என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாய்க்கால்"
- தஞ்சையில் இருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
- அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை தூர்ந்து போய் அடர்ந்த புதர்கள் மண்டி உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா தலைமை தாங்கினார். மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
அப்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் பாலு, ஒன்றிய நிர்வாகி திருநாவுக்கரசு ஆகியோர் புதர்மண்டிய கோரைப் புற்களுடன் வந்து மனு கொடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- தஞ்சையில் இருந்து நாகை செல்லும் தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இந்த சாலையின் இருபுறங்களிலும் இருந்து வந்த வடிகால் வாய்க்கால் அம்மாபேட்டையில் இருந்து பல்லவராயன்பேட்டை வரை தூர்ந்து போய் அடர்ந்த புதர்கள் மண்டி உள்ளது.
இதனால் மழைக்கா லங்களில் தண்ணீர் வடிவதில் தேக்கம் ஏற்பட்டு நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே உடனடியாக போர்க்கால அடிப்படையில் இந்த வாய்க்கால்களை தூர்வார வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கோரைப்புற்களுடன் கலெக்டரிடம் மனு கொடுத்த வந்த விவசாயிகள்
- திருப்பழனம் ஓடம் போக்கி பாசன வாய்க்கால்கள் தலா 300 ஏக்கர் பரப்பளவுக்கு மேலான நஞ்சை விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன ஆதாரமாக விளங்குகிறது.
- கல்லணைக்கு அருகில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றுக்கு அருகில் உள்ள பல பாசன வாய்க்கால்களை தண்ணீர் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
திருவையாறு:
திருவையாறு அருகே திருப்பழனம் ஊராட்சியில் காவிரி ஆற்றிலிருந்து பிரிந்து கும்பகோணம் மெயின்ரோடின் குறுக்கே செல்லும் திங்களூர் முனியாண்டவன் கோவில் பாசன வாய்க்கால் மற்றும் திருப்பழனம் ஓடம் போக்கி பாசன வாய்க்கால்கள் தலா 300 ஏக்கர் பரப்பளவுக்கு மேலான நஞ்சை விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன ஆதாரமாக விளங்குகிறது.
ஆனால் இந்த மெயின் பாசன வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தண்ணீர் போகாதவாறு புதர் மண்டிக் கிடக்கிறது. மேலும் இப்பாசன வாய்க்கால்களிலிருந்து பிரிந்து செல்லும் கிளை வாய்க்கால்கள் தூர்வாரப்படாமல் தூர்ந்து போய் உள்ளது. தற்போது குறுவை பாசனத்துக்காக கல்லணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் டெல்டா மாவட்டங்களில் ஆங்காங்கே குறுவை சாகுபடி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். 2 நாட்களில் மயிலாடுதுறை, நாகை உள்ளிட்ட கடைமடை பகுதிகளை காவிரிநீர் சென்றடைந்து விட்டது.
ஆனால் கல்லணைக்கு அருகில் பெருக்கெடுத்து ஓடும் காவிரி ஆற்றுக்கு அருகில் உள்ள பல பாசன வாய்க்கால்களை தண்ணீர் சென்றடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. காவிரி ஆற்றுப் பாசன நீரை மட்டுமே நம்பி நெல் பயிர் செய்யும் விவசாயிகள் இந்த பாசன வாய்க்கால்களை முழுமையாக தூர்வாரி குறுவை சாகுபடியை விரைவாக தொடங்க அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்