search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயனாளிகள்"

    • அவிநாசி சோலை நகரில் 448 வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது.
    • குடிநீர் வினியோகிக்க பேரூராட்சிக்கு வாரியம் சார்பில் 40 லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தப்பட்டுள்ளது.

    அவிநாசி : 

    நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் அவிநாசி சோலை நகரில் 448 வீடுகளை உள்ளடக்கிய அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு, பயனாளிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் 173 வீடுகள் பூட்டியிருப்பதாகவும், பலரும் வாடகைக்கு விட்டு வெளியில் தங்கியிருப்பதாகவும் புகார்கள் வந்தன.

    இதையடுத்து வாழ்வாதார மேம்பாட்டு வாரிய உதவி பொறியாளர் சரவணபிரபு, குடியிருப்புவாசிகளுக்கு அறிவுரை, ஆலோசனை வழங்கி கூறியதாவது:- நம் குடியிருப்பு, நம் பொறுப்பு என்ற திட்டத்தில், குடியிருப்போர் நலச்சங்கங்கள் ஏற்படுத்தி, பதிவு செய்து கொள்ள வேண்டும். குடியிருப்புகளை சுத்தம், சுகாதாரமாக பராமரிப்பது, குடிநீர் திறந்து விடும் பணி மேற்கொள்வதற்கு பணியாட்களை நியமிப்பது, அவர்களுக்கு சம்பளம் வழங்குவது, மின் கட்டணம், குடிநீர் கட்டணம் செலுத்துவது, சுற்றுச்சுவர் எழுப்புவது, 'சிசிடிவி' கேமரா பொருத்துவது உள்ளிட்ட பணிகளை, குடியிருப்போர் நலச்சங்கங்கள் மூலமே மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஒவ்வொரு குடியிருப்புவாசிகளிடம் இருந்தும் மாதம் 250 ரூபாய் கட்டணம் வசூலித்துக் கொள்ளலாம்.

    இந்த வீடுகள் யார் பெயரிலும் பதிவு செய்யப் படவில்லை. மாறாக 10 ஆண்டுகள் அதில் குடியிருந்த பிறகு வீடுகளை விற்றுக் கொள்ள விற்பனை சான்றிதழ் வழங்கப்படும். குடியிருப்போர் நலச்சங்கத்துக்கு சந்தா வழங்காமல் சங்க நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது வீடுகளை வாடகை, போக்கியத்துக்கு விட்டு வெளியில் வசிப்பது, டம்மி பத்திரத்தில் எழுதி வாங்கிக் கொண்டு, பிறருக்கு வீடுகளை விற்பது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களின் ஒதுக்கீடு ஆணை ரத்து செய்யப்படும்.

    அடுத்த மாதம் வாரியத்தின் எஸ்டேட் அலுவலர், வீடு தோறும் ஆய்வு மேற்கொண்டு உறுதிபடுத்திய பின் இந்நடவடிக்கை எடுக்கப்படும். 10 ஆண்டுகளுக்கு பின், வீடுகளை விற்க விற்பனை சான்றிதழ் பெற வேண்டுமானால் குடியிருப்போர் நலச்சங்கத்தின் தடையில்லா சான்று கட்டாயம் பெற வேண்டும்.

    குடிநீர் வினியோகிக்க பேரூராட்சிக்கு வாரியம் சார்பில் 40 லட்சம் ரூபாய் டெபாசிட் செலுத்தப்பட்டுள்ளது. குடிநீர் தடையின்றி கிடைப்பதால், பலர் தண்ணீரை விரயமாக்குகின்றனர்.அனாவசியமாக செலவழிக்கின்றனர். எனவே காலை, மாலையில் தலா ஒரு மணி நேரம் மட்டும் குடிநீர் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போர்வெல் தண்ணீர் தடையின்றி வினியோகிக்கப்படும் என்றார்.

    • சாயல்குடி அருகே 178 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
    • கடலாடி வட்டாட்சியர் மரகத மேரி வரவேற்றார்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே எஸ். கீரந்தை கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது இம் முகாமிற்கு பரமக்குடி சார் ஆட்சியர் அப்தாப் ரசூல் தலைமை வகித்தார். கடலாடி வட்டாட்சியர் மரகத மேரி வரவேற்றார்.

    சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் கந்தசாமி, எஸ். கீரந்தை ஊராட்சிமன்ற தலைவர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் 225 மனுக்கள் பெறப்பட்டு 178 பயனாளிகளுக்கு ரூ. 9 லட்சத்து 14 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பரமக்குடி சார் ஆட்சியர் வழங்கினார்.

    இம்முகாமில் மாவட்ட வழங்கள் அலுவலர் மரகதநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் அன்னம்மாள், வேளாண்மை இணை இயக்குனர் சரஸ்வதி, உதவி இயக்குனர் ஊராட்சிகள் பரமசிவன், பரமக்குடி துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் பிரதாப்குமார், மாவட்ட சமூக நல அலுவலர் சாந்தி மாவட்ட திட்ட அலுவலர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் விசுபாவதி, தோட்டக்கலை துறை இயக்குனர் நாகராஜன், கடலாடி சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செந்தில்வேல் முருகன், கடலாடி ஒன்றிய ஆணையாளர் அண்ணாதுரை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, கடலாடி வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரவணன், துணை வட்டாட்சியர்கள் சாந்தி, தமிழ் மதி கடலாடி வட்ட வழங்கல் அலுவலர் ரங்கராஜ், சாயல்குடி வருவாய் ஆய்வாளர் சேகர் கிராம நிர்வாக அலுவலர்கள் வெள்ளைச்சாமி, மாரி ப்பாண்டியன், நவீன் குமார், அருண்குமார், ஜமால் முகம்மது உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • செயற்கை கால், கை தயாரிக்கும் கருவி நிறுவப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.
    • முதல்- அமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வழங்கப்–பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செயற்கை அவயங்கள் துணை நிலையம் கடந்த 1980-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது.

    இதில் பணிபுரியும் புரோஸ்டிக் மற்றும் ஆர்த்தோடிஸ்ட் தொழில்நுட்ப வல்லுநர்கள் மாற்றுத்திறனாளி நோயாளிகளுக்கு பல்வேறு துறை மூலமாக பயனீட்டார்களுக்கு பயனடையச் செய்துள்ளனர்.

    இந்த நிலையில் உலக அளவில் செயற்கை உறுப்புப் பொருத்தல் மற்றும் மாற்றுத்திறனர் உதவி கருவி தினம் முதன் முதலில் இன்று கொண்டாடப்பட்டது.

    அதன்படி தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் இந்த தினம் கொண்டாடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சிக்கு மருத்துவக் கல்லூரி டீன் பாலாஜி நாதன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் செயற்கை கால், கை தயாரிக்கும் கருவி நிறுவப்பட்டு தொடங்கி வைக்கப்பட்டது.

    இதுவரை 185 நவீன செயற்கை கை மற்றும் கால்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ–மனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் பயனாளிகளுக்கு வழங்கப்–பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிகழ்ச்சியில் முடநீக்கியல் துறை தலைவர்கள் குமரவேல், ராஜமோகன், நிலைய மருத்துவ அதிகாரி செல்வம், ஆர்த்தோடிஸ்ட் ரமேஷ் மற்றும் சக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து சிறப்பு கடன் முகாமை நடத்தி வருகிறது.
    • வீடு பெறும் பயனாளிகள் பங்கேற்று கடன் கேட்டு விண்ணப்பித்தனர். வங்கி அதிகாரிகள் பரிசீலித்தனர்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தில் (டி.என்.யு.எச்.டி.பி.,) வீடு பெற, பயனாளிகள் தங்கள் பங்களிப்பாக 10 சதவீத தொகை செலுத்த வேண்டும்.பயனாளிகள் பங்களிப்பு தொகையை வங்கி கடனாக பெற்று செலுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகமும், மாவட்ட முன்னோடி வங்கியும் இணைந்து சிறப்பு கடன் முகாமை நடத்தி வருகிறது.

    கனரா, இந்தியன் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ., - எச்.டி.எப்.சி., வங்கிகள் சார்பில் தனித்தனியே முகாம் நடத்தப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் இந்தியன் வங்கி சார்பில் கடன் முகாம் நடத்தப்பட்டது.வீடு பெறும் பயனாளிகள் பங்கேற்று கடன் கேட்டு விண்ணப்பித்தனர். வங்கி அதிகாரிகள் பரிசீலித்தனர்.2 நாள் முகாமில் தகுதியுள்ள 78 பயனாளிகளுக்கு கடன் பெறுவதற்கான முதல்கட்ட ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய திட்ட பயனாளிகள் 437 பேருக்கு மொத்தம் 2.90 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து முகாம் நடத்தப்பட்டு பயனாளிகளுக்கு கடன் வழங்கப்படும் என மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் அலெக்சாண்டர் தெரிவித்தார்.

    • மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்றது.
    • துறை சார்பாக செய்யப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பட விளக்கங்களுடன் காட்சிப்படுத்தி இருந்தனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் 15 வேலம்பாளையம் பகுதியில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நடைபெற்றது. இதில் வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, தோட்டக்கலை துறை, தொழிலாளர் நலத்துறை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் 172 பயனாளிகளுக்கு 52 லட்சத்து 77 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் நடைபெற்ற முகாமில் திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் க.செல்வராஜ். மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சியில் அந்தந்த துறைகளின் சார்பில் அரங்குகள் அமைத்து தங்கள் துறை சார்பாக செய்யப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்து பட விளக்கங்களுடன் காட்சிப்படுத்தி இருந்தனர்.

    • திருப்புவனம் அருகே பொட்டபாளையத்தில் 187 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.
    • இந்த முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள பொட்டபாளையம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கி அரசின் பல்வேறு துறை சார்பில் 187 பயனாளிகளுக்கு ரூ. 42.07 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அப்போது அவர் பேசுகையில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் இடங்களில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களையும் ஒருங்கிணைத்து அதில் மருத்துவ முகாம்கள், கால்நடை முகாம்கள், வேளாண் பொருட்கள் சார்ந்த கண்காட்சிகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக காட்சிப்படுத்தப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் மக்கள் தொடர்பு முகாமை நடத்திட அரசு அறிவுறுத்தியுள்ளது.

    தமிழக அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து முகாமில் எடுத்துரைக்கப்பட்டது. இதனை பொதுமக்கள் கருத்தில் கொண்டு பயன்பெற வேண்டும் என்றார்.

    இந்த முகாமில் தமிழரசி எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், கோட்டாட்சியர் சுகிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகங்கை மாவட்டத்தில் 8,553 பயனாளிகளுக்கு ரூ.8¾ கோடி மதிப்பீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை அமைச்சர் பெரியகருப்பன் கூறியுள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கவியரசு கண்ணதாசன் மணி மண்டபத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்துடன், பிரதமரின் ஆரோக்கிய திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்த மருத்துவவர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை தாங்கினார்.

    விழாவில் அமைச்சர் பெரியகருப்பன் கலந்து கொண்டு பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் மற்றும் பிரதம ரின் மக்கள் ஆரோக்கியத் திட்டத்தின் மூலம் 13 அரசு மருத்துவமனைகள், 16 தனியார்மருத்துவமனைகள் அங்கீகாீக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவச் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்று கடந்த 1 வருடத்தில் சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த 8 ஆயிரத்து 553 பயனாளிகளுக்கு ரூ.8 கோடியே 88 லட்சத்து 72 ஆயிரத்து 675 மதிப்பீட்டில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தின் கீழ் பயனடையவதற்கு தகுதியாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மற்றும் அதற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் பயனடையலாம்.

    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்ட அட்டை தேவைப்படுவோர்குடும்ப அட்டை, ஆதார்அட்டை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களிடம் இருந்து பெற்ற ஆண்டு வருமானச்சான்று ஆகிய ஆவணங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் மையத்தை அணுகி, இணையதளத்தில் பதிவு செய்து காப்பீட்டு அட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சாின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 6 அரசு மற்றும் தனியார்மருத்துவமனைகள், 7 காப்பீட்டு திட்ட தொடர்பு அலுவலர்கள் ஆகியோருக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள், மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெற்ற பயனாளி களுக்கு இனிப்பு மற்றும் பழவகைகள், மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் புதிதாக சோ்க்கப்பட்ட உறுப்பினர்களுக்கு மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டைகள் ஆகியவற்றை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார்.

    இதில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி, நகர்மன்றத் தலைவர் முத்துத்துரை, இணை இயக்குநர் (மருத்துவம்) இளங்கோ மகேஸ்வரன், சிவகங்கை அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் ரேவதி, நகர்மன்ற துணைத்தலைவர் குணசேகரன், நகராட்சி ஆணையர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் செந்தில்குமார், காரைக்குடி வட்டாட்சியர் மாணிக்கவாசகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • மதுரை திருப்பாலை யாதவா பெண்கள் கல்லூரியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
    • இதில் அமைச்சர் மூர்த்தி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    அவனியாபுரம்

    மதுரை திருப்பாலை பகுதியில் உள்ள யாதவா பெண்கள் கல்லூரியில் தமிழக அரசு மாற்று திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அனிஷ்சேகர் தலைமையில் நடைபெற்றது. வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    மதுரை மாவட்டத்தில் மட்டும் 58 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். அவர்களுக்கு வசதிக்கு ஏற்ப ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் 3 இடங்களில் இது போன்று சிறப்பு முகாம்கள் நடத்தி அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும்.

    முதல்வர் ஸ்டாலின் மக்களுக்கு எது தேவை என்பதை அறிந்து செய்யக்கூடிய முதல்வராக இருக்கிறார். இந்த 16 மாத காலங்களில் எந்த பணியாக இருந்தாலும் மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் வெங்க டேசன் எம்.பி, மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், ஒன்றிய சேர்மன் வீரராகவன், பகுதி செயலாளர்கள் சசி குமார், மருது பாண்டி, திருப்பாலை ராமமூர்த்தி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், ஜீவா உள்ட பலர் கலந்து கொண்டனர்.

    • மைக்ரோ ஏ.டி.எம். மூலமாக பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டைகள் மூலம் கடன் வழங்கப்பட்டது.
    • கூட்டுப்பொறுப்புக்குழுக்களை சேர்ந்த 10 பேருக்கு ரூ.4.50 லட்சம் கடன் வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    தஞ்சை மாவட்டம், கும்பகோணம் நாகேஸ்வரன் வடக்கு வீதியில் உள்ள சந்திரசேகரபுரம் கூட்டுறவு மொத்த விற்பனை அங்காடியில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.

    பண்டகசாலையின் சுயசேவைபிரிவு மருந்தகங்கள் மற்றும் அலுவலகத்தை ஆய்வு மேற்கொண்டு கும்பகோணம் பகுதி மக்களுக்கு சிறப்பான சேவையாற்றி வருவதாக பாராட்டினார்.

    முன்னதாக, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கிக்கு வருகை தந்த ராதாகிருஷ்ணன், கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கியின் பேங்க் ஆன் வீல்ஸ் வேன்-ஐ தொடக்கி வைத்து, மைக்ரோ ஏ.டி.எம். மூலமாக பயனாளிகளுக்கு விவசாய கடன் அட்டைகள் மூலம் கடன் வழங்கப்பட்டது.

    தொடர்ந்து, வங்கியின் தலைமை கிளை மூலம் 6 மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த 70 பேருக்கு ரூ.12 லட்சமும், 2 கூட்டுப்பொறுப்புக்குழுக்களை சேர்ந்த 10 பேருக்கு ரூ.4.50 லட்சமும் கடன் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் வங்கி தலைவர் ஆசைமணி, தஞ்சாவூர் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, வங்கி மேலாண்மை இயக்குநர் பெரியசாமி, தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி, முதுநிலை மண்டல மேலாளர் உமாமகேஸ்வரி, வங்கி முதன்மை வருவாய் அலுவலர் ஜெகத்ரட்சகன், பண்டகசாலை தலைவர் அயூப்கான், பண்டகசாலையின் துணைப்பதிவாளரும் மேலாண்மை இயக்குனருமான சிவசுப்பிரமணியன் மற்றும் துணைப்பதிவாளர்கள் தயாள விநாயக அமல்ராஜ், அட்சயப்பிரியா, கருப்பையா, வங்கியின் உதவி பொது மேலாளர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • விழாவிற்கு கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
    • 50 நபர்களுக்கு 165 மாடுகள் வாங்க ரூ. 23 லட்சத்து பத்தாயிரம் வட்டியில்லா கடன் வழங்கப்பட்டது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கால்நடை பராமரிப்பு கடன் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு கூட்டுறவு சங்க தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார்.

    கருப்பம்புலம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்புராமன் முன்னிலை வகித்தார். கூட்டுறவு சங்க செயலாளர் வாஞ்சிநாதன் அனைவரையும் வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் கருப்பம்புலம் ஊராட்சியில் 50 நபர்களுக்கு 165 மாடுகள் வாங்க ரூ. 23 லட்சத்து பத்தாயிரம் வட்டியில்லா கடனாக பால் உற்பத்தியாளர்கள் சங்க பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது.

    • 7 மாவட்டங்களில் 1,900 குளியலறைகளுடன் கூடிய கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது.
    • 2023-ம் ஆண்டுக்குள் 5 ஆயிரம் கழிவறைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த நிம்மேலி கிராமத்தில் விவேகானந்தா கிராமப்புற மேம்பாடு அமைப்பின் சார்பாக ஓராசிரியர் பயிற்சி பள்ளி துவக்க விழா நடைபெற்றது.

    அதனை முன்னிட்டு நிம்மேலி கிராமத்தில் சுமார் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் 60 வீடுகளுக்கு குளியல் அறையுடன் கூடிய கழி ப்பறை அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு பணிகள் நிறைவடைந்து பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ஓராசிரியர் பள்ளிகளின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற விழாவில் விவேகானந்தா கிராமபுற மேம்பாடு திட்ட குழுவின் கவுரவத் தலைவர் கிருஷ்ணமாச்சாரி வரவேற்றார்.

    இந்த திட்ட த்தின் 7 மாவட்டங்களில் ஆயிரத்து 900 குளியல் அறைகளுடன் கூடிய கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

    மேலும் வரும் 2023ம் ஆண்டுக்குள் 5 ஆயிரம் கழிவறைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏ.வி.சி கல்லூரியின் முன்னாள் செயலர் செந்தில்குமார் இத்திட்டத்தின் நன்மைகள் பற்றியும் பயனாளிகள் எவ்வாறு அதனை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும்விளக்கினார்.

    தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு பணியாணை வழங்க ப்பட்டது.

    நிக ழ்ச்சியில் ஊராட்சி தலைவர் துரைராஜ், விவேகானந்தா கிராமப்புற மேம்பாட்டு அமைப்பின் நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஓராசிரியர் பள்ளி செயற்குழு உறுப்பினர் டெக்கான் மூர்த்தி நன்றி கூறினார்.

    • 162 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 7 ஆயிரத்து 945 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
    • இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை கலெக்டர்அலுவ லகத்தில் இன்று சிறுபான்மையினர் இன மக்களு க்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் சிறுபா ன்மையினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

    இதற்கு சிறுபான்மை யினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தார்.

    இந்த கூட்டத்தில் சிறுபான்மையினர் நலன் குறித்த செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும் அந்த திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்தும் கருத்து கேட்கப்பட்டது. தேவால யங்கள், மசூதிகள் புனர் அமைப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது.

    பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

    இதில் 13 பேருக்கு தையல் எந்திரம், 12 பேருக்கு கிரைண்டர், 10 பேருக்கு சிறு தொழில் நிதி உதவி, 54 பேருக்கு சிறு தொழில் நிதி உதவி, 45 பேருக்கு உலமாக்கள் நல வாரியம் மூலம் மிதிவண்டிகள், 28 பேருக்கு உலமாக்கள் நல வாரிய உறுப்பினர் அட்டை என மொத்தம் 162 பயனாளிகளுக்கு ரூ.15 லட்சத்து 7 ஆயிரத்து 945 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

    இந்த நல திட்ட உதவிகளை அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் வழங்கினர்.

    நிகழ்ச்சி முடிந்த பின்னர் அமைச்சர் செஞ்சி மஸ்தான் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை யிலான அரசு சிறுபான்மை மக்களுக்கு பாதுகாவலனாக விளங்குகிறது.

    இஸ்லாமியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3.5 சதவீத இட ஒதுக்கீடு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

    கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள இஸ்லாமியர்களை விடுவிக்க சட்டரீதியாக குழு அமைக்கப்பட்டுள்ளது.

    அந்தக் குழு மூலம் இதற்கான தீர்வு கிடைக்கும். மு .க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு அனைத்து தரப்பு மக்களுக்கும் கல்வி கிடைக்க வேண்டும் என்று பாடுபட்டு வருகிறது.

    பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை அரசு பற்றி விமர்சிப்பதை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா, எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், ஜவாஹிருல்லா, அண்ணாதுரை, தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×