search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றம்"

    • மேயர் மகேஷ் தகவல்
    • வேதநகர் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு மினி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் 52 வார்டுகளிலும் ஆய்வு பணியை மேற்கொண்டார்.

    இந்த நிலையில் வடசேரி பஸ் நிலையத்தில் நேற்று திடீர் ஆய்வு செய்தார். பீச் ரோடு பகுதியில் உள்ள வலம்புரி விளை குப்பை கிடங்கில் இன்று மேயர் மகேஷ் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள குப்பை களை அப்புறப்படுத்துவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண் டார். பின்னர் மேயர் மகேஷ் நிருபர்களிடம் கூறியதா வது:-

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. ஏற்கனவே நாகர் ேகாவில் நகரப்பகுதியில் சேகரிக்கப்படும் குப்பை கள் கொட்டப்பட்டு உள் ளது. இங்கு அடிக்கடி தீ விபத்துகளும் நடந்து வருவதால் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்த குப்பை கிடங்கை மாற்றவேண்டும் என்று பொதுமக்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் கோரிக்கை வைத்தனர்.

    இந்த குப்பை கிடங்கை மாற்ற அனைத்து நடவ டிக்கைகளும் மேற் கொள் ளப்பட்டு வருகிறது. ஏற்க னவே குப்பை கிடங்கில் உள்ள குப்பைகளை தரம் பிரித்து எடுக்க நடவடிக்கை மேற்கொண்டு உள்ளோம்.பிளாஸ்டிக் தவிர்த்து மற்ற குப்பைகளை உரமாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் இன்னும் ஆறு மாத காலத் திற்குள் இந்த குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

    நாகர்கோவில் நகரில் பொதுமக்களின் பிரச்சினை களுக்கு முன்னுரிமை அளித்து பல்வேறு பிரச்சி னைகளை தீர்க்க நடவ டிக்கை மேற்கொண்டு வரு கிறோம். கழிவுநீர் ஓடைகள் அனைத்தும் சீரமைக்கப் பட்டு வருகிறது. பொது மக்க ளுக்கு தங்கு தடை யின்றி குடிநீர் வழங்கவும் நடவடிக்கை மேற் கொண்டு வருகிறோம். விரைவில் புத்தன் அணை குடிநீர் திட்டம் மக்களின் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத் தொடர்ந்து வி.என். காலனி பகுதியில் உள்ள பூங்காவை ஆய்வு செய்த மேயர் மகேஷ் அந்த பூங்காவை உடனடியாக சீரமைக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு உத்தர விட்டார். இதைத்தொடர்ந்து வேதநகர் பகுதியில் இருந்து நாகர்கோவிலுக்கு மினி பஸ் போக்குவரத்தை தொடங்கி வைத்தார்.

    ஆய்வின் போது மண்டல தலைவர் ஜவகர், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சதாசிவம், உதயநிதி ஸ்டாலின் நற்பணி மன்ற தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், கவுன்சிலர் ஸ்டாலின் பிரகாஷ் மற்றும் ஷேக் மீரான் உள்பட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    • நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது.
    • போக்குவரத்து மாற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியில் இருந்து நாளை (சனிக்கிழமை) திருவிழா முடியும் வரை அமலில் இருக்கும்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கோட் டார் புனித சவேரியார் பேராலய 10 நாள் திருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி தொடங்கியது. இன்று (வெள்ளிக்கிழமை) 9-ம் நாள் திருவிழா நடைபெறு கிறது. நாளை (சனிக்கி ழமை) திருவிழா நிறைவ டைகிறது. இந்த திருவிழா வில் 8, 9, 10-ம் நாட்களின் போது ஏராளமான மக்கள் வருவார்கள். இதனால் ஆலய வளாகத்திலும், கேப் ரோட்டிலும் மக்கள் கூட் டம் அதிகமாக இருக்கும். இதனால் போக்குவ ரத்து நெசரிசல் ஏற்படும். என வே 9, 10-ம் நாள் திரு விழா க்களி ன்போ து போலீ சார் போ க்கு வரத்து மாற் றம் செய்வது வழக்கம். அதேபோல் இந்த ஆண் டும் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நாகர் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது

    நாகர்கோவில் கோட்டார் புனித சவேரியார் ஆலய திருவிழாவை முன் னிட்டு பொதுமக்கள் மற் றும் போக்குவரத்து நலன் கருதி போக்குவரத்து மாற் றம் செய்யப்படுகிறது. கன் னியாகுமரி, இருளப்பபுரம் மற்றும் ஈத்தாமொழியில் இருந்து பீச்ரோடு வழியாக நாகர்கோவில் வரும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதையாக ஆயுதப் படை முகாம் ரோடு பொன்னப்ப நாடார் காலனி, கார்மல் பள்ளி, ராமன்புதூர், செட்டிக்குளம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    வடசேரி, கோர்ட்டு ரோடு மற்றும் அண்ணா பஸ் நிலை யத்தி லிருந்து கன்னியாகுமரி, அஞ்சுகிராமம், பறக்கை, இருளப்பபுரம் மற் றும் ஈத்தாமொழி மார்க்க மாக செல்லும் அனைத்து வாகனங்களும் வேப்பமூடு சந்திப்பு. பொதுப்பணித் துறை அலுவலக சாலை வழியாக செட்டிக்குளம் -சந் திப்பு.இந்து கல்லூரி சாலை, பீச்ரோடு சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

    இந்த போக்குவரத்து மாற்றம் இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 1 மணியில் இருந்து நாளை (சனிக்கிழமை) திரு விழாமுடியும் வரை அமலில் இருக்கும். இந்த போக்குவ ரத்து மாற்ற த்திற்கு பொதுமக் களும், வாகன ஓட்டுனா களும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கெள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.

    • அப்டா மார்க்கெட் வழியாக பஸ்கள் இயக்கம்
    • ரூ.1.40 கோடி செலவில் சீரமைப்பு

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் நகருக்கு புத்தன் அணையிலிருந்து பைப் லைன் மூலமாக கிருஷ்ணன் கோவிலில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டு தண்ணீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதற்காக சாலைகள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைக்கப்பட்டு உள்ளது‌. பைப் லைன்கள் அமைக்கப்பட்ட சாலை கள் குண்டும் குழியுமாக காட்சியளித்து வருகிறது. அதை சீரமைக்க நெடுஞ்சா லைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    தற்பொழுது அசம்பு ரோடு பகுதியில் சாலை சீரமைக்க ரூ.1 கோடியே 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதற்கான பணிகள் இன்று தொடங் கப்பட்டது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சாலை கள் தோண்டப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    சாலை சீரமைப்பு பணியை மேயர் மகேஷ் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின்போது தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன் மற்றும் நெடுஞ் சாலை துறை அதிகாரிகள், தி.மு.க. நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

    சாலை சீரமைப்பு பணி தொடங்கப்பட்டதையடுத்து அசம்பு ரோட்டில் போக்கு வரத்து மாற்றி விடப்பட்டு உள்ளது.சாலையின் குறுக்கே தடுப்பு வேலிகள் அமைத்து சாலை முழுவதுமாக மூடப்பட்டுள்ளது. அங்கு போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அசம்பு ரோட்டில் செல்லும் அனைத்து வாகனங்களும் மாற்று பாதை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. நாகர்கோவில் வடசேரியில் இருந்து செல்லும் அனைத்து பஸ்களும் ஒழுங்கினசேரி அப்டா மார்க்கெட் வழியாக நாற்கரசாலையில் சென்று புத்தேரிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் புத்தேரியில் இருந்து வரும் பஸ்கள் அனைத்தும் நாற்கரசாலை வழியாக வந்து அப்டா மார்க்கெட் ஒழுகினசேரி வழியாக வடசேரிக்கு வருகிறது.

    போக்குவரத்து நெருக்கடியை கருத்தில் கொண்டு இந்த சாலை பணியை விரைந்து முடிக்க ஒப்பந்தக்காரர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இரவு பகலாக இந்த பணியை முடிக்க உள்ளதாக அவர் தெரிவித்தார்.

    • தென்காசி, நெல்லை மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது.
    • தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

    நாகர்கோவில்:

    முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி எம். எல்.ஏ.வுமான தளவாய் சுந்தரம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    நாகர்கோவில் ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரியில் இயங்கி வந்த பொதுப்பணித்துறை உதவிசெயற்பொறியாளர் அலுவலகம், பூதப்பாண்டி கட்டிடபிரிவு உதவி பொறியாளர் அலுவலகம் ஆகியவை பராமரிப்புக்கு என்று தென்காசி மாவட்டம் ஆலங்கு ளம் பகுதிக்கு மாற்றப்பட்டுள்ளது. இதே போன்று தக்கலையில் இயங்கி வந்த கட்டிட பிரிவு அலுவலகம் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதிக்கு மாற்றம் செய்யப் பட்டுள்ளது.

    தமிழக பொதுப்பணித்து றையில் கட் டிடஅமைப்பு உருவாக்கப்பட்டபோது, குமரி மாவட்டத்தில் ஒரு கோட்டம், 4 உப கோட்டம் மற்றும் 10 பிரிவு அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவை அரசு கட்டிடங்களை பராமரிப்பு செய்து வருவ துடன், புதிய கட்டிடங்க ளையும் கட்டி வருகிறது.

    இந்த அலுவலகங்கள் குமரி மாவட்டத்தில் இருந்து மாற் றப்படுவதால் ஒரு உதவி செயற்பொறியாளர் பணியிடம், 3 உதவி பொறி யாளர் இளம் பொறியாளர், ஒரு கண்காணிப் பாளர், ஒரு உதவியாளர் பணியிடம் போன்றவை இந்தமாவட் டத்தில் இருந்து பறிபோய் விடுகிறது. இதனைக் கருத் தில் கொண்டு, குமரி மாவட்டத்தில் இயங்கி வந்த அலுவலகங்களை பிற மாவட்டங்களுக்கு மாற்றுவதற்கு பிறப்பிக்கப் பட்ட அரசு உத்தரவை உடனே ரத்து செய்ய வேண் டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    மேலும் இது குறித்து பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. கடிதம் அனுப்பியுள்ளார்.

    • திருச்சி டி.எஸ்.பி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்
    • ஆபாச பட விவகாரத்தில் சிக்கியவர்

    திருச்சி

    திருச்சி சரக காவல்துறையினருக்கு என தனி வாட்ஸ் அப் குரூப் செயல்பட்டு வருகிறது. இதில் காவல்துறை தொடர்பான செய்திகள் படங்கள் பரிமாறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அந்தக் குழுவில் பெண் இன்ஸ்பெக்டர் ஒருவருடன்,

    ஜீயபுரம் டி.எஸ்.பி. யாக பணியாற்றி வரும் பர வாசுதேவன் நிர்வாணமாக இருக்கும் படம் ஒன்று பகிரப்பட்டது. இதை கண்ட காவலர்கள், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அந்த குழுவில் இணைந்திருக்கும் பெண் காவலர்கள் பலரும் டிஜிபிக்கு புகார்களை அனுப்பினர். இதனையடுத்து காவல்துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி உண்மை தன்மையை கண்டறிந்து இது குறித்த விசாரணை அறிக்கையை டிஜிபிக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் புகாருக்கு உள்ளான பெண் ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டார்.

    மேலும் டிஎஸ்பி பரவாசு தேவனை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி தமிழக டிஜிபி சைலேந்திரபாபு உத்தர விட்டுள்ளார். டிஎஸ்பி பரவாசுதேவன் காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதால் குற்றப்பிரிவு டிஎஸ்பி ஜெயசீலன் ஜீயபுரம் டிஎஸ்பிஆக கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.

    • குடிநீர் குழாய் பதிக்கும் பணி தொடக்கம்
    • வாகனங்கள் மாற்று பாதை வழியாக இயக்கம்

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் மாநகராட்சிக்கான புதிய குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

    இதையடுத்து சாலையின் நடுவே பைப் லைன்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது.90 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது குடிநீர்திட்ட பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. அந்த பணி களை துரிதமாக முடிக்க மேயர் மகேஷ் உத்தரவிட்டு உள்ளார். இதனால் குடிநீர் பைப் லைன்கள் பதிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது.

    வடசேரி அண்ணா சிலை சந்திப்பிலிருந்து புத்தேரி சிபிஎச் மருத்துவமனை வரை குடிநீர் குழாய் பதிக் கும் பணிகளை மேற் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இதையடுத்து பஸ் போக்குவரத்தை மாற்றி விட போக்குவரத்து போலீ சார் நடவடிக்கை மேற் கொண்டனர். இன்று காலை முதல் அந்தச் சாலையில் பஸ் போக்குவரத்து மாற்றி விடப்பட்டது. வடசேரியில் இருந்து புத்தேரி வழியாக செல்லும் அனைத்து பஸ் களும் வடசேரி சந்திப்பில் இருந்து ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் வழியாக நாற்கர சாலை சென்று புத்தேரி செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    வடசேரி அண்ணா சிலை பகுதியில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து சாலை மூடப்பட்டிருந்தது. போக்குவரத்து போலீசார் அந்த பகுதியில் போக்கு வரத்து நெருக்கடி ஏற்படாத வகையில் போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடு பட்டு இருந்தனர். இருப்பி னும் காலை நேரத்தில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    இதே போல் பூதப் பாண்டி, திட்டுவிளை, துவரங்காடு வழியாக வடசேரி பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள், வாகனங்கள் புத்தேரி நான்கு வழி சாலை வழியாக அப்டா மார்க்கெட் வந்து வடசேரிக்கு சென்றது. இந்த போக்குவரத்து மாற்றம் குடிநீர் பைப் லைன்கள் அமைக்கும் பணி முடியும் வரை அமலில் இருக்கும் என்று போக்கு வரத்து போலீசார் தெரி வித்துள்ளனர்.

    போக்குவரத்து மாற்றப்பட்டதையடுத்து சாலை நடுவே குடிநீர் பைப் லைன் அமைப்பதற்கு பள்ளங்கள் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. ஜே.சி.பி. எந்திரம் மூலமாக சாலை நடுவே பள்ளங்கள் தோண்டப்பட்டு பைப் லைன்கள் அமைப்பதற்கான பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    • மதுரை கோட்டத்தில் ரெயில்கள் புறப்படும் நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • புதிய ரெயில் கால அட்டவணை அமலுக்கு வருகிறது.

    மதுரை

    மதுரை கோட்டத்தில் இன்று (1-ந் தேதி) முதல் புதிய ரெயில் கால அட்டவணை அமலுக்கு வருகிறது. சில ரெயில்களின் புறப்படும் நேரம், மாற்றம் செய்யப்படுகிறது.

    தூத்துக்குடி சிறப்பு ரெயில் (06668) நெல்லையில் இருந்து காலை 7.35 மணிக்கு பதில் காலை 7.30 மணிக்கும், மணியாச்சி சிறப்பு ரெயில் (06671) தூத்துக்குடியில் இருந்து காலை 8.30 மணிக்கு பதில் காலை 8.25 மணிக்கும், மற்றொரு மணியாச்சி சிறப்பு ரெயில் (06847) தூத்துக்குடியில் இருந்து இரவு 10.45 மணிக்கு பதில் இரவு 10.10 மணிக்கும், புவனேஸ்வர் விரைவு ரெயில் (20895) ராமேசுவரத்தில் இருந்து காலை 8.50 மணிக்கு பதில் காலை 8.40 மணிக்கும் புறப்படும்.திருப்பதி விரைவு ரெயில் (16780) ராமேசுவரத்தில் இருந்து மாலை 4.30 மணிக்கு பதில் மாலை 4.20மணிக்கும், தஞ்சை வழியாக இயக்கப்படும் சென்னை எழும்பூர் விரைவு ரெயில் (16852), ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.25 மணிக்கு பதில் மாலை 5.20 மணிக்கும், மதுரை சிறப்பு ரெயில் (06656) ராமேசுவரத்தில் இருந்து மாலை 6.05 மணிக்கு பதில் மாலை 6 மணிக்கும், திருச்சி வழியாக இயக்கப்படும். கோவை விரைவு ரெயில் (16617) ராமேசுவரத்தில் இருந்து இரவு 7.25 மணிக்கு பதில் இரவு 7.10 மணிக்கும், சென்னை விரைவு ரெயில் (22662) ராமேசுவரத்தில் இருந்து இரவு 8.25 மணிக்கு பதில் இரவு 8.20 மணிக்கும் புறப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • நாமக்கல் மின் பகிர்மான வட்டம், பரமத்தி வேலூர் கோட்டம், கபிலர்மலை உட்கோட்டத்திற்குட்பட்ட மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகங்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் பரமத்தியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் செயல்பட உள்ளது.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மின் பகிர்மான வட்டம், பரமத்தி வேலூர் கோட்டம், கபிலர்மலை உட்கோட்டத்திற்குட்பட்ட பரமத்தி உதவி பொறியாளர் அலுவலகம் தற்போது பரமத்தியிலிருந்து கபிலர் மலைசெல்லும் சாலையில் உள்ள அழகு நாச்சியம்மன் கோவில் பின்புறம் அமைந்துள்ள தனியார் கட்டிடத்தில் இயங்கி வருகிறது. நிர்வாக காரணங்களுக்காக இன்று(சனிக்கிழமை) முதல் மின்வாரிய உதவி பொறியாளர் அலுவலகம் பரமத்தியிலிருந்து நாமக்கல் செல்லும் சாலையில் செயல்பட உள்ளது.

    அதேபோல் கபிலர்மலை உதவி பொறியாளர் அலுவ லகம் தற்போது இயங்கி வரும் கட்டிடத்திலிருந்து கபிலர்மலையில் இருந்து பாண்டமங்கலம் செல்லும் சாலையில் உள்ள கபிலர்மலை துணை மின் நிலைய வளாகத்தில் செயல்படும். எனவே பொதுமக்கள் இந்த அலுவலகங்களை பயன்படுத்திக் கொள்ளுமாறு பரமத்தி வேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் கூறியுள்ளார்.

    • பிரகதாம்பாள் கோவில் மேற்பார்வையாளர் மாற்றம் செய்யப்பட்டார்
    • தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை திருக்கோர்ணத்திலுள்ள பிரகதாம்பாள் கோவிலில் கடந்த 31-ந்தேி ஆடித்தேரோட்டத்தின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோவிலின் மேற்பார்வையாளராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்த மாரிமுத்து தந்போது அந்த பொறுப்பிலிருந்து மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மேலும 50 கோவில்களுக்கு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கோவிலின் மேற்பார்வை பணிகளை தற்போது தட்சிணாமூர்த்தி என்பவர் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • மதுரை வழியாக செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் எண்கள் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    ராமேசுவரம்- ஐதராபாத், செகந்திராபாத் - ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரெயில்களின் எண்கள் முறையே 07686, 07685 ஆக இருந்தன.

    அதன்படி வெள்ளிக்கிழமைகளில் ராமேசுவரத்தில் இருந்து புறப்படும் ஐதராபாத் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை (புதிய வண்டி எண்: 07696) வருகிற டிசம்பர் 30-ம் தேதி வரை சேவை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    அடுத்தபடியாக புதன்கிழமைகளில் செகந்திராபாத்தில் இருந்து புறப்படும் ராமேசுவரம் வாராந்திர சிறப்பு ரெயில் சேவை (புதிய வண்டி எண் 07695) வருகிற டிசம்பர் 28-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

    திருநெல்வேலி- மேட்டுப்பாளையம் வாராந்திர சிறப்பு ரெயில் மட்டும் போத்தனூரில் நின்று சென்றது. தற்போது பயணிகளின் வசதிக்காக, ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் மேட்டுப்பாளையம்- நெல்லை வாராந்திர சிறப்பு ரெயிலும் போத்தனூரில் நின்று செல்லும்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே செய்தி தொடர்பு அலுவலகம் தெரிவித்து உள்ளது.

    • தமிழகத்தில் விரைவில் மாற்றங்கள் வரும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் பேட்டி அளித்துள்ளார்.
    • இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் சூறையாடப்படுகிறது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் காந்தி சிலை ரவுண்டானாவில் சென்னை மாகாண முதல்வராக இருந்த குமாரசாமி ராஜா சிலைக்கு இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

    விஷ்வ இந்து பரிசத் அமைப்பின் தலைவர் சரவண கார்த்திக், மாநில துணை தலைவர் குணசீலன், மாவட்ட தலைவர் லெனின், மாவட்ட அமைப்பாளர் சிவா, அமைப்பு குழு தலைவர் பொன்னுச்சாமி, வடக்கு ஒன்றிய தலைவர் சிவசக்தி மற்றும் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அர்ஜுன் சம்பத் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய சுதந்திர அமுத விழாவை முன்னிட்டு இந்து மக்கள் கட்சி சார்பில் ஜூலை-15 முதல் ஆகஸ்டு 15 வரை சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் தியாகிகளை போற்றும் வகையில் நினைவிடங்களில் மரியாதை செய்து வருகிறோம்.

    முன்னாள் சென்னை மாகாண முதல்வர் பி.எஸ். குமாரசாமிராஜா பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.அமைச்சர் அன்பில் மகேஷ்பொய்யாமொழி ஆசிரியர்களை மிரட்டும் நோக்கத்துடன் செயல் படுபவதை கைவிட வேண்டும். இந்துக்கள் நடத்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் சூறையாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் நடந்தும் பள்ளிகளில் தவறு நடந்தால் யாரும் கண்டு கொள்வதில்லை.

    சபாநாயகர் அப்பாவு அனைத்து மதத்தினருக்கும், அனைத்து சமுதாயத்திற்கும் பொதுவானவர். அவர் கிறிஸ்தவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மற்ற மதத்தினரை படிப்பறிவு இல்லாதவர்கள் என கூறுவது நல்லதல்ல.

    தமிழகம் முழுவதும் பா.ஜ.க., இந்து அமைப்புகள் நடத்துகிற நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுப்பது, தடை விதிப்பது நல்லதல்ல. எங்களுடைய கருத்துரிமை, பேச்சுரிமையை பறிக்க கூடாது. எங்கள் மீது தடைகள் விதிப்பதை ஜனநாயக முறைப்படி எதிர்கொள்வோம். தமிழகத்தில் வெகு சீக்கிரத்தில் மாற்றங்கள் வரும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மேற்கு மண்டலத்தில் சரகங்கத்தில் 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 16 இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
    • 48 இன்ஸ்பெக்டர்களுக்கு மாறுதல் செய்து கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவிட்டார்.

    கொண்டலாம்பட்டி:

    மேற்கு மண்டலத்தில் உள்ள கோவை, சேலம் சரகங்கள் கோவை, சேலம், திருப்பூர், மாநகர பகுதிகளுக்கு 48 இன்ஸ்பெக்டர் களுக்கு மாறுதல் செய்து கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகர் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் சேலம் மாநகரத்திற்கு இன்ஸ்பெக்டர்கள் தூத்துக்குடி வடக்கு காவல் நிலையம் முருகன்,சென்னை அயனாவரம் காவல் நிலையம் செல்வராஜ்,மேற்கு மண்டல காத்திருப்போர் பட்டியலில் இருந்த விஜதரண்,சசிகலா, திண்டுக்கல் மாவட்டம் மோகன்பாபு கண்ணா,நீலகிரி மாவட்டம் நடுவட்டம் காவல் நிலையம் சண்முகசுந்தரம்,கோவை மாநகர காவல் இருந்து விக்னேஸ்வரன், ஆனந்,ஆகிய 8 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் சேலம் சரகத்திற்கு 16 இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரும் விரைவில் பொறுப்பேற்க உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×