search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    • சரவணன், சரண்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி கைகளால் தாக்கி உள்ளார்

    புதுக்கோட்டை:

    அரிமளம் ஒன்றியம், ராயவரம் அருகேயுள்ள ஆலங்குடி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் சரண்யா. இவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த சரவணன் (வயது 38) என்பவருக்கும் இடையே வரப்பு அமைப்பதில் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சரண்யாவின் தந்தை வரப்பு அமைத்துக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த சரவணன், அவரிடம் எவ்வாறு நீ வரப்பு அமைக்கலாம் என கேள்வி கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். இதையறிந்த சரண்யா அங்கு வந்து சரவணனிடம் என் தந்தையிடம் எப்படி பேசலாம் என கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த சரவணன், சரண்யாவை தகாத வார்த்தைகளால் திட்டி கைகளால் தாக்கி உள்ளார். இதுகுறித்து அரிமளம் ேபாலீஸ் நிலையத்தில் சரண்யா புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • விளையாட்டு மைதானத்தில் புதிய பெயர் பலகையை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.
    • பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விளையாட்டு மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் காமராஜ் காலனியில், ஆர்.வி.அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சொந்தமான விளையாட்டு மைதானம் உள்ளது.

    இந்த மைதானத்தில் மாணவர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்வதுடன், நாள்தோறும் ஏராளமான பொதுமக்களும் நடைபயிற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மைதானத்திற்கு" முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி விளையாட்டு திடல்" என்று பெயர் சூட்ட, ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ. சத்யா, மன்ற கூட்டத்தில் தீர்மானம் கொண்டுவந்து, அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து, நேற்று விளையாட்டு மைதானத்தில் புதிய பெயர் பலகையை திறந்து வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது.

    இந்நிலையில், அந்த விளையாட்டு மைதானத்திற்கு கருணாநிதி பெயர் சூட்ட பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, விளையாட்டு மைதானம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில், திடீரென பெயர் பலகையில் கருணாநிதி பெயரை, கறுப்பு மை பூசி அழிக்கும் பணியில் பா.ஜ.க.வை சேர்ந்த இருவர் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தி, மை குப்பியை பறிமுதல் செய்தனர். இதனால் அங்கு மோதல் ஏற்பட்டது. பின்னர், பா.ஜ.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்நிலையில், பெயர் பலகையில் கருணாநிதி பெயர் அழிக்கப்பட்ட தகவல் அறிந்து, மாவட்ட செயலாளர் ஒய்.பிரகாஷ் எம்.எல்.ஏ, மேயர் சத்யா ஆகியோர் தலைமையில் தி.மு.க.வினர் அங்கு குவிந்தனர். மேலும் விளையாட்டு மைதானம் முன்பு தரையில் அமர்ந்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து துணை போலீஸ் சூப்பிரண்டு பாபு பிரசாந்த், எம்.எல்.ஏ. மற்றும் மேயரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இது தொடர்பாக ஓசூர் டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து பெயர் பலகையில் கறுப்பு மை பூசி சேதப்படுத்தியதாக ஓசூர் தெற்கு மண்டல பா.ஜ.க.தலைவர் கே.நாகு என்ற நாகேந்திரா (வயது40) மற்றும் அலசநத்தம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (40) ஆகிய இருவரை கைது செய்தனர். கைதான அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • டாஸ்மாக் அருகே மது விற்றவர் கைது செய்யபட்டார்
    • போலீசார் அவரிடமிருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    உடையார்பாளையம்,

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியில் கயர்லாபாத் சப் இன்ஸ்பெக்டர் பூபாலன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அரியலூர் உழவர் சந்தை அருகே உள்ள டாஸ்மாக் பின்புறம், செட்டி குழி பள்ளம் வடக்கு தெருவை சேர்ந்த பாலையா மகன் சக்திவேல் (வயது 37) என்பவர் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சக்திவேலை கைது செய்து அவரிடமிருந்த 11 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • உடையார்பாளையம் அருகே போலி சான்றிதழ் கொடுத்தவர் கைது செய்யபட்டார்
    • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    உடையார்பாளையம்,

    உடையார்பாளையம் சார்பதிவாளர் (பொ) அலுவலகத்தில் சார்பதிவாளராக சாந்தகுமார் (வயது 44) பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் 5-ந்தேதி வாளரக்குறிச்சி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மனைவி மலர்கொடி, இவர்களது மகளும் வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்த சரண்ராஜ் மனைவியுமான வினிதா ஆகியோருக்கு தேளூர் காலனி தெருவை சேர்ந்த சேகர் (50) என்பவர் அவர் அனுபவித்து வந்த இடத்தை விற்பனை செய்ய இரு ஆவணங்கள் முறையே ஆவண எண்ணாக பதிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து இடத்தை வாங்கிய மலர்கொடி மற்றும் அவரது மகள் வினிதா அங்கிருந்த முட்களை அகற்றினர். இதையரிந்த கிராம நிர்வாக அலுவலர் இது குறித்து கேட்டுள்ளார். அப்போது இந்த இடத்தை வாங்கியதாக தெரிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த ஆவணங்களை சரிபார்த்த போது அரியலூர் வருவாய் கோட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட கடிதத்தில் ஆவணத்தில் இணைக்கப்பட்ட தடையின்மை சான்று போலியாக தயாரிக்கப்பட்டது என தெரியவந்தது. பின்னர் இதுகுறித்து கயர்லாபாத் காவல்நிலையத்தில் சார்பதிவாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் சேகர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    • 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தினேஷை முதுகு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.
    • 2 அரிவாள் மற்றும் 2 கத்தி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    மணிமங்கலம்:

    காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மணிமங்கலம் அருகே உள்ள வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (வயது 23). இவரது நண்பர்கள் குணா, விக்கி. இந்த நிலையில் தினேஷுக்கும் முடிச்சூர் பகுதியை சேர்ந்த தீபக் (23) என்பவருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. இதனிடையே கடந்த மாதம் 28-ந்தேதி அன்று தினேஷ் வரதராஜபுரம் தாம்பரம் செல்லும் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் தினேஷை முதுகு, கை, கால் உள்ளிட்ட பகுதிகளில் அரிவாளால் வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த தினேஷை அங்கு இருந்தவர்கள் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய நபர்களை தேடிவந்தனர். இந்த நிலையில் வரதராஜபுரம் பி.டி.சி. குடியிருப்பு பகுதி அருகே பதுங்கி இருந்த 4 பேரையும் போலீசார் சுற்றிவளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் முடிச்சூர் பகுதியை சேர்ந்த தீபக் ( 23), மண்ணிவாக்கம் பகுதியை சேர்ந்த ஹேமச்சந்திரன் என்கிற சந்துரு ( 21), முடிச்சூர் பகுதியை சேர்ந்த சரண்குமார் (21), 18 வயது சிறுவன் என்பது தெரியவந்தது. விசாரணையில் முன்விரோதத்தில் வெட்டியது தெரியவந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 2 அரிவாள் மற்றும் 2 கத்தி போன்றவற்றை போலீசார் கைப்பற்றினர்.

    • பார்வதி நகரில் ஒரு டீக்கடையில் டீக்குடித்து கொண்டிருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சீதாராம்மேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹபீத் (வயது24). டூவிலர் மெக்கானிக்கான இவர் ஓசூர் பார்வதி நகரில் ஒரு டீக்கடையில் டீக்குடித்து கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு அதே பகுதியைச் சேர்ந்த பக்கபிரகாஷ் (32), பர்கத் என்கிற ஆப்பிள் (25), பாலா என்கிற பாலாஜி (26) ஆகிய 3 பேரும் சேர்ந்து ஹபித்திடம் வேண்டுமென்றே வாய் தகராறில் ஈடுபட்டு சரமாரியாக தாக்க தொடங்கினர். அப்போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ஹபித்தின் கையை வெட்டினர். மேலும், அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதேபோல் அதே பகுதியைச் சேர்ந்த மேஸ்திரி பிரகாஷ், காமட்சி, பாயாஸ், மீன்வியாபாரி முரளி ஆகிய 4 பேரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை.அவர்களிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர்.

    இதுகுறித்து ஹபித் உள்பட 4 பேரும் ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பர்கத், பக்கபிரகாஷ், பாலா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

    இதேபோன்று ஓசூர் பார்வதி நகரைச் சேர்ந்த சாந்தா என்ற பெண்ணை அதே பகுதியைச் சேர்ந்த நவாஸ் என்பவர் கத்தியை காட்டி மிரட்டினார். இதுகுறித்து சாந்தா ஓசூர் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து நவாஸை கைது செய்தனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதி பொதுமக்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • மோட்டார்சைக்கிளில் வந்த நபர் 100 கிராம் கஞ்சா வைத்து இருந்தார்.
    • திருவண்ணாமலை யை சேர்ந்த பன்னீரை கைது செய்தனர்.

    ஊத்தங்கரை,

    ஊத்தங்கரை மது விலக்கு அமல் பிரிவு போலீசார் அத்திப்பாடி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபரை சோதனை செய்தனர். அதில் அவர் 100 கிராம் கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

    இதையடுத்து கஞ்சா வைத்திருந்த திருவண்ணாமலை மாவட்ட் செங்கம் தாலுகா அயோத்திபட்டணத்தை சேர்ந்த பன்னீர் (53) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

    • மூர்த்தி (வயது53) என்பவர் பையில் 9½ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது.
    • கைது செய்யப்பட்ட மூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், அரூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அரூர் பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம்படி ஒரு நபர் கையில் பையுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர். அதில் தேனி மாவட்டம் தேவராம் சவுடம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மூர்த்தி (வயது53) என்பவர் பையில் 9½ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவர் இந்த கஞ்சாவை ஆந்திரா மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு ரெயில் மற்றும் பஸ்களில் மாறி, மாறி பயணம் செய்து கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் மூர்த்தியை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள 9½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • சட்டவிரோதமாக அனுமதியின்றி மதுபானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டத்தில் கள்ளச்சாராய விற்பனை மற்றும் கடத்தலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் வெளிப்பாளையம் நல்லியான் தோட்டத்தில் சட்டவிரோதமாக அனுமதியின்றி மது பானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று 180 வெளி மாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    இது குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் இது போன்ற கள்ளச்சாராயம் விற்பனை மற்றும் கடத்தல் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

    மேலும் இதுகுறித்து புகார் தெரிவிப்பவர்கள் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

    • சோதனையில் அறையில் இருந்து போலீசார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை,

    கோவை கே.ஜி.சாவடி போலீசார் நவக்கரை தனியார் கல்லூரி அருகே ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு மாணவர் ஒருவர் கஞ்சா போதையில் இருந்தார். அவரை போலீசார் போலீஸ் நிலையம் அழைத்து சென்று கஞ்சா எப்படி கிடைக்கிறது என்று விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் நவக்கரையில் உள்ள தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2-ம் ஆண்டு படிக்கும் கேரள மாநிலம் திருச்சூரை சேர்ந்த அர்ஜூன் (வயது 22) என்பவரிடம் திருச்சூர் பஸ் நிலையம் சென்று வினித் என்பவரின் கஞ்சாவை வாங்கி வந்து உடன் படிக்கும் நண்பர்கள் உதவியுடன் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதனையடுத்து போலீசார் மாணவர்கள் தங்கி இருந்த அறைக்கு சென்று சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அறையில் இருந்து போலீசார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    இதனை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்த மாணவர்கள் திருச்சூரை சேர்ந்த எம். அர்ஜூன் (21), எர்ணாகுள்தை சேர்ந்த வி. அர்ஜூன் (22), திருச்சூரை சேர்ந்த அக்சய் (22) ஆகியோரை கைது செய்தனர்.

    பின்னர் கைது செய்யப்பட்ட மாணவர்கள் 3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
    • போலீசார் 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள வெட்டுப்பட்டான் குட்டை மற்றும் மகாலட்சுமி நகர் பகுதிகளில், சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்வதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதனையடுத்து அந்தப் பகுதிகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.அப்போது, அந்தப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்து கொண்டிருந்த சிவகங்கை யை சேர்ந்த நரேஷ் குமார் (24),ராம்குமார்(27),ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 20 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் இதுகுறித்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • ஆயுதங்களுடன் பொதுமக்களை அச்சுறுத்தியவர் கைது செய்யப்பட்டார்.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    திருத்தங்கல் ஆலாஊரணி அண்ணாகாலனியை சேர்ந்தவர் மாரிசெல்வம் (25). இவர் சிவகாசி திருக்குளம் கண்மாய் ரோட்டில் வாள் மற்றும் கத்தியுடன் நின்றுகொண்டு அப்பகுதியில் வருவோரை அச்சுறுத்தி கொண்டிருந்தார். அந்த பகுதியில் ரோந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.

    அப்போது திருத்தங்கலை சேர்ந்த ஒருவரை கொலை செய்வதற்காக நின்றுகொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து மாரிச்செல்வத்தை கைது செய்த சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×