search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • மூதாட்டியை தாக்கிய முதியவர் கைது செய்யப்பட்டார்
    • மாங்காய் பறித்ததால் நடந்த சம்பவம்

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே தத்தனூர் கீழவெளி காலனி தெருவை சேர்ந்த தங்கராசுவின் மனைவி காளியம்மாள்(வயது 68). விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் மா, தென்னை மரங்களை வைத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த நடராஜன்(63), மாமரத்தில் உள்ள மாங்காய் மற்றும் தென்னை மரத்தில் உள்ள தேங்காய்களை பறித்துக் கொண்டு இருந்தார். இது பற்றி காளியம்மாள் கேட்டபோது, நடராஜன் தகாத வார்த்தைகளால் திட்டி, அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் காளியம்மாள் அளித்த புகாரின்பேரில், நடராஜன் மீது போலீசார் வழக்குப்பதிந்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமன் வீட்டில் இருந்த போது அரிவாளுடன் புகுந்த 3 பேரும் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    • தலைமறைவாக இருந்த கிருஷ்ணன் மற்றும் சுப்பையாவை போலீசார் கைது செய்தனர். கண்ணனை தேடி வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள கிடாரிப்பட்டியை சேர்ந்தவர் ராமன் (வயது62). இவர் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கால்நடை மருத்துவ மனையில் கம்பவுண்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

    இவர் பணியின் போது தர்மஸ்தான பட்டியில் ராமன் வாடகைக்கு வீடு எடுத்தி தங்கியிருந்தார். அப்போது இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மனைவி ஜெயா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த ஜெயாவின் கணவர் கிருஷ்ணன் பழக்கத்தை கைவிடுமாறு ராமனை எச்சரித்துள்ளார். ஆனால் அவர்களது பழக்கம் நீடித்தது.

    இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ணன் மற்றும் அவரது நண்பர்கள் சுப்பையா, கண்ணன் ஆகியோர் ராமனை கொலை செய்ய திட்டம் தீட்டினர். அதன்படி நேற்று இரவு ராமன் வீட்டில் இருந்த போது அரிவாளுடன் புகுந்த 3 பேரும் அவரை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ராமன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதுகுறித்து தகவலறிந்த மேலூர் டி.எஸ்.பி. சீதாராமன் (பொறுப்பு), இன்ஸ்பெக்டர் மன்னவன், சப்-இன்ஸ்பெக்டர் பால கிருஷ்ணன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் வேங்கையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    தொடர்ந்து அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த கிருஷ்ணன் மற்றும் சுப்பையாவை போலீசார் கைது செய்தனர். கண்ணனை தேடி வருகின்றனர்.

    • தலைமறைவாக உள்ள ராமர் பாண்டியன் உள்பட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    • ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    மதுரை:

    மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் பாபி கார்த்திக் (வயது 35). இவர் மீது வழிப்பறி, மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த மற்றொரு ரவுடி ராமர் பாண்டியனுக்கும், பாபி கார்த்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.இதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் இருதரப்பினரும் தகராறில் ஈடுபட்டனர்.

    சம்பவத்தன்று ராமர் பாண்டியன் ஆதரவாளர் காளி என்பவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அவரை வழிமறித்த பாபி கார்த்திக் மற்றும் ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் ஆத்திரமடைந்த ராமர் பாண்டியன் மற்றும் சிலர் பாபி கார்த்திகை கொலை செய்ய திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் பாபி கார்த்திக் தனது வீட்டின் அருகே மது குடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ராமர் பாண்டியன் உள்பட 14 பேர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 2 பேருக்கும் பிரச்சினை முற்றவே ராமர் பாண்டியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தாங்கள் கொண்டு வந்திருந்த அரிவாளால் பாபி கார்த்திக்கை சரமாரியாக வெட்டினர். உயிரை காப்பாற்றிக் கொள்ள அவர் ஓடினார். ஆனாலும் அந்த கும்பல் அவரை விரட்டி சென்று வெட்டி கொலை செய்தது.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பியது. இந்த கொலை குறித்து தகவலறிந்த தெப்பக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பலியான பாபி கார்த்திக் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி கொலையில் தொடர்புடைய தனசேகரன், வேல்பிரதாப், சுந்தர பாண்டி, பாலமுரளி மற்றும் 17 வயதுடைய சிறுவன் உள்பட 5 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள ராமர் பாண்டியன் உள்பட 9 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    ரவுடிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ரவுடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சின்னத்துரை, நடராஜனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த குலசேகரப்பட்டினம் போலீசார் அதனை பார்த்தனர்.
    • சின்னத்துரையை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்தவர் நடராஜன் (வயது70). இவர் தனது மனைவி ஊரான குலசேகரப்பட்டினம் சவேரியார்கோவில் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.இவருக்கு மனைவி மற்றும் 1 மகன், 2 மகள்கள் உள்ளனர்.

    அவர்களுக்கு திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் நடராஜனும், அவரது மனைவியும் மட்டும் குலசேகரன்பட்டினத்தில் வசித்து வந்தனர். அவர் வேலைக்கு செல்லாமல் மதுகுடித்துவிட்டு சுற்றித்திரிந்து வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு நடராஜனும், அவரது மனைவியின் உறவினரான முத்தையா என்பவரது மகன் சின்னத்துரையும் (27) குலசேகரப்பட்டினம் புறவழிச்சாலையில் மது குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சின்னத்துரை, நடராஜனை கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். அப்போது அந்த வழியாக ரோந்து வந்த குலசேகரப்பட்டினம் போலீசார் அதனை பார்த்தனர்.

    உடனே அவர்கள் நடராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சின்னத்துரையை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாபாஜி காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • நாகராஜை கைது செய்து கள்ளச்சாராய விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே வெள்ளாரம் குன்று பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்கப்படுவதாக வண்டிப்பெரியாறு, கலால்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி இன்ஸ்பெக்டர் அனீஸ் தலைமையில் போதை தடுப்பு அலுவலர்கள் பென்னிஜோசப், ராஜ்குமார், கலால் அலுவலர்கள் அனீஸ், சசிகலா, சிபின் ஆகியோர் அடங்கிய குழுவினர் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது பாபாஜி காலனியை சேர்ந்த நாகராஜ் என்பவர் தனது வீட்டில் சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தெரிய வந்தது. அவரது வீட்டில் நடத்திய சோதனையில் சமையல் அறையில் இருந்து 2 பிளாஸ்டிக் குடங்களில் வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் சாராய ஊறல், ஒரு லிட்டர் சாராயம் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கான உபகரணங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    மேலும் நாகராஜை கைது செய்து கள்ளச்சாராய விற்பனையில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • கார்த்திகாயினியை சமரச பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.
    • வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    திருச்சி:

    திருச்சியை அடுத்த திருவெறும்பூர் அருகேயுள்ள வடக்கு காட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது 42). இவர் ராமநாபுரத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இதற்கிடையே இவர் வரன் தேடி திருமண தகவல் மையத்தில் தனது பெயர், விபரங்களுடன் பதிவு செய்து வைத்திருந்தார்.

    இந்நிலையில் அந்த தகவல் மையம் மூலம் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த கார்த்திகாயினி (36) என்பவர் பேராசிரியர் ரமேசுக்கு அறிமுகமானார். தொடர்ந்து செல்போன் எண்களை பகிர்ந்து கொண்ட இருவரும் மனம் விட்டு பேசியுள்ளனர். திருமணம் செய்துகொள்ளவும் முடிவெடுத்து இருந்ததாக கூறப்படுகிறது. அதனை காரணமாக கொண்டு ரமேஷ், கார்த்திகாயினி இருவரும் ஒன்றாக பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர்.

    இதற்கிடையே அவர்களுக்குள் திடீரென்று மனக்கசப்பு ஏற்பட்டு கருத்து வேறுபாடு உருவானது. ஒருவருக்கொருவர் வசை பாடிக்கொண்டதோடு கார்த்திகாயினி சென்னையில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் பேராசிரியர் ரமேஷ் தன்னை கற்பழித்துவிட்டதாகவும், தாக்கியதாகவும் கூறியிருந்தார். அந்த வழக்கில் பேராசிரியர் ரமேஷ் தற்போது ஜாமீனில் இருந்து வருகிறார்.

    இந்நிலையில் கார்த்திகாயினியை சமரச பேச்சுவார்த்தைக்கு வருமாறு ரமேஷ் அழைப்பு விடுத்துள்ளார். அதனை ஏற்றுக்கொண்ட அவரும், தனது உறவினர்கள் சிலருடன் திருவெறும்பூர் காட்டூருக்கு வந்துள்ளார். அப்போது மீண்டும் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் பேராசிரியர் ரமேஷ் தன்னை தாக்கியதோடு கொலை மிரட்டல் விடுத்ததாக திருவெறும்பூர் போலீசில் கார்த்திகாயினி புகார் அளித்தார்.

    அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ரமேசை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கற்பழிப்பு வழக்கில் ஜாமீனில் இருந்த அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் மீண்டும் கைதாகி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • வாலிபர்கள் 2 பேர் சந்தேகத்திற்கிடமாக சுற்றி கொண்டிருந்தனர்.
    • கைதானவர்களிடம் இருந்து 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    பொள்ளாச்சி மரப்பேட்டை சந்திப்பில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக பொள்ளாச்சி கிழக்கு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக 2 பேர் சுற்றி கொண்டிருந்தனர்.

    சந்தேகத்தின் பேரில் 2 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். போலீசார் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசா ரித்தனர். விசாரணையில், அவர்கள் ஒடிசாவை சேர்ந்த சித்து பத்தன்(வயது 23), பல்லடம் சுக்கம்பாளை யத்தை சேர்ந்த முகிஜா என்பதும், கஞ்சா விற்பதற்காக அங்கு நின்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்க ளிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த னர். தொடர்ந்து அவர்க ளிடம் நடத்திய விசார ணையில், அவர்களது கூட்டாளிகளான ஒடிசா வை சேர்ந்த அமர்நாத்மூன், உத்தரபிரதேசத்தை சேர்ந்த மனு அகமத் ஆகியோர் செஞ்சேரிபுதூரில் கஞ்சா விற்பதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு கஞ்சா பதுக்கி விற்ற மனு அகமத், அமர்நாத்மூன் ஆகியோரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்தும் 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    வடக்கிபாளையம் போலீசார் வடக்கிபாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ரோந்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சருண்(26), முகமது முஸ்த பா(23) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

    பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் கஞ்சா விற்றதாக 6 பேர் கைது செய்யப்பட்டு, 14 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    • சுபாஷ் (29), சுரேஷ் (40) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகளையும், ரூ.1600-யையும் பறிமுதல் செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சின்னஎலத்தகிரி பகுதியில் சிலர் சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (வயது36), சண்முகம் (40), செந்தில் (38), நந்திஷ் (31), சுபாஷ் (29), சுரேஷ் (40) உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து சீட்டு கட்டுகளையும், ரூ.1600-யையும் பறிமுதல் செய்தனர்.

    • பண்ருட்டியில் சாராயம் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • தனிப்படைபோலீசார் பண்ருட்டி புலவனூர்காலனி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பம் வம்பாமேடு பகுதியில் விஷச்சாராயம் குடித்த 14 பேர் உயிரிழந்தனர். பலர் பார்வை இழந்தனர்.இதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை பகுதியில் பண்ருட்டி டி.எஸ்.பி. சபியுல்லா தலைமையில் தனிப் படைபோலீசார் பண்ருட்டி புலவனூர்காலனி பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்தஅன்பழகன் (60 மதகடிப்பட்டு சென்று 12 சாராய பாக்கெட் வாங்கி கொண்டு வந்து புலவனூர் கர்ம காரிய கொட்டகை அருகில்விற்பனை செய்தது தெரியவந்தது.இதனை த்தொடர்ந்து அவரைகைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பண்ருட்டியில் லாட்டரி விற்றவர் கைது செய்யப்பட்டார்.
    • டி.எஸ்.பி. தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் டி.எஸ்.பி. தனிப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பண்ருட்டி அவுலியா நகரை சேர்ந்த இஸ்மாயில் (வயது54 ) என்பவர் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மணல் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்
    • போலீசார் நடவடிக்கை

    அரியலூர்:

    அரியலூர் அரியலூர் மாவட்டம் பெரியநாகலூர் கிராம நிர்வாக அலுவலர் மீனாம்பிகைக்கு கசனை ஏரியில் மணல் திருட்டு நடப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உதவியாளருடன் சென்று கசனை ஏரியில் பார்த்த போது அங்கு சிலர் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் திருடி கொண்டிருந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மணல் திருட்டில் ஈடுபட்ட சிவக்குமார் (வயது 25), அன்பரசன் (35) ஆகியோரை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 3 பேரை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    • அரசு மதுபானங்களை பதுக்கி, சில்லறையில் விற்பனை செய்வது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்று சோதனை நடத்தினர்.
    • அப்போது ஒரு முதியவர் மதுபானங்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

    மேட்டூர்:

    சேலம் மாவட்டம், கொளத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் கொளத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

    அந்த பகுதியில் அரசு மதுபானங்களை பதுக்கி, சில்லறையில் விற்பனை செய்வது குறித்து தகவல் அறிந்து அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு முதியவர் மதுபானங்களை விற்பனை செய்வது தெரியவந்தது.

    அவரை பிடித்து விசாரணை செய்ததில், அவர் கொளத்தூரை சேர்ந்த அங்குபிள்ளை (வயது 70) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 7 மது பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×