search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலைவீச்சு"

    • பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையத்தைச் சேர்ந்தவர் குடிநீர் பைப்பில் தண்ணீர் வராததால் ஊராட்சி தலைவரின் கணவரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
    • இந்த மிரட்டலில் ஈடுப்பட்ட லாரி டிரைவருக்கு வலைவீச்சு

    பரமத்திவேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (45) . இவரது மனைவி சங்கீதா. வில்லிபாளையம் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (47) லாரி டிரைவர்.

    இவரது வீட்டிற்கு பஞ்சாயத்து குடிநீர் பைப்பில் இருந்து தண்ணீர் வரவில்லை என அடிக்கடி ஊராட்சி மன்ற தலைவருக்கு தகவல் தெரிவித்து வந்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் சதீஷ்குமார் வில்லிபாளையம் ஊராட்சி மன்றத்திற்கு சென்றுள்ளார். அங்கு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதா இல்லாததால் அவரது கணவர் நடராஜனுக்கு போன் செய்து ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வருமாறு அழைத்துள்ளார்.

    அங்கு வந்த நடராஜனை ஏன் பைப்பில் தண்ணீரை வரவில்லை எனக்கூறி அவரை தரைக்குறைவாக திட்டி தாக்கி கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நடராஜன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான சதீஷ்குமாரை தேடி வருகின்றனர்.

    • விழுப்புரம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • தப்பியோடிய முருகையனை வலை வீசி தேடி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே பா.வில்லியனூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடை பெறுவதாக விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஸ்ரீ நாதாவுக்கு தகவல் வந்தது. இதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா உத்தரவின் பேரில் டி.எஸ்.பி. பார்த்திபன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது அங்கு 2 வாலிபர்கள் கஞ்சா விற்பனை செய்வது தெரிய வந்தது. உடனே போலீசார் அவர்களை பிடிக்க முற்பட்ட போது அதில் ஒரு நபர் தப்பி ஓடிவிட்டான் மற்றொருவன் பிடிபட்டான். உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசார ணையில் அதே பகுதியைச் சேர்ந்த விஜயரங்கன் மகன் தினேஷ் (வயது 19) மற்றும் முருகையன் என்பது தெரிய வந்தது. உடனே போலீ சார் தினேஷை கைது செய்தனர். தப்பியோடிய முருகை யனை வலை வீசி தேடி வருகின்றனர். மேலும் தினேஷிட மிருந்து இருந்து 2000 பணம்,செல்போன் மற்றும் 100 கிராம் கஞ்சா வை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    • சிதம்பரத்தில் சுருக்குமடி வலை பயன்படுத்தியதை தடுத்த அதிகாரிகளுக்கு மீனவர்கள் கொலை மிரட்டல் விடுத்தனர்.
    • மீன்வளத் துறை ஆய்வாளர் சதுருதீன் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் மீனவர்கள் அனைவரும் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது என அரசால் தெரிவிக்கப்பட்டதுஇந்த சுருக்குமடி வலை பயன்படுத்தாத வண்ணம் கடலூர் சிதம்பரம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் கண்காணித்து வருகின்றனர். சிதம்பரம் அருகே சாமியார் பேட்டை கடற்கரை பகுதியில் விசை ப்படகுகளில் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலையை பயன்படுத்தி மயிலாடுதுறையை சேர்ந்த 4 மீனவர்கள் மீன் பிடித்தனர். அப்போது அந்த பகுதியில் ரோந்து சென்ற கடலூர் முதுநகர் மீன்வளத்துறை ஆய்வாளர் சதுருதின் தலைமையிலான குழுவினர் சந்தேகப்படும் படியாக மீன்பிடித்தது தெரிய வந்தது. உடனே அதிகாரிகள் மீனவர்களிடம் சென்று சோதனை செய்தனர்.

    அந்த சோதனையில் இவர்கள் அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி வலை பயன்படுத்தியது தெரிய வந்தது. ஆத்திரமடைந்த அக்கறைசேரி பகுதியைச் சேர்ந்த லோகு, பிரகாஷ், வினித் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்த மணி ஆகிய4 பேரும் மீனவத் துறை ஆய்வாளர் சதுருதீனை தகாத வார்த்தையில் திட்டி அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்து அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து மீன்வளத் துறை ஆய்வாளர் சதுருதீன் புதுச்சத்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் புது சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோதா வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர். 

    • கதவு பூட்டுகளை உடைத்து இருவீடுகளிலும் சேர்ந்து ரூ.90 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர்.
    • அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் பழங்கரை கமிட்டியார் காலனியில் ஓய்வு பெற்ற நில அளவையாளர் சாமிநாதன், அதே பகுதியில் அவரது மகள் கோகிலவாணி ஆகியோரது வீட்டின் கதவு பூட்டுகளை உடைத்து இருவீடுகளிலும் சேர்ந்து ரூ.90 ஆயிரம் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இது குறித்து அவினாசி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் சி.சி.டி.வி.கேமராவை ஆய்வு செய்தபோது திருட்டு சம்பவம் நடந்த வீட்டின் காம்பவுண்டு சுவர் அருகே ஒருவர் செல்போனில் பேசிய படி திரும்பி, திரும்பி பார்த்தவாறு அங்கும் இங்கு மாக நடந்துகொண்டிருப்பது தெரியவந்தது. இரு வீடுகளும் பூட்டியிருப்பதை உளவு பார்த்து திட்டமிட்டு திருட்டு நடந்திருக்கலாம் என்றும் திருடி சென்ற நபர்களில் சி.சி.டி.வி .கேமராவில் பதிவாகியுள்ள நபரும் ஒருவராக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் தனிப்படை அமைத்து கமிட்டியார் காலனி பகுதி, திருப்பூர் சுற்றுவட்டாரப்பகுதி உள்ளிட்ட பல இடங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    • கோவிலின் வெளியே வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடந்தது.
    • 500 கிராம் எடையுள்ள 22 வெள்ளி காப்பு, 20 பித்தளை கொப்பரை ஆகியவற்றையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றனர்.

    கயத்தாறு:

    கயத்தாறு அருகே உள்ள அரசன்குளம் நான்குவழிச்சாலையில் காந்தாரி அம்மன் கோவில் உள்ளது.

    உண்டியல்கள் உடைப்பு

    இந்தக் கோவிலில் தினமும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். நேற்று வழக்கம் நிர்வாகிகள் கோவிலை பூட்டி சென்றனர்.

    இன்று காலை பக்தர்கள் தரிசனம் செய்ய கோவிலுக்கு சென்றனர். அப்போது கோவிலின் வெளியே வைக்கப்பட்டிருந்த 2 உண்டியல்கள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் கயத்தாறு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் காசிலிங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று பார்வையிட்டனர்.

    அப்போது கோவிலின் வெளியே வைக்க்பபட்டிருந்த 2 உண்டியல்கள் மற்றும் கோவிலின் உள்ளே வைக்கப்பட்டிருந்த ஒரு உண்டியல்களை உடைத்து மர்மநபர்கள் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. மேலும் 500 கிராம் எடையுள்ள 22 வெள்ளி காப்பு, 20 பித்தளை கொப்பரை ஆகியவற்றையும் கொள்ளையர்கள் எடுத்து சென்றனர்.

    இதைத்தொடர்ந்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. காமிரா காட்சிளை போலீசார் ஆய்வு செய்தனர்.

    அதில் 5 பேர் கொண்ட கும்பல் உண்டியல்களை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அந்தக்காட்சிகளை வைத்து கொள்ளையர்களை போலீசார் தேடிவருகின்றனர்.       

    • சேலத்தில் ஹெல்மெட் அணியாமல் 100 முறை மொபட்டை ஓட்டிய பெண்ணுக்கு போலீஸ் வலைவீச்சு
    • பெண் ஒருவர் நீதிமன்ற உத்தரவை மீறி ெஹல்மெட் அணியாமல் 100 முறைக்கு மேல் மொபட் ஓட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் 5 ரோட்டில் உள்ள ஈரடுக்கு உயர்மட்ட மேம்பாலத்தில் 12 தானியங்கி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ெஹல்மெட் அணியாமல் செல்பவர்கள், அதிவேகமாக செல்பவர்களின் வாகன எண்ணை தானியங்கி காமிரா பதிவு செய்து, விதியை மீறியதாக சம்பந்தப்பட்டவர்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கப்படுகிறது. ஈரடுக்கு மேம்பாலத்தில் ஏறும் இடம், இறங்கும் இடம் ஆகிய பகுதிகளில் தானியங்கி காமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

    நெரிசல் குறைவாக இருப்பதால் மேம்பாலத்தில் இளம்பெண்களும், வாலிபர்களும் குறிப்பிட்ட வேகத்தை விட அதிவேகமாக வாகனங்கள் ஓட்டுகின்றனர். இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். ஆனால் பலர் ஹெல்மெட் அணிவதில்லை. தானியங்கி காமிரா மூலம் 119 முறை விதிமுறையை மீறி மோட்டார்சைக்கிள் ஓட்டியவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பெண் ஒருவர் நீதிமன்ற உத்தரவை மீறி ெஹல்மெட் அணியாமல் 100 முறைக்கு மேல் மொபட் ஓட்டி உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்காக அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் அவர் அந்த அபராத தொகையை அரசுக்கு செலுத்தவில்லை.

    தொடர்ந்து ஹெல்மெட் அணியாமல் மொபட் ஓட்டி வரும் அவரை, பிடிப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர். மேலும் அபராதம் விதிக்கப்பட்டதில் சதம் அடித்த அந்த பெண்ணின் ஓட்டுநர் உரிமத்தை தற்காலிகமாக சஸ்பெண்டு செய்யவும் காவல்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • மனைவியை அரிவாளால் வெட்டிய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • கணவன்-மனைவிக்கு இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    மதுரை

    மதுரை கோமதிபுரம், சபரி தெருவை சேர்ந்தவர் பானுமதி (வயது 36). இவருக்கும், கணவர் சரவணன் என்பவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் சரவணன் சம்பவத்தன்று இரவு வீட்டில் இருந்தார்.

    அப்போது பானுமதி மற்றும் அவரது தாய், தந்தை மற்றும் சகோதரர் அன்பு ஆகிய 4 பேரும் அங்கு வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சரவணன், பானுமதியை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றார்.

    இது தொடர்பாக பானுமதி கொடுத்த புகாரின் அடிப்படையில், அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே வழக்கில் சரவணன் கொடுத்த புகாரின் அடிப்படையில், பானுமதி மற்றும் அவரது தாய், தந்தை மற்றும் சகோதரர் ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ×