search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சமூகவலைதளம்"

    • டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார்.
    • முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது.

    திருப்பதி, மே.18-

    ஆந்திர மாநிலம் விஜயவாடா அய்யப்ப நகரை சேர்ந்தவர் சாய் (வயது 6) கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மின்சாரம் தாக்கி சிறுவன் மயங்கி விழுந்தான்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுவனை தோளில் தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடிக்கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மகப்பேறு பெண் டாக்டர் நன்னப்பனேனி ரவளி என்பவர் வந்தார்.

    அவர் பெற்றோர் குழந்தைகளை தோளில் சுமந்து கொண்டு பதறியடித்து ஓடுவதை கண்டு திடுக்கிட்டு என்ன நடந்தது என்று கேட்டார். பெற்றோர் நடந்த விஷயத்தை கூறினர்.

    உடனடியாக டாக்டர் சிறுவனை பரிசோதித்தார். அப்போது இதயத் துடிப்பு நின்றிருந்தது.

     சாலையிலேயே படுக்க வைத்து அதன் பிறகு சி.பி.ஆர். என அழைக்கப்படும் முதலுதவி செய்ய ஆரம்பித்தார். ஒருபுறம் டாக்டர் ரவளி சிறுவனின் மார்பில் கையை வைத்து அழுத்தினார். அங்கிருந்து மற்றொரு நபரிடம் வாயில் காற்று வீசுமாறு கூறினார்.

    அவ்வாறு 7 நிமிடங்களுக்கு மேல் முதலுதவி சிகிச்சைக்கு பிறகு சிறுவன் உடலில் அசைவு ஏற்பட்டது. உடனடியாக சிறுவனை பைக்கில் தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனைக்கு சென்றதும் சிகிச்சைக்கு பின் சிறுவன் பூரண குணமடைந்தான்.

    சாலையில் வைத்து சிறுவனுக்கு டாக்டர் சிகிச்சை அளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதற்கு பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.

    இது குறித்து டாக்டர் ரவளி கூறுகையில்:-

    நான் மூத்த டாக்டர் ஒருவரை வீட்டில் இறக்கிவிட்டு மருத்துவமனைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தேன்.

    அப்போது சிறுவனை அவருடைய தந்தை கண்ணீர் விட்டு அழுதபடி தூக்கி சென்ற காட்சியை பார்த்தேன். உடனே வாகனத்தை நிறுத்திவிட்டு அவரிடம் நடந்ததை கேட்டறிந்தேன்.

    சிறுவனை பரிசோதித்ததில் அவருக்கு சிபிஆர் முதலுதவி அவசியம் என்பதை உணர்ந்து முயற்சி செய்தேன். நல்ல பலன் கிடைத்தது.

    சிறுவனின் உயிரை காப்பாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. சிபிஆர் முதலுதவி செய்வதை அனைவரும் கற்றுக் கொண்டால் பல விலை மதிப்பு மிக்க உயிர்களை காப்பாற்றி விடலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • போக்சோ வழக்கில் தொடர்புள்ள 16 வயது குற்றவாளியிடம், இன்ஸ்பெக்டர் விசாரணை செய்து கொண்டிருந்தார்.
    • ஒருமையில் தாறுமாறாக பேசியதாக கூறப்படுகிறது.

    தாராபுரம் :

    தாராபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில், கடந்த மே 6 ந்தேதி போக்சோ வழக்கில் தொடர்புள்ள 16 வயது குற்றவாளியிடம், இன்ஸ்பெக்டர் செல்லம் விசாரணை செய்து கொண்டிருந்தார். அப்போது, தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த கொளத்துப்பாளையம் பேரூர் தி.மு.க. செயலாளர் மீசை துரை, குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்ய வேண்டாம் என இன்ஸ்பெக்டர் செல்லத்திடம் கூறியுள்ளார். இதற்கு அவர் மறுப்பு தெரிவித்த போது, ஒருமையில் தாறுமாறாக பேசியதாக கூறப்படுகிறது.இதனால் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் செல்லத்துக்கும், துரைக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில், துரை மட்டுமின்றி, அவரது ஆதரவாளர்களும், இன்ஸ்பெக்டர் செல்லத்தை தரக்குறைவாக திட்டியதாக தெரிகிறது.

    இந்த சம்பவங்கள் அடங்கிய வீடியோ வாட்ஸ் ஆப், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • பங்குத்தந்தை ஒரு பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
    • தன்னை சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மிரட்டியதாக குறிப்பிட்டு இருந்தார்.

    நாகர்கோவில் :

    குமரி மேற்கு மாவட்டத்தில் உள்ள ஒரு தேவாலயத்தில் பங்குத் தந்தையாக 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் பணியாற்றி வருகிறார்.

    இவர் சில நாட்களுக்கு முன்பு தேவாலயம் உள்ள பகுதியில் நின்ற போது, அங்கு ஓரு கார் வந்தது. அந்த காரில் இருந்து இறங்கிய கும்பல் அவரை சரமாரியாக தாக்கியது.

    பின்னர் அவர் வைத்திருந்த லேப்-டாப் மற்றும் மொபைலை அந்தக் கும்பல் பறித்துச் சென்றது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்த சிலர் தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட நிலையில் இது பற்றி புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை.

    இந்த நிலையில் தற்போது தாக்குதலுக்கு உள்ளான பங்குத்தந்தை ஒரு பெண்ணுடன் இருக்கும் ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடி யோக்களில் பெண்ணுடன் அவர் டிக்-டாக் பாணியில் பாடல் பாடுவது, முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்று உள்ளன.

    இந்த வீடியோக்கள் வேகமாக பரவி மக்களிடம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைப் பார்த்த பலரும் பங்குத் தந்தை மீது ஏற்கனவே பல புகார்கள் இருப்பதாகவும் குற்றம் சாட்டினர். தேவாலயம் வரும் பெண்களிடம் அவர் தகாத முறையில் பேசியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளன.

    சமூகவலைதளங்களில் வெளியான வீடியோக்கள், பங்குந்தந்தையின் லேப்டாப் மற்றும் மொபைலில் பதிவு செய்யப்பட்டவையாக இருக்கலாம் என்றும், அதனை பறித்துச் சென்றவர்கள் இந்த வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

    இந்த சூழலில் சம்பந்த ப்பட்ட பாதிரியாரின் தந்தை சில நாட்களுக்கு முன்பு கொல்லங்கோடு போலீசில் ஒரு புகார் கொடுத்தார். அதில் தன்னை சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் மிரட்டியதாக குறிப்பிட்டு இருந்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த மாணவரை கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மூதாட்டி உயிர் பிழைக்க காரணமான பஸ் டிரைவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு
    • அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்

    நாகர்கோவில்:


    மரணம் எப்போது வரும் என்பது யாருக்கும் தெரியாது. மாடியில் இருந்து விழுந்து உயிர் பிழைத்தவரும் உண்டு. புல் தடுக்கி விழுந்து இறந்தவரும் உண்டு என்பது பழமொழி. அதனை நிரூபிக்கும் வகையில் பஸ் சக்கரத்தின் கீழ் விழுந்தும் மூதாட்டி ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் நடந்து உள்ளது. மூதாட்டி உயிர் பிழைக்க காரணமான பஸ் டிரைவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவிக்கும் சம்பவம் மூலம் இது வெளி வந்துள்ளது.


    குமரி மாவட்டம் தாழக்குடியைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தினமும் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்று விட்டு வீடு திரும்புவது வழக்கம். சம்பவத்தன்று ஆடுகளை வீடுகளுக்கு அழைத்துக் கொண்டு சாலையோரமாக வந்த மூதாட்டி, வயோதிகம் காரணமாக தடுமாறி கீழே விழுந்தார்.

    அந்த நேரத்தில் அங்கு அரசு டவுன் பஸ் வந்தது. அந்த பஸ்சின் முன் சக்கரத்தின் அருகே மூதாட்டி விழுந்த போதும் அதிர்ஷ்ட வசமாக டிரைவரின் சாமர்த்தியத்தால் உயிர் தப்பினார். ஆம். சரியான நேரத்தில் பஸ்சை டிரைவர் நிறுத்தியதால் மயிரிழையில் மூதாட்டி உயிர் தப்பினார்.

    இந்த வீடியோ வெளியானதில் இருந்து பஸ் டிரைவருக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.

    ×