search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேவை"

    • இந்த சேவைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்தத்தேவையில்லை.
    • வழக்குகளில் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகின்றன.

    தஞ்சாவூா்: தஞ்சை ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் சமரசநாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக சமரச மையத்தின் விழிப்புணர்வு பிரசுரங்களை வழங்கும் நிகழ்ச்சி மற்றும் மோட்டார் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஊனச்சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனை மாவட்ட சமரச மையத்தின் ஒருங்கிணைப்பாளரும் முதன்மை மாவட்ட நீதிபதியுமான ஜெசிந்தாமார்ட்டின் தலைமையேற்று தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது,

    நீண்ட நாள் நிலுவையில் உள்ள வழக்குகளை சுமூகமான முறையில் தீர்வுகாண வலியுறுத்தியும், நீதிமன்றம் வழங்கும் இந்த சேவைக்கு எவ்வித கூடுதல் கட்டணமும் செலுத்தத் தேவையில்லை.

    சமரசமாக தீர்வு காணும் வழக்குகளில் செலுத்தப்பட்ட நீதிமன்ற கட்டணங்கள் திருப்பி வழங்கப்படுகின்றன.

    சமரசமாக பேசி முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு இல்லை. இவ்வாறு அவர் பேசினார்.

    • நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.
    • சிறு தொழில் செய்வோர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல் போன்ற பணிகள் பாதிக்கும்.

    சென்னை:

    தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் தொடர்ச்சியாக 4 நாட்கள் மூடப்படுகிறது. புனித வெள்ளியை முன்னிட்டு 29-ந்தேதி வங்கிகளுக்கு விடுமுறை விடப்படும். மறுநாள் (சனிக் கிழமை) மாதத்தின் 4-வது வாரம் என்பதால் வங்கிக்கு விடுமுறையாகும்.

    31-ந்தேதி ஞாயிற்றுக் கிழமை நடப்பு நிதியாண்டு கணக்குகள் முடிக்கப்படுகிறது. இந்த வருடம் விடுமுறை நாளில் ஆண்டு கணக்கு முடிக்கக்கூடிய சூழல் வந்துள்ளதால் அன்று பெரும்பாலான வங்கிகள் மூடப்படும். அரசு கணக்குகள் வைத்துள்ள வங்கிகள் மட்டும் செயல்படும்.

    ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்குகள் முடிப்பதற்காக பொதுமக்களுக்கான சேவை கிடையாது. ஆனால் வங்கிகள் திறந்து இருக்கும். வங்கிகள் 4 நாட்கள் தொடர்ச்சியாக பொது மக்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை உள்ளது.

    ஆண்டு இறுதி கணக்கு முடிக்கும் நாள் மற்றும் ஊழியர்களுக்கு விடுமுறை அளிக்கும் நாள் ஆகியவை அடுத்தடுத்து வருவதால் வங்கிகள் செயல்படாது. நாடு முழுவதும் வங்கிகள் தொடர்ச்சியாக மூடப்படுவதால் ரொக்கம் மற்றும் காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கப்படும்.

    இதுகுறித்து அகில இந்திய வங்கிஊழியர் சங்க பொதுச்செயலாளர் சி.எச்.வெங்கடாசலம் கூறியதாவது:-

    புனித வெள்ளி விடுமுறை நாட்களோடு சனி, ஞாயிறு விடுமுறையும் சேர்ந்து வருவதால் தொடர் விடுமுறை காரணமாக வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்க முடியாத நிலை உள்ளது. மேலும் ஏப்ரல் 1-ந்தேதி இறுதி ஆண்டு கணக்கிற்காக பொது மக்களுக்கான சேவை கிடையாது. ஆனால் வங்கிகள் செயல்படும்.

    எனவே வரும் நாட்கள் தொடர் விடுமுறையால் வங்கி சேவை பாதிக்ககூடும். பணம்மற்றும் காசோலை பரிவர்த்தனை முடங்கும். சிறு தொழில் செய்வோர் முதல் பெரிய நிறுவனங்கள் வரை பணம் டெபாசிட் செய்தல், எடுத்தல் போன்ற பணிகள் பாதிக்கும். ஏ.டி.எம். மையங்கள் முழு கொள்ளளவோடு செயல்படும். பணம் தீர்ந்தாலும் உடனே வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • இத்திட்டத்தின் கீழ் 144 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்.
    • சிகிச்சை வழங்கப்பட்டு அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட ரங்கில் 108 ஆம்புலன்சில் உயிர்காக்கும் மருந்து பெட்டகம் திட்டத்தினை கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ் 144 பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர். இதில் 19 பேருக்கு இருதய ரத்த குழா யில் அடைப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 7 நபர்களுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோ தனை மேற்கொள்ளப்பட்டு ஒருவருக்கு இருதய ரத்த குழாயில் ஸ்டென்ட் வைக்கப்பட்டுள்ளது. மற்ற வர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு அனைவரும் தற்போது நலமுடன் உள்ளனர்.

    மேலும் மாரடைப்பு அறிகுறிகளுடன் பயனாளிகள் 108 ஆம்புலன்ஸ் மூலமாக அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து அங்கு இருதய பாதுகாப்பு மருந்து கள் வழங்கப்பட்டு மேல் சிகிக்சைக்காக மருத்து வமனைகளுக்கு அழைத்து செல்லப்படுவதால் கால தாமதம் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு துரித சிகிச்சை அளிப்பதற்காக இந்த மருந்துகள் அடங்கிய பெட்ட கங்களை 108 ஆம்பு லன்சில் வைத்து கால தாம தத்தை தவிர்க்க வழங்கப் பட்டது. இந்த சேவையை பயன்படுத்தி பொது மக்க ளின் உயிர் காக்குமாறு 108 ஒருங்கிணைப்பாளர்க ளுக்கு அறிவுரை வழங்கப் பட்டது.

    • சேவாரத்னா விருது, இளம்சாதனையாளர் விருது, அன்னை தெரசா போன்ற விருதுகள் வாங்கியுள்ளது
    • மருத்துவமனைகளிலும் தங்கி நோயாளியை கவனிப்பதற்கு பணியாளர்களை உடனே தருகின்றது.

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் எம்.எஸ்.ரோடு, வடசேரி பஸ் நிறுத்தம் மற்றும் காசிவிஸ்வநாதர் கோவில் அருகில் அக்ஷயா ஹோம் கேர் சர்வீசஸ் நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் அரசு அனுமதி பெற்றது. ஐ.எஸ்.ஓ. 9001-2015 தரச்சான்றிதழ் பெற்ற நிறுவனம்.

    சிறந்த ேசவைக்கான சேவாரத்னா விருது, இளம்சாதனையாளர் விருது, அன்னை தெரசா விருது, தங்க நட்சத்திர விருது மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் விஜிலென்ஸ் கவுன்சிலர் ஆப் இந்தியா அமைப்பு சார்பாக OVCI AWARDS விருதில் அக்ஷயா ஹோம் கேர் சர்வீசஸ் நிறுவனத்துக்கு மனித நேய விருது, சிறந்த நிர்வாகத்திற்கான விருது வழங்கப்பட்டது. விஜிலென்ஸ் கவுன்சில் ஆப் இந்தியா அமைப்பின் தேசிய தலைவர் அம்பா சிடர் டாக்டர் சத்திய கண்ணதாசன், புதுச்சேரி மாநில சபாநாயகர் எம்பலம் செல்வம் எம்.எல்.ஏ., பாண்டிச்சேரி மாநிலத்தின் ெஜயில் சூப்பிரண்டு மத்திய சிறைச்சாலை பாஸ்கரன் மற்றும் ஓய்வுபெற்ற நீதியரசர் டாக்டர் ஹரிதாஸ் ஆகியோர் அக்ஷயா ஹோம் கேர் சர்வீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் மணிகண்டனுக்கு விருதுகளை வழங்கினர்.

    வீட்டில் தங்கி பணி புரிவதற்கும், காலை முதல் மாலை வரை, மாலை முதல் காலை வரை பணிபுரி வதற்கும், நோயாளிகளை கவனிப்ப தற்கும், முதியோ ர்களை கவனிப்பதற்கும், சமையல், வீட்டு வேலை செய்வதற்கும் சிறந்த பணியாளர்களை தேர்ந்தெ டுத்து சிறந்த முறையில் ேசவை செய்து வருகின்றது. மருத்துவமனைகளிலும் தங்கி நோயாளியை கவனிப்பதற்கு பணியாளர்களை உடனே தருகின்றது.

    இதன் உரிமையாளர் மணிகண்டன் கூறுகையில், ஆதரவற்றோர்கள்,கண வனால் கைவிடப்பட்ட வர்கள், விதவைகள், பிள்ளைகளால் கை விடப்பட்டவர்கள் மற்றும் வறுமையால் வாழும் ஏழை மக்கள் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் என்னுடைய தாயார் ராஜாமணி நினைவாக இந்த சேவையை செய்து வருகின்றேன். இலவசமாக வேலை தேவைப்படுவோர் ஆண்களும், பெண்களும் நேரில் வந்து பதிவு செய்த பின்னர் வேலை வழங்குகின்றோம்.

    மேலும் பி.எஸ்.சி.நர்சிங், டிப்ளமோ நர்சிங் படித்தவர்கள் பதிவு செய்து கொள்ளலாம். எங்களுக்கு வடசேரி கிளையை தவிர வேறு கிளைகள் கிடையாது. மேலும் விபரங்களுக்கு 99447 38282, 63857 71261, 63857 71262, 85263 00300 என்ற செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கூறினார்.

    • மேற்கு மண்டல தபால் துறை சார்பில் பொதுமக்களுக்கு தடையற்ற அஞ்சல் சேவைகளை வழங்கும் பொருட்டு ஆப்ரேஷன் 8.0 என்று அழைக்கப்படும் புதிய திட்டம் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டது.
    • இந்த திட்டத்தின் படி திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் கடந்த 2-ந் தேதி முதல் செயல் பட்டு வருகிறது.

    மேற்கு மண்டல தபால் துறை சார்பில் பொதுமக்களுக்கு தடையற்ற அஞ்சல் சேவைகளை வழங்கும் பொருட்டு ஆப்ரேஷன் 8.0 என்று அழைக்கப்படும் புதிய திட்டம் திருச்செங்கோடு தலைமை தபால் நிலையத்தில் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி திருச்செங்கோடு தலைமை தபால் நிலையம் கடந்த 2-ந் தேதி முதல் செயல் பட்டு வருகிறது. வேலைக்கு செல்லும் பொதுமக்கள் தங்கள் வேலை நாட்களில் பணிக்கு செல்லும்போது அல்லது பணியிலிருந்து திரும்பும் பொழுது தங்களுக்கு தேவையான அஞ்சல் சேவைகளை தடையின்றி பெறலாம். சேமிப்பு கணக்குகளில் பணம் செலுத்துதல் பதிவு தபால்களை அனுப்புதல், மணி ஆடர்களை அனுப்புதல் , அஞ்சலக ஆயுள் காப்பீட்டு பிரிமியங்களை செலுத்துதல் போன்ற சேவைகளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அஞ்சல் சேவைகளை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாமக்கல் தலைமை அஞ்சலகத்தை தொடர்ந்து திருச்செங்கோடு தலைமை அஞ்சலகத்திலும் இந்த சேவை விரிவுபடுத்தபட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி திருச்செங்கோடு தலைமை அஞ்சல் அதிகாரி உதயகுமார் மற்றும் துணை அஞ்சலக அதிகாரி தீபா முன்னிலையில் தொடங்கியது. நிகழ்ச்சியில் திருச்செங்கோடு அஞ்சல் உட்கோட்ட அதிகாரி ரமேஷ் மற்றும் சங்ககிரி அஞ்சல் உட்கோட்ட அதிகாரி நவீன் குமார் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை தொடங்கி வைத்தனர்.

    • விரைவு ரெயில் ஸ்ரீரங்கம்- திருச்சி இடையே ரத்து செய்யப்படுகின்றன.
    • சேலம், விருத்தாசலம், பொன்மலை (பை-பாஸ்) வழியாக தஞ்சாவூருக்கு இயக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    திருச்சி ரெயில்வே கோட்டம் மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிரு ப்பதாவது :-

    திருச்சி சந்திப்பு ரெயில் நிலையத்தில் பொறியியல் பணி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) மற்றும் 26, 27 ஆகிய 3 நாட்களில் ரெயில்களின் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.அதன்படி திண்டுக்கல்- திருச்சி- திண்டுக்கல் முன்பதிவில்லா விரைவு ரெயில் (வண்டி எண்-06498/06499) மற்றும் மயிலாடுதுறை- திருச்சி- மயிலாடுதுறை முன்பதிவில்லா விரைவு ரெயில் (16233/16234) ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன.

    திருப்பாதிரிபுலியூர்- திருச்சி டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06889) லால்குடி- திருச்சி இடையேயும், வேளாங்கண்ணி- திருச்சி டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06839) பொன்மலை- திருச்சி இடையேயும், திருச்சி- காரைக்கால் டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06880) திருச்சி- திருவெறும்பூர் இடையேயும், திருச்சி- திருப்பாதிரிபுலியூர் டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06890) திருச்சி- வாளாடி இடையேயும், விருத்தாசலம்- திருச்சி டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06891) ஸ்ரீரங்கம்- திருச்சி இடையேயும் ரத்து செய்யப்படுகின்றன.

    இதேப்போல் திருச்சி- விருத்தாசலம் டெமு முன்பதிவில்லா விரைவு ரெயில் (06892) திருச்சி-லால்குடி இடையேயும், காரைக்குடி- திருச்சி முன்பதிவில்லா விரைவு ரெயில் (06126) குமாரமங்கலம்- திருச்சி இடையேயும், திருச்சி காரைக்குடி முன்பதிவில்லா விரைவு ரெயில் (06125) திருச்சி- குமாரமங்கலம் இடையேயும், சென்னை- திருச்சி சோழன் விரைவு ரெயில் (22675) பொன்மலை- திருச்சி இடையேயும் ரத்து செய்யப் படுகின்றன.

    ஹுப்ளி-தஞ்சாவூர் இடையிலான சிறப்பு கட்டண விரைவு ரெயில் (07325) நாளை (செவ்வாய்கிழமை) சேலம், விருத்தாசலம், பொன்மலை (பை-பாஸ்) வழியாக தஞ்சாவூருக்கு இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சை மாவட்டம் முழுவதும் சிறப்பு பெயர் மாற்ற முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    • மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்ற சேவையை பெற்று கொள்ளலாம்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தஞ்சை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் நளினி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மின்பகிர்மான வட்டத்தில் உள்ள அனைத்துப் பிரிவு அலுவலகங்களிலும் நாளை ( திங்கள்கிழமை ) முதல் மின் இணைப்புகளுக்கான சிறப்பு பெயர் மாற்ற முகாம் நடைபெற உள்ளது. மின்நுகர்வோர்கள் தங்களது இணைப்பிற்கான விவரங்களை புதுப்பிக்கும் வகையிலும் மின் இணை ப்புகளில் உள்ள பெயரை மாற்றும் விதமாகவும் தஞ்சை மாவட்டம் முழுவதும் சிறப்பு பெயர் மாற்ற முகாம் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

    எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த மின்நுகர்வோர்கள் தங்களு க்குரிய ஆவணங்களுடன் தொடர்புடைய பிரிவு அலுவலகங்களில் உரிய பெயர் மாற்ற கட்டணம் செலுத்தி மின் இணைப்புகளுக்கான பெயர் மாற்ற சேவையை பெற்று கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பெரம்பலூருக்கு ரெயில் சேவை தொடங்கப்படுகிறது
    • அரியலூர்- நாமக்கல் வழியாக நடைபெறுகிறது

    பெரம்பலூர்:

    பெரம்பலூர் வழியாக அரியலூர், நாமக்கல்லுக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

    பெரம்பலூர் வழியாக ரயில் போக்குவரத்து திட்டம் தொடங்க வேண்டும் என பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர் பார்லிமெண்டில் பேசி ரயில்வே துறை அமைச்சருக்கு கோரிக்கை வைத்தார். இதனை ஏற்று பெரம்பலூர் வழியாக அரியலூர், நாமக்கல்லுக்கு ரயில் சேவை தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதை தொடர்ந்து 116.26 கி.மீ. தூரம் கொண்ட அரியலூர் - நாமக்கல் ரயில் வழித்தடத்திற்கான ஆய்வுப்பணி முடிந்தவுடன் திட்டத்தை செயல்படுத்துவதற்கான நடவடிக்கை தொடங்கும் என பெரம்பலூர் எம்.பி. பாரிவேந்தருக்கு ரயில்வே அமைச்சகம் கடிதம் அனுப்பி யுள்ளது.

    • 2 மாதங்களுக்கு ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக திருச்சி ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.
    • ஹுப்ளியில் இருந்து இரவு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் தஞ்சாவூர் சென்றடையும்.

    தஞ்சாவூர்:

    கர்நாடக மாநிலம் ஹுப்ளி - தஞ்சாவூர் இடையே இரு மார்க்கத்திலும் திருச்சி வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் கடந்த மார்ச் மாதம் முதல் இயக்கப்பட்டு வருகின்றன.

    இந்த ரெயில் சேவை இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தது.

    இருந்தாலும் பயணிகளின் வரவேற்பு தொடர்ந்து மேலும் 2 மாதங்களுக்கு ரெயில் சேவை நீட்டிக்கப்படுவதாக திருச்சி ரெயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

    இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    ஹுப்ளி - தஞ்சாவூர் வாராந்திர சிறப்பு ரெயில் செப்டம்பர் 25ஆம் தேதி வரை திங்கள்கிழமை தோறும் இயக்கப்படும்.

    இந்த ரெயில் ஹுப்ளியில் இருந்து இரவு 8.25 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 2.15 மணிக்கு தஞ்சாவூர் சென்றடையும்.

    மறு மார்க்கமாக தஞ்சாவூர் -ஹுப்ளி வாராந்திர சிறப்பு ரெயில் செப்டம்பர் 26-ம் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் இயக்கப்படும்.

    தஞ்சாவூரில் இருந்து இரவு 7.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.30 மணிக்கு ஹுப்ளி சென்றடையும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
    • நில அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு வழங் கும் பயிற்சியை கலெக்டர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    கடலூர்:

    கடலூர், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணிபுரிவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வா ணையம் மூலம் தேர்வு செய்யப்பட்ட 99 நிள அளவர் மற்றும் வரை வாளர் ஆகியோர்களுக்கு 90 நாட்களுக்கான நில அளவை பயிற்சி கடலூர் அருகே தனியார் கல்லூ ரியில் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து கலெக்டர் அருண் தம்பு ராஜ் நில அளவர் மற்றும் வரைவாளர்களுக்கு வழங் கும் பயிற்சியை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் பேசுகையில், இப்பணியில் ஈடுபடும் அனைவரும் மக்கள் பணி தான் மிக முக்கியமாக கருதி பணி புரிய வேண்டும். இப்பயிற்சி வகுப்பில் பயிற்சி பெற்றுவரும் நிலஅளவர் மற்றும் வரைவா ளர்கள் பயிற்சி யினை முழுமையாகவும், ஆர்வத்துடனும் அனைத்து தொழில்நுட்பங்களையும் கற்றுக்கொள்ள வேண்டும். களத்தில் பணியாற்றும் போது நேர்மையுடனும், பொதுமக்களுக்கு சேவை புரியும் எண்ணங்களுடனும் பணியாற்ற வேண்டும் என பேசினார். அப்போது உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, கோட்ட ஆய்வாளர்கள் நாராயணன் பன்னீர் செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கப்ப டவுள்ளன.
    • விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் விண்ணபிக்கலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திற னாளிகள் நலனுக்காக அரும் பணியாற்றிய தொண்டு நிறுவனம், சிறந்த மருத்துவர், வேலைவாய்ப்பு அளிந்த சிறந்த தனியார் நிறுவனம், சிறந்த சமூக பணியாளர் மற்றும் சிறந்த மத்திய கூட்டுறவு வங்கி ஆகிய பிரிவுகளில் 15.08.2023 அன்று நடைபெறயிருக்கும் சுதந்திர தின விழாவின் போது முதல்-அமைச்சரால் விருதுகள் வழங்கப்படவுள்ளன.

    மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் விண்ணப்பிக்க விரும்பும் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்தவர்கள் , நிறுவனங்கள் அதற்கான விண்ணப்பப் படிவத்தினை தஞ்சாவூர் மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் நல அலுவலகத்தி லிருந்து பெற்று, அனைத்து ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களுடன் (3 நகல்கள்) வருகின்ற 10-ந் தேதி மாலை 5 மணிக்குள் மாவட்ட மாற்றத்திறனாளிகள் நல அலுவலகம், அறை எண்.14, தரைதளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தஞ்சாவூர் – 613010 (தொலைபேசி எண். 04362-236791) என்ற முகவரிக்கு அனுப்பி வைத்து பயன்பெறலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • காலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தை வந்தடையும்.
    • ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

    தஞ்சாவூர்:

    எர்ணாகுளம்- வேளாங்கண்ணி இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு ரெயில் சேவைைய ஜூன் மாத இறுதி வரை நீட்டித்து தெற்கு ரெயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி எர்ணாகுளம்- வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்-06035), ஜூன் மாத சனிக்கிழமைகளான 3, 10, 17 மற்றும் 24-ம் தேதிகளில் பிற்பகல் 1.10 மணிக்கு எர்ணாகுளம் ஜங்சன் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 5.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தை வந்தடையும்.

    அதேப்போல் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண் 06036), ஜூன் மாத ஞாயிற்றுக்கிழமைகளான 4,11,18 மற்றும் 25-ம் தேதி ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6.40 மணிக்கு வேளாங்கண்ணி ரெயில் நிலையத்தி இருந்து புறப்பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு எர்ணாகுளம் ரெயில் நிலையத்தை வந்தடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    ×