search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 229974"

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • இந்த திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

    பொன்னியின் செல்வன்

    முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தின் முதல் பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது. இந்நிலையில், பொன்னி நதி பாடலின் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • இந்த திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

    முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    பொன்னியின் செல்வன் போஸ்டர்

    அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் 'பொன்னி நதி' ஜூலை 31-ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது. 

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • இந்த திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

    பொன்னியின் செல்வன் - 1

    முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

    அதன்படி, இப்படத்தின் முதல் பாடல் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை தனது சமூக வலைதளப் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ள ஏ.ஆர். ரஹ்மான் பாடல் உருவான விதத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • இந்த திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

    முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இப்படத்தின் 'அருண்மொழி வர்மன்' கதாபாத்திரத்தின் போஸ்டர் வெளியான போது பலரும் 'அருள்மொழி வர்மன்' என்பது தான் சரியான பெயர் என பல கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.

    பொன்னியின் செல்வன் - 1

    இந்நிலையில் 'பொன்னியின் செல்வன்' படக்குழு 'அருண்மொழி வர்மன் இராஜராஜன் ஆகிறான்' என்ற தலைப்பில் அருண்மொழி வர்மன் பெயர் விளக்கத்தையும் அவர் எப்படி ராஜ ராஜ சோழன் என்று அழைக்கப்படுகிறார் என்பதை பற்றியும்  வரலாற்றாசிரியர், எழுத்தாளர் உள்ளிட்ட சிலர் விவரிக்கும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

    இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதற்கு முன்பு படக்குழு 'சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலம்' என்ற தலைப்பில் வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

    • நீண்ட போராட்டத்திற்கு பிறகு மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன்-1.
    • இப்படத்தில் தமிழின் முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

    உலகின் முதன்மை மொழியாகிய தமிழின் ஆகச்சிறந்த நாவலான "பொன்னியின் செல்வன்" நாவலை கல்கி கிருஷ்ணமுர்த்தி அவர்கள் 1950 முதல் 1954 ஆண்டு வரை கல்கி என்ற வார இதழில் பதிவிட்டார். அதன்பின் 1955-ஆம் ஆண்டு அந்த நாவலை ஐந்து பாகங்களாக கொண்ட புத்தகமாக வெளியிட்டார். ஒரு நல்ல புத்தகம் வாசகனின் மனதை அதுவாகவே உள்ளீர்த்துக் கொள்ளும். அவ்வகையில் பொன்னியின் செல்வன் பலரின் மனதையும் கவர்ந்துள்ளது.

    இந்த பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுப்பதற்காக, 1958-ல் எம்.ஜி.ஆர் அவர்கள் கல்கியிடம் 10,000 ரூபாய் கொடுத்து, குறிப்பிட்ட காலத்திற்கு அக்கதையின் காப்புரிமையை வாங்கினார். அக்கால நடிகர் மற்றும் நடிகைகளாகிய வைஜெயந்தி மாலா, ஜெமினி கணேசன், பத்மினி, சரோஜா தேவி, சாவித்திரி, எம்.என். ராஜன், டி.எஸ். பாலையா, நம்பியார் ஆகியோரை வைத்து இப்படம் எம்.ஜி.ஆர் இயக்கத்தில் தொடங்கப்பட்டது. அதன்பின்னர், அவருக்கு விபத்து ஏற்பட்ட காரணத்தால் படம் எடுப்பதற்கான வேலை நிறுத்தப்பட்டது. பின் மீண்டும் நான்கு ஆண்டுகள் முயற்சித்தும் தோல்வியே தழுவியது.

    இதையடுத்து 1994-ல் மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் இணைந்து பொன்னியின் செல்வன் திரைப்படம் எடுப்பதாக முடிவு செய்து, பின் சில காரணங்களால் கைவிடப்பட்டது. இம்முயற்சியை அவர் கைவிடாமல் 2010-ல் மணிரத்னம் மற்றும் ஜெயமோகன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பொன்னியின் செல்வன் படத்தை எடுப்பதாக முடிவு செய்யபட்டது.

    அதில் முக்கிய கதாபாத்திரமாகிய வல்லவராயன் வந்தியதேவன் என்னும் கதாபாத்திரத்தில் விஜய்யும் மற்றும் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவும் பின் சில வேறு கதாபாத்திற்காக ஆர்யா, சத்யராஜ், விக்ரம், சூர்யா, அனுஷ்கா ஷெட்டி மற்றும் பிரியங்கா சோப்ரா ஆகியோர் நடிக்க இருந்ததாக கூறப்பட்டது.

    இதன் படப்பிடிப்பிற்காக தஞ்சாவூர் கோவில் மற்றும் மைசூர் அரண்மையையும் படப்பிடிப்பு தளத்திற்காக கேட்ட போது அனுமதியளிக்க மறுக்கப்பட்டது. இவ்வாறு பலரின் 70 ஆண்டுகால முயற்சி தோல்வியை தழுவிய நிலையில், 9 ஆண்டுகளுக்கு பின் ஜனவரி 2019-ல் பொன்னியின் செல்வன் படத்தை எடுப்பதாக மணிரத்னம் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. வல்லவராயன் வந்தியதேவனாக விஜய் சேதுபதியும் பின் சில கதாபாத்திற்காக சிம்பு, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பதாக இருந்தாகவும் கூறப்பட்டது. பல்வேறு பட்ட காரணங்களால் விஜய் சேதுபதி, சிம்பு, அமிதாப் பச்சன், நயன்தாரா மற்றும் கீர்த்தி சுரேஷ் அவர்களால் இப்படத்தில் நடிக்க இயலாமல் போனதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அதன்பின்னர் 6 மாதங்ளுக்கு பிறகு ஜுன் 2019-ல் இயக்குனர் மணிரத்னம், அவரின் மூன்றாம் முயற்சியாக லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனத்துடன் இணைந்து "பொன்னியின் செல்வன்-1" படத்தை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளார். இப்படத்தில் வல்லவராயன் வந்தியதேவனாக கார்த்தி, அருள்மொழி வர்மனாக (இராசராச சோழர்) ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், குந்தவையாக திரிஷா, நந்தினியாக ஐஸ்வர்யா ராய் ஆகியோர் நடித்துள்ளனர்.

    சில மாதகளுக்கு முன் "பொன்னியின் செல்வன்-1" படத்தின் கதாபாத்திரங்களை படக்குழு அறிமுகப்படுத்தியது. சமீபத்தில் (ஜுலை 8) இப்படத்தின் டீசர் வெளியாகி மக்களின் மத்தியில் எதிர்ப்பார்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 30-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகயுள்ளது.

    பாகுபலி படத்தில் அனைவராலும் ஈர்க்கபட்ட "ராஜ மாதா சிவகாமி தேவி" கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் நாவலில் இடம்பெற்றுள்ள குந்தவை என்ற கதாபாத்திரத்தை துணையாக்கமாக கொண்டு உருவாக்கபட்டதாகவும், அதை போல் ரஜினி நடித்த படையப்பா படத்தில் "நீலாம்பரி" என்ற கதாபாத்திரம் பொன்னியின் செல்வன் நாவலில் மைய கதாபாத்திரமாகிய நந்தினியை துணையாக்கமாக கொண்டு உருவாக்கபட்டதாகவும் கூறப்படுகிறது.

    இவ்வாறு பல ஆண்டு காலத்திற்கு பின் பலரின் முயற்சி தோல்வியடைந்த நிலையிலும் விடாமுயற்சியால் தற்பொது வெற்றிகரமாக "பொன்னியின் செல்வன்-1" படத்தை மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படம் பல வரலாற்று படங்களின் சாதனையை முறியடித்து மக்களின் மனதில் நீங்கா இடம் பிடிக்குமா என்பதை பொருத்திருந்து பார்போம். 

    • தமிழ் திரைத்துறையில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் மணிரத்னம்.
    • இவரின் இயக்கத்தில் தற்போது பொன்னியின் செல்வன்-1 திரைப்படம் உருவாகி வருகிறது.

    பகல் நிலவு படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் மணிரத்னம். அதன்பின் மௌன ராகம், நாயகன், தளபதி, ரோஜா, ராவணன் போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவர் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் என்கிற வரலாற்று கதையம்சம் கொண்ட படம் விரைவில் வெளிவரவுள்ளது.

    மணிரத்னம்

    மணிரத்னம்

    இந்நிலையில், இயக்குனர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • இந்த திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின. முன்னணி திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    சில தினங்களுக்கு முன்பு பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி படக்குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பியுள்ள இந்த நோட்டீசில், "சோழர்களின் வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் நெற்றியில் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு தவறானது என்றும் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை மறைத்துள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது.

    பொன்னியின் செல்வன்

    பொன்னியின் செல்வன்

    மேலும், இன்னும் எத்தனை வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்பது படம் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும்" என வக்கீல் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் 'சோழர்களின் காலம் தமிழர்களின் பொற்காலம்' என்ற தலைப்பில் வரலாற்றாசிரியர்கள், எழுத்தாளர்கள், வல்லுநர்கள் சோழர்களின் ஆட்சி குறித்து கூறும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம்"பொன்னியின் செல்வன்-1". இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

    திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ள இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வரலாற்று உண்மைகள் மறைக்கப்பட்டிருப்பதாக கூறி படக்குழுவினருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    பொன்னியின் செல்வன்

    சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பியுள்ள இந்த நோட்டீசில், "சோழர்களின் வம்சத்தில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில், பொன்னியின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள விக்ரம் நெற்றியில் நாமம் இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு தவறானது என்றும் இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை மறைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

    மேலும், இன்னும் எத்தனை வரலாறுகள் மறைக்கப்பட்டுள்ளது என்பது படம் பார்த்தால் தான் தெரிந்து கொள்ள முடியும் என்பதால் படத்தை வெளியிடும் முன் தங்களுக்கு திரையிட்டு காட்ட வேண்டும்" என வக்கீல் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தமிழ் சினிமாவில் முக்கிய கலைஞர்களுள் ஒருவர் பிரதாப் போத்தன்.
    • இவர் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்.

    தமிழ் சினிமாவில் முக்கியமான கலைஞர்களுள் ஒருவர் பிரதாப் போத்தன் (70 ) நடிகராகவும், இயக்குனராகவும் தன்னை சினிமாவில் நிலைநிறுத்திக் கொண்டவர். இவர் மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

    1978-ஆம் ஆண்டு ஆரவம் என்ற மலையாளப் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். 1979-ஆம் ஆண்டு வெளியான தகர என்ற மலையாளப் படத்திற்காக பிலிம்பேர் விருதினைப் பெற்றார். அதே ஆண்டு பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளியான அழியாத கோலங்கள் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.

    பிரதாப் போத்தன்

    இதையடுத்து 1985-ஆம் ஆண்டு மீண்டும் ஒரு காதல் கதை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதாப் போத்தன் இந்த படத்திறக்காக சிறந்த அறிமுக இயக்குனருக்கான இந்திராகாந்தி விருதினை பெற்றார். மேலும், இவரின் நடிப்பில் வெளியான வறுமையின் நிறம் சிவப்பு, நெஞ்சத்தை கிள்ளாதே, பன்னீர் புஷ்பங்கள், வாழ்வே மாயம் உள்ளிட்ட  படங்கள் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

    இந்நிலையில் பிரதாப் போத்தன் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். இவரின் மறைவிற்கு திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இயக்குனர் மணிரத்னம் பிரதாப் போத்தன் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். மேலும், "ரொம்ப சந்தோஷமான ஒரு நபர், கண்டிப்பா மிஸ் பண்ணுவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

    இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "பொன்னியின் செல்வன்" வெளியாக உள்ளது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது.

    பொன்னியின் செல்வன்

    சமீபத்தில் பொன்னியின் செல்வன் - 1 டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் சில காரணங்களால் கலந்து கொள்ளவில்லை. இதையடுத்து படக்குழு நேற்று சமூக வலைதளத்தில் "நிகழ்ச்சியில் பட்டத்து இளவரசரை தவறவிட்டீர்களா? உங்களுக்கான சிறப்பு எங்களிடம் உள்ளது. அது இன்று மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும்" என்று குறிப்பிட்டிருந்தது.

    அதன்படி, பொன்னியின் செல்வன் -1 படத்திற்காக நடிகர் விக்ரம் ஐந்து மொழிகளில் பின்னணி குரல் கொடுக்கும் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

    • இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் -1.
    • பொன்னியின் செல்வன் -1 திரைப்படம் செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

    இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "பொன்னியின் செல்வன்" வெளியாக உள்ளது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது.

    பொன்னியின் செல்வன் படக்குழு

    சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த டீசர் வெளியீட்டு விழாவில் நடிகர் விக்ரம் சில காரணங்களால் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில், பொன்னியின் செல்வன் படக்குழு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

    பொன்னியின் செல்வன் போஸ்டர்

    அதில், நிகழ்ச்சியில் பட்டத்து இளவரசரை தவறவிட்டீர்களா? உங்களுக்கான சிறப்பு எங்களிடம் உள்ளது. இது நாளை மாலை 5 மணிக்கு அறிவிக்கப்படும் என சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும், போஸ்டர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்-1" .
    • "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தில் பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

    கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்னம் "பொன்னியின் செல்வன்-1" திரைப்படத்தை இயக்கி வருகிறார். இரண்டு பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகின.

    இப்படத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், பிரகாஷ்ராஜ், பிரபு, ரகுமான், திரிஷா, ஐஸ்வர்யா ராய் போன்ற பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் "பொன்னியின் செல்வன்" வெளியாக உள்ளது. இப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரித்து லைகா நிறுவனம் வழங்கவுள்ளது.

    பொன்னியின் செல்வன்

    இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பொன்னியின் செல்வன் -1, திரைப்படத்தில் நடிகர் கமல் பின்னணி குரல் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்படி கமல் குரல் கொடுத்திருந்தால் யாருக்கு கொடுத்திருப்பார்? என்ற ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர்.

    ×