search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "படகு"

    • 10 பேர் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்
    • இரும்பு கம்பி உடைந்து விழும் போது அந்த கம்பி மீனவர் ஜெபியின் தலை மீது விழுந்ததால் அவரது மண்டை உடைந்தது

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி ஹைகிரவுண்ட் பகுதியை சேர்ந்தவர் சகாய அந்தோணி. இவருக்கு சொந்தமான விசைப்படகில் கன்னியாகுமரி லூர்து மாதா தெருவைச் சேர்ந்த ஜெபி (வயது 18) என்பவர் உள்பட 10 பேர் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

    இவர்கள் சுமார் 33 நாட்டிங்கல் மைல் தொலைவில் நடுக்கடலில் மீன்பிடிப்பதற்காக வலையை விரித்தனர். அப்போது விசைப்படகில் உள்ள வலையை இழுக்க பயன்படுத்தும் கம்பியில் இருந்த இரும்பு கம்பி உடைந்து கீழே விழுந்தது.

    அந்த கம்பி மீனவர் ஜெபியின் தலை மீது விழுந்ததால் அவரது மண்டை உடைந்தது. உடனே அவரை அதே விசைப்படகில் கரைக்கு அழைத்து வந்தனர். சின்னமுட்டம் மீன்பிடித் துறைமுகத்துக்கு கொண்டு வந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 42 கடற்கரை கிராமங்களிலும் தீவிர கண்காணிப்பு
    • 3 அதி நவீன ரோந்து படகுமூலம் கடலுக்குள் சென்று தீவிர கண்காணிப்பு

    கன்னியாகுமரி :

    கடல் வழியாக தீவிரவாதி கள் ஊடுருவலை தடுக்க தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் உள்ளூர் சட்டம்-ஒழுங்கு போலீசாரும் இணைந்து சாகர்கவாச் என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை இன்றும் நாளையும் நடத்துகிறார்கள்.

    அதன்படி கன்னியாகுமரி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடல் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சியை இன்று காலை 8 மணிக்கு தொடங்கினார்கள். இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நாளை மாலை வரை தொடர்ந்து நடக்கிறது. கன்னியாகுமரி கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன் தலைமையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் 3 அதி நவீன ரோந்து படகுமூலம் கடலுக்குள் சென்று தீவிரவாதிகள் ஊடுருவுகிறார்களா? என்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இன்ஸ்பெக்டர் நவீன் தலைமை யிலான ஒரு குழுவினர் இந்தியப் பெருங்கடல் அமைந்து உள்ள கன்னியாகுமரி கடல் பகுதியிலும் சப்-இன்ஸ்பெக்டர் நம்பியார் தலைமையில் ஒரு குழுவினர் வங்க கடல் அமைந்துஉள்ள கன்னியாகுமரி-உவரி இடையே உள்ள கடல் பகுதியிலும் சப்- இன்ஸ்பெக்டர் மணிகண் டன் தலைமையில் மற்றொரு குழுவினர் அரபிக்கடல் அமைந்து உள்ள கன்னியாகுமரி முதல் தேங்காய்ப்பட்டனம் வரை உள்ள கடல் பகுதியிலும் அதிநவீன ரோந்து படகில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இது தவிர கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை யிலான 72 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடற்கரைப் பகுதிகளில் வாகனங்களில் சென்று தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். குமரி மாவட்டத்தில் உள்ள 42 கடற்கரை கிராமங்களிலும் கடலோர பாதுகாப்பு போலீசாரும் உள்ளூர் போலீசாரும் இணைந்து இரவு பகலாக 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    கடற்கரை மணலில் ஓடும் அதிநவீன ரோந்து ஜீப் மூலம் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கடற்கரை பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மேலும் மோட்டார் சைக்கிளிலும் போலீசார் தொடர்ந்து கண்காணித்து வரு கிறார்கள். சின்னமுட்டம், பஞ்சலிங்கபுரம், மகாதான புரம், தேங்காய்பட்டணம், கூடங்குளம் உள்பட 10 இடங்களில் உள்ள கடலோர பாதுகாப்பு குழும போலீசுக்கு சொந்தமான சோதனை சாவடிகளில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாறு வேடங்களிலும் கடற்கரை பகுதிகளில் போலீசார் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். கன்னியாகுமரி பகுதியில் உள்ள லாட்ஜூகளில் போலீ சார் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள்.

    • ஏர்வாடி கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை படகில் கடத்தல்காரர்கள் வந்தார்களா? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • இந்த படகில் அகதிகளோஅல்லது வேறு நபர்களோ வரவில்லை. படகில் என்ஜின்கூட கிடையாது என்றனர்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள சின்ன ஏர்வாடி கடற்கரையில் இலங்கையை சேர்ந்த பைபர் படகு நேற்று மாலை கரை ஒதுங்கியது.

    அந்த படகில் கழுகு உருவம் பொறித்த அடையாளம் உள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து மன்னார் வளைகுடா கடற்கரை பகுதிகளில் இலங்கை தமிழர்கள் தமிழகத்தை நோக்கி கடல் மார்க்கமாக வருகின்றனர்.

    அதேபோல் இந்த படகிலும் அகதிகள் தப்பி வந்தார்களா? அல்லது தங்க கடத்தல்காரர்கள் வந்தார்களா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. படகில் என்ஜின் இல்லாமல் இருப்பதால் படகில் வந்த கடத்தல்காரர்கள் என்ஜினுடன் தப்பி சென்று இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    படகு கரை ஒதுங்கிய பிறகு மரைன் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டும் அவர்கள் தாமதமாக வந்து விசாரணை நடத்தியதாக அந்த பகுதி மீனவர்கள் கூறினர்.

    இதுகுறித்து மரைன் போலீஸ் தரப்பில் கூறுகையில், நேற்று கடலில் படகு மிதந்து வந்துள்ளது. இதை கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் பார்த்துள்ளனர். இந்த படகில் அகதிகளோஅல்லது வேறு நபர்களோ வரவில்லை. படகில் என்ஜின்கூட கிடையாது என்றனர்.

    ஏர்வாடி தர்காவில் தற்போது சந்தனக்கூடு திருவிழா நடந்து வரும் சூழ்நிலையில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.இதை சாதகமாக்கிய கடத்தல்காரர்கள் பக்தர்கள் போர்வையில் இந்த பகுதியில் ஊடுருவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

    கடலோரப் பகுதிகளில் கூடுதல் காவல் படையினரை நியமித்து இரவு நேரங்களில் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • பல்வேறு துறை அலுவலர்களுடன் மனோதங்கராஜ் ஆலோசனை
    • விவேகானந்தர் மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இணைப்பு பாலம்

    நாகர்கோவில்:


    கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகையில் அமைச்சர்மனோ தங்கராஜ் சுற்றுலா மேம்பாடு குறித்து மாவட்ட சுற்றுலாத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, தோட்டக்கலைத்துறை உட்பட பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.


    தொடர்ந்து திரிவேணி சங்கம கடற்கரை பகுதி, காந்தி நினைவு மண்டபம் , காமராஜர் மணிமண்டபம் ஆகிய பகுதிகளில் உள்ள பூங்கா , கடற்கரை சாலையில் உள்ள காட்சி கோபுர பகுதி மற்றும் கடற்கரை பகுதிகள், சன்செட் பாயிண்ட் பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் அவர் நிருபர் களிடம் கூறியதாவது:-


    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கி ணங்க கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு அடிப்படை வசதிகள் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. விவேகானந்தர் மண்டபத்திற்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இணைப்பு பாலம் , பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தின் வாயிலாக புதிய படகுதளம் வெகுவிரைவில் அமைக்கப்படவுள்ளது. மேலும் சுற்றுலா பயணி களை கவரும் வண்ணமாக கன்னியாகுமரியின் அழகை மேம்படுத்துவது, கடற்கரை பகுதியில் மரங்கள் நடு வது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சர்வதேச அளவில் சுற்றுலா பயணி களை ஈர்க்கும் வகை யில் கடற்கரை பகுதியினை நவீனபடுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்படும்.


    இவ்வாறு அவர் கூறினார்.


    இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் தேசிய நெடுஞ்சாலை (நிலமெடுப்பு) ரேவதி, நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் சேதுராம லிங்கம், கன்னி யாகுமரி பேரூராட்சி தலைவர்குமரி ஸ்டீபன், மாவட்ட சுற்றுலா நல அலுவலர் சீதாராமன், மாவட்ட திருக்கோயில் இணை ஆணையர்ஞானசேகர், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×