என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கயத்தாறு"
- வேனை சோதனையிட்டதில் 500 கிலோ ரேஷன் அரிசி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
- வேனை ஓட்டி வந்த நெல்லை தாழையூத்தை சேர்ந்த இலங்காமணி என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
கயத்தாறு:
கயத்தாறு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த வேனை சோதனையிட்டனர். அதில் 15 மூட்டைகளில் 500 கிலோ ரேஷன் அரிசி கொண்டு செல்லப்பட்டது தெரியவந்தது.
வேனை ஓட்டி வந்த நெல்லை தாழையூத்தை சேர்ந்த இலங்காமணி (வயது 49) என்பவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் வில்லிசேரி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ரேஷன் அரிசி வாங்கி சென்றதும் தெரிந்தது.
இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மற்றும் வேனை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வாரச் சந்தை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர்.
- பேரணியை பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலக்ஷ்மி ராஜதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
கயத்தாறு:
கயத்தாறு பேரூராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நமது குப்பை, நாமே என்ற வாசகத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பேரணியை பேரூராட்சி மன்ற தலைவி சுப்புலக்ஷ்மி ராஜதுரை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் பேரூராட்சி மன்ற நிர்வாக அலுவலர் பாலசுப்பிரமணியன், கயத்தாறு தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன பாண்டியன் மற்றும் கவுன்சிலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 40 பேர், அலுவலக தூய்மைப் பணியாளர்கள் 60 பேர், சுய உதவிக்குழுவினர், பொதுமக்கள் உள்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
பேரணி கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் தொடங்கி வைக்கப்பட்டு விமான சாலை, மதுரை மெயின் ரோடு, புதிய பஸ் நிலையம், வாரச்சந்தை வளாகம் உட்பட பல்வேறு முக்கிய வீதிகள் வழியாக பேரணி கையில் விளம்பரத் தட்டிகளை வைத்துக்கொண்டு கோஷங்களை எழுப்பிக் கொண்டு சென்றனர்.
வாரச் சந்தை வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டனர். அங்கு துப்புரவு பணிகளை பேரூராட்சி மன்றத் தலைவர் தொடங்கி வைத்தார்.இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பேரூராட்சி நிர்வாக அலுவலர்கள் செய்தனர்.