search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231320"

    • வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார பகுதிகளில் மொத்தம் 128 இடங்களில் தடுப்பூசி போடப்பட்டது.
    • வெள்ளகோவிலில் 2 ஆயிரத்து 340 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், அங்கன்வாடி மையங்களில் மொத்தம் 128 இடங்களில் 12 முதல் 14 வயது வரை உள்ள சிறார்களுக்கு, 2ம் தவணை கொரோனா தடுப்பு ஊசியும், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் மற்றும் 2ம் தவணை கொரோனா தடுப்பூசியும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ம் தவணை பூஸ்டர் தடுப்பூசி போடப்பட்டது.

    நேற்று முன்தினம் வரை வெள்ளகோவில் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் பள்ளி சிறார்களுக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 6 ஆயிரத்து266 நபர்களுக்கும், 2ம் தவணை கொரோனா தடுப்பூசி 5 ஆயிரத்து 41 நபர்களுக்கும், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி 75 ஆயிரத்து 166 நபர்களுக்கும், 2ம் தவணை கொரோனா தடுப்பூசி 64 ஆயிரத்து 319 நபர்களுக்கும், 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு 3ம் தவணை பூஸ்டர் தடுப்பூசி 1 ஆயிரத்து 209 நபர்களுக்கு போடப்பட்டுள்ளது.

    வெள்ளகோவில் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் ராஜலட்சுமி, மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் மற்றும் மருத்துவ குழுவினர் மூலம் 2 ஆயிரத்து 340 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

    • தமிழகத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 94.68 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 85.47 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.
    • உலகில் பல்வேறு நாடுகளில் பிஏ4, பிஏ5 என உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் இன்று 1 லட்சம் இடங்களில் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. தஞ்சையில் இந்த முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாவட்டத்தில் இன்று 3471 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    தஞ்சை மாவட்டத்தில் முதல் தவணை தடுப்பூசி 93.10 சதவீதமும், 2-ம் தவணை தடுப்பூசி 87.10 சதவீதமும் போடப்பட்டுள்ளது. 12-14 வயது மற்றும் 15-17 வயது உடையவர்களுக்கு 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி தன்னிறைவு பெற்ற மாவட்டமாக விளங்குகிறது.

    தற்போது மாவட்டத்தில் 143 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை முதல் தவணை தடுப்பூசி 94.68 சதவீதமும், இரண்டாம் தவணை தடுப்பூசி 85.47 சதவீதம் பேருக்கும் போடப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 95 சதவீதம் பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மீதி 5 சதவீதம் பேர் தான் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறுகின்றனர். தமிழகத்தில் தற்போது 21513 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி பயன்பாட்டால் உயிர் இழப்பு இல்லை என்பது ஆறுதலான விஷயம்.

    தமிழகத்தில் இதுவரை 11 கோடியே 43 லட்சத்து 23 ஆயிரத்து 144 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தனியார் ஆஸ்பத்திரிகளிலும் விரைவில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்கப்படும்.

    உலகில் பல்வேறு நாடுகளில் பிஏ4, பிஏ5 என உருமாறிய கொரோனா பாதிப்பு உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களில் உருமாறிய பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் அவற்றால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் 40 சதவீதத்திற்கும் மேல் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நிலை வந்தால் மட்டுமே கடும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. தற்போது 5 சதவீதம் பேர் மட்டுமே ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை வருவதால் ஊரடங்கு போட வாய்ப்பு இல்லை.

    சுகாதார செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 4308 காலி பணியிடங்கள் செப்டம்பர் இறுதிக்குள் நிரப்பப்படும்.

    புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் காலரா பாதிப்பு இருந்தது தெரிய வந்தவுடன் அதனை ஒட்டி உள்ள திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. இதன் காரணமாக காலரா பாதிப்பு வரவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி, மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்,

    எம்.எல்.ஏ.க்கள் துரை சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், மாநகராட்சி மேயர் சண்ராமநாதன், துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மருத்துவக் கல்லூரி முதல்வர் ரவிக்குமார், சுகாதாரத்துறை துணை இயக்குனர் நமச்சிவாயம், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

    • 3,400 மையங்களில் கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    • பொதுமக்களின் வருகையை பொறுத்து இன்று இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் .

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் தற்போது கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. எனவே நோய் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் வாயிலாக தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் இன்று 31-வது மெகா தடுப்பு ஊசி முகாம் காலை 7 மணிக்கு தொடங்கியது. மதுரையில் உள்ள அனைத்து வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் முகாம் நடந்து வருகிறது. இதில் பொதுமக்கள் வந்து தடுப்பூசி போட்டு செல்கின்றனர்.

    மதுரை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்களில் முதல் தவணை, 2-வது தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி ஆகியவை செலுத்தப்பட்டு வருகிறது.

    மதுரை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 2,415 மையங்களில் தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது. இங்கு 1,055 சுகாதார ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாநகர பகுதிகளில் உள்ள 1,000 மையங்களில், 600 ஊழியர்கள் தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 3,415 மையங்களில், 1,655 பணி யாளர்கள் மூலம் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடந்து வருகிறது.

    இது தொடர்பாக சுகாதார அதிகாரிகள் கூறுகையில், "பொதுமக்களின் வருகையை பொறுத்து இன்று இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தனர்.

    மதுரை மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி செலுத்த 4 லட்சத்து 1707 பேர் தகுதி உடையவர்கள் ஆவர். இதில் 1 லட்சத்து 65 ஆயிரத்து 740 பேர் மாவட்டத்திலும், 2 லட்சத்து 35 ஆயிரத்து 967 பேர் மாநகர பகுதிகளிலும் வசித்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் 1 லட்சத்து 90 ஆயிரத்து 859 பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளனர். அவர்கள் பூஸ்டர் ஊசி போட தகுதியானவர்களாக உள்ளனர்.

    இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் கூறுகையில், "மதுரை மாவட்டத்தில் இன்று நடந்து வரும் 31-வது சிறப்பு தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் அனைவரும் தவறாமல் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா தொற்றில் இருந்து தங்களை பாது காத்துக் கொள்ள, 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், கூட்டமான இடங்களில் சமூக இடைவேளி கடைபிடித்தல், முககவசம் அணிதல் மற்றும் பொது இடங்களுக்கு சென்று வீடு திரும்பிய பின் முறையாக கைகழுவுதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றார்.

    • தடுப்பூசி முகாம்களில் காலை 7 மணி முதல் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக வந்திருந்தனர்.
    • நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 67,989 போ் முதல் தவணை தடுப்பூசியும், 5 லட்சத்து 68,896 போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா்

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைெபற்றது.

    மாவட்டத்தில் 1,439 நிலையான கொரோனா தடுப்பூசி முகாம்கள் மற்றும் 60 நடமாடும் தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது.

    இந்த முகாம்களில் காலை 7 மணி முதல் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதற்காக வந்திருந்தனர்.அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர். காலை 7 மணிக்கு தொடங்கிய முகாம் இரவு 7 மணி வரை நடக்கிறது.

    இன்று நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் பணியில் 5,996 பணியாளா்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த முகாமில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. குறிப்பாக நீரிழிவு, ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தமான நோயுள்ளவா்கள், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம் சம்பந்தமான நோயுள்ளவா்கள், புற்றுநோய் சிகிச்சை பெறுபவா்கள் என அனைவரும் இன்று நடந்த முகாமில் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    நீலகிரி மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 67,989 போ் முதல் தவணை தடுப்பூசியும், 5 லட்சத்து 68,896 போ் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா்.நகராட்சி, பேரூராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் தங்களது பணியாளா்களைக் கொண்டு வீடு,வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.

    • கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

    விருதுநகர்

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்திருந்த நிலையில் தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதையொட்டிநாளை (10-ந் தேதி) சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் அன்று சிறப்பு முகாம்கள்நடத்தப்பட்டு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதர நாட்களிலும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

    இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளா தவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் 3-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவரும் தவறாமல் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

    • விருதுநகரில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நாளை நடக்கிறது.
    • காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

    விருதுநகர்

    தமிழ்நாட்டில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்திருந்த நிலையில் தற்போது தினசரி தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து சுகாதாரத் துறையின் மூலம் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

    இதையொட்டிநாளை (10-ந் தேதி) சிறப்பு தடுப்பூசி முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் அன்று சிறப்பு முகாம்கள்நடத்தப்பட்டு பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதர நாட்களிலும் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

    இதுவரை முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்கள் மற்றும் 3-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் முன்களப்பணியாளர்கள் அனைவரும் தவறாமல் நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

    இந்த தகவலை கலெக்டர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார். 

    • 3400 மையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் 10-ந் தேதி நடக்கிறது
    • றப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.

    மதுரை

    மதுரை மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருகிறது. நோய் பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

    மதுரை மாவட்டத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை (10-ந்தேதி) 31-வது மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. இது மதுரையில் உள்ள வாக்குசாவடி மையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார மையங்கள், நகர்புற ஆரம்ப சுகாதார மையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் நடக்கிறது. இங்கு முதல் தவணை, 2-வது தவணை மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்படுகிறது.

    மதுரை மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 2415 மையங்களில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. இங்கு 1055 ஊழியர்கள் பணி அமர்த்தப்பட உள்ளனர்.மாநகர பகுதிகளில் உள்ள 1000 மையங்களில், 600 ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 3415 மையங்களில், 1655 பணியாளர்கள் மூலம் சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.

    மதுரை மாவட்டத்தில் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த 4 லட்சத்து 1707 தகுதி உடையவர்கள். இதில் மாவட்ட அளவில் ஒரு லட்சத்து 65 ஆயிரத்து 740 பேரும், மாநகர பகுதிகளில் 2 லட்சத்து 35 ஆயிரத்து 967 பேரும் வசித்து வருகின்றனர்.

    மதுரை மாவட்டத்தில் 1லட்சத்து 90 ஆயிரத்து 859 பேர் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்தி, பூஸ்டர் ஊசி போட தகுதியானவர்களாக உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் 10-ந் தேதி நடைபெற உள்ள சிறப்பு தடுப்பூசி முகாமில் பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். கொரோனா நோய்த் தொற்றில் இருந்து பாதுகாத்துக் கொள்ள, 2 தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல், கூட்டமான இடங்களில் சமூக இடைவெளி கடைபிடித்தல், முககவசம் அணிதல் மற்றும் பொது இடங்களுக்கு சென்று வீடு திரும்பிய பின் முறையாக கைகழுவுதல் போன்ற நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்று மதுரை மாவட்ட கலெக்டர் அனீஸ் சேகர் கேட்டுக்கொண்டு உள்ளார்.

    • வருகிற 10-ந் தேதி தஞ்சை மாநகரில் 100 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது.
    • மாநகர பகுதியில் இதுவரை 2,867 பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடாமல் இருக்கின்றனர். 25 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி கூட்ட அரங்கில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

    இதற்கு மேயர் சண்.ராமநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

    மாநகர பகுதிகளில் இதுவரை 32 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். காய்ச்சல் யாருக்காவது இருந்தால் அவர்களை பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்த வேண்டும். மாநகர பகுதியில் இதுவரை 2,867 பேர் முதல் தவணை தடுப்பூசி கூட போடாமல் இருக்கின்றனர். 25 ஆயிரம் பேர் 2-வது தவணை தடுப்பூசி போடவில்லை.

    இவர்களின் வசதிக்காக வருகிற 10-ந் தேதி தஞ்சை மாநகரில் 100 இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடக்கிறது. 60 வயதிற்கு மேற்பட்டோர் பூஸ்டர் தடுப்பூசி போட்டு கொள்ள வேண்டும். 10-ந் தேதி நடைபெறும் முகாமில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் பொய்யா–மொழி, மெய்யநாதன் ஆகியோர் கலந்து கொண்டு ஆய்வு செய்கின்றனர். மாநகர பகுதியில் வசிக்கும் மக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து கொள்ள வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகர் நல அலுவலர் நமச்சிவாயம் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • தடுப்பூசி செலுத்த பொதுமக்களுக்கு கலெக்டர் வேண்டுகோள்
    • இரணியல் 10-ம் வகுப்பு மாணவிக்கு கொரோனா

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் கொேரானா பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

    இந்த மாத தொடக்கத்தில் பாதிப்பு குறைவாக இருந்த நிலையில் அதன் பிறகு பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. குறிப்பாக திருவட்டார், முஞ்சிறை ஒன்றியங்களில் அதிகமா னோர் பாதிப்புக்குள்ளாகி வந்தனர். இதைத்தொடர்ந்து நாகர்கோவில், தக்கலை பகுதி களிலும் பரவ தொடங்கியது. கொரோனா அதிகரிக்க தொடங்கி தையடுத்து சோதனையை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் நட வடிக்கை மேற்கொண்டனர்.

    மாவட்டம் முழுவதும் காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளில் கொரோனா சோதனை நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 851 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில் 60 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அகஸ்தீஸ்வரம், தோவாளை, ராஜாக்கமங்கலம், கிள்ளியூர் தாலு காக்களில் தலா 4 பேரும், குருந்தன்கோடு, திருவட்டார் தாலுகாக்களில் தலா 7 பேரும், மேல்புறம், நாகர்கோவில் மாநகர பகுதியில் தலா 6 பேரும், தக்கலை தாலுகா வில் 2 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    முஞ்சிறை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் நேற்று ஒரே நாளில் 15 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. திருச்சியில் இருந்து வந்த ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது. பாதிக்கப்பட்ட 60 பேரில் 22 பேர் ஆண்கள், 38 பேர் பெண்கள் ஆவார்கள். இதில் 7 பேர் குழந்தைகள் ஆவார்கள்.

    கடந்த 21 நாட்களில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை

    400-ஐ நெருங்கி வருகிறது. கொரோனா வேகமாக பரவி வருவதை அடுத்து தடுப்பூசி செலுத்தாத பொதுமக்கள் அந்தந்த பகுதியில் உள்ள தடுப்பூசி மையங்களுக்கு சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு சுகாதாரத் துறை அதிகாரிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.

    நாளை (சனிக்கிழமை)அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக் மற்றும் அரசு ஆஸ்பத்திரிகளில் தடுப்பூசி முகாம் நடக்கிறது. எனவே முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தி 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருப்பவர்களும் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் இருப்ப வர்களும் உடனடியாக தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு கலெக்டர் அரவிந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மேலும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தி பூஸ்டர் தடுப்பூசி செலுத்த தகுதியானயவர்களும் தடுப்பூசி செலுத்தி கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து பள்ளிகளிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

    காய்ச்சல் பாதிப்புடன் வரும் குழந்தைகளை கண்காணித்து சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். பள்ளிகளில் காய்ச்சல் பாதிப்பு அறிகுறிகளுடன் மாணவர்கள் வந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு கல்வித்துறை அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    இரணியல் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு கடந்த சில நாட்களாக சளி, இருமல் இருந்து வந்தது.

    அந்த மாணவிக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவி, வீட்டு தனிமை யில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    • மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.
    • சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், செவிலியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் அருகே சாலைபுதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் ஆசீர்வாதபுரம் டிஎன்டிடிஏ குருகால்பேரி மேல்நிலைப்பள்ளி, அம்பலச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி,

    பழனியப்பபுரம் டிஎன்டிடிஏ நடுநிலைப்பள்ளியில் 12 முதல் 14 வயது வரையிலான மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நடைபெற்றது.

    இதில் சுகாதார ஆய்வாளர் ஜேசுராஜ், செவிலியர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தினர். இதில் 15 மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    • தடுப்பூசி போடும் பணியை கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
    • தடுப்பூசி சிறப்பு முகாமில் சுமாா் 11,000 பேருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகளுடன், பூஸ்டா் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஊட்டியில் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக ெகாரோனா நோய்த் தொற்று குறைந்திருந்த நிலையில், தற்போது நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது.மாவட்டத்திலுள்ள பல்வேறு மருத்துவமனைகளில் தற்போது 14 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

    இந்நிலையில், மாவட்டத்தில் நேற்று நடத்தப்பட்ட ெகாரோனா தடுப்பூசி சிறப்பு முகாமில் சுமாா் 11,000 பேருக்கு முதல் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசிகளுடன், பூஸ்டா் தடுப்பூசிகளும் செலுத்தப்பட்டன.

    இதில், ஊட்டியில் ரோஸ்மவுண்ட் பகுதியில் வீடு,வீடாகச் சென்றும் தடுப்பூசி செலுத்தப்பட்டன. இப்பணியை மாவட்ட கலெக்டர் அம்ரித் ஆய்வு செய்தாா்.இதேபோல் கோத்தகிரி, கீழ்கோத்தகிரி, சோலூர் மட்டம், அரவேணு, ஜக்கனாரை, தவிட்டு மேடு, கெனவுக்கரை, குஞ்சப்பனை, கட்டபெட்டு போன்ற முக்கியமான பகுதிகளிலும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    அதுமட்டுமின்றி அனைத்து கிராமப்புறப் பகுதிகளிலும் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மக்களுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது.

    • ஈரோட்டில் நடந்த மெகா முகாமில் 19 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது சுகாதார துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
    • 1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இதற்காக மாவட்டம் முழுவதும் 4260 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மக்கள் நலனை முதன்மையாகக் கொண்டு மக்களை தேடி மருத்துவம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட மாணவர்கள், 18 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்கள் அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை, இரு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டே முன் களப்பணியாளர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிறது.

    இதன்படி ஈரோடு மாவட்டத்தில் நேற்று அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையங்கள் மற்றும் பள்ளிகள் என மொத்தம் 3, 194 மையங்களில் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை தடுப்பூசி முகாம் நடந்தது.

    இதுபோல் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான ஈரோடு பஸ் நிலையம், ரெயில் நிலையம் உட்பட பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இரண்டாம் தடுப்பூசி போடாதவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இந்த தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    1.50 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் தொடங்கின. இதற்காக மாவட்டம் முழுவதும் 4260 ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதற்காக 66 வாகனங்களும் பயன்படுத்தப்பட்டன. இருந்தாலும் ஒரு சில மையங்கள் தவிர அனைத்து மையங்களில் மக்கள் கூட்டம் குறைவாக காணப்பட்டது. தடுப்பூசி போட மக்கள் ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக இரண்டாம் தடுப்பூசி போடவேண்டியவர்களில் பெரும்பாலானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டவில்லை.

    இதேபோல் பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு மக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர். ஒரு சிலர் மட்டுமே ஆர்வத்துடன் வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். நேற்று நடந்த மெகா தடுப்பூசி முகாமில் வரும் 19 ஆயிரத்து 59 பேர் மட்டுமே தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. எனவே இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று தவறாமல் செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். 

    ×