search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரவேனு"

    • சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
    • 10 குழந்தைகள் மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

    அரவேனு,

    அரவேனு அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கபட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    கோத்தகிரி அரவேனு அருகே உள்ள காமராஜர் நகர் பகுதியில் சுமார் 200 -க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பெரும்பாலும் கூலித் தொழிலாளர்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் அங்கன்வாடி மையம் இல்லாததால் குழந்தைகளை விட்டுச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகி சிரமப்பட்டு வந்தனர்.

    மேலும் தங்கள் கிராமத்தில் அங்கன்வாடி மையம் திறக்க வேண்டும் என கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் மற்றும் ஜக்கனாரை ஊராட்சிக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதனைத் தொடர்ந்து தற்காலிகமாக வாடகை கட்டிடத்தில் அங்கன்வாடி மையம் திறக்க ஜக்கனாரை ஊராட்சி தலைவர் நடவடிக்கை மேற்கொண்டார். இதன்படி நேற்று வாடகை கட்டிடத்தில் புதிய அங்கன்வாடி மையம் திறக்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கு அங்கன்வாடி மேற்பார்வையாளர் சாந்தி தலைமை வகித்தார். கவுன்சிலர் மனோகரன் வரவேற்றார். ஊராட்சித் தலைவர் சுமதி சுரேஷ் அங்கன்வாடி மையத்தைத் திறந்து வைத்தார். அங்கன்வாடி மையம் திறக்கப்பட்ட முதல் நாளில் சுமார் 10 குழந்தைகள் மையத்தில் சேர்க்கப்பட்டனர்.

    மேலும் ஊராட்சி தலைவர் கூறுகையில் விரைவில் வருவாய்த்துறை அல்லது ஊராட்சிக்கு சொந்தமான நிலம் தேர்வு செய்யப்பட்டு அங்கு நிரந்தரமான அங்கன்வாடி மையம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.நிகழ்ச்சியில் அங்கன்வாடி பணியாளர் சபீலா, உதவியாளர் தீபா உள்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். தங்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப் பட்டதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

    ×