search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தண்டனை"

    • மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.
    • தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

    உலகம் முழுவதும் விதவிதமாக புதுப்புது வகையில் குற்றங்கள் அரங்கேறி வருகின்றன. இதில் பெரும்பாலானவை பாலியல் குற்றங்கள் ஆகும். அந்த வகையில் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர் வினோதமான வகையில் குற்றங்களில் ஈடுப்பட்டு வந்துள்ளார். அதாவது 52வயதான விலங்கியல் நிபுணரும், முதலைகள் ஸ்பெஷலிஸ்டுமான ஆடம் பிரிட்டோன் என்பவர் நாய்களை அடித்து துன்புறுத்தி வன்புணர்வில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் இதுவரை 39 நாய்கள் உயிரிழந்துள்ளன. நாய்களை வன்புணர்வு செய்வதை வீடியோவாகவும் எடுத்து வைத்துள்ளார் ஆடம் பிரிட்டோன். இதுபோன்று விலங்குகளை துன்புறுத்தியதாக இவர் மீது 60 குற்றச்சாட்டுகள் உள்ளன. ஆஸ்திரேலிய நீதிமன்றத்தில் இவையனைத்தையும் ஆடம் பிரிட்டோன் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

     

    விலங்குகளை பராமரிக்க முடியாமல் திணறும் உரிமையாளர்களிடமிருந்து அவற்றை வாங்கி இந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளார் ஆடம். பாரப்பிலியா paraphilia என்ற மன நோயினால் ஆடம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.இந்த நோய் உள்ளவர்கள் குழந்தைகள் மீதும் , உயிரற்ற பொருட்கள் மீதும் பாலியல் இச்சை கொண்டிருப்பர். ஆடம் ஒரு படி மேலாக விலங்குகள் மீது பாலியல் இச்சை கொண்டுள்ளார். விலங்குகளை வன்புறவு செய்வதை படம்பிடிக்கும்போது பல்வேறு கோணங்களில் பல சாதனைகளை பயன்படுத்தி படம்பிடித்துள்ளார்.

    மான்ஸ்டர் என்ற புனைப்பெயரில் அந்த வீடியோக்களை அவர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்துள்ளார். தனது நாய் துன்புறுத்தப்படுவதை வீடியோவில் பார்த்த முன்னாள் உரிமையாளர் அளித்த புகாரை அடுத்து இந்த குற்றங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தற்போது ஆடம் செய்த குற்றங்களுக்காக ஆஸ்திரேலிய நீதிமன்றம் 249 வருடங்கள் சிறைதண்டனை வழங்கியுள்ளது.

    • இந்த நூதன தண்டனையால் நொந்து போன சுற்றுலா பயணிகள் போலீசாரிடம் தொடர்ந்து கெஞ்சினர்.
    • போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

    கர்நாடகா மாநிலம் சிக்மகளூர் அருகே முடிகரே பகுதியில் உள்ள சார்மதி அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அப்பகுதியில் பரவலாக பெய்து வரும் மழை காரணமாக அருவியில் வெள்ளம் ஆர்ப்பரிப்பதால் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்துள்ளனர்.

    இதுதொடர்பாக அருவியை சுற்றி பல இடங்களில் எச்சரிக்கை பலகைகளும் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சுற்றுலா பயணிகள் சிலர் போலீசாரின் எச்சரிக்கையை மீறி அந்த அருவிக்கு சென்று குளித்துள்ளனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் அவர்கள் அங்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அருவியில் சில வாலிபர்கள் உற்சாகமாக குளித்து கொண்டிருந்தனர். அவர்களின் ஆடைகள் அருவிக்கரையில் இருந்தது. உடனே போலீசார் அந்த உடைகளை எடுத்துக்கொண்டு சென்றனர். இதைப்பார்த்த வாலிபர்கள் அருவியில் இருந்து ஓடி வந்து போலீசாரிடம் தங்கள் ஆடைகளை கேட்டு கெஞ்சினர். ஆனால் அவற்றை உடனடியாக போலீசார் கொடுக்கவில்லை. இந்த நூதன தண்டனையால் நொந்து போன சுற்றுலா பயணிகள் போலீசாரிடம் தொடர்ந்து கெஞ்சினர்.

    இதையடுத்து போலீசார் சுற்றுலா பயணிகளை எச்சரித்து போதிய அறிவுரைகள் வழங்கி, ஆடைகளை கொடுத்து அனுப்பினர். இதுதொடர்பான தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பயனர்கள் பலரும் போலீசாரின் நடவடிக்கையை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.

    • இளைஞர் ஒரு சிறுமியிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார்.
    • இதனை பார்த்த சிறுமியின் குடும்பத்தினர் இந்த விஷயத்தை பஞ்சாயத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

    அம்ரோஹா:

    உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் உள்ள கெடா அப்ரோலா கிராமத்தில் இளைஞர் ஒருவரை பாதி மொட்டையடித்தும் கழுத்தில் செருப்பு மாலையுடன் ஊர்வலமாக கிராம மக்கள் அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கெடா அப்ரோலா கிராமத்தில் உள்ள இளைஞர் ஒரு சிறுமியிடம் பேசிக் கொண்டிருந்திருக்கிறார். இதனை பார்த்த சிறுமியின் குடும்பத்தினர் தங்கள் மகளிடம் பேசியதற்காக இளைஞர் மீது கோபமடைந்து, இந்த விஷயத்தை பஞ்சாயத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அந்த பஞ்சாயத்தில் இளைஞருக்கு இந்த கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் இளைஞரை ஊர்வலமாக அழைத்துச் செல்வதும், சில குழந்தைகள் அவரை கேலி செய்வதும் பதிவாகியது.

    இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். இது தொடர்பாக புகார் பதிவு செய்யப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அதே சமூகத்தைச் சேர்ந்த இரு வீட்டாருக்கு இடையே இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

    • பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தது மிகவும் வருந்தத்தக்கது, துரதிஷ்டமானது.
    • உண்மைக் குற்றவாளிகளா என்ற சந்தேகம் இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு 6 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவத்திற்கு அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதி, தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.

    இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங்கின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

    இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தளபதிவில் கூறியிருப்பதாவது,

    பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்தது மிகவும் வருந்தத்தக்கது, துரதிஷ்டமானது. அன்னாரை இழந்து வாடும் அவரது மனைவி பொற்கொடிக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் அவரது இல்லத்திற்கு நேரடியாகச் சென்று தெரிவித்ததோடு, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன். இந்தத் துயரத்தில் வாடும் அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் மீண்டு வருவதற்கான மன உறுதியை வழங்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

    இந்தக் கொலையில் சரணடைந்த குற்றவாளிகள், உண்மைக் குற்றவாளிகளா என்ற சந்தேகம் இருப்பதாக

    ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இந்தக் கொடுஞ்செயல் புரிந்தவர்களையும், தொடர்புடைய அனைத்து உண்மைக் குற்றவாளிகளையும், அவர்கள் யாராக இருந்தாலும், எவ்வளவு உயரிய பொறுப்பில் இருந்தாலும், அவர்களைக் கண்டறிந்து கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி கடுமையான தண்டனை பெற்றுத் தரவேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று கூறியுள்ளார்.

    • 30 வருடத்திற்கு முன் மூன்று பேர் 40 வயது நபரை தாக்கியுள்ளனர்.
    • தற்போது மூன்று பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் ஒரு அடிதடி வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் 30 வருடங்களை சந்தித்து, 15 நீதிபதிகள் கைகளை கடந்த தற்போது முடிவுக்கு வந்துள்ளது. குற்றவாளிகளுக்கு தலா வெறும் 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    1994-ம் ஆண்டு கமாசின் காவல் விலையத்திற்கு உட்பட்ட பகுதியில் ராம்ரூப் ஷர்மா என்பவரை மூன்று பேர் அடித்து துன்புறுத்தியுள்ளனர். குடிப்பழக்கம் கொண்ட அவர்கள், குடிப்பதற்கு பணம் கேட்டு தாக்கியுள்ளனர். இதனால் ராம்ரூப் ஷர்மா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீசார் நான்கு பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தொடக்க விசாரணைக்குப்பின் போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சாட்சிகள் ஆஜராக நிலையில் வழக்கு அப்படியே நிலுவையில் இருந்துள்ளது. இறுதியாக சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்ட பின் விசாரணை தொடர்ந்துள்ளது.

    இந்த நிலையில் நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. குற்றவாளிகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    இதில் என்ன ஆச்சர்யம் என்றால் 30 வருடத்தில் 15 நீதிபதிகள் மாறியுள்ளனர். 100-க்கும் மேற்பட்ட முறை இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. இருவர் சம்பவம் நடைபெற்றபோது வாலிபர்களாக இருந்தவர்கள். தற்போது 50 வயதை தாண்டியுள்ளது. ஒருவர் விசாரணையின்போது உயிரிழந்துள்ளார்.

    தாக்குதலுக்கு உள்ளான நபருக்கு அப்போது 40 வயதாகும். தற்போது 70 வயதை தாண்டியுள்ளது. தன்னை தாக்கியவர்கள் ஏராளமான வழக்கில் தண்டனை பெற்றவர்கள். அவர்கள் தொழில்முறை குற்றவாளிகள். இந்த சிறிய தண்டனை அவர்களை எந்த விதத்திலும் பாதிக்காது என்றார்.

    • ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்க உத்தரவு.
    • தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    பள்ளி குழந்தைகளை அடிப்பது போன்ற தண்டனையை தடுக்கும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய விதிகளை அமல்படுத்த வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித் துறைக்கு சென்னை உயர் நதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    ஆணைய விதிகளை அனைத்து பள்ளிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.

    விதிகளை மீறி, குழந்தைகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது தொடர்பாக புகார்கள் வந்தால், அதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    மேலும், விதிகள் அமல்படுத்தப்படுவதை கண்காணிக்க அனைத்து பள்ளிகளிலும், தலைமை ஆசிரியர், பெற்றோர், ஆசிரியர், மூத்த மாணவர்கள் அடங்கிய கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி காதலி மல்லிகா பேகத்திடம் கிருஷ்ணன் தகராறு செய்தார்.
    • கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கிருஷ்ணன். இவரது காதலி மல்லிகா பேகம் ரஹமான்சா அப்துல் ரஹ்மான். ஏற்கனவே திருமணமான கிருஷ்ணன், மல்லிகா பேகத்தையும் காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 17-ந்தேதி காதலி மல்லிகா பேகத்திடம் கிருஷ்ணன் தகராறு செய்தார்.

    வேறு ஆண்களுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறி காதலியை சரமாரியாக தாக்கினார். மதுபோதையில் இருந்த கிருஷ்ணன் காதலியின் தலையை சுவரில் மோத வைத்தும், முகத்தில் அறைந்தும், விலா எலும்பில் குத்தியும் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த மல்லிகா பேகம் இறந்தார். இதையடுத்து கிருஷ்ணன் கைது செய்யப்பட்டு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கடந்த வாரம் கோர்ட்டில் விசாரணையின்போது கிருஷ்ணன் குற்றத்தை ஒப்புக் கொண்டார். இந்த நிலையில் காதலியை கொன்ற வழக்கில் கிருஷ்ணனுக்கு 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

    • மும்பை இந்தியன்ஸ் தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
    • அணியின் ஆலோசனை கூட்டத்திற்கு தாமதமாக வந்ததால் நிர்வாகம் இவர்களுக்கு இந்த விநோதமான தண்டனையை வழங்கியுள்ளது.

    மும்பை:

    நடப்பு ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் தான் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வியடைந்து புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இதனையடுத்து மும்பை அணி தனது 4-வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியுடன் மோத உள்ளது.

    இந்நிலையில் மும்பை அணியில் இஷான் கிஷன் உள்ளிட்ட 4 வீரர்கள் மும்பை இந்தியன்ஸ் லோகோவுடன் கூடிய வேடிக்கையான சூப்பர் மேன் உடையணிந்து விமானத்தில் பயணித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    இதற்கான காரணம் என்னவெனில், அணியின் ஆலோசனை கூட்டத்திற்கு தாமதமாக வந்ததால் நிர்வாகம் இவர்களுக்கு இந்த விநோதமான தண்டனையை வழங்கியுள்ளது. ஆலோசனை கூட்டங்களுக்கு தாமதமாக வரும் வீரர்கள், அவர்கள் அடுத்த முறை பயணம் மேற்கொள்ளும்போது சூப்பர் மேன் உடை அணிந்து வர வேண்டும் என மும்பை அணி நிர்வாகம் விநோதமான தண்டனையை அறிமுகப்படுத்தி உள்ளது.

    தொடர் தோல்விகளால் நெருக்கடியான சூழலில் இருக்கும் மும்பை அணி, இதுபோன்ற ஜாலியான தண்டனைகளால் அணிக்குள் உற்சாகம் ஏற்படும் என கருதுகிறது.

    • தீய சக்தியின் ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டார்.
    • ஆனால் நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம்.

    தலிபான் அமைப்பின் தலைவர் மேற்கத்திய கலாசாரத்திற்கு எதிராக போர் அறிவித்து இருக்கிறார். இது தொடர்பாக அந்நாட்டு தொலைகாட்சியில் ஆடியோ வெளியிட்ட தலிபான் தலைவர் மேற்கத்திய மனித உரிமைகளுக்கு ஆதரவு தெரிவிப்போர் தீய சக்தியின் ஆதரவாளர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

    தொடர்ந்து பேசிய அவர், "நாங்கள் அவர்களை கற்களால் அடித்து சாகடிப்பதை நீங்கள் பெண்களுக்கு எதிரான உரிமை மீறல் எனலாம். ஆனால், விரைவில் நாங்கள் விபசாரத்திற்கு எதிரான தண்டனையாக இதனை அமல்படுத்த இருக்கிறோம். நாங்கள் பெண்களை பொது வெளியில் அடிப்போம். இவை உங்களது ஜனநாயகத்திற்கு எதிரானவை, ஆனால் நாங்கள் அதை தொடர்ந்து செய்வோம்," என்று தெரிவித்தார்.

    தலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தான் அரசு தொலைகாட்சியில் அடிக்கடி முகம் தெரியாதவரின் குரல் செய்திகளை ஒளிபரப்புகிறது. அந்த வகையில், வெளியான ஆடியோவில் தான் பெண்களுக்கு எதிரான இத்தகைய கொடூர தண்டனை குறித்த அறிவிப்பு இடம்பெற்று இருந்தது.

    • கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.
    • கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந்தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 1-ந்தேதி இடைக்கால பட்ஜெட்டை மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    அதன் பிறகு பட்ஜெட் கூட்டத் தொடர் நடந்து வருகிறது. இன்று காலை பாராளுமன்றம் கூடியது. கூட்டம் தொடங்கியதும் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

    இதில் பொதுத்தேர்வு மற்றும் நுழைவு தேர்வுகளில் முறைகேடு செய்வோருக்கு ஜெயில் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கும் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் இன்று தாக்கல் செய்தார்.

    நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் ஆள் மாறாட்டம் உள்ளிட்ட மோசடி நடைபெறுவதை தடுப்பதற்காக இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    நுழைவுத் தேர்வு மற்றும் பொதுத் தேர்வுகளில் மோசடி செய்தால் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் 1 கோடி ரூபாய் வரை அபராதம் விதிக்கவும் இந்த மசோதாவில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.

    வேலை வாய்ப்புக்கான தேர்வுகளில் மோசடி செய்தாலும் 10 ஆண்டுகள் தண்டனை வழங்கப்படும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பல ஏக்கர் பரப்பளவில் பச்சை மிளகாய் பயிரிட்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • 2 பேரில் ஒருவரை கட்டி வைத்து மற்றொருவரை கட்டப்பட்டவரின் தோள் மீது ஏற்றி நிறுத்தி வைத்து கடுமையாக தண்டித்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு விளைவிக்கக் கூடிய பச்சை மிளகாய்க்கு சந்தைகளில் அமோக வரவேற்பு உள்ளதோடு அதிக விலையும் கிடைத்து வருவதால் விவசாயிகள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதனால் பல ஏக்கர் பரப்பளவில் அந்த பகுதிகளில் பச்சை மிளகாய் பயிரிட்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக அந்த கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் பச்சை மிளகாய் அறுவடைக்கு தயாராக இருந்த சூழலில் அவ்வப்பொழுது பச்சை மிளகாய் திருட்டு போய் வந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்ட தோட்டத்தில் காவல் காத்து வந்தனர்.

    இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிவன், மஞ்சுநாத் ஆகியோர் அதிகாலை வேளையில், விளை நிலங்களில் புகுந்து செழிப்பாக விளைந்திருந்த பச்சை மிளகாய்களை பறித்துக் கொண்டு அவர்கள் கொண்டு வந்திருந்த துணிகளில் மூட்டை கட்டிக்கொண்டு திருடி செல்ல முயன்றனர்.

    அப்போது தோட்டத்தில் காவலுக்கு இருந்து வந்த விவசாயிகளில் சிலர், 2 வாலிபர்களையும் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், திருடிய மிளகாய்களுடன் இருவரையும் கிராமத்தில் தெருத்தெருவாக அடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருந்த கோவில் தூணில் அவர்கள் திருடிய மிளகாய்களுடன், 2 பேரில் ஒருவரை கட்டி வைத்து மற்றொருவரை கட்டப்பட்டவரின் தோள் மீது ஏற்றி நிறுத்தி வைத்து கடுமையாக தண்டித்துள்ளனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கிராமத்தின் முக்கியஸ்தர்கள் 2 பேரையும் மீட்டு, மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    பச்சை மிளகாய் திருடிய வாலிபர்களை கட்டி வைத்து அடித்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • கோர்ட்டு தீர்ப்பு
    • குளச்சல் போலீசார் அஜ்மல்கான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    குளச்சல், நவ.18-

    குளச்சல் அருகே உள்ள கோடிமுனையை சேர்ந்த வர் ஞானப்பிரகாசம் (வயது 80). இவர் கடந்த 2010 ஆண்டு பிப்ரவரி மாதம் 1-ந்தேதி நடந்து குளச்சல் வந்து விட்டு இரவு வீட் டிற்கு திரும்பி சென்றார். சைமன் காலனி பாலம் அருகில் குறும்பனை சாலை யில் நடந்து செல்லும்போது, குறும்பனையிலிருந்து குளச்சல் நோக்கி வந்து கொண்டிருந்த கொம்பன் விளாகத்தை சேர்ந்த லாரி டிரைவர் அஜ்மல்கான் (33) ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராமல் ஞானப்பிரகாசம் மீது மோதி யது. படுகாயமடைந்த அவரை அப்பகுதியினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத் துவக்கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். மறுநாள் சிகிச்சை பலனின்றி ஞானப்பிர காசம் பரிதாபமாக இறந்துபோனார். இதுகுறித்து குளச்சல் போலீசார் அஜ்மல்கான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த வழக்கு இரணியல் ஜே.எம்.கோர்ட்டில் கடந்த 13 வருடமாக நடந்து வந்தது. இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி அமீர்தீன், அஜ்மல்கானுக்கு 2 வருடம் சிறைத்தண்டனை யும், ரூ.10 ஆயிரம் அபராத மும் விதித்து தீர்ப்பு அளித் தார்.

    ×