர் பவுல் தேக்கநாத், பயிற்சியாளர்கள் விஜயன், ரதிஸ், நந்தகுமார், விக்னேஷ்வரன், சிவகார்த்திகேயன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியில் கேரள மாநில உணவு வழங்கல் கழக மேலாண்மை இயக்குநர் ராஜமாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, மாணவ- மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.

    • பிளாஸ்டிக் கழிவுகள் குறித்த கருத்தரங்கு நடந்தது.
    • கூடுதல் ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார்.

    மதுரை

    மத்திய பெட்ரோ கெமிக்கல்ஸ் என்ஜினீயரிங் டெக்னாலஜி, மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து "பிளாஸ்டிக் கழிவு மேலாண்மைக்கான மாற்று வழிகள்" என்ற தலைப்பில் 2 நாள் கருத்தரங்நகை நடத்தியது.

    கூடுதல் ஆட்சியர் சரவணன் தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அதிகாரி சக்திவேல், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் ராமலிங்கம், மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விஞ்ஞானி ராஜ்குமார், மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ராமராஜ், பாண்டியராஜன், உஷாராணி, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன உதவி இயக்குநர் ஜெயசெல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கம் நிறைவு விழா நடந்தது.
    • தமிழ்நாடு அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.

    கீழக்கரை

    கீழக்கரை முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியில் வேதிப்பொறியியல் மற்றும் கட்டிடபொறியியல் துறை இணைந்து உலக சுற்றுச்சூழல் தின ஆர்டிமியாவின் பயன்பாடுகள் பற்றிய நிறைவுநாள் கருத்தரங்கம் முஹம்மது சதக் அறக்கட்டளை செயல் இயக்குநர் ஹாமீது இப்ராஹிம் தலைமையில் நடந்தது.

    முதல்வர் முஹம்மது ஷெரீப்,துணை முதல்வர் செந்தில் குமார் முன்னிலை வகித்தனர். கல்லூரி அகடமிக் தலைவி அழகிய மீனாள் வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக அப்துல் ரஹ்மான் கலந்து கொண்டு ஆர்டிமியாவின வளர்ச்சி மற்றும் அதன் பங்களிப்பு பற்றி பேசினார்.

    ஆர்டிமியாவினை பயன்படுத்தி உப்பளங்களில் உப்பின் உற்பத்தியை அதிகரிக்கவும் இறால் பண்ணைகளில் இறால்களின் உற்பத்தியை அதிகரிக்கவும் பயன்படுகிறது. 4மாத வகுப்புகளில் கற்றுக்கொண்ட ஆர்டிமியாவின் பயன்பாடுகளை பயன்படுத்தி தொழில்முனைவோராக உருவாவதற்கு வாழ்த்து க்களை தெரிவித்தார்.

    கருத்தரங்கு மலரை முஹம்மது சதக் அறக்கட்டளை செயல் இயக்குநர் ஹாமீது இப்ராஹிம் வெளியிட சிறப்பு விருந்தினர் பெற்றுக்கொண்டார். பயிற்சியில் கலந்து கொண்ட வேதிப் பொறியியல் துறை மற்றும் கட்டிடபொறியியல் துறையைச் சேர்ந்த 64 மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கூட்டமைப்பு சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது. வேதிப்பொறியியல் துறை பேராசிரியர் சண்முகபிரியா நன்றி கூறினார்.

    ×