search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேமரா"

    • கேமராவை சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் யாரோ உடைத்து சேதப்படுத்திச் சென்றனர்.
    • வட பொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த ரங்கப்பனூர் பஸ் நிறுத்தத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் யாரோ உடைத்து சேதப்படுத்திச் சென்றனர். இதுகுறித்த புகாரின்பேரில் வட பொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசார ணையில், ரங்கப்பனூர் வடக்கு தெருவை சேர்ந்த கணபதி (வயது 25) என்பவர் கண்கா ணிப்பு கேமராவை உடைத்து சேதப்ப டுத்தியது தெ ரிய வந்தது. இதனை யடுத்து கணபதியை போலீசார் கைது செய்தனர்.

    • கேமரா பொருத்தப்பட்டு இருந்தது.
    • விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ரங்கப்பனூர் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும் மற்றும் கண்காணிக்கவும் ஊராட்சி நிர்வாகம் மற்றும் வடபொன்பரப்பி போலீஸ் நிலையம் சார்பில் அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருந்தது.

    இந்த கண்காணிப்பு கேமராவை யாரோ மர்ம நபர்கள் உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்பு கேமராவை உடைத்த மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சி.சி.டி.வி. கேமராவில் விபூதியை அள்ளி வீசி கைவரிசை காட்டிய கொள்ளையர்கள் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    • அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் துணைக்கோவிலாக காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. திருப்பரங்குன்றம் மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு பக்தர்கள் அதிகளவில் சென்று தரிசனம் செய்து வருகின்றனர்.

    இந்த கோவிலுக்கு செல்ல பழைய படிக்கட்டு பாதை மற்றும் புதிய படிக்கட்டு பாதை என 2 வழிகள் உள்ளன. இங்கு நேற்று முன்தினம் சித்ரா பவுர்ணமியையொட்டி வழக்கத்துக்கு அதிகமாக பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து சென்றனர். இதைத்தொடர்ந்து இரவு கோவிலை பூட்டி சென்றனர்.

    நேற்று காலை கோவிலை திறப்பதற்காக கோவில் குருக்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் சென்றனர். அப்போது கோவிலின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறிக்கிடந்தன.

    மேலும் கோவிலுக்குள் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பூஜை பொருட்கள், பித்தளை வேல் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த கோவில் குருக்கள் மற்றும் பணியாளர்கள் உடனடியாக கோவில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதுகுறித்து கோவில் நிர்வாகம் சார்பில் திருப்பரங்குன்றம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். யாரோ மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்து பொருட்களை திருடி உள்ளனர். அவர்கள் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிராவின் ஹார்டு டிஸ்க்கையும் திருடிச்ெசன்றி ருக்கிறார்கள்.

    மேலும் சி.சி.டி.வி. காமிராவில் கொள்ளை சம்பவம் பதிவாகி விடக்கூடாது என்பதற்காக திருட்டில் ஈடுபட்ட கொள்ளையர்கள் காமிரா மீது விபூதியை அள்ளி வீசி கைவரிசை காட்டியுள்ளனர்.

    கோவில் கதவை உடைத்து பூஜை பொருட்களை திருடிய சம்பவம் திருப்பரங் குன்றத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மலைக்கு செல்லும் படிக்கட்டு பாதை பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களில் மர்ம நபர்களின் நடமாட்டம் எதுவும் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர். காசி விசுவநாதர் கோவிலில் கடந்த 10 நாட்களுக்கு முன்புதான் கண்காணிப்பு காமிரா அமைக்கப்பட்டு ள்ளது. இந்தநிலையில் தான் கோவிலில் திருட்டு நடந்திருக்கிறது. திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • வாகனத்தின் உள்ளே டிரைவர் இருக்கையின் அருகில் தனியாக ஒரு கேமரா நிறுவப்பட உள்ளது.
    • ரோந்து வாகன கேமராக்கள் மூலமாக முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களை போலீசார் நேரடியாக கண்காணிக்க முடியும்.

    சென்னையில் குற்ற செயல்களை தடுக்க போலீஸார் ரோந்து வாகனங்களில் வலம் வருகிறார்கள். இதற்காக சென்னை மாநகர காவல்துறையில் 320 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    இந்த வாகனங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொறுத்தி கண்காணிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. வாகனத்தின் மேல்பகுதி மற்றும் பின்பகுதி ஆகியவற்றில் தலா ஒரு கேமராக்கள் என வாகனத்துக்கு வெளியே 2 கேமராக்கள் பொருத்தப்படுகிறது.

    வாகனத்தின் உள்ளே டிரைவர் இருக்கையின் அருகில் தனியாக ஒரு கேமரா நிறுவப்பட உள்ளது. இந்த கேமராக்கள் மூலமாக குற்றச்செயல்களை தடுக்கவும், பணியில் உள்ள காவலர்களின் நடவடிக்கைகளையும் கண்காணிக்கவும் முடியும்.

    இதன் பயன்பாடு என்ன என்பது பற்றி போலீஸ் தரப்பில் கூறும்போது, ரோந்து வாகன கேமராக்கள் மூலமாக முக்கிய சாலைகள் மற்றும் தெருக்களை போலீசார் நேரடியாக கண்காணிக்க முடியும் என்றனர்.

    குற்றச்செயல்களை தடுக்க சாலைகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள், கடைகள் மற்றும் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் மட்டுமே தற்போது கைகொடுத்து வருகின்றன. ஆனால் பல நேரங்களில் இந்த கேமராக்கள் செயல்படாமல் போய்விடுகின்றன.

    இதன் காரணமாக குற்றவாளிகளை அடையாளம் காண்பதும், குற்றசெயல்களில் ஈடுபடுத்தப்படும் வாகனங்களை கண்டுபிடிப்பதும் சிரமமான காரியமாகி விடுகிறது. ஆனால் ரோந்து வாகனங்களில் பொறுத்தப்படும் கேமராக்கள் மூலம் குறிப்பிட்ட பகுதிகளில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் மற்றும் சந்தேக நபர்களை துல்லியமாக படம் பிடிக்க முடியும். இதற்கான கட்டுப்பட்டு அறை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்படும். அங்கிருந்தபடியே கேமராவில் பதிவாகும் காட்சிகளை பார்க்கமுடியும் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இப்படி வாகனத்தின் வெளிப்பகுதியில் பொறுத்தப்பட்ட்டுள்ள கண்கானிப்பு கேமராக்கள் மூலமாக குற்றச்செயல்களை தடுக்க முடியும் என்பது இந்த கேமராக்களின் சிறப்பாக இருக்கும் நிலையில் வாகனத்தின் உள்ளே பொருத்தப்பட்டுள்ள கேமராவின் மூலமாக போலீசார் என்ன செய்கிறார்கள்? என்பதை ஆய்வு செய்யலாம். இதன் மூலம் அவர்கள் வாகனத்தின் உள்ளே வைத்து தவறு ஏதும் செய்கிறார்களா? என்பதும் தெரிய வந்துவிடும்.

    இதனால் போலீசார் தப்பு செய்யாமல் பணியாற்ற வாய்ப்பு ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து ரோந்து வாகனங்களில் கேமராக்களை பொருத்தும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

    • ஜெயங்கொண்டம் அருகே கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணியை டி.எஸ்.பி. தொடங்கி வைத்தார்
    • நாகல் குழி கிராமத்தில் உள்ள நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக கிராமம் முழுவதும் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்கள் மற்றும் முக்கிய வீதி உள்ளிட்ட இடங்களில் தவறுகள் நடப்பதை தடுப்பதற்கு அனைத்து கிராமங்களிலும் இளைஞர்கள், பொதுமக்கள் தாமாகவே முன்வந்து கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ் கான் அப்துல்லா இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

    அதன் அடிப்படையாக முன்னதாக வாரியங்காவல் கிராமத்தில் அனைத்து வீதிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு விட்டது. இரண்டாம் கட்டமாக நாகல் குழி கிராமத்தில் உள்ள நண்பர்கள் அறக்கட்டளை சார்பாக கிராமம் முழுவதும் 22 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஜெயங்கொண்டம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரம் தொடங்கி வைத்தார்.மேலும் அவர் பேசுகையில் தொடர்ந்து குற்ற செயல் நடைபெற்று வருவதாகவும் அதை தடுத்து நிறுத்த அனைத்து கிராமங்களிலும் கண்காணிப்பு கேமரா பொருத்த பட வேண்டும்.

    அப்படி பொருத்தினால் தான் குற்றங்களை நாம் தடுத்து நிறுத்த முடியும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா அறிவுறுத்தி வருவதாக அவர் பேசினார்.முன்னதாக உடையார்பாளையம் ஆய்வாளர் வேலுச்சாமி வரவேற்று பேசினார். இதில் ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி, நாகல் குழி நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் வீரமணி, செயலாளர் கார்த்திக், பொருளாளர் சின்னமணி மற்றும் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    • கடையின் வெளியே சாலைகள் தெரியும் அளவிற்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.
    • உங்களுக்கு ரவுடிகளால் ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று போலீசார் -வணிகர்கள் கலந்தாலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா தலைமை தாங்கி பேசியதாவது :-

    கடைகளில் யாராவது பொருட்கள் திருடுகிறார்களா என கண்காணிப்பதற்காக கடையின் உள்ளே கண்காணிப்பு கேமரா பொருத்தி உள்ளீர்கள். அதேபோல் கடையின் வெளியே சாலைகள் தெரியும் அளவிற்கு கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    அப்படி செய்தால் தான் மர்ம நபர்கள் எங்கிருந்து வருகிறார்கள் என கண்டுபிடிக்க முடியும். உங்களுக்கு ரவுடிகளால் ஏதாவது பிரச்சனை வந்தால் உடனே எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.

    உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். குற்றங்களை கட்டுப்படுத்த போலீஸ் சார்பில் குழு அமைக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து வணிகர்கள் கூறும்போது, போலீசாருக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிக்கிறோம். நகரில் இரவு நேரங்களில் அதிக அளவில் போலீசார் ரோந்து செல்ல வேண்டும்.

    மாநகரில் 1400 கண்காணிப்பு கேமரா பொருத்த உள்ளதாக கூறப்பட்டுள்ளது. உடனடியாக துரித நடவடிக்கை எடுத்து அந்த கேமராக்களை செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றனர்.

    • சமையல் அறையில் தூக்குப் போட்டு பிணமாக தொங்குவது தெரியவந்தது.
    • வீட்டில் உள்ள சி.சி.வி.டி. கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர்

    கன்னியாகுமரி

    திருவட்டார் அருகே உள்ள குமரன்குடி விளை, மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் பினோ. இவரது தாயார் ராஜாபாய் (வயது 67).

    இவர் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மன உளைச்சலில் இருந்து வந்தாராம். சம்பவத்தன்று ஸ்டாலின் பினோ மனைவியுடன் வெளியே சென்றார்.

    இதனால் ராஜாபாய் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார்.மாலையில் ஸ்டாலின் பினோ வீடு திரும்பிய போது, ராஜாபாய் அறையில் இல்லை. வீட்டில் தேடிய போது அவர் சமையல் அறையில் தூக்குப் போட்டு பிணமாக தொங்குவது தெரியவந்தது.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த ஸ்டாலின் பினோ திருவட்டார் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் வந்து உடலை கைப்பற்றினர். தொடர்ந்து விசாரித்த போது வீட்டின் அறையில் ஒரு கடிதம் எழுதி வைத்து இருந்தது தெரிய வந்தது.

    அதனை கைப்பற்றிய போலீசார், வீட்டில் உள்ள சி.சி.வி.டி. கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். ராஜாபாய் தற்கொலைக்கான காரணம் என்ன? என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நள்ளிரவு 2 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி பட்டர் பிளை மேம்பாலம் அருகே லாரிகள் வந்த போது, ஒரு லாரி பழுதாகி நின்று விட்டது. அவர்களில் ஒருவர் திடீரென காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர்.
    • சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் ஆய்வு செய்தனர். அதில் அங்குள்ள கேமரா பதிவில் சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வேகமாக தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

    அன்னதானப்பட்டி:

    திருச்சியில் இருந்து பெங்களூருவுக்கு சேலம் வழியாக காற்றாலை மின்சாரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் இறக்கைகளை ஏற்றிக் கொண்டு 2 லாரிகள் சென்று கொண்டிருந்தன. இந்த லாரிகளை கர்நாடகா மாநிலம், ஹசன் மாவட்டம், சென்னார்யாப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த டிரைவர் மோகன் (35) என்பவர் காரில் கண்காணித்த படி பின்னால் சென்றார். நள்ளிரவு 2 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி பட்டர் பிளை மேம்பாலம் அருகே லாரிகள் வந்த போது, ஒரு லாரி பழுதாகி நின்று விட்டது.

    இதையடுத்து 2 லாரிக–ளையும் சாலையோரமாக நிறுத்தி பழுதை சரி செய்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 3 நபர்கள் கார் டிரைவர் மோகனிடம் குடிக்க தண்ணீர் கேட்டதாக கூறப்படுகிறது. அவர் லாரியில் தண்ணீர் இருக்கி–றது, எடுத்து வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார்.

    அந்த சமயத்தில், அவர்களில் ஒருவர் திடீரென காரை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் செல்ல, அவரை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும் மின்னல் வேகத்தில் அங்கிருந்து சென்று விட்டனர். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி அதனடிப்படையில் ஆய்வு செய்தனர். அதில் அங்குள்ள கேமரா பதிவில் சிலர் மோட்டார் சைக்கிள் மற்றும் காரில் வேகமாக தப்பிச் செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

    • 46 இடங்களில் ரூ. 14 லட்சம் மதிப்பில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை நிறைவேற்றப்பட்டுள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா மையத்தை எஸ்பி திறந்து வைத்தார் திருத்துறைப்பூண்டி நகரப் பகுதியில் பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று நகராட்சி நிர்வாகமும், வர்த்தக சங்கமும் இணைந்து நகரம் முழுவதும் 46 இடங்களில் ரூ. 14 லட்சம் மதிப்பீட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

    இதனை கண்காணிக்க போலீஸ் நிலையத்தில் கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. கண்காணிப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம் வரவேற்றார்.

    மாரிமுத்து எம்.எல்.ஏ., நகர மன்ற தலைவர் கவிதா பாண்டியன் , வர்த்தக சங்கத் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கண்காணிப்பு மையத்தை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் திறந்து வைத்து பேசும்போது :-

    நகர சுற்று வட்டார பகுதிகளில் கண்காணிப்பு கேமரா கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது

    திருத்துறைப்பூண்டியில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த காவல்துறை சார்பில் போலீஸ் நிலையத்தில் நிறுத்து வாகனம் விரைவில் வழங்கப்பட உள்ளது.

    திருத்துறைப்பூண்டி நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை நிறைவேற்றப்பட்டுள்ளது .இதில் திருத்துறைப்பூண்டி காவல் நிலையம் இரண்டாகப் பிரிப்பதற்கு அரசுக்கு அறிக்கை அனுப்பப்படும் என்றார்.

    விழாவில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், நகராட்சி நியாயமான குழு உறுப்பினர் பாண்டியன், ஆணையர் அப்துல் ஹரிஷ், நகராட்சி பொறியாளர் பிரதன் பாபு ,நகராட்சி துணைத் தலைவர் ஜெயபிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் வீரசேகரன் , இன்ஸ்பெக்டர் கழனியப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

    • குற்ற தடுப்பு நடவடிக்கையாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
    • பனியன் கம்பெனிகள், அதிகமான மக்கள் குடியிருக்கும் பகுதியாகும்.

     பெருமாநல்லூர் : 

    திருப்பூரில் இருந்து பெருமாநல்லூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கணக்கம்பாளையம். இந்த நால் ரோடு சாலை மிகவும் முக்கியமான சந்திப்பு இடமாகும். பல பனியன் கம்பெனிகள், அதிகமான மக்கள் குடியிருக்கும் பகுதியாகும். இதை கருத்தில் கொண்டு குற்ற தடுப்பு நடவடிக்கையாக சுமார்ரூ .1 லட்சம் மதிப்புள்ள கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் போக்குவரத்து சீரமைப்பு மற்றும் குற்ற தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு மிகுந்த பயனுள்ளதாக உள்ளதாக பெருமாநல்லூர் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் முருகன் தெரிவித்துள்ளார்.

    • ஒருவரை ஒருவர் சரமாரியாக கத்தியில் மாறி மாறி குத்திக் கொள்கின்றனர்.
    • இந்த காட்சிகள் மருத்துவமனையில் உள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ளன.

    திருவாரூர்:

    திருவாரூர் விஜயபுரம் பகுதியில் அரசு தாய் சேய் நல மருத்துவமனை பல வருடங்களாகஇயங்கி வருகிறது.

    இந்த மருத்துவ மனையில் திருவாரூர் புது தெருவைச் சேர்ந்த 38 வயதான சுரேஷ் என்பவர் தனது மனைவி புவனேஷ்வரியை பிரசவத்தி ற்காக அனுமதித்துள்ளார்.

    அவருக்கு அங்கு நேற்று இரவு குழந்தை பிறந்து சிகிச்சையில் உள்ளார். இதன் காரணமாக சுரேஷ் அங்கு மருத்துவமனை வளாகத்தில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் திருவாரூர் புதுத் தேர்வை சேர்ந்த 55 வயதான கண்ணன் என்பவர்  அந்த மருத்துவமனை வளாகத்திற்கு தனது இரு சக்கர வாகனத்தில் வருகிறார்.

    அவர் வண்டியை நிறுத்துவதற்குள் சுரேஷ் அவரை வண்டியுடன் சேர்த்து தள்ளிவிட்டு தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அவரை சரமாரியாக குத்துகிறார்.

    இதில் நிலைத்தடுமாறிய கண்ணன் தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுரேஷை குத்துவதற்காக  முயன்றார்.

    இருவரும் ஒருவரை ஒருவர் தள்ளி விட்டு கட்டி புரண்டு கத்தியால் மாறி மாறி குத்தி கொள்கின்றனர்.

    இந்த காட்சிகள் மருத்துவம னையில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளன. தற்போது இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த மருத்துவமனை அரசு தாய் சேய் நல மருத்துவமனை என்பதால் பெண்கள் மட்டுமே அந்த நேரத்தில் மருத்துவமனைக்குள் இருந்துள்ளனர்.

    இதனால் செய்வதறியாது திகைத்த அவர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துவிட்டு மருத்துவமனையின் வாயிற் கதவை பூட்டியுள்ளனர்.

    இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த திருவாரூர் நகர காவல் துறையினர் இருவரையும் மீட்டு திருவாரூர் அரசு  மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

    காவல்துறையினரின் முதல் கட்ட விசாரணையில் சுரேஷ் என்பவரின்  மாமியாருக்கும் கண்ணன் என்பவருக்கும் தொடர்பு இருந்ததாகவும் அது குறித்து ஏற்பட்ட முன் விரோதத்தின் காரணமாக இருவரும் கத்தியால் மாறி மாறி குத்திக் கொண்டதாககவும் தெரியவந்துள்ளது.

    இது குறித்து மேலும் திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் போலீஸ் ஒருவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • பெண்கள் பெட்டியில் பயணித்த ஒருவரை வெளியேற்றிய போது பெண் போலீஸ் தாக்கப்பட்டார்.

    சென்னை:

    சென்னை-புறநகர் பகுதி மக்களை இணைக்கும் பாலமாக மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னையில் 4 வழித்தடத்தில் புறநகர் மின்சார ரெயில்கள் அதிகாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்படுகிறது.

    சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு, மூர்மார்க்கெட்-அரக்கோணம், மூர்மார்க்கெட்-கும்மிடிப்பூண்டி, கடற்கரை-வேளச்சேரி ஆகிய மார்க்கத்தில் தினமும் 680 ரெயில்கள் இயக்கப்படுகிறது. சுமார் 8 லட்சம் பயணிகள் மின்சார ரெயிலில் பயணம் செய்கிறார்கள். இதில் 3 லட்சம் பேர் பெண்கள்.

    மின்சார ரெயில்களில் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் பெண்கள் பெட்டியில் முன்பகுதியில் ஒரு பெண் போலீசும், பின்பகுதியில் ஒரு பெண் போலீசும் இரவு நேரத்தில் பணியில் இருந்து வருகிறார்கள்.

    ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் பெண் பயணிகளுக்கு பாதுகாப்பு அளித்து வரும் நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெண் போலீஸ் ஒருவரை கத்தியால் தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பெண்கள் பெட்டியில் பயணித்த ஒருவரை வெளியேற்றிய போது பெண் போலீஸ் தாக்கப்பட்டார்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து மின்சார ரெயில்களில் இரவு நேரத்தில் பயணிகளுக்கு பாதுகாப்பை தீவிரப்படுத்த ரெயில்வே நிர்வாகம் ஆலோசித்து வருகிறது.

    பாதுகாப்பில் ஈடுபடும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தங்களை தற்காத்து கொள்ள கூடுதலாக பாதுகாப்பு ஆயுதங்களை பயன்படுத்த அனுமதிக்கலாமா என்று ரெயில்வே பாதுகாப்பு படை உயர் போலீஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பெண்கள் பெட்டியில் பயணம் செய்யும் போது அசம்பாவித சம்பவங்கள் நடப்பதை தடுக்க கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிடப்பட்டுள்ளது. மின்சார ரெயில்களில் உள்ள அனைத்து பெண்கள் பெட்டியிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தினால் குற்ற நடவடிக்கைகளை கண்காணிப்பதோடு அதில் ஈடுபடக் கூடியவர்களை எளிதில் கண்டுபிடித்து தண்டிக்க முடியும்.

    அதன் அடிப்படையில் சி.சி.டி.வி. கேமரா அமைக்க ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. படிப்படியாக எல்லா மின்சார ரெயில்களிலும் கேமரா பொருத்துவதன் மூலம் பெண்கள் பாதுகாப்பு மேலும் பலப்படுத்த முடியும் என்று ரெயில்வே துறை கருதுகிறது.

    ×