என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாடகை"

    • நகராட்சிக்கு சொந்தமான சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
    • வாடகை செலுத்தாத 3 கடைகளை பூட்டி நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம் பகுதியில் நகராட்சிக்கு சொந்தமான சுமார் 80-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளது.

    இவற்றில் பல மாதங்களாக வாடகை செலுத்தாத கடை களில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி அலுவலர்களுடன் திடீர் ஆய்வு மேற்கொண்டார் அப்போது நகராட்சிக்கு வாடகை செலுத்தாத மூன்று கடைகளை பூட்டி நகராட்சி ஊழியர்கள் சீல் வைத்தனர்.

    நகராட்சி மேலாளர் (பொறுப்பு) ரமேஷ், இளநிலை உதவியாளர்கள் ராஜகணேஷ், மதுபாலா, ராஜரத்தினம், வருவாய் உதவியாளர் ரவி அலுவலக உதவியாளர் ஜானகிராமன் உடன் இருந்தனர்.

    • முன்னதாக தாங்கள் வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்.
    • மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ முரளி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பரமத்திவேலூர் போலீஸ் உட்கோட்ட எல்லைக்குட்பட்ட வேலகவுண்டன்பட்டி, நல்லூர், பரமத்தி, பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம் ஆகிய 5 போலீஸ் நிலைய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் தங்களுக்கு சொந்தமான வீடுகளில் புதிதாக வாடகைக்கு குடியமர்த்தும் நபர்கள் பற்றிய முழு விபரம் அறிந்து, அவர்களது ஆதார்கார்டு, ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை பெற்று முகவர்களை சரிபார்த்து குடியமர்த்த வேண்டும்.

    முன்னதாக தாங்கள் வாடகைக்கு குடியமர்த்தும் நபர்களின் ரேஷன் கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றின் நகல்களை கொண்டு வந்து அந்தந்த பகுதியில் உள்ள போலீஸ் நிலைய அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும். போலீசார் வாடகைக்கு குடியிருக்கும் நபர்களின் முழு விபரத்தை சேகரித்து தங்களுக்கு ஒப்புதல் அளித்த பிறகே அவர்களை வாடகைக்கு குடியமர்த்த வேண்டும்.

    மேலும் வாடகைக்கு குடியிருப்பவர்களின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பின் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பல்வேறு மாவட்டங்களில் இருந்து குற்றவாளிகள் பரமத்திவேலூர் தாலுகா சுற்றுவட்டார பகுதிகளுக்கு வந்து வாடகைக்கு வீடு மற்றும் தங்கும் விடுதிகளில் அறை எடுத்து தங்கி பகல் மற்றும் இரவு நேரங்களில் வீடுகள், நிதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்களை ரகசியமாக நோட்டமிட்டு பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு உள்ளது.

    எனவே பொதுமக்கள் போலீசாருக்கு ஒத்துழைப்பு அளித்து குற்ற நடவடிக்கைகள் குறித்து அந்தந்த பகுதி போலீஸ் நிலையங்களில் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

    வாடகைதாரர்கள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் நிலுவைத்தொகையாக கோடிக்கணக்கில் இருந்து வருகின்றது‌.

    கடலூர்:

    இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் மற்றும் ராஜகோபாலசாமி கோவில் இயங்கி வருகின்றது.பாடலீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமாக 139 கட்டிட மற்றும் மனை வணிக கட்டிடம், 26 மனை குடியிருப்புகள் உள்ளது. இதில் கட்டிடத்தில் ரூ.2 கோடி 11 லட்சத்து 47 ஆயிரமும், மனையில் ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்து 60 ரூபாயும் வாடகை செலுத்தாமல் நிலுவைத் தொகையாக உள்ளது.இதேபோல ராஜகோபாலசாமி கோவிலுக்கு சொந்தமாக கட்டிட மற்றும் மனை வணிக கட்டிடமாக 45 மற்றும் 6 மனை குடியிருப்பு உள்ளது. இதில் கட்டிட வணிகத்தில் ரூ.35 லட்சத்தில் 34 ஆயிரத்து 846, மனையில் ரூ.90 லட்சத்து 5 ஆயிரமும், மனை குடியிருப்பில் 2 லட்சத்து 60 ஆயிரத்து 968 ரூபாயும் வாடகை செலுத்தாமல் நிலுவைத் தொகையாக உள்ளது.

    இந்த நிலையில் இன்று காலை இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பரணிதரன் தலைமையில் வாடகைதாரர்களுடன் ஆலோசனை கூட்டம் கடலூரில் நடைபெற்றது.அப்போது பாடலீஸ்வரர் மற்றும் ராஜகோபாலசாமி கோவில் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கட்டிட வணிகம், மனை வணிகம் மற்றும் மனை குடியிருப்பில் உள்ள வாடகைதாரர்கள் பல ஆண்டுகளாக வாடகை செலுத்தாமல் நிலுவைத்தொகையாக கோடிக்கணக்கில் இருந்து வருகின்றது.ஆகையால் வருகிற ஒரு மாதத்திற்குள் வணிக பயன்பாட்டில் உள்ள வாடகைதாரர்கள் அனைத்து நிலுவைத் தொகையையும் முழுமையாக செலுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உத்தரவிடப்பட்டது. அப்போது பாடலீஸ்வரர் கோவில் செயல் அலுவலர் சிவக்குமார், ராஜகோபாலசாமி கோவில் சரவண ரூபன் மற்றும் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

    • அங்கு பட்டம் முடித்தவர்களுக்கு லட்சக்கணக்கில் ஊதியம் கிடைத்து வந்தது
    • 14 மணி நேரம் வேலை செய்தாலும் போதிய வருவாய் ஈட்ட வழியின்றி தவிக்கின்றனர்

    அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் உள்ள முன்னணி பல்கலைக்கழகங்களை சேர்ந்த கல்லூரிகளில் பட்டம் படித்தவர்களுக்கு உலகின் பல முன்னணி நிறுவனங்களில் லட்சக்கணக்கில் சம்பளம் தரும் வேலைவாய்ப்புகள் கிடைத்து வந்ததனால் அதிக பொருட்செலவையும் பொருட்படுத்தாமல் கல்வி பயில பல இந்திய மாணவ மாணவியர்கள் ஆண்டுதோறும் அங்கு செல்வது வழக்கம்.

    ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் சுமார் 20 ஆயிரம் மாணவ மாணவியர்கள் கனடாவில் படித்து பட்டம் பெற்று, அங்கேயே வேலை வாய்ப்புகளை பெற செல்கிறார்கள். இவர்கள் பெரும்பாலும் "ஸ்டெம்" (STEM) எனப்படும் விஞ்ஞானம், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகிய துறைகளிலும், வணிக நிர்வாக மேலாண்மை (MBA) துறையிலும் பட்டம் பெற அங்குள்ள பல்கலைக்கழகங்களில் சேர்பவர்கள்.

    இந்நிலையில், கனடாவின் தேசிய புள்ளிவிவர மையம் (National Statistical Agency) மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி கடந்த ஜனவரி மாதத்திலிருந்தே கனடாவில் வேலை வாய்ப்பு 61.8 சதவீதம் எனும் அளவிற்கு குறைந்துள்ளதாக தெரிகிறது. மேலும் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு மிக அதிகம் பேர் வேலை இழந்துள்ளனர்.

    இதன் காரணமாக அங்கு படிக்க சென்ற மாணவர்கள், "ஆட் ஜாப்ஸ்" (odd-jobs) எனப்படும் அதிக திறன் தேவைப்படாத, அதிக ஊதியம் வழங்காத சாதாரண வேலைகளை செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளதாக தெரிய வந்துள்ளது.

    தற்போது பட்டம் முடித்த பல இந்திய மாணவர்களுக்கு கனடாவில் உணவகங்கள், மின்னணு சாதன விற்பனை நிலையங்கள், மொபைல் விற்பனை கடைகள், அங்காடிகள் உள்ளிட்ட இடங்களில் குறைந்த வருமானத்தில் வேலை பார்த்தாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அவர்களில் பலர் ஒரு நாளைக்கு 14 மணி நேரம் வரை வேலை செய்தாலும் வாடகை, உணவு மற்றும் இதர செலவுகளுக்கு போதுமான வருவாய் ஈட்ட முடியாமல் தவிக்கின்றனர்.

    கடும் குளிர் பிரதேச நாடான கனடாவில் வேலைவாய்ப்புகள் குறைவதாலும், பட்டம் பெற பெரும் பணம் செலவழித்து வந்து விட்டதாலும், நாடு முழுவதுமே வேலைவாய்ப்புகள் குறைவதாலும் அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    • வீடியோ 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்து உள்ள நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
    • சில பயனர்கள் மோசமாக வடிவமைக்கப்பட்ட இந்த குடியிருப்புக்கு மாதம் ரூ.2 லட்சம் வாடகையா என விமர்சித்து வருகின்றனர்.

    உலகம் முழுவதும் பெரிய நகரங்களில் குடியிருப்புகளின் வாடகை மிகவும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் உள்ள ஒரு சிறிய ஸ்டூடியோ அடுக்குமாடி குடியிருப்புக்கு ரூ.2 லட்சம் மாத வாடகை என பரவும் வீடியோ இணைய பயனர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

    அந்த வீடியோவில் ஒரு கழிவறை இருக்கை வசதியற்ற முறையில் கை கழுவுதற்கு இல்லாமல் ஒரு பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. மிக சிறிய அடுக்குமாடி குடியிருப்பு என இன்ஸ்டாகிராமில் ரியல் எஸ்டேட் வியாபாரியான டேவிட் ஒகோச்சா என்பவரால் பகிரப்பட்ட இந்த வீடியோ 30 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை குவித்து உள்ள நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    சில பயனர்கள் மோசமாக வடிவமைக்கப்பட்ட இந்த குடியிருப்புக்கு மாதம் ரூ.2 லட்சம் வாடகையா என விமர்சித்து வருகின்றனர். ஒரு பயனர், நீங்கள் இதுவரை பார்த்திராத மிக மோசமான இடவடிவமைப்பு இதுதானா? என்று கேள்வி எழுப்பி உள்ளார். மற்றொரு பயனர், ஒரு நில உரிமையாளராக இது சட்டவிரோதமானது. இந்த நில உரிமையாளரை சிறையில் அடைக்க வேண்டும் என்று பதிவிட்டார். இதுபோன்று பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் சில நாட்கள் இந்த வீட்டில் தங்கி இருந்தார்.
    • இந்த ஆடம்பர பங்களா பொதுமக்கள் தங்குவதற்கு வாடகைக்கு விடப்படுகிறது.

    மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு சொந்தமான ஆடம்பர பங்களா கடற்கரை சாலையில் உள்ளது. பல்வேறு ஆடம்பர வசதிகளுடன் கூடிய இந்த வீடு அவரது மறைவுக்கு பின்பு போதிய பராமரிப்பின்றி இருந்து வந்தது.

    சென்னை வரும்போது ஸ்ரீதேவி அடிக்கடி இந்த வீட்டில் தங்கி செல்வார். அவர் வாங்கிய முதல் ஆடம்பர மாளிகையான இந்த வீட்டை உலகம் முழுவதும் உள்ள கலைப் பொருள்கள் மற்றும் ஓவியங்களால் அலங்கரித்து வைத்திருந்தார்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதேவி மூத்த மகள் ஜான்வி கபூர் சில நாட்கள் இந்த வீட்டில் தங்கி இருந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஜான்வி கபூர் தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.

    இந்நிலையில் இந்த ஆடம்பர பங்களா பொதுமக்கள் தங்குவதற்கு வாடகைக்கு விடப்படுகிறது.

    மே 12-ந் தேதி முதல் இதற்கான முன்பதிவு தொடங்க இருக்கிறது. இந்த ஆடம்பர வீட்டில் தென்னிந்திய உணவுகள் மற்றும் நெய் பொடி சாதம், பால்கோவா மற்றும் விருப்பமான சுவையான உணவு வசதிகள் தங்கும் விருந்தினர்களுக்கு கிடைக்கும்.

    இதுபற்றி ஜான்வி கபூர் கூறியதாவது:-

    எனது மிகவும் நேசத்துக்குரிய குழந்தை பருவ நினைவுகள் சென்னையில் உள்ள கடற்கரை சாலையில் எனது குடும்பத்துடன் கோடை காலத்தை கழித்தது என இந்த வீட்டை ஒரு சரணாலயம் போல் உணர்கிறேன். அந்த உணர்வை எனது ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

    அதனால்தான் முதன் முறையாக சில விருந்தினர்களுக்கு எங்கள் வீட்டை திறக்கிறேன். 4 ஏக்கரில் உள்ள இந்த வீட்டில் நீச்சல் குளம் வசதியும் உள்ளது. எங்கள் கடலோர வீட்டுக்கு தனிப்பட்ட சுற்றுலாவுக்கு உங்களை அழைத்து செல்கிறேன்.

    காலையில் யோகா மற்றும் அற்புதமான உணவை நீங்கள் அனுபவிப்பீர்கள் என்று கூறினார். ஜான்வி கப்பூர் நடித்த Mr & Mrs மஹி வரும் மே 31 வெளியாகவுள்ளது. தெலுங்கு மொழியில் ஜுனியர் என்.டி.ஆர் மற்றும் சைஃப் அலி கான் இணைந்து நடித்துள்ள தேவாரா படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நட்சத்திர பேச்சாளர்களுக்கு ஹெலிகாப்டர் தேவை கட்டாயமாகிறது.
    • தனியார் நிறுவனங்களால் வாடகை ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகிறது.

    திருப்பதி:

    பாராளுமன்றத் தேர்தலையொட்டி அரசியல் கட்சி முக்கிய பிரமுகர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். அவர்கள் மாநிலம் விட்டு மாநிலங்கள் செல்வதற்காக வாடகை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    நட்சத்திர பேச்சாளர்கள் ஒரு நாளைக்கு பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்வதால் ஹெலிகாப்டர் தேவை கட்டாயமாகிறது.

    இந்த பாராளுமன்றத் தேர்தலில் ஒரு நாளைக்கு ரூ.25 லட்சம் முதல் 30 லட்சம் வரை ஹெலிகாப்டர்களுக்காக அரசியல் கட்சிகள் செலவு செய்கின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஹெலிகாப்டர்களுக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ. 6.5 லட்சம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது. இது கடந்த தேர்தலை விட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளது.

    குறிப்பாக பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் அதிகளவில் வாடகை ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    தென் மாநிலங்களை பொருத்தவரை தெலுங்கானா மாநிலத்தில் தான் அதிக அளவில் பிரசாரத்திற்கு வாடகை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.

    மற்ற தென் மாநிலங்களில் இந்த அளவு ஹெலிகாப்டர்கள் பிரசாரத்திற்காக பயன்படுத்தப்படவில்லை. மும்பை, டெல்லி மற்றும் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனங்களால் வாடகை ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகிறது.

    பிரசாரத்தின் கடைசி நாள் வரை ஹெலிகாப்டர்கள் வாடகைக்காக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

    • பள்ளி செயல்பட போதிய கட்டிட வசதி இல்லாமல் தனியார் வாடகை கட்டிடத்தில் இருந்து வந்தது.
    • ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் கட்டும் பணி.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் எரவாஞ்சேரியில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கட்டிடம் 20 ஆண்டுகள் பழமையான சேதமடைந்த கட்டிடத்தில் இயங்கி வந்தது.

    இந்த நிலையில் சேதம் அடைந்த கட்டிடங்கள் இடிக்கப்பட்டது.

    அதனால் பள்ளி செயல்பட போதிய கட்டிட வசதி இல்லாமல் தனியார் வாடகை கட்டிடத்தில் இருந்து வந்தது.

    இந்த நிலையில் அதே இடத்தில் புதிய கட்டிடம் அமைக்க முகமது ஷாநவாஸ் எம்எல்ஏவிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    அதன்படி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-22 திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு வகுப்பறை கட்டிடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது.

    இந்நிகழ்ச்சிக்கு முகமது ஷாநவாஸ் எம்.எல்.ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் திருமருகல் திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் ரஜினிதேவி பாலதண்டாயுதம், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் மாவட்ட செயலாளர் கதிர்நிலவன், திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல், ஊராட்சி செயலர் மகேந்திரன், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பெண் புரோக்கர் கைது
    • ரூ 11,500 பணம் பறிமுதல்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் சைமன் நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் விபச்சாரம் நடப்பதாக நேசமணி நகர் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அந்த வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    அப்போது வீட்டில் இளம் பெண் ஒருவர் வாலிபருடன் அரைகுறை ஆடையுடன் இருந்தார். அவரை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அந்த பெண் குமரி மேற்கு மாவட்டம் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

    பிடிபட்ட வாலிபர் மண்டைக்காடு பகுதியைச் சேர்ந்த பிரவீன்சன் (வயது 38 )என்பதும் தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

    இதற்கு புரோக்கராக செயல்பட்ட வெட்டூர்ணிமடத்தை சேர்ந்த செல்வி என்பவரும் கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்ட செல்வியிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அங்கிருந்து ரூ 11,500 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

    பிடிபட்ட இளம்பெண்ணை காப்பகத்தில் ஒப்படைத்தனர் .இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு வீட்டை வாடகைக்கு எடுத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டுள்ளனர். செல்போன் மூலமாக வாலிபர்களை தொடர்பு கொண்டு வரவழைத்து உல்லாசம் அனுபவித்து வந்துள்ளனர்.

    ரூ.1000முதல் ரூ. 2000 வரை அழகியுடன் உல்லாசமாக இருப்பதற்கு பணம் கொடுத்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.

    மேலும் வேறு பகுதிகளில் இருந்தும் அழகிகள் சிலர் வந்து சென்றுள்ளனர். நேற்று முன்தினம் ஆசாரிப்பள்ளம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதியில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக மூன்று பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மேலும் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கோவில் நிா்வாகத்தின் நடவடிக்கையால் 7 போ் வாடகை செலுத்தினா்.
    • 14-ந் தேதி கடைகளை ஜப்தி செய்யஉள்ளதாக கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்,

    திருப்பூா் மாவட்டம், பெருமாநல்லூரில் பிரசித்தி பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு சொந்தமான காலி இடத்தில் 28 மளிகைக் கடைகள், தேநீா் கடைகள் செயல்பட்டு வந்தன.இவை கடந்த 2017ம்ஆண்டு காலி செய்யப்பட்டது.இருப்பினும் வாடகை பாக்கி ரூ.1 கோடியே 70 லட்சம் கோவிலுக்கு செலுத்தாமல் காலம் தாழ்த்தி வந்தனா்.

    கோவில் நிா்வாகத்தின் நடவடிக்கையால் 7 போ் வாடகை செலுத்தினா். 21 போ் ரூ.1 கோடியே 45 லட்சத்து 96ஆயிரத்து 841 செலுத்தாமல் உள்ளனா்.இதையடுத்து, வாடகை செலுத்தாத கடைகள் ஜப்தி செய்யப்படும் என்று கோயில் நிா்வாகம் சாா்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.இருப்பினும் கடை உரிமையாளா்கள் வாடகை பாக்கி செலுத்தாததால் நாளை 14-ந் தேதி கடைகளை ஜப்தி செய்யஉள்ளதாக கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×