search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • கள்ளத்தனமாக மதுபாட்டி ல்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது
    • அவரிடம் இருந்து 227 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    மத்தூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை பகுதியில் கள்ளத்தனமாக மதுபாட்டி ல்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வராஜ், போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மிட்டப்பள்ளி பகுதியில் கள்ளத்தனமாக மதுவிற்ற அதே கிராமத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது52) என்பவரை போலீசார் கையும் களவுமாக பிடித்தனர். பின்னர் அவரிடம் இருந்து 227 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து இளங்கோவனை கைது செய்தனர்.

    • சொந்த ஊரான தெங்கம்புதூர் சாஸ்தான் கோவில் விளை பகுதியில் கல்லறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
    • புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

    நாகர்கோவில்:

    தெங்கம்புதூர் அருகே உள்ள சாஸ்தான் கோவில் விளை பகுதியை சேர்ந்தவர் சரவண முருகன் (வயது 61), இவர் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வுபெற்றவர். சரவண முருகன் தற்போது பாளையங்கோட்டை தியாகராஜ நகர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சரவண முருகனின் தந்தை தானு இறந்துவிட்டார்.

    இதையடுத்து சொந்த ஊரான தெங்கம்புதூர் சாஸ்தான் கோவில் விளை பகுதியில் கல்லறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை பார்ப்பதற்காக சரவண முருகன் ஊருக்கு வந்திருந்தார். இங்குள்ள வீட்டில் சரவண முருகன் இருந்தார்.

    வீட்டின் பின்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது பேக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் பர்சில் இருந்து ரூ.4,300 மற்றும் ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வீட்டில் இருந்த குத்துவிளக்குகளை திருடி சென்றனர்.

    இதுகுறித்து சரவண முருகன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தியபோது கொள்ளையில் ஈடுபட்டது வெள்ளாடிச்சிவிளை பகுதியை சேர்ந்த மன்னன் (வயது 21), ரஞ்சித்குமார் (22) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். வெள்ளாடிச்சி விளை பகுதியில் இருந்த மன்னன், ரஞ்சித்குமார் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

    இதில் மன்னன், ரஞ்சித்குமார் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • புகையிலை பொருட்களை காரில் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் தவமணி(29). இவர் தனது கடையில் தடைசெய்யப் பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்தார்.

    அதேபோல் சுந்தர பாண்டியம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா(43), இவர் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தார்.இவர்கள் மீது கிருஷ்ணன்கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.

    வத்திராயிபுருப்பு அருகே கோட்டையூர் பகுதியில் போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது கோட்டையூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த காரை சோதனை செய்தனர். அதில் தடை செய்யப் பட்ட குட்கா பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    இது தொடர்பாக கோட்டையூரை சேர்ந்த வீரகுமார்(33), ராஜ பாளையம் அடுத்த சொக்க நாதன்புத்தூரை சேர்ந்த சந்தான நல்ல ஜெகன்(33) ஆகிய பேரையும் வத்திரா யிருப்பு போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 221 பாக்கெட் குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது செய்யபட்டனர்
    • அவர்களிடமிருந்து 1 கிலோ 275 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்

    புதுக்கோட்டை:

    ஆலங்குடி மதுவிலக்கு போலீசார் ஆவணம் கைகாட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு கஞ்சா விற்று கொண்டிருந்த அறந்தாங்கி களப்பக்காடு பாரதி நகரை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சேவுகப்பெருமாள் (வயது 30), சிலோன் காலனியை சேர்ந்த செல்வராஜ் மகன் சஞ்சய் (20), பட்டுக்கோட்டை நரிக்குறவர் காலனி பாரதி நகரை சேர்ந்த சந்திரன் மகன் முருகன் (35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களிடமிருந்து 1 கிலோ 275 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஆலங்குடி மதுவிலக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி வழக்குப்பதிவு செய்து, 3 பேரையும் ஆலங்குடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி விஜயபாரதி முன்பு ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

    • ரூ.4,300 மற்றும் ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வீட்டில் இருந்த குத்து விளக்குகளை திருடி சென்றனர்.
    • 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    நாகர்கோவில் :

    தெங்கம்புதூர் அருகே உள்ள சாஸ்தான் கோவில் விளை பகுதியை சேர்ந்தவர் சரவண முருகன் (வயது 61), இவர் ெரயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சரவண முருகன் தற்போது பாளையங்கோட்டை தியாகராஜ நகர் பகுதியில் வசித்து வருகிறார். கடந்த ஆண்டு சரவண முருகனின் தந்தை தானு இறந்துவிட்டார்.

    இதையடுத்து சொந்த ஊரான தெங்கம்புதூர் சாஸ்தான் கோவில் விளை பகுதியில் கல்லறை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதை பார்ப்பதற்காக சரவண முருகன் ஊருக்கு வந்திருந்தார். இங்குள்ள வீட்டில் சரவண முருகன் இருந்தார்.

    வீட்டின் பின்பகுதியில் குளித்துக்கொண்டிருந்த போது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் அவரது பேக்கில் வைத்திருந்த ரூ.1 லட்சம் பணம் பர்சில் இருந்து ரூ.4,300 மற்றும் ஏ.டி.எம். கார்டு, பான் கார்டு, ஆதார் கார்டு மற்றும் வீட்டில் இருந்த குத்து விளக்குகளை திருடி சென்றனர்.

    இதுகுறித்து சரவண முருகன் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சி களை கைப்பற்றி விசா ரணை நடத்தியபோது கொள்ளை யில் ஈடுபட்டது வெள்ளாடிச்சிவிளை பகுதியை சேர்ந்த மன்னன் (வயது 21), ரஞ்சித்குமார் (22) மற்றும் 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். வெள்ளாடிச்சி விளை பகுதியில் இருந்த மன்னன், ரஞ்சித்குமார் மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் போலீசார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

    இதில் மன்னன், ரஞ்சித் குமார் இருவரும் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.

    • சுதாரித்துக்கொண்ட போலீசார் தனி அறையில் கைதிகளை அடைத்து காப்பற்றினர்.
    • விக்னேசுவரன் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    விருதுநகர்:

    திண்டுக்கல் மாவட்டம் வேடபட்டியை சேர்ந்த சின்னதம்பி, பூண்டு வியாபாரியான இவர் அதே பகுதியை சேர்ந்த குணா என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சேர்க்கப்பட்டிருந்தார். இந்நிலையில் குணாவின் ஆதரவாளர்கள் சம்பவத்தன்று சின்னதம்பியை வெட்டி கொலை செய்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட போலீசார் 2 பெண்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர். இதில் யுவராஜ், விக்னேசுவரன் ஆகிய 2 பேர் விருதுநகர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்நிலையில் அவர்களுக்கு உடல்நல பாதிப்பு இருந்ததால் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் மார்ச் மாதம் 22-ந் தேதி சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு ஆயுதப்படை போலீசார் அழகுராஜ், சிலம்பரசன் ஆகியோர் பாதுகாப்புக்காக பணியமர்த்தப்பட்டனர்.

    சம்பவத்தன்று இரவு ஆஸ்பத்திரியில் புகுந்த 8 பேர் கொண்ட கும்பல் போலீஸ்காரர்கள் மீது மிளகாய் பொடி தூவி கைதிகள் யுவராஜ், விக்னேசுவரனை வெட்டி கொலை செய்ய முயன்றது. அப்போது சுதாரித்துக்கொண்ட போலீசார் தனி அறையில் கைதிகளை அடைத்து காப்பற்றினர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக விக்னேசுவரன் கொடுத்த புகாரின்பேரில் விருதுநகர் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் விசாரணை நடத்தியதில் திண்டுக்கல் வேடபட்டியை சேர்ந்த சின்னதம்பியின் ஆதரவாளர்கள் கைதிகளை கொல்ல முயற்சித்தது தெரியவந்தது.

    இதையடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய வேடபட்டியை சேர்ந்த ஆனந்த(35), ராம சந்திரன்(36), சிலம்பரசன்(37) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    • புகையிலை விற்ற 2 பேர் கைது செய்யபட்டனர்
    • கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அரியலூர்:

    அரியலூர் வி.கைகாட்டி அருகே அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பதாக பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அயன் ஆத்தூர் தெற்கு தெருவை சேர்ந்த தர்மராஜ் (வயது 32) என்பவர் தனது மளிகை கடையிலும், கயர்லாபாத் பனமரத்து சாலையை சேர்ந்த கருப்பையா (55) என்பவர் பழைய போலீஸ் நிலையம் எதிரே புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    • குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக மோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேர் கைது செய்யபட்டனர்
    • அரியலூர் போலீசார் நடவடிக்கை

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம், கழுமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 24). இவரை அண்மையில், செல்போன மூலம் தொடர்பு கொண்ட மர்ம நபர், குறைந்த வட்டியில் கடன் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி, பல தவணைகளாக 46 ஆயிரத்து 250 ரூபாயை இணைய வழியில் பணம் பெற்றுள்ளார்.ஆனால் கூறியபடி கடன் எதுவும் பெற்றுத்தரவில்லை. அதன் பிறகே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சதீஷ்குமார், இதுகுறித்து அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டதில், மோசடியில் ஈடுபட்ட நபர் தில்லியில் இருப்பதும், அந்த நபருக்கு உடந்தையாக சிலர் நாமக்கல் மாவட்டத்தில் தங்கி இருப்பதும் தெரியவந்தது.இதையடுத்து, அரியலூர் மாவட்ட இணைய குற்ற காவல் நிலைய இன்ஸ்பெக்டர் வாணி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் சிவனேசன் மற்றும் சுரேஷ் பாபு, சுதாகர், ரஞ்சித்குமார் ஆகியோர் அடங்கிய சிறப்பு தனிப்படையினர், நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள மல்லசமுத்திரத்துக்குச் சென்று, இணைய மோசடியில் ஈடுபட்ட மூர்த்தி மனைவி உஷா (34), ராமன் மகன் மூர்த்தி (39), நல்லமுத்து மகன் செங்கோடன் (58) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    பின்னர் அவர்களை அரியலூர் அழைத்து வந்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், 1 மடிக்கணினி, 4 செல்போன்கள், 13 ஏ.டி.எம் கார்டுகள், 1 வங்கி கணக்குப் புத்தகம், 35 ஆயிரம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். விசாரணைக்கு பின்னர் அவர்களை, அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மெட்டில்டாவின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் வெளியூரில் வசித்து வருகின்றனர்.
    • பட்டப்பகலில் நடந்த கொலை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    உடன்குடி:

    தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே மணப்பாடு பகுதியை சேர்ந்தவர் ரஸ்கின்டிரோஸ். இவரது மனைவி மெட்டில்டா (வயது 55). இவர் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.

    இவர்களுடைய மகன் சென்னையிலும், ரஸ்கின்டிரோஸ் மும்பையிலும் வசித்து வருகின்றனர். இதனால் உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளையில் உள்ள வாடகை வீட்டில் மெட்டில்டா மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று மதியம் மெட்டில்டா அவரது வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதுகுறித்து உடன்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அதேபகுதியை சேர்ந்தவர்கள், நேற்று மதியம் மெட்டில்டாவின் அலறல் சத்தம் கேட்டது. உடனே நாங்கள் அங்கு சென்று பார்த்தபோது, கதவு பூட்டப்பட்டிருந்ததால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தோம் என கூறினர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொலை தொடர்பாக தொடர்ந்து பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் மெட்டில்டாவை கொலை செய்தது அவரது அண்ணன் மகனான கன்னியாகுமரி மாவட்டம் கேசவன் புத்தன்தருவை பகுதியை சேர்ந்த ஜெயதீபக் (வயது35) என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் போலீசில் கூறியதாவது:-

    எனது அத்தையான மெட்டில்டாவின் கணவர் மற்றும் மகன் ஆகியோர் வெளியூரில் வசித்து வருகின்றனர். இதனால் நான் உடன்குடியில் தங்கியிருந்து அத்தைக்கு வீட்டுவேலை போன்ற உதவிகளை செய்து வந்தேன். நான் அவ்வப்போது அவரிடம் செலவிற்கு பணம் கேட்பேன். அந்த வகையில் நேற்றும் செலவிற்கு ரூ. 10 ஆயிரம் தருமாறு மெட்டில்டாவிடம் கேட்டேன்.

    ஆனால் அவர் பணம் தர மறுத்துவிட்டார். இதனால் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரடைந்த நான் தலையணையால் அவரது முகத்தை அழுத்தி கொலை செய்தேன். இதனால் கத்தி கூச்சலிட்ட அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார். பின்னர் நான் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டேன். ஆனால் போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பரமசிவன் என்பவரது வீட்டு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அவரது வீட்டில் தங்கினார்.
    • ஜெகதீஸ்வரன் மற்றும் சிலர் சேர்ந்து 3 பேரையும் பிடிக்க சென்றனர்.

    களக்காடு:

    கன்னியாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே உள்ள ஈத்தவிளையை சேர்ந்தவர் ஜெகதீஸ்வரன் (வயது40). இவர் கேரளாவிற்கு வாழைத்தார்கள் ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று முன்தினம் இரவில் இவர் களக்காடு அருகே உள்ள வடமலை சமுத்திரத்திற்கு வாழைத்தார்கள் வாங்குவதற்காக மோட்டார் சைக்கிளில் வந்தார். அங்குள்ள பரமசிவன் என்பவரது வீட்டு முன் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு, அவரது வீட்டில் தங்கினார். இரவில் மோட்டார் சைக்கிளை இயக்கும் சத்தம் கேட்டு, அவர் வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தார்.

    அப்போது அம்பை அருகே உள்ள பிரம்மதேசம் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் நந்து (19), காருக்குறிச்சியை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் மகன் வேல்சாமி (18), சேரன்மகாதேவியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 3 பேர் சேர்ந்து மோட்டார் சைக்கிளை திருடிக் கொண்டிருந்தனர்.

    இதைப்பார்த்த ஜெகதீஸ்வரன் மற்றும் சிலர் சேர்ந்து 3 பேரையும் பிடிக்க சென்றனர். அப்போது நந்து உள்பட 3 பேரும் அரிவாளை காட்டி மிரட்டி விட்டு, மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று விட்டனர். இதுபற்றி அவர் களக்காடு போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் ஏர்வாடி இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆதம்அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இதுதொடர்பாக நந்து உள்பட 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • சிறுமி தனது தாயிடம் தெரிவித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
    • என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த சிறுமி திருப்பூர் சைல்டு லைன் அமைப்பிடம் புகார் தெரிவித்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 35). இவருக்கு 13 வயதான மகள் உள்ளார். திருப்பூரில் உள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இந்தநிலையில் மஞ்சுளாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கணவர் பிரிந்து சென்று விட்டார். இதனால் மஞ்சுளா தனது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் மஞ்சுளாவுக்கும், அந்த பகுதியை சேர்ந்த பரோட்டா மாஸ்டரான சிவகங்கையை சேர்ந்த சிவமுருகன் (44) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் அவர்களுக்குள் கள்ளக்காதலாக மாறியது. இதையடுத்து இருவரும் கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுடன் மஞ்சுளாவின் மகளும் வசித்து வந்தார்.

    இந்தநிலையில் இரவு நேரம் சிவக்குமார் மஞ்சுளாவுடன் உல்லாசமாக இருக்கும் போது அதனை செல்போனில் வீடியோ எடுக்குமாறு மஞ்சுளாவின் மகளிடம் சிவக்குமார் வற்புறுத்தி உள்ளார். மேலும் மஞ்சுளா வீட்டில் இல்லாத நேரத்தில் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து சிறுமியை சிவக்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்தும் அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சிவக்குமார் சிறுமியிடம் பலமுறை உல்லாசம் அனுபவித்து வந்துள்ளார்.

    என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த சிறுமி இது குறித்து திருப்பூர் சைல்டு லைன் அமைப்பிடம் புகார் தெரிவித்தார். அந்த அமைப்பினர் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர்.

    பின்னர் இது குறித்து திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் சிவக்குமார் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர். தாய் மஞ்சுளாவிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தாயின் கள்ளக்காதலன் சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • செல்லப்பிரியாவை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பிரியாவை கொலை செய்த அவரது கணவர் விமல், சகோதரர் செல்லப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கருநாக்கன்முத்தன்பட்டி மெயின் ரோடு 4-வது வார்டு பகுதியைச் சேர்ந்தவர் விமல் (வயது 39). இவரது மனைவி செல்லப்பிரியா (32). விமல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்ற வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். தற்போது ஜாமீனில் வெளியே வந்தார்.

    நேற்று இரவு விமல் மற்றும் செல்லப்பிரியாவின் சகோதரர் செல்லப்பாண்டி (34) ஆகியோர் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அப்போது செல்லப்பாண்டி தனது தங்கையின் நடவடிக்கை குறித்து விமலிடம் புகார் தெரிவித்துள்ளார். அதற்கு விமல் உன் தங்கையை என்னுடன் கேரளாவுக்கு அனுப்பி வை என தெரிவித்துள்ளார். இதனையடுத்து தனது தங்கையிடம் செல்லப்பாண்டி எனக்கு சேர வேண்டிய நகையை கொடுத்து விட்டு உன் கணவனுடன் கேரளாவுக்கு செல்லுமாறு கூறியுள்ளார்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த செல்லப்பாண்டி மற்றும் விமல் ஆகிய 2 பேரும் அரிவாளால் சரமாரியாக வெட்டினர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் செல்லப்பிரியாவை மீட்டு கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வரும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து கூடலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லப்பிரியாவை கொலை செய்த அவரது கணவர் விமல், சகோதரர் செல்லப்பாண்டி ஆகியோரை கைது செய்தனர்.

    ×