search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 230629"

    • மது விற்ற பெண் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • அவர்களிடமிருந்து 34 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    புதுக்கோட்டை:

    செம்பட்டிவிடுதி பகுதியில் மது விற்கப்படுவதாக வந்த தகவலையடுத்து புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் ஆலங்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்பட்டிவிடுதி அருகே மதுவிற்ற இச்சடி அண்ணா நகரை சேர்ந்த மதியழகன் (வயது 46), கீழப்பட்டி மாங்கோட்டையை சேர்ந்த மூர்த்தி மகன் சந்திரசேகரன் (33), கறம்பக்குடி அருகே பட்டத்திக்காடு பகுதியை சேர்ந்த ராமசாமி மகன் வீரய்யா (32), மேல நெம்மகோட்டையை சேர்ந்த நாராயணன் மகன் விஜயகுமார் (34), கறம்பக்குடி தாலுகா வாண்டான்விடுதிய சேர்ந்த செல்வராசு மகன் அழகர் (36) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

    மேலும் அவர்களிடமிருந்து 134 மது பாட்டில்கள், ரூ.21,280, 2 மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்து செம்பட்டிவிடுதி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதேபோல் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கதிரவன் தலைமையிலான போலீசார் ராஜாளிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு மதுவிற்ற ராஜாளிப்பட்டி பகுதியை சேர்ந்த மணி (63), முத்துலட்சுமி (49) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 34 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • டூவீலரில் புகையிலை பொருட்கள் கடத்திய வாலிபர் கைது செய்யபட்டார்
    • அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    உடையார்பாளையம், 

    அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் போலீஸ் எஸ் ஐ பூபாலன் மற்றும் போலீசார் விளாங்குடி சிவன் கோயில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சிறுவளூர் வடக்கு தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் ராஜரத்தினம்(20) விளாங்குடி அருகே டூவீலரில் சாக்குமூட்டையுடன் வந்த வரை போலீசார் தடுத்து நிறுத்தி மூட்டையை ஆய்வு செய்த போது ஹான்ஸ் 750 பாக்கெட்டுகளும்,சுமார் 13 கிலோ விமல் பாக்கும் எடுத்து வந்தது தெரியவந்தது. இது குறித்து வழக்கு பதிந்த போலீசார் ராஜரத்தினத்தை கைது செய்து அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    • கஞ்சாவை ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு ரெயில் மற்றும் பஸ்களில் மாறி மாறி பயணம் செய்து கடத்தி வந்தது தெரியவந்தது.
    • போலீசார் மூர்த்தியை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள 9½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், அரூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் வசந்தா, சப்-இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் அரூர் பஸ் நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகம்படி ஒரு நபர் கையில் பையுடன் சுற்றி திரிந்து கொண்டிருந்தார். உடனே அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.

    அதில் தேனி மாவட்டம் தேவராம் சவுடம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மூர்த்தி (வயது53) என்பவர் பையில் 9½ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. மேலும், அவர் இந்த கஞ்சாவை ஆந்திர மாநிலத்தில் இருந்து தேனி மாவட்டத்திற்கு ரெயில் மற்றும் பஸ்களில் மாறி மாறி பயணம் செய்து கடத்தி வந்தது தெரியவந்தது. உடனே போலீசார் மூர்த்தியை கைது செய்து அவரிடம் இருந்து ரூ.95 ஆயிரம் மதிப்புள்ள 9½ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கைது செய்யப்பட்ட மூர்த்தியை கோர்ட்டில் ஆஜர்படுத்தி தருமபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

    • மேலும் 2 பேர் தலைமறைவு
    • 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் அரவிந்தை சரமாரியாக தாக்கியது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிநாதபுரத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 32).

    இவர் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றினார். இந்த நிலையில் வெளிநாட்டுக்கு மண்ணுளி பாம்பு கடத்தல் வழக்கில் இவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் அரவிந்த் வீட்டில் இருந்தபோது 5 பேர் கொண்ட கும்பல் வீட்டிற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் அரவிந்தை சரமாரியாக தாக்கியது. மேலும் அரிவாளாலும் வெட்டியது.

    பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. படுகாயம் அடைந்த அரவிந்தை சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவி லில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து கன்னியாகுமரி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். டி.எஸ்.பி. ராஜா, இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சனை தொடர் பாக இந்த தாக்குதல் சம்ப வம் நடந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய 5 பேரை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் தக்கலை அப்பட்டுவிளையை சேர்ந்த எபனேசர் (19) கன்னியா குமரியை சேர்ந்த விஜி என்ற விஜயகுமார் (35) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் விசா ரணை நடத்தப்பட்டு வரு கிறது. 3 பேரையும் போலீ சார் கோர்ட்டில் ஆஜர்ப டுத்தினர். தலைமறைவாகியுள்ள 2 பேரை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.

    • காரில் காத்திருந்த சிவஞானம் முன்னிலையில் ஜானகியிடம் ரூ.30 லட்சத்தை கொடுத்துள்ளார்.
    • ஜானகி பர்தா அணிந்து ஆட்டோவில் ஏறி சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறினர்.

    ராசிபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, அறிஞர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் (வயது49) . தொழில் அதிபரான இவர் பத்திர பதிவு தொழில், ஆர்.ஓ. வாட்டர் உற்பத்தி தொழில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகிறார்.

    இவருக்கும், திருப்பூரை சேர்ந்த ஜெய், சேலத்தை சேர்ந்த தனசேகர் ஆகியோருக்கும் இடையே தொழில் நிமித்தமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் இவர்கள் 2 பேரின் மூலமாக நாமக்கல் மாவட்டம் வெப்படை பாரதி நகரை சேர்ந்த சிவஞானம் (50) என்பவருக்கு ஜெகநாதனுடன் பழக்கம் ஏற்பட்டது.

    சிவஞானம் நூல் மில் சூப்பர்வைசராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவஞானம், ஜெகன்நாதனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா மகாதேவி கிராமத்தை சேர்ந்த ஜானகி என்கிற புவனேஸ்வரி (26), 25 தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைமை பொறுப்பு வகித்து வருவதாகவும், கொரோனா காலத்தில் அடமானம் வைத்த நகைகளை ஏலம் விட இருப்பதாகவும், இந்த நகைகளை ஏலம் எடுத்து அதில் 135 பவுன் தங்க நகைகளை உங்களுக்கு குறைந்த விலையில் தருவதாகவும், அதற்கு ரூ. 30 லட்சம் கொடுக்குமாறும் கூறியுள்ளார். மேலும் ராசிபுரம் நகராட்சி அலுவலகம் அருகே நானும், ஜானகியும் காரில் தயார் நிலையில் இருப்பதாகவும், பணத்துடன் அங்கு வந்து கொடுக்குமாறும் கூறியுள்ளார்.

    அதன்படி ஜெகன்நாதன் நேற்று முன்தினம் ராசிபுரம் வந்து அங்கு காரில் காத்திருந்த சிவஞானம் முன்னிலையில் ஜானகியிடம் ரூ.30 லட்சத்தை கொடுத்துள்ளார்.

    இதையடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட ஜானகி, அருகில் உள்ள ஆர்.சி.எம்.எஸ். கூட்டுறவு வங்கியில் நகைகளை வாங்கி விட்டுவதாக கூறி பணத்துடன் சென்றார். அப்போது ஜானகி சுடிதார் அணிந்திருந்தார். ஆனால் வெகுநேரமாகிவும் அவர் திரும்பி வரவில்லை. சந்தேகம் அடைந்த ஜெகநாதன், அங்கு சென்று விசாரித்தார். அப்போது ஜானகி பர்தா அணிந்து ஆட்டோவில் ஏறி சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகன்நாதன் தன்னை நூதனமாக ஏமாற்றியுள்ளதை அறிந்து ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவஞானம், ஜானகி, உடந்தையாக இருந்த நாமக்கல் பொன்விழா நகரை சேர்ந்த சத்யா (35), சங்ககிரியை சேர்ந்த ராமச்சந்திரன் (55), அவரது மனைவி கஜலட்சுமி (43) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம், ஒரு சொகுசு கார் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்று 24 மணி நேரத்தில் இந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • 8 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    • கடை உரிமையாளரை கைது செய்தனர்.

    மேலூர்

    மதுரை மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

    அதன்படி மேலூர் பகுதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் விற்கப்படுவதாக மேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தஜோதி, கேசவன், தனிப்பிரிவு ஏட்டு தினேஷ்குமார் மற்றும் போலீசார் செக்கடி காய்கறி மார்க்கெட் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு ரவிச்சந்திரன் என்பவரது கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது. கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 28 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் ரவிச்சந்திரனை கைது செய்தனர்.

    • லாட்டரிச்சீட்டக்களை விற்ற 7 பேரை கைது செய்த போலீசார், ரூ.2,100 பறிமுதல் செய்தனர்.
    • அவரிடம் இருந்து 30 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கிருஷ்ணகிரி,

    மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரிசீட்டுக்கள் எங்கும் விற்பனை செய்யப்படுகிறதா, என போலீசார் கண்காணித்தனர். அந்த வகையில் ஓசூர், பேரிகை, சூளகிரி, ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, தேன்கனிக்கோட்டை பகுதியில் லாட்டரிச்சீட்டக்களை விற்ற 7 பேரை கைது செய்த போலீசார், ரூ.2,100 பறிமுதல் செய்தனர்.

    இதே போல ஓசூர் சிப்காட்டில் குட்கா விற்பனை செய்த திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள சென்னம்பேட்டையை சேர்ந்த முபாரக் (36) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 30 ஹான்ஸ் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

    • புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மது பாட்டில்கள் கடத்திய சகோதரிகள் கைது செய்யப்பட்டனர்.
    • போலீசார் புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை மறித்து சோதனை செய்தனர்.

    கடலூர்:

    புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் கடத்தி வந்த சகோதரிகளை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரியில் இருந்து மது பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தப்படுகிறதா? என்பது குறித்து கடலூர் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை சோதனை சாவடியில் தினம் தோறும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி இன்று அதிகாலை மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது புதுச்சேரியில் இருந்து கடலூர் நோக்கி வந்த அரசு பஸ்சை மறித்து சோதனை செய்தனர். அப்போது பஸ்சில் 2 பெண்கள் வைத்திருந்த பைகளை சோதனை செய்தபோது, அதில் மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் இருவரும் திருவண்ணாமலை மாவட்டம் சமத்துவபுரத்தை சேர்ந்த ரமேஷ் மனைவி அமுதா (வயது 50), முருகன் மனைவி பூமாதேவி (45) என்பதும், சகோதரிகள் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அமுதா, பூமாதேவி ஆகியோரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 108 மது பாட்டில்கள் மற்றும் 30 சாராய பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    • கோபமடைந்த நாக அர்ஜுன் இரும்பு கம்பியை எடுத்து ராதாகிருஷ்ணனின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது.
    • நாக அர்ஜுன் அங்கிருந்து புறப்பட்டு தென்காசிக்கு பஸ்சில் தப்பி வந்துள்ளார்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பாரதி நகர் சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமரேசன். இவரது மகன் நாக அர்ஜுன் (வயது 22).

    ஒரே அறையில்

    இவரும், திருவனந்தபுரம் தெக்குபாரா ஆனந்த பவன் ஹவுஸ் பகுதியை சேர்ந்த ராதாகிருஷ்ணன்(47) என்பவரும் கறி வெட்டும் கடையில் ஒன்றாக வேலைபார்த்து வந்ததாக கூறப்படுகிறது. ஒரே அறையில் தங்கியிருக்கும் இவர்கள் 2 நாட்களுக்கு முன்பாக மது அருந்தியபோது, வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

    தென்காசி

    இதனால் கோபமடைந்த நாக அர்ஜுன் அருகில் இருந்த இரும்பு கம்பியை எடுத்து ராதாகிருஷ்ணனின் தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் ராதாகிருஷ்ணன் மயங்கி விழுந்ததால், நாக அர்ஜுன் அங்கிருந்து புறப்பட்டு தென்காசிக்கு பஸ்சில் தப்பி வந்துள்ளார்.

    இதுகுறித்து அறிந்த கூத்தாட்டுகுளம் போலீசார் தென்காசி மற்றும் செங்கோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின்படி தென்காசி பஸ் நிலையத்தில் ரோந்து சென்ற போலீசார், அங்கு சுற்றித்திரிந்த நாக அர்ஜுனை கைது செய்து கூத்தாட்டு குளம் போலீ சாரிடம் ஒப்படைத்தனர்.

    • சுசீலா சேர்ந்தமரத்திற்கு செல்வதற்காக பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்தார்.
    • பர்சை திருடிவிட்டு தப்ப முயன்ற மூதாட்டியை சக பயணிகள் பிடித்தனர்.

    புளியங்குடி:

    புளியங்குடி பஸ் நிலையத்தில் நேற்று மதியம் சேர்ந்தமரத்திற்கு செல்வ தற்காக சுசீலா என்ற பெண் பஸ்சுக்காக காத்து நின்றார். அப்போது அவரது அருகில் வந்த மூதாட்டி ஒருவர், கண்ணி மைக்கும் நேரத்தில் சுசீலா கையில் வைத்திருந்த பையில் இருந்த பர்சை திருடிக் கொண்டு தப்பி ச்செல்ல முயன்றார்.

    அதனை அறிந்த சுசீலா கத்தி கூச்சலிடவே, சக பயணிகள் அந்த மூதாட்டி யை பிடித்தனர். தகவல் அறிந்து புளியங்குடி போலீ சார் அங்கு விரைந்து வந்து மூதாட்டியிடம் விசாரணை நடத்தியதில், அவர் தூத்துக்குடி மாவட்டம் கழுகு மலையை சேர்ந்த காஜா மைதீன் என்பவரது மனைவி பாத்திமுத்து(வயது 70) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து பர்சை மீட்டனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் நெல்லை கொக்கிர குளம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    • குருசாமியிடம் அந்தோணி ராஜ் உள்ளிட்டோர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • போத்திராஜ், ராஜ் ஆகியோர் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் காந்தி நகர் பகுதியை சேர்ந்தவர் குருசாமி (வயது 65). இவர் கடந்த 4 ஆண்களுக்கு முன்பு நாட்டாமையாக இருந்ததாகவும், அதற்கு முன்பு சுப்பையா என்பவர் நாட்டாமையாக இருந்த தாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் மாத கூட்டம் நடக்கும்போது குருசாமி, சுப்பையாவிடம் பொதுக்க ணக்கில் பற்றாக்குறையாக இருந்த பணத்தை கட்ட வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதில் ஆத்திரம் அடைந்த அந்தோணி ராஜ்(37), முத்துராஜ்(32), குமார்(44), சுப்பையா, செந்தில்குமார்(47) ஆகியோர் குருசாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவரை தலையில் கம்பால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இதேபோல் குமார், ஊர் பொது வீட்டில் வாடகைக்கு இருந்து வருகின்றார். மாதக் கூட்டத்தில் வாடகை கட்ட வந்தபோது அங்கிருந்த குமாரின் தம்பி அந்தோணி ராஜ் என்பவரிடம் குருசாமி வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. அதனை தடுக்க வந்த போத்திராஜ்(31), ராஜ் ஆகியோர் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் குருசாமி மற்றும் குமார் அளித்த புகாரின் பேரில் 2 வழக்குகள் பதிவு செய்த சங்கரன்கோவில் டவுண் போலீசார் அந்தோணி ராஜ், போத்திராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் குருசாமி, முத்துராஜ், குமார், சுப்பையா, செந்தில்குமார், ராஜ் ஆகியோரை வலைவீசி தேடுகின்றனர்.

    • கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நந்தனத்தை சேர்ந்த பிரபீர் ஷேக் என்பவர் திருடியதாக புகார் கூறப்பட்டுள்ளது.
    • இருவரை மாம்பலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சென்னை:

    சென்னை தி.நகர் சவுத் உஸ்மான் சாலையில் உள்ள பிரபல நகைக்கடையில் 2 கிலோ 46 கிராம் மதிப்பிலான தங்க நகைகளை கடந்த 15 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் நந்தனத்தை சேர்ந்த பிரபீர் ஷேக் என்பவர் திருடியதாக புகார் கூறப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் மாதம் 50 சவரன் நகைகளை கடையில் வேலை செய்த பிரபீர் ஷேக் மற்றும் அவரது நண்பர் பாலமுருகன் ஆகிய இருவர் திருடியதாக கொடுத்த புகாரில் அப்போதே பிரபீர் ஷேக், பாலமுருகன் ஆகிய இருவரை மாம்பலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்நிலையில் சிறையில் இருந்து வெளியே வந்த பிரபீர் ஷேக் மீது மீண்டும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    கடந்த மார்ச் மாதத்தில் நாங்கள் தவறாக புகார் அளித்துவிட்டதாகவும் ஆனால் தற்போது 2 கிலோ 46 கிராம் தங்க நகைகள் மோசடி செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் நகை கடை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×