search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 231965"

    • முத்தாரம்மன் கோவிலில் 49-வது வருட காவடி கட்டு விழா நடக்கிறது
    • காவடி கட்டு விழாவை முன்னிட்டு குமரி மாவட்ட கோவில்கள் களைக்கட்டி காணப்படுகிறது.

    கன்னியாகுமரி :

    முருக கடவுளின் 2-வது அறுபடை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா வருகிற 25-ந் தேதி (சனிக்கிழமை)கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த விழாவில் கலந்து கொள்ள குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்தும் முருக பக்தர்கள் காவடி கட்டி செல்வது வழக்கம்.அதன்படி இந்த ஆண்டும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் காவடி கட்டி தயாராகி வருகின்றனர்.

    குளச்சல் பகுதியில் புளியமூட்டுவிளை முத்தாரம்மன் கோவிலில் 49-வது வருட காவடி கட்டு விழா நடக்கிறது. இதுபோல் சாம்பசிவபுரம் சிவன் மற்றும் துர்கா தேவி கோவிலில் தூக்க பறக்கும் காவடி, புஷ்ப காவடி, சாஸ்தான்கரை தெற்கு கள்ளியடைப்பு வீரபத்ர காளியம்மன் கோவிலில் புஷ்ப காவடி, 6 அடி வேல் காவடி, பறக்கும் காவடி, பாறக்கடை மகாதேவர் கோவிலில் பறக்கும் காவடி, புஷ்ப காவடி, மாதனாவிளை ஸ்ரீமன் பத்மநாப சுவாமி கோவிலில் எண்ணை காவடி, மேலத்தெரு தேசிக விநாயகர் கோவிலில் எண்ணை காவடி, கீழத்தெரு இசக்கியம்மன் கோவிலில் எண்ணை காவடி, வெள்ளங்கட்டி பரமேஸ்வரி அம்மன் கோவிலில் எண்ணை காவடி, இரும்பிலி கோவில்விளை அம்மன் கோயிலில் எண்ணை காவடி, சன்னதி தெரு முத்தாரம்மன் கோவிலில் பறக்கும் காவடி, எண்ணை காவடி, பள்ளிவிளாகம் உஜ்ஜையினி மாகாளி கோவிலில் புஷ்ப காவடி ஆகிய காவடிகள் கட்டப்பட்டு திருச்செந்தூர் புறப்பட்டு செல்கிறது.

    நாளை இரவு இந்த காவடிகளுக்கு சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை காட்டப்பட்டு, சனிக்கிழமை காலை மற்றும் பகல் வேளையில் ஊரில் திரு வீதி உலா செல்கிறது.

    மாலை அனைத்து காவடிகளும் குளச்சல் ஆலடி அதிசய நாகர் ஆலயம் சந்திப்பு வந்தடைந்து, திங்கள்நகர், நாகர்கோவில், ஆரல்வாய் மொழி, முப்பந்தல் வழியாக திருச்செந்தூர் சென்றடைகிறது. காவடி கட்டு விழாவை முன்னிட்டு குமரி மாவட்ட கோவில்கள் களைக்கட்டி காணப்படு கிறது.

    • அபிஷேகம் நடைபெற்று மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
    • பெண்கள் மாவிளக்கு போடுதல், பேச்சி ரூபம் வேஷத்துடன் மயான சூரை நிகழ்வு நடைபெற உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தென்பாதியில் அமைந்துள்ள ராஜராஜேஸ்வரி என்கின்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

    மிகவும் பழமை வாய்ந்த இக்கோவிலில் மகா சிவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனை முன்னிட்டு காலையில் கொடி ஊர்வலமும், பக்தர்கள் அழகு காவடிகள் எடுத்து கொண்டும் ஊர்வலமாக வலம் வந்து கோயிலை அடைந்தனர். அதனைத் தொடர்ந்து அபிஷேகம் ஆராதனைகள் நடைபெற்று மகாதீபாராதனை காட்டப்பட்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வான மயான சூரை நிகழ்வு மகா சிவராத்திரியை முன்னிட்டு 18-ந்தேதி இரவு நடைபெற உள்ளது.

    அன்று திருத்தேர்பவனி, அலகு காவடிகள் ஊர்வலமும் மாலை பெண்கள் மாவிளக்கு போடுதல், பேச்சி ரூபம் எனும் ஆகம வேஷத்துடன் மயான சூரை நிகழ்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • எடப்பாடி காவடிக்குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • காவடிகளுக்கு தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஸ்ரீபருவத ராஜகுல காவடிக்குழுக்கள் சார்பில், தைப்பூச திருவிழாவையொட்டி ஆண்டுதோறும் பழனி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அவ்வாறு வருகை தரும் பக்தர்கள், பழனி முருகன் கோவிலில் தங்கி பஞ்சாமிர்தம் தயாரித்து முருகப்பெருமானுக்கு படைத்து தரிசனம் செய்வது வழக்கம்.

    இவர்களில் அன்னதான குழு, அலங்கார குழு, காவடிக்குழு, பஞ்சாமிர்த குழு என பல குழுக்கள் உள்ளன. இந்த ஆண்டு பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி தொடங்கி கடந்த 7-ந்தேதி வரை நடைபெற்றது. இதையொட்டி எடப்பாடி பக்தர்கள் குழுவினர் கடந்த 7-ந்தேதி எடப்பாடி பகுதியில் இருந்து பாதயாத்திரையாக புறப்பட்டனர். இதில் பஞ்சாமிர்த குழுவினர் கடந்த 9-ந்தேதி பழனிக்கு வந்தனர்.

    பின்னர் அவர்கள் பழனி மலைக்கோவில் மற்றும் அடிவார பகுதியில் 15 டன் பஞ்சாமிர்தம் தயாரித்தனர். இதற்கிடையே எடப்பாடியில் இருந்து பால், மயில், இளநீர் உள்ளிட்ட காவடிகளுடன் பாதயாத்திரையாக புறப்பட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று காலை மானூர் சண்முகநதிக்கு வந்தனர். அங்கு அவர்கள் மகா பூஜை நடத்தி வழிபட்டனர். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 11 மணி அளவில் பழனி பெரியநாயகி அம்மன் கோவில் பகுதிக்கு வந்தனர்.

    பழனி கோவில் நிர்வாகம் சார்பில் மேள, தாளம் முழங்க எடப்பாடி காவடிக்குழுவினருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் காவடிகளுக்கு தீபாராதனை காட்டி பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பக்தர்கள் நான்கு ரதவீதிகளில் காவடிகளுடன் வலம் வந்து பெரியகடை வீதி, திண்டுக்கல் ரோடு, அடிவாரம் ரோடு, சன்னதிவீதி வழியாக பழனி மலைக்கோவிலை அடைந்தனர். பின்னர் அவர்கள் சாயரட்சை கட்டளை பூஜை, ராக்கால பூஜையில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதையடுத்து எடப்பாடி குழுவினர் தயாரித்த பஞ்சாமிர்தம் கொண்டு சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பக்தர்கள் குழுவினருக்கு பஞ்சாமிர்தம் பிரசாதமாக வழங்கப்பட்டது. மாலையில் பழனி மலைக்கோவில் வெளிப்பிரகாரத்தில் எடப்பாடி பக்தர்கள், பூக்களால் 'ஓம்' வடிவில் ஓவியம் வரைந்தனர்.

    இந்த ஓவியம் அனைவரையும் கவர்ந்தது. இதையடுத்து மலைக்கோவிலில் எடப்பாடி பக்தர்கள் குழுவினர் நேற்று இரவு முழுவதும் தங்கி இருந்தனர். பழனி மலைக்கோவிலில் இரவு தங்கும் உரிமை இவர்களுக்கு மட்டுமே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • பக்தர்கள் கரகம் மற்றும் அழகு காவடி எடுத்து வீதியுலா.
    • பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் கோயிலை வந்தடைந்தனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை திருவிழந்தூர் அண்ணா நகரில் பழமை வாய்ந்த சிறுவாச்சூர் மதுர காளியம்மன் கோயில் உள்ளது.

    இந்த கோவிலில் 64-ஆம் ஆண்டு தீமிதி திருவிழா நடைபெற்றது. இதையொட்டி, விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் மயிலாடுதுறை காவிரிக் கரையில் இருந்து கரகம் மற்றும் அழகு காவடி எடுத்து வீதியுலாவாக, பச்சைக்காளி, பவளக்காளி ஆட்டத்துடன் கோயிலை வந்தடைந்தனர்.

    கோவிலின் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குழியில் இறங்கி தீமிதித்து தங்கள் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்தனர்.

    இதில் விழா குழுவினர், தெருவாசிகள் என ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்தினர்.

    • நாளை அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.
    • சுவாமி தங்க மயில் வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை தைப்பூசம் நடக்கிறது.

    விழாவில் கலந்து கொண்டு சாமியை தரிசனம் செய்ய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பாதயாத்திரையாகவும் அலகு குத்தியும்,காவடி எடுத்து வந்தும் சாமி தரிசனம் செய்ய வந்துகொண்டிருக்கின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது.

    1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 4.30 மணிக்கு தீர்த்தவாரியும், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகமும் நடைபெறுகிறது. 12 மணிக்கு உச்சிக்கால தீபாராதனை, மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, 6 மணிக்கு இராக்கால அபிஷேகம், இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 மணிக்கு பள்ளியறை பூஜையும் நடைபெற்று கோவில் நடை திருக்காப்பிடப்படும்.

    மதியம் உச்சிகால தீபாராதனைக்கு பிறகு மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி அங்கு சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெறுகிறது. தொடர்ந்து சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.

    நேற்று சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுத்த நாள். இதை முன்னிட்டு நேற்றும் இன்றும் திருக்கோவில் அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு தொடர்ந்து பூஜைகள் நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா நடைபெற்றது.

    • தைப்பூசத் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
    • மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வரக்கூடாது என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் எச்சரித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் தைப்பூசத் திருவிழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. விழாவை முன்னிட்டு கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வருகின்றனர். அவ்வாறு சாலையில் நடந்து வரும் போது, சாலையின் இடதுபுறமாக வாகனங்கள் வருவதால் பக்தர்கள் மீது மோத வாய்ப்பு உள்ளது. ஆகையால் பக்தர்கள் சாலையின் வலதுபுறமாக நடந்து செல்ல வேண்டும். இதனால் எதிரே இடது புறமாக வரும் வாகனங்களை கண்டுகொண்டு விபத்து நேரா வண்ணம் பக்தர்கள் தங்களை காத்துக் கொள்வதோடு மற்ற வாகனங்களுக்கும் இடையூறு இல்லாமல் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளலாம்.

    அதே போன்று பாதயாத்திரை பக்தர்கள் முதுகு பகுதி மற்றும் பைகளில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் ஒட்டி பாதுகாப்பாக பாதயாத்திரை செல்ல வேண்டும். இந்த தைப்பூச திருவிழாவை விபத்து இல்லாமல் பாதுகாப்பான முறையில் வழிபட்டு செல்வதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கோவிலுக்கு வரும் பக்தர்கள் சாதி ரீதியான அடையாளங்கள் பொறிக்கப்பட்ட பனியன்கள், சட்டைகள் போன்றவற்றை அணிந்தோ அதனை வெளிப்படுத்தும் வகையிலான கொடிகளோ கொண்டு வரக்கூடாது. சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வரக்கூடாது. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உள்பட 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு தேவகோட்டையில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து சென்றனர்.
    • தேவகோட்டையை சேர்ந்த முருக பக்தர்கள் காவடிகள் எடுத்து பாதயாத்திரை செல்கின்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை, காரைக்குடி பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூசத்தை முன்னிட்டு காவடிகள் எடுத்து பழனி முருகன் ேகாவிலுக்கு பாதயாத்திரை சென்று வருவார்கள். அதேபோல இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வருகிற 5-ந் தேதி நடைபெற இருப்பதால் தேவகோட்டையை சேர்ந்த முருக பக்தர்கள் காவடிகள் எடுத்து பாதயாத்திரை செல்கின்றனர். இன்று காலை அவர்கள் திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் பகுதி வழியாக பழனி நோக்கி சென்றனர்.

    தங்களது முன்னோர்கள் காட்டிய வழியில் ஆண்டுதோறும் பக்தர்கள் பாதயாத்திரை செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். பாதயாத்திரை செல்லும் பக்தர்கள் காலை மற்றும் மாலை வேளைகளில் காவடிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பாதயாத்திரையை தொடருவார்கள். இரவில் வழியில் தங்கி செல்வார்கள். அவர்களுக்கு ஆங்காங்கே கிராமமக்கள் அன்னதானம் வழங்கி வருகின்றனர். இந்த பக்தர்கள் தைப்பூச தினத்தன்று பழனியை சென்றடைந்து சாமி தரிசனம் செய்துவிட்டு பாதயாத்திரையாகவே தங்களது வீடுகளுக்கு திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தாண்டு 291 காவடிகள் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வந்தடைந்தது.
    • திண்டுக்கல் சாலை வழியாக தங்கள் பாதயாத்திரையை தொடங்கினார்கள்.

    பாரம்பரியமிக்க நகரத்தார்கள் ஒன்றிணைந்து வருடம் தோறும் தைப்பூச திருவிழாவிற்கு பழனிக்கு காவடி தூக்கி சென்று நேர்த்திக்கடன் செலுத்தி வருவது வழக்கம். பாரம்பரியமிக்க நகரத்தார்கள் காவடி கண்டனூர், அரண்மனை பொங்கல், நெற்குப்பை ஆகிய ஊர்களில் இருந்து புறப்பட்ட காவடிகள் குன்றக்குடி மையப் பகுதியாக வைத்து அங்கிருந்து புறப்பட்டு அரோகரா கோஷத்துடன் பழனி நோக்கி சென்றனா்.

    அதனை தொடர்ந்து பிள்ளையார்பட்டியில் தரிசனம் செய்த நகரத்தார்கள் காவடியுடன் பாதை யாத்திரையாக திருப்பத்தூர் சாலை வழியாக சிங்கம்புணரி நோக்கி வந்தனர். தொடர்ந்து நேற்று அதிகாலை சிங்கம்புணரி நகருக்கு வருகை தந்த காவடிகள் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவிலுக்கு வந்தடைந்தன.

    நகரத்தார்கள் காவடிகள் கடந்த ஆண்டை காட்டிலும் கூடுதலாக 130 காவடிகளை சேர்த்து இந்தாண்டு 291 காவடிகள் சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் வந்தடைந்தது. திண்டுக்கல் சாலை வழியாக தங்கள் பாதயாத்திரையை தொடங்கினார்கள். சிங்கம்புணரி நான்கு ரோடு சந்திப்பில் பக்தர்கள் சூழ்ந்து நின்று காவடிக்கு உற்சாக வரவேற்பு அளித்து பக்தி பரவசத்துடன் அன்னதானம் வழங்கினா்.

    நகரத்தார்கள் குன்றக்குடி, சிங்கம்புணரி, மனப்பச்சேரி, நத்தம், திண்டுக்கல் பகுதி வழியாக வருகிற தைப்பூச தினத்தன்று பழனி சென்று அடைவார்கள். தைப்பூசத் திருவிழா தேரோட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள்.

    • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
    • கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர்.

    தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். ஏராளமான பக்தர்கள் பச்சை மற்றும் காவி நிற உடை அணிந்தும், பல அடி நீள அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்தனர்.

    பல்வேறு ஊர்களில் இருந்தும் அலங்கரிக்கப்பட்ட மினி லாரி, லோடு ஆட்டோ போன்ற வாகனங்களில் முருக பெருமானின் திருவுருவ படத்தை வைத்தும், அவரது திருப்புகழை பாடியும் பாத யாத்திரையாக வந்தனர்.

    கோவிலில் குவிந்த பக்தர்கள் அதிகாலை முதலே கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் கடலில் புனித நீராடினர். தொடர்ந்து இலவச பொது தரிசனம், ரூ.100 கட்டண தரிசனத்தில் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பெரும்பாலான பக்தர்கள் கோவில் கிரிபிரகாரத்தைச் சுற்றிலும் அங்கபிரதட்சணம் செய்து வழிபட்டனர். பெண்கள் அடிபிரதட்சணம் செய்து வழிபட்டனர்.

    திருச்செந்தூருக்கு வரும் தூத்துக்குடி ரோடு, பாளையங்கோட்டை ரோடு, பரமன்குறிச்சி ரோடு, குலசேகரன்பட்டினம் ரோடு உள்ளிட்ட அனைத்து சாலைகளிலும் சாரை சாரையாக பாத யாத்திரை பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூரில் காணும் இடமெல்லாம் முருக பக்தர்களாகவே காட்சி அளிப்பதால் விழாக்கோலம் பூண்டது.

    • சில பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்தும் செல்கின்றனர்.
    • மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு பொங்கல் பண்டிகை மற்றும் தைப்பூசத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக செல்கின்றனர். அவர்கள் விதவிதமான காவடிகள் ஏந்தியும், வேல் ஏந்தியும், அலகு குத்தியபடியும் பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இந்த நிலையில் சில பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்தும் செல்கின்றனர். இந்த சர்ப்ப காவடி எடுத்து வர தற்போது அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் சட்டத்துக்கு புறம்பாக சர்ப்ப காவடி மற்றும் பாம்புகளை எடுத்து வருகின்றனர். இவ்வாறு பாம்புகளை எடுத்து வருவதற்கு அனுமதி கிடையாது. இதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறி உள்ளார்.

    • விவசாயிகள் சாலையோரம் வாழைக்குலை தோரணம் கட்டி அலங்கரித்து உள்ளனர்.
    • பக்தர்கள் பல விதவிதமான காவடிகளை எடுத்து செல்கின்றனர்.

    தக்கலை அருகில் உள்ள குமாரகோவிலில் பிரசித்திபெற்ற வேளிமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை பக்தர்கள் தங்களது நேர்த்தி கடன் நிறைவேற்ற விரதம் இருந்து காவடி எடுத்து செல்வது வழக்கம்.

    இதுபோல் திருவிதாங்கூர் மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே நாட்டில் மும்மாரி பெய்து, விவசாயம் செழித்து, மக்கள் பசி பட்டினி இன்றி வாழவும், சண்டை சச்சரவு இன்றி நிம்மதியுடன் வாழவும் தக்கலை பொதுப்பணித்துறை, போலீஸ் நிலையம் சார்பில் வேளிமலை முருகனுக்கு அதிகாரிகள் காவடி எடுத்து செல்வார்கள். இந்த பாரம்பரிய மரபு தொன்றுதொட்டு இன்று வரை அரசு சார்பில் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டு காவடி ஊர்வலம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பறக்கும் காவடி, வேல்காவடி, புஷ்பகாவடி, பால், பன்னீர், சந்தனம் போன்ற விதவிதமான காவடிகளை எடுத்து செல்கின்றனர்.

    பக்தர்கள் ஒவ்வொரு ஊரில் இருந்தும் காவடி எடுத்து கால்நடையாகவும், வாகனங்களில் தொங்கியவாறும் ஊர்வலமாக வேளிமலை முருகன்கோவிலுக்கு செல்வார்கள். கோவிலில் இன்று பிற்பகல் 3 மணியில் இருந்து முருகபெருமானுக்கு பக்தர்கள் காவடியில் கொண்டு செல்லும் அபிஷேக பொருட்கள் மூலம் அபிஷேகம் நடைபெறும்.

    இந்த விழாவையொட்டி பக்தர்களை வரவேற்கும் விதமாக தென்கரைதோப்பு ஊர் விவசாயிகள் பொதுமக்கள் சார்பில் புலியூர்குறிச்சியில் சாலையின் இருபுறங்களிலும் வரிசையாக வாழை குலை தோரணம் அமைக்கப்பட்டுள்ளது. இதுபோல் தக்கலை போலீஸ் நிலையம், பொதுப்பணித்துறை அலுவலகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

    • அக்னிகொப்பரை, சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி புறப்பட்டு வாணவேடிக்கையுடன் வீதியுலா நடைபெற்றது.
    • அம்பாளுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் டாக்டர் மூர்த்தி ரோட்டில் அமைந்துள்ள ஜலசந்திர மகா மாரியம்மன் கோவில் உற்சவ பெருவிழா கடந்த 5ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது .அதனைத் தொடர்ந்து காவேரி ஆற்றங்கரையில் இருந்து அக்னிகொப்பரை, சக்தி கரகம், பால்குடம், அலகு காவடி புறப்பட்டு வானவேடிக்கையுடன் வீதி உலா காட்சிகள் நடைபெற்றது.

    இதையடுத்து அம்பாளுக்கு கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை நாதஸ்வர கச்சேரியுடன் வான வேடிக்கை முழங்க ஜலசந்திர மகா மாரியம்மன் வீதி உலா நடைபெற்றது. பின்னர் மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை கும்பகோணம் டாக்டர் மூர்த்தி ரோடு தெருவாசிகள், பஞ்சாயத்தார்கள் செய்திருந்தனர்.

    ×