search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்
    • அதே ஊரை சேர்ந்தவீரமுத்துைவ (60)கைது செய்து அவரிடமிருந்து5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன்மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது புதுப்பேட்டை அடுத்த ரெட்டிக்குப்பம் கிராமத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்ட அதே ஊரை சேர்ந்தவீரமுத்துைவ (60)கைது செய்து அவரிடமிருந்து5 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பண்ருட்டி கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பாதிரியார் உள்பட 2 பேர் போக்சோவில் கைது செய்யபட்டனர்
    • கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மாணவியை பாதிரியார் வேலாயுதம் ஸ்டீபன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார்.

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் பிளஸ்-1 தேர்வு எழுதி முடித்துள்ள 16 வயதுடைய மாணவிக்கு, 31 வயதுடைய அவரது மாமன் மகனுடன் திருமணம் செய்து வைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, மாணவியின் தந்தை கடந்த 12-ந்தேதி மாவட்ட குழந்தை உதவி மையத்திற்கு போன் செய்து தகவல் தெரிவித்தார். அதற்கு மறுநாள் மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மாணவியை மீட்டு குழந்தைகள் தொண்டு அறக்கட்டளையில் தங்க வைத்தனர்.

    அங்கு மாணவியிடம் குழந்தைகள் நலக்குழுவினர் விசாரணை நடத்தினர். மாணவியின் பெற்றோர் பெரம்பலூர் அருகே கோனேரிபாளையம் பெந்தகொஸ்தே திருச்சபையின் அருள்தந்தை (பாதிரியார்) வேலாயுதம் ஸ்டீபன் (53) என்பவர் வீட்டில் தங்கியிருந்து, வயல் வேலை செய்து வந்தனர். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு மாணவியை பாதிரியார் வேலாயுதம் ஸ்டீபன் கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்தார். இதனை மாணவி தனது தந்தையிடம் தெரிவித்துள்ளார். அதற்கு தந்தை மாணவியை கட்டையால் தாக்கியுள்ளார்.

    பின்னர் மாணவி சேலம் மாவட்டத்தில் உள்ள தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்து பள்ளிக்கு சென்று வந்தார். மாணவியை, அவருடைய மாமா மகன் காதலித்து வந்துள்ளார். மாணவியின் குடும்பத்தினருக்கும், அவருடைய மாமா மகன் குடும்பத்தினருக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்துள்ளதால், இதனை மாணவியின் தந்தை கண்டித்துள்ளார். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி மாமா வீட்டிற்கு வந்த மாணவியை 18 வயது ஆனவுடன் திருமணம் செய்து வைக்கிறோம் என்று மாமா மகன் குடும்பத்தினர் கூறி, மாணவியை அங்கேயே தங்க வைத்துள்ளனர்.

    கடந்த 8-ந்தேதி மாணவியை, மாமா மகன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அவர்கள் 2 பேருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு நடந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சட்டம் சார் நன்னடத்தை அலுவலர் ஒருவர் நேற்று முன்தினம் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கலா போக்சோ சட்டத்தின் கீழ் பாதிரியார் வேலாயுதம் ஸ்டீபன், மாணவியின் தந்தை, மாமா மகன் ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தார். பின்னர் வேலாயுதம் ஸ்டீபன், மாமா மகனை நேற்று கைது செய்த போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • மாதேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஷ்குமார் கையை வெட்டினார்.
    • ராஜேஷ் குமார் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சிப்காட் பகுதியை அடுத்த சின்ன எலத்தகிரி பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 34). இவர் அதே பகுதியில் தனியார் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று அதே பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன தொழிலாளியான மாதேஷ் (48) என்பவர் அதிக சத்தத்துடன் மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டி சென்றார். இதேபோன்று நேற்று முன்தினம் இரவு நேரத்தில் ராஜேஷ்குமார் குடியிருக்கும் பகுதியில் மாதேஷ் மீண்டு, மீண்டும் பலமுறை மோட்டார் சைக்கிளை சத்தத்துடன் ஓடி சென்றார்.

    இதுகுறித்து ராஜேஷ் குமார் அவரிடம் சென்று ஏன் இவ்வாறு மோட்டார் சைக்கிளை இரவு நேரத்தில் இப்படி ஓட்டி செல்கிறாய் என்று தட்டி கேட்டார்.

    இதனால் இருவருக்கும் இடையே வாய்தகராறு ஏற்பட்டது. அப்போது மாதேஷ் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராஜேஷ்குமார் கையை வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த அவர் வலியால் அலறினார். உடனே மாதேஷ் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து ராஜேஷ் குமார் ஓசூர் சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேஷை கைது செய்தனர். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி கிளை சிறையில் அடைத்தனர்.

    • கூழாங்கற்களை கடத்தும் லாரிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர்
    • புகாரின் பேரில், செல்போன் நம்பரின் டவரை வைத்து லாரியை தேடிச் சென்றனர்

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள பச்சைவெளி, நைனார்குப்பம், பள்ளமேடு பகுதிகளில் உள்ள ஒரு சிலர் கூழாங்கற்களை லாரியில் கடத்தி வெளிமாநிலங் களுக்கும், வெளிநாடு களுக்கும் சட்ட விரோதமாக விற்பனை செய்து வருகின்றனர். இது தொடர்பாக புவியி யல் துறை அதிகாரிகள், கூழாங்கற்களை கடத்தும் லாரிகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து வருகின்றனர். அதன்படி கடந்த ஒரு சில தினங்களுக்கு முன்பாக கூழாங்கற்களை கடத்தி சென்ற 4 லாரிகளை விழுப்புரத்தில் புவியியல் துறை லாரிகளை பறிமுதல் செய்தனர்.   இதில் பாதிக்கப்பட்ட லாரி உரிமை யாளர்கள், இதற்கு உளுந்தூர்பேட்டை யில் கந்த சாமி புரத்தில் வசிக்கும் சதீஷ் என்ப வர்தான் காரணம் என்று கருதினர். இதையடுத்து


    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூபேட்டை சுங்கச் சாவடி அருகே நிறுத்தப்பட் டிருந்த சதீஷ்-க்கு சொந்தமான 3 லாரிகளை பள்ளமேடு பகுதியைச் சேர்ந்த குழந்தைவேல், வீரமணி உள்ளிட்டவர்கள் கடத்தி சென்றனர். இந்த லாரியை கொளுத்தப் போவதாக சதீஷ்-க்கு போன் செய்து கூறினர்.  இதனால் பதறிப்போன சதீஷ், உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின் பேரில், செல்போன் நம்பரின் டவரை வைத்து லாரியை தேடிச் சென்றனர்.  அப்போது அங்கிருந்த ஏரிக்கரை அருகில் 3 லாரிகளிலும் கூழாங்கற்கள் ஏற்றப்படுவதை போலீசார் கண்டனர். உடனடியாக அங்கு விரைந்து சென்ற போலீசார் லாரியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து லாரியை திருடியது, அதில் சட்ட விரோதமாக கூழாங்கற்களை கடத்த முயற்சி செய்தது போன்ற பிரிவுகளில் குழந்தைவேல், வீரமணி, ரஞ்சித்குமார், ஆறுமுகம், ராஜசேகர், சத்தியராஜ், அணில்குமார் உள்ளிட்ட 12 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதில் சத்தியராஜ், ஆறுமுகம், ரஞ்சித்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும், பறிமுதல் செய்த லாரிகளை அதன் உரிமையாளர் சதீஷ்-ம் போலீசார் ஓப்படைத்தனர்.

    உளுந்தூர்பேட்டையில் அதிகளவில் உள்ள கனிமமான கூழாங்கற்களை கடத்துவதும், அதில் தொழில் போட்டி ஏற்பட்டு இதுபோன்ற சம்பவங்கள் அடிக்கடி நடப்பதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்படுபவர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும். வாகனத்தின் உரிமம் ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கடுமையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

     

    • காதலிக்க மறுத்ததால் இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல்
    • மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்

    ஜெயங்கொண்டம்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தண்டலை கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் சொர்ணலதா(வயது24). இவர் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதில்நான் வயலுக்கு செல்லும்போது, செல்லியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் என்பவரது மகன் ஞானசேகரன் (35) என்பவர் தன்னை காதலிப்பதாகவும், திருமணம் செய்ய வற்புறுத்தி தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே அவர் மீது நடவடிக்வகை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து ஞானசேகரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • திருமணம் செய்து கொள்வதாக கூறி துன்புறுத்தல்
    • சிறுமியை பலாத்காரம் செய்த டிரைவர் கைது

    அரியலூர்,

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் ஜெயமூர்த்தி (வயது 28). இவர் சென்னையில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். இவர் 16 வயது சிறுமியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசை வார்த்தைகளை கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி ஜெயமூர்த்தியை கைது செய்தனர்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென மல்லிகாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.
    • செல்போன் பறிப்பில் ஈடுபட்டு தப்பியது போரூர் பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது தெரிந்தது.

    போரூர்:

    சென்னை, வானகரம், பள்ளிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ஜெயசந்திரன். ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர். இவரது மனைவி மல்லிகா. இவர் வீட்டின் முன்பு நின்று கொண்டு செல்போனில் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 மர்ம நபர்கள் திடீரென மல்லிகாவின் விலை உயர்ந்த செல்போனை பறித்து தப்பி சென்றுவிட்டனர்.

    இதுகுறித்து மதுரவாயல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து விசாரணை நடத்தினர்.

    இதில் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு தப்பியது போரூர் பகுதியை சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் என்பது தெரிந்தது. தலைமறைவாக இருந்த 3 சிறுவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

    அவர்கள் இதுபோல் வேறு எந்தெந்த இடங்களில் செல்போன் பறிப்பு மற்றும் வழிப்பறியில் ஈடுபட்டு உள்ளனர் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தலைமறைவாக இருந்த லட்சுமியைப் பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து காங்கயம் போலீசார் தேடி வந்தனா்.
    • காவேரிப்பேட்டை ,தெலுங்கு காலனி பகுதியில் லட்சுமி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    காங்கயம்:

    திருவள்ளூா் மாவட்டம் காவேரிப்பேட்டை தெலுங்கு காலனி பகுதியை சோ்ந்தவா் லட்சுமி (வயது 27). இவா் மீது காங்கயம், பொள்ளாச்சி, உடுமலை காவல் நிலையங்கள் உள்பட பல்வேறு காவல் நிலையங்களில் 8 திருட்டு மற்றும் வழிப்பறி வழக்குகள் உள்ளன. இந்த வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் லட்சுமி இருந்து வந்துள்ளாா். இதையடுத்து காங்கயம் நீதிமன்றம் லட்சுமிக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது. தலைமறைவாக இருந்த லட்சுமியைப் பிடிப்பதற்கு தனிப்படை அமைத்து காங்கயம் போலீசார் தேடி வந்தனா்.

    இந்நிலையில் காவேரிப்பேட்டை ,தெலுங்கு காலனி பகுதியில் லட்சுமி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசாா், தலைமறைவாக இருந்த லட்சுமியை கைது செய்து காங்கயம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி திருப்பூா் சிறையில் அடைத்தனா். 

    • வடசிறுவள்ளூர் பகுதியில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.
    • வட சிறுவள்ளூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே 5 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த வடசிறுவள்ளூர் பகுதியில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயமணி தலைமையிலான போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது வட சிறுவள்ளூர் ஏரிக்கரை பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் அருகே 5 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அப்போது போலீசார் வருவதைப் பார்த்து அவர்கள் 5 பேரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து போலீசார் விரட்டிச்சென்று 5 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 27), முருகன் (40), தேவபாண்டலத்தை சேர்ந்த கிருஷ்ணன் (29), சங்கராபுரத்தை சேர்ந்த ராஜேந்திரன் (48), முத்துசாமி (60) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் ேபாலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்த 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.

    • தமிழரசன்(26) இவர் வன்னியர்தெரு விநாயகர் கோவில் அருகில் நின்றுகொண்டிருந்த போது முன்விரோதம் காரணமாக, அதேபகுதியிலுள்ள 3பேரும் அவரை அசிங்கமாக பேசினர்.
    • தொடர்ந்து, அவர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது.

    கடலுார்:

    வடலூர் கோட்டக்கரையை சேர்ந்தவர் தமிழரசன்(26) இவர் அதே பகுதியில் வன்னியர்தெரு விநாயகர் கோவில் அருகில் நின்றுகொண்டிருந்த போது முன்விரோதம் காரணமாக , பார்வதிபுரத்தை சேர்ந்த கலையரசன்(31) பரஞ்ஜோதி (22) ஜெயபிரகாஷ் (27) ஆகிய 3 பேர்களும் தமிழரசனை அசிங்கமாகபேசி, அவர் கழுத்தை நெரித்து கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது, இதுகுறித்து வடலூர் போலீசில்புகார் செய்யப்பட்டது. இைத தொடர்ந்து கலையரசன், பரஞ்ஜோதி, ஜெயப்பிரகாஷ் ஆகிய 3 பேர்களையும்வடலூர் புதுநகர் அரசு பள்ளி அருகில் ரோந்து சென்ற ேபாலீசார் கைது செய்தனர்.

    • இசக்கியப்பனுக்கு தொடை மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இசைவேணியை கைது செய்தனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மூன்றடைப்பு மருதகுளம், வடக்குத்தெருவை சேர்ந்தவர் இசக்கியப்பன்(வயது 44). இவருக்கும், இவரது மனைவி இசைவேணிக்கும்(40) திருமணமாகி 17 ஆண்டுகள் ஆகிறது.

    இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். இசக்கியப்பன் சூரத்தில் இட்லி கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் இசைவேணி தவறான பழக்க வழக்கத்தில் ஈடுபடுவதாக இசக்கியப்பனுக்கு சிலர் தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர் சொந்த ஊருக்கு திரும்பி வந்தார். நேற்று அவர் தனது மனைவி இசைவேணி மீது சந்தேகம் அடைந்து அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் நீ எனக்கு வேண்டாம் என்று கூறியுள்ளார். இதில் அவர்களுக்குள் தகராறு முற்றியது.

    அப்போது ஆத்திரம் அடைந்த இசைவேணி, சற்றும் எதிர்பாராமல் வீட்டில் இருந்த கத்தியால், கணவர் இசக்கியப்பனை குத்தினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்தார். இதில் இசக்கியப்பனுக்கு தொடை மற்றும் கைகளில் படுகாயம் ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இதுகுறித்து மூன்றடைப்பு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி இசைவேணியை கைது செய்தனர்.

    • பலத்த காயம் அடைந்த அஜித்துக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து சரண்ராமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அஜித் (வயது25),சரண் ராம்(28),நண்பர்களான இருவரும் மணலி புதுநகர் அருகே உள்ள தனியார் சரக்கு பெட்டகத்தில் லாரி டிரைவர்களாக வேலை பார்த்து வருகின்றனர்.நேற்று இரவு அவர்கள், மணலி புதுநகர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் மது குடித்தனர். அதற்கான செலவை முதலில் அஜித் செய்தார். பின்னர் மதுகுடிக்க கொடுத்த பாதிபணத்தை தருமாறு சரண்ராமிடம் கேட்டார். இதில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த சரண் ராம் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியால் நண்பரான அஜித்தை வயிற்றில் குத்தி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அஜித்துக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து சரண்ராமை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×