search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாற்றம்"

    • சூலூர் ரெயில் நிலையங்களுக்கு செல்லும் ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
    • 3 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை தாமதமாக ரெயில் இயக்கப்படுகிறது.

    திருப்பூர்:

    கோவை-சேலம் முன்பதிவில்லா பயணிகள் ரெயில் (எண்.06802) கோவை, வடகோவை, பீளமேடு, சிங்காநல்லூர், இருகூர், சூலூர் ரெயில் நிலையங்களுக்கு செல்லும் ரெயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி கோவையில் காலை 9.05 மணிக்கும், வடகோவைக்கு 9.12 மணிக்கும், பீளமேடுக்கு 9.19 மணிக்கும், சிங்காநல்லூருக்கு காலை 9.24 மணிக்கும், இருகூருக்கு 9.30 மணிக்கும், சூலூருக்கு 9.37 மணிக்கும் வந்து செல்லும். அதாவது முந்தைய நேரத்தை விட 3 நிமிடம் முதல் 5 நிமிடம் வரை தாமதமாக ரெயில் இயக்கப்படுகிறது.

    இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • ரெயில்வே மேம்பால பணிக்காக சேலம் முள்ளுவாடி 2-வது கேட்டில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
    • ரெயில்வே உயர்மட்ட மேம்பாலத்தையொட்டி இணைப்பு பாலம் சேர்க்க வேண்டும்.

    சேலம்:

    சேலம் -விருத்தாசலம் வழித்தடத்தில் தினசரி 10-க்கும் மேற்பட்ட பயணிகள் ரெயில், சரக்கு ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயங்கி வருகிறது. இந்த ரெயில்கள் வரும்போது முள்ளுவாடிகேட், அணைமேடு, தில்லைநகர், பொன்னம்மாப்பேட்டை, அம்மாப்பேட்டை மிலிடெரிரோடு, அயோத்தியாப்பட்டணம் உள்பட பல பகுதிகளில் கேட்டுகள் மூடப்படுகிறது.

    இவ்வாறு கேட்டுகள் மூடப்படும்போது, அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முள்ளுவாடி 2-வது கேட்டிலும் ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதை பரிசீலித்த அரசு கடந்த 2016-ம் ஆண்டு முள்ளுவாடி 2-வது கேட்டில் மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கியது. தற்போது மேம்பாலப் பணி 80 சதவீதம் நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள பணிகளையும் முடிக்க நெடுஞ்சாலைத்துறை மும்முரமாக செயல்பட்டு வருகிறது.

    ரெயில்வே உயர்மட்ட மேம்பாலத்தையொட்டி இணைப்பு பாலம் சேர்க்க வேண்டும். இப்பணிக்காக முள்ளுவாடி 2-வது கேட்டில் தடுப்புகள் அமைத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    பிரட்ஸ்ரோட்டில் இருந்து ஆனந்தாபாலத்திற்கு செல்லும்ரோடு தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டுள்ளது. அவ்வழியாக செல்லும் வாகனங்கள் இனிமேல் சுந்தர்லாட்ஜ் வந்து அைணமேடு வழியாக செல்லும் வகையிலும், அதேபோல் ஆனந்தாபாலம் வழியாக முள்ளுவாடிகேட்டுக்கு வரும் வாகனங்கள், டவுன் ரெயில் நிலையத்தை யொட்டி பாரதியார் சிலை ரோட்டில் சென்று திருவள்ளுவர் சிலை வழியாக செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

    • சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
    • தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    ஓமலூர்-மேட்டூர் அணை பகுதியில் தண்டவாள பராமரிப்பு பணி நடைபெறுவதால் நாளை 27-ந் தேதி ரெயில் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி எர்ணாகுளம்-கே.எஸ்.ஆர்.பெங்களூரு செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.12678) நாளை 27-ந் தேதி காலை 9.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்பட்டு சேலம், திருப்பத்தூர், பங்கார்பேட்டை, பையப்பனகள்ளி வழியாக மாற்று வழித்தடத்தில் இயக்கப்படும். அந்த ரெயில் வழக்கமாக செல்லும் தர்மபுரி, ஓசூர், கார்மேளரம் வழியாக செல்லாது.இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • பல வகையான மரங்கள், பறவைகள் கூடு கட்டவும், ஓய்வெடுக்கவும் வசதியாக உள்ளன.
    • பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, கல்வியல் சார்ந்த படிப்புகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

    உடுமலை:

    உடுமலை அருகே திருமூர்த்திமலையிலிருந்து வெளியேறும் தண்ணீரை சேமித்து வைத்து, விவசாயத்திற்கு பயன்படுத்த முற்காலத்தில் ஏழு குள பாசனம் ஏற்படுத்தப்பட்டது.வரிசையாக ஏழு குளங்கள் அமைந்திருக்கும் இப்பாசனத்திட்டத்தில் பெரியகுளத்தின் நீர்த்தேக்க பரப்பு 404 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது.

    இக்குளத்தில் ஆண்டு முழுவதும் தண்ணீர் நிறைந்திருப்பது, சீதோஷ்ண நிலை, அமைதியான சூழல், பறவைகளுக்குத்தேவையான மீன், புழுக்கள் உள்ளிட்ட உணவு கிடைப்பதால் பல்வேறு வகையான பறவையினங்கள் வாழ்வதற்கான சூழல் உள்ளது. குளத்தின் கரை மற்றும் நீர்த்தேக்க பரப்பில் வளர்ந்திருக்கும் பல வகையான மரங்கள், பறவைகள் கூடு கட்டவும், ஓய்வெடுக்கவும் வசதியாக உள்ளன.

    இதனால் ஆண்டுதோறும் ஏழு குளங்களுக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.பல்வேறு வகையான உள்நாட்டு பறவைகள் வலசை போதல் நிகழ்வாக ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரை இப்பகுதியில் தங்கிச்செல்கின்றன. பெரியகுளத்தில், மஞ்சள்மூக்குநாரை, நீர்க்காகம், நத்தைகொத்தி, முக்குளிப்பான், கூழைக்கடா போன்ற பறவையினங்கள் வந்து கூடு கட்டி இனப்பெருக்கம் செய்து வருகின்றன.இவ்வாறு அரிய வகை பறவையினங்கள் தங்கினாலும், பல்வேறு இடையூறுகள் காரணமாக பறவைகள் பாதிக்கப்படும் நிலை உள்ளது.

    இடம் பெயர்ந்து வரும் பறவைகள் குறித்து தெரியாமல், அவற்றை விரட்டும் பணியிலும் பலர் ஈடுபடுகின்றனர்.இதனால் பறவைகளின் இயல்பான சுழற்சி வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாகிறது. மேலும் பெரியகுளத்தில், பறவைகள் கூடு கட்டாத சில மரங்களும் அதிகரித்துள்ளன.இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக ஏழு குள பகுதியை பறவைகள் சரணாலயமாக அறிவித்து பாதுகாக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது குறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது:- உள்நாட்டில் இடம் பெயரும் தன்மையுள்ள பறவையினங்கள் ஏராளமாக இப்பகுதிக்கு வந்து செல்கின்றன. பறவைகள் இக்குளங்களில் கூடு கட்டி வசிக்கும் வகையில், அவை விரும்பும் மரங்களை குளக்கரையில் நடவு செய்யலாம்.இதனால், குளக்கரைகள் வலுப்படுவதுடன், மரங்களில் பறவைகள் நிரந்தரமாக தங்கும் வாய்ப்புள்ளது.பறவைகள் சரணாலயமாக மாற்றி மேம்படுத்தினால், இயற்கை மீதான ஆர்வத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த முடியும்.

    பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு, கல்வியல் சார்ந்த படிப்புகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.உடுமலை பகுதிகளில, பொழுதுபோக்கு அம்சங்கள் இல்லாத நிலையில் பெரியகுளத்தை மேம்படுத்தி நடைபாதை, பூங்கா, படகுசவாரி உள்ளிட்ட பொழுதுபோக்கு அம்சங்களை நிறைவேற்றினால் சுற்றுலா மையமாக மாறும்.எனவே பல்வேறு வகையான இயற்கை சூழல் மேம்பாட்டுப்பணிகளை மேற்கொள்ள ஏழு குள பகுதியை பறவைகள் சரணாலயமாக அரசு அறிவித்து வனத்துறை வாயிலாக பாதுகாக்க வேண்டும் என்றனர். 

    • 20-ந் தேதி காலை 9.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும்.
    • சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர்:

    சேலம் ரெயில் நிலையத்துக்கும் மேக்னசைட் சந்திப்புக்கும் இடையே பாலப்பணிகள் நடைபெறுவதால் நாளை 20-ந் தேதி கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல் மார்க்கமாக செல்லும் ரெயில்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி ஆழப்புலாதன் பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.13352)நாளை 20-ந் தேதி காலை 6 மணிக்கு ஆலப்புழாவில் புறப்படும். இது வழக்கமான நேரத்தை விட 3 மணி நேரம் தாமதம் ஆகும்.

    எர்ணாகுளம் கே.எஸ்.ஆர். பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 12678) 20-ந் தேதி காலை 9.10 மணிக்கு எர்ணாகுளத்தில் இருந்து புறப்படும். இது 3 மணி நேரம் தாமதம் ஆகும். கோவை-சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 12244) 20-ந் தேதி மதியம் 3.05 மணிக்கு கோவையில் புறப்படும். இது வழக்கமான நேரத்தை விட 1 மணி நேரம் தாமதம் ஆகும். கோவை-சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.12676) கோவையில் 20-ந் தேதி மதியம் 3.15 மணிக்கு புறப்படும். இது 1 மணி நேரம் தாமதம் ஆகும். நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண். 16340) வருகிற 20-ந் தேதி நாகர்கோவிலில் காலை 6 மணிக்கு புறப்படும். இது 2 மணி நேரம் தாமதம் ஆகும். ஜோலார்பேட்டை-ஈரோடு சிறப்பு ரெயில் (எண்.06411) ஜோலார்பேட்டையில் 20-ந் தேதி மதியம் 3.10 மணிக்கு ஜோலார்பேட்டையில் புறப்படும். இது 1 மணி நேரம் தாமதம் ஆகும். ராஜ்கோட்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (எண்.16613) கோவைக்கு வருகிற 20-ந்தேதி இரவு 9.30 மணிக்கு வந்து சேரும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சேலம் வழியாக செல்லும் ரெயில்கள் பாலம் பராமரிப்பு பணி நடைபெறுவதால் நேரம் மாற்றப்பட்டது.

    சேலம்:

    சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்திற்கும் மேக்னசைட் ரெயில் நிலையத்திற்கும் இடையே உள்ள பகுதியில் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) பாலம் கட்டுமான பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி அன்று சேலம், ஈரோடு, கோவை வழியாக மற்றும் சேலம், கரூர், நாமக்கல் வழியாக செல்லும் ரெயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டு ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

    அதன்படி ஆலப்புழாவில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ஆலப்புழா- தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயில் (13352) 3 மணி நேரம் காலதாமதமாக ஆலப்புழாவில் இருந்து புறப்படும்,

    எர்ணாகுளம் ரயில் நிலையத்திலிருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட வேண்டிய எர்ணாகுளம்- பெங்களூர் எக்ஸ்பிரஸ் (12678) ரெயில் 3 மூன்று மணி நேரம் காலதாமதமாக புறப்படும். கோவையில் இருந்து பிற்பகல் 3.05 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை- சென்னை சென்ட்ரல் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்(12244) ஒரு மணி நேரம் காலதாமதமாக புறப்படும்.

    கோவையில் இருந்து பிற்பகல் 3.15 மணிக்கு புறப்பட வேண்டிய கோவை- சென்னை சென்ட்ரல் கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் (12676) 1 மணி நேரம் காலதாமதமாக புறப்படும். நா கர்கோவில்-மும்பை சி.எஸ்.எம்.டி. எக்ஸ்பிரஸ் ரெயில் (16340) நாகர்கோவில் ரெயில் நிலையத்திலிருந்து காலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய ரெயில் 2 மணி நேரம் கால தாமதமாக புறப்படும்.

    ஜோலார்பேட்டையில் இருந்து பிற்பகல் 3.10 மணிக்கு புறப்பட வேண்டிய ஜோலார்பேட்டை-ஈரோடு முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் (06411) ரெயில் 1 மணி நேரம் காலதாமதமாக புறப்படும். மேலும் ராஜ்கோட்- கோவை எக்ஸ்பிரஸ் ரயில் (16613) 40 நிமிடம் காலதாமதமாக இரவு 9.30 கோவை ரயில் நிலையம் சென்றடையும்.

    இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • ஈரோடு மாநகரில் காளைமாடு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    • அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதை வழியாக செல்ல கட்டாயம் அனுமதி இல்லை.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

    ஈரோடு மாநகரில் காளைமாடு சிலை அருகில் உள்ள ரெயில்வே நுழைவு பாலம் மிகவும் சேதமடைந்துள்ளது. இதனால் நாளை (19-ந் தேதி) முதல் ரெயில்வே நுழைவு பாலத்தை சீரமைக்கும் பணி நடைபெறுவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    இதில் கரூர், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் காங்கேயத்திலிருந்து ஈரோடு வரும் அனைத்து பஸ்கள் மட்டும் அண்ணமார் பெட்ரோல் பங்க் வந்தடைந்து நாடார் மேட்டிலிருந்து இடது புறமாக திரும்பி ரீட்டா பள்ளி, சாஸ்திரி நகர் மற்றும் ரெயில்வே மேம்பாலம் வழியாக வந்து சென்னிமலை ரோடு வழியாக மாநகர் பகுதியை அடையலாம்.

    இதேபோல் ஈரோட்டில் இருந்து கரூர், மூலனூர், வெள்ளகோவில், தாராபுரம் மற்றும் காங்கேயத்திற்கு செல்லும் அனைத்து வாகனங்களும் வழக்கம் போல் காளைமாடு சிலை, லோட்டஸ் ரவுண்டானா வழியாக செல்லலாம்.

    அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகளும் ரிங்ரோடு வழியாக முத்துகவுண்டன் பாளையம், ஆணைக்கல்பாளையம், ரங்கம்பாளையம் ஆர்ட்ஸ் காலேஜ் வழியாக திண்டல் வந்தடைந்து மாநகருக்குள் செல்லலாம்.

    இதேபோல் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் லாரிகள் மாற்று பாதையான அண்ணமார் பெட்ரோல் பங்க், நாடார் மேடு, சாஸ்திரி நகர் வழியாக செல்ல கட்டாயம் அனுமதி இல்லை.

    இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • ராமநாதபுரம் மாவட்டத்துக்கு புதிய கலெக்டர் நியமனம் செய்யப்பட்டார்.
    • கடந்த 2 ஆண்டுகளில் 4 கலெக்டர்கள் மாற்றப்பட்டு, 5-வதாக ஜானி டாம் வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டராக இருந்த சங்கா் லால்குமாவத் மாற்றப்பட்டார். புதிய கலெக்டராக ஜானி டாம் வா்கீஸை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்களாக வீரராகவ ராவ், சந்திரகலா, தினேஷ் பொன்ராஜ் ஆலிவா், சங்கா் லால் குமாவத் ஆகியோா் பணியாற்றினா். தற்போது ஜானி டாம் வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளாா்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் 4 கலெக்டர்கள் மாற்றப்பட்டு, 5-வதாக ஜானி டாம் வா்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×