search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவதி"

    • தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால், மழையால் அந்த இடம் சேரும் சகதியுமாக மாறி உள்ளது.
    • சுவாமிமலை மெயின் ரோட்டில் தனியார் கல்லூரி வாகனம் பின்புற டயர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

    சுவாமிமலை:

    திருவைகாவூர் கொள்ளி டம் ஆற்றில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்ட பணிகளுக்காக சுவாமிமலை வழியாக வேதாரண்யம் வரை குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகின்றன.

    இதற்கான பணிகள் ஒரு சில இடங்களில் முடிவு பெற்ற நிலையில் தோண்டப்பட்ட பள்ளம் சரியாக மூடப்படாததால், மழையால் அந்த இடம் சேரும் சகதியுமாக மாறி உள்ளது.

    இந்நிலையில், கும்பகோணம்- திருவை யாறு சாலையில் சுவாமிமலை மெயின் ரோட்டில் தனியார் கல்லூரி வாகனம் பின்புறடயர் பள்ளத்தில் சிக்கிக் கொண்டது.

    சுமார் 2 மணி நேரம் போராடி அந்த வாகனத்தை மீட்டனர்.

    இதனால் கும்பகோணம்- திருவையாறு சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.

    அதனை தொடர்ந்து அங்கு வந்த கனரக லாரி ஒன்றும் மாட்டிக் கொண்டது.

    இதனால் சாலையில் பள்ளம் பெரிய பள்ளமாக மாறி உள்ளது.

    இதனை அறிந்த சுவாமிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சுவாமிமலை பேரூராட்சி தலைவர் வைஜெயந்தி சிவகுமார், துணைத்தலைவர் சங்கர், பேரூராட்சி செயல் அலுவலர் உஷா மற்றும் பணியாளர்கள் போர்க்கால அடிப்படையில் சாலையில் ஏற்பட்ட பள்ளத்தை சீரமைத்தனர்.

    போர்க்கால அடிப்படையில் நடைபெற்ற இப்பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    • ஈரோடுக்கு பஸ் வசதி இல்லாததால் தொழிலாளிகள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது.
    • இதனால் இரவு 9 மணிக்கு மேல் ஈரோட்டிற்கு பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் தொழிலாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் பகுதி பல்வேறு தொழில் நிறுவனங்களை கொண்ட நகரமாக விளங்குகிறது. இங்கு பணிபுரிய பல்வேறு இடங்களில் இருந்து வருகின்றனர்.இவர்கள் பணி முடிந்து இரவு வீட்டிற்கு திரும்ப இரவு 9 மணிக்கும் மேல் ஆகிறது.

    அந்த நேரத்தில் பஸ் வசதி இல்லாததால் தொழிலாளிகள் தங்கள் பகுதிகளுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்படுகிறது. குமாரபாளையத்தில் முன்பெல்லாம் இரவு 11 மணி வரைக்கும் ஈரோடுக்கு பஸ் சென்று வந்தது.

    இப்போது இரவு 9 மணிக்கு மேல் பஸ் இல்லை.இரவு 9 மணிக்கு குமாரபாளையம் பஸ் நிலையத்தில் 3 அரசு டவுன் பஸ்கள் ஒரே நேரத்தில் வருகிறது. பயணிகள் ஏற முயற்சித்தால் பஸ்கள் டெப்போவிற்கு போகிறது, யாரும் ஏறாதீர்கள் என்று கூறிவிட்டு பஸ்களை எடுத்து சென்று விடுகிறார்கள்.

    இதனால் பயணிகள் தவிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படுகிறது. எனவே பொதுமக்கள், தொழிலாளர்களின் சிரமத்தை போக்கும் வகையில் குமார பாளையத்தில் இருந்து இரவு 9 மணிக்கு மேல் ஈரோட்டிற்கு பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும் தொழிலாளர்களும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

    • இந்த கடையில் மது வாங்கி குடிப்பவர்கள் அந்த வழியாக செல்லும் பொதுமக்களை கேலிக் கிண்டல் செய்து வந்தனர்.
    • டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அப்பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மாட்டு மேஸ்திரி சந்து, சுல்தானியப்பா சந்து உள்ளது.

    இந்த பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது.

    இந்த கடையில் மது வாங்கி குடிப்பவர்கள் அந்த வழியாக செல்லும் பொது மக்களை கேலிக் கிண்டல் செய்து வந்தனர்.

    இதனால் இந்த டாஸ்மாக் கடையை கடந்து செல்லவே பொதுமக்கள் அச்சப்பட்டனர்.

    மேலும் அப்பகுதியில் உள்ள வியாபாரிகளும் அவதி அடைந்தனர்.

    இதனால் இந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

    ஆனால் டாஸ்மாக் கடை அகற்றப்படவில்லை.

    இதனால் ஆத்திரமடைந்த வியாபாரிகள், பொதுமக்கள் இன்று வணிகர் சங்க நிர்வாகி வாசு, தமிழக மக்கள் வாழ்வுரிமை இயக்க தலைவர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் அந்த டாஸ்மாக் கடை முன்பு திரண்டனர்.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சமரச பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இதையடுத்து வியாபாரிகள் அங்கிருந்து புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க சென்றனர்.

    இதற்கிடையே டாஸ்மாக் கடையை அகற்ற கோரி அந்தப் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் அந்த பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

    மேலும் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல இயலாமல் சிரமமடைகின்றனர்.
    • மாற்றுவழி சாலை இல்லாத காரணத்தினால் பயணிகள் பெரிதும் அவதிக்குள்ளாகிறார்கள்.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலம் அடுத்துள்ள சன்னாநல்லூரில், நன்னிலம் ரெயில்வே ஸ்டேஷன் அமைந்துள்ளது. ரெயில் நிலையத்திற்கு அருகில், கும்பகோணம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலை அமைந்துள்ளது. நெடுஞ்சாலையில் ரெயில்வே கேட் அமையப் பெற்றுள்ளது.

    காலை, மாலை நேரங்களில், ரெயில் போக்குவரத்திற்காக, ரெயில்வே கேட் மூடப்படும் போது, சாலை மார்க்க பயணிகள், பெரிதும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

    கும்பகோணம் மற்றும் நாகப்பட்டினத்திற்கு செல்லக்கூடிய பயணிகள், உரிய நேரத்திற்கு அலுவலகம் மற்றும் வங்கிகளுக்கு செல்ல இயலாமல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி வாகனங்கள், உரிய நேரத்திற்கு செல்ல இயலாமல் சிரமம் அடைகின்றனர்.

    மேலும் ரெயில் வருகைக்காக, சில நேரங்களில் நீண்ட நேரம், ரெயில்வே கேட் மூடப்படுவதால், அவசரப் பயணம் மேற்கொள்ளக் கூடிய பயணிகள், பெரிதும் அவதிக்கு உள்ளாகிறார்கள். சாலைக்கு மாற்று வழி சாலை இல்லாத காரணத்தினால் பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகிறார்கள்.

    கும்பகோணம் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலை என்பது இரு பெரும் நகரங்களில் உள்ள பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்லக்கூடிய பயணிகள், பயணிக்கும் சாலையாக இருப்பதனால் இச்சாலையில் சன்னாநல்லூர் ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டுமென நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.

    நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாகி வரும் நிலையில், இச்சாலையில் வாகனப் போக்குவரத்தில் பெருக்கம் அதிகமாக உள்ள காரணத்தினாலும், காலை மாலை நேரங்களில், ரெயில் போக்குவரத்திற்காக கேட் மூடும் போது பெரும் வாகன நெருக்கடி ஏற்பட்டு பயணிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.

    எனவே சன்னாநல்லூர் ரெயில்வே கேட் அருகில், ரயில்வே பாதையை எளிதில் கடக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவையிலிருந்து தினமும் காலை 8.50 மணிக்கு புறப்படும்.
    • ரெயிலில் அதிக அளவிலான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    பின்னலாடை நகரான திருப்பூரில் வெளி மாவட்ட மற்றும் மாநிலங்களில் இருந்து அதிக அளவிலான தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக அவர்கள் அதிக அளவில் ெரயில் மூலமாகவே தங்களது சொந்த ஊருக்கு பயணித்து வருகின்றனர். இந்த நிலையில் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையிலிருந்து தினமும் காலை 8.50 மணிக்கு புறப்பட்டு திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, பெங்களூரு, ஸ்ரீ சத்ய சாய் பிரசாந்தி நிலையம், அனந்தபூர், மந்திராலயம் ரோடு, ராய்ச்சூர், கங்காபூர் ரோடு, சோலாப்பூர், பூனே வழியாக லோகமான்ய திலக் வரை இந்த ெரயில் செல்லும். இந்த ெரயிலில் அதிக அளவிலான பயணிகள் பயணித்து வருகின்றனர்.

    வடமாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வந்த மழை காரணத்தால்இந்த ரெயிலுக்கான இணைப்பு ெரயில் வருவதில் தாமதமானது. இதனால் தொடர்ந்து 3-வது நாளாக இன்றும் குர்லா எக்ஸ்பிரஸ் ரெயில் தாமதமாக வந்து கொண்டிருக்கிறது. வழக்கமாக காலை 8.50 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட வேண்டிய ெரயில் இன்று மதியம் 2 மணிக்கு புறப்பட்டு திருப்பூருக்கு 2.45 மணிக்கு வந்து 2.47 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். நேற்று 13 மணி நேரம் தாமதம், நேற்று முன்தினம் 3½ மணி நேரம் தாமதமாக கோவையில் இருந்து புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த ெரயிலில் கோவையில் இருந்து திருப்பூருக்கு பணிக்கு வரும் தொழிலாளர்களும் பயணிக்கிறார்கள். ரெயில் தாமதத்தால் தொழிலாளர்கள், பயணிகள், பொதுமக்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.  

    • சேதமடைந்த சாலைகளில் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து முக்கிய சாலைகளை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மதுரை

    மதுரையில் சேதம் அடைந்த சாலைகளில் மண்ணை போட்டு நிரப்புவதால் அந்த பகுதி தூசு மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.

    மதுரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. மதுரை நகர் பகுதியில் தல்லாகுளம், விமான நிலையம், இடையபட்டி, மதுரை வடக்கு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவு கன மழை பதிவாகியுள்ளது.

    இந்த நிலையில் சில நாள் பெய்த கனமழையால் மதுரையின் பல பகுதிகளில் சாலைகள் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றது. மேலும் மதுரை மாநகராட்சியின் விரிவாக்கப் பகுதிகளான திருப்பரங்குன்றம், அவனியாபுரம், பெருங்குடி, தபால் தந்தி நகர், ஆனையூர், திருப்பாலை உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய சாலைகள் மட்டுமின்றி வீதிகளிலும் செல்ல முடியாத நிலையில் பள்ளம், மேடாக காட்சி அளிக்கிறது.

    தற்போது பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்கும் பகுதிகளில் உள்ள வீதிகளில் தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் பெரிய அளவில் பள்ளங்களும் ஏற்பட்டுள்ளன. இதனால் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் கார்களில் செல்ல முடியாமல் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சில இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளதால் பொதுமக்கள் நடந்து செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    மதுரையில் பீபீகுளம் சந்திப்பில் சில மாதங்களாகவே சாலை மிகவும் பழுதடைந்து பரிதாபமாக காட்சி அளிக்கிறது. ஒவ்வொரு வாரமும் அந்த பகுதியில் மண்ணை கொண்டு சரி செய்வதால் சாலைகளில் பஸ், லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்கள் செல்லும்போது அதிக அளவில் தூசி மண்டலம் ஏற்படுகிறது. இதனால் பின்னால் இருசக்கர வாகனத்தில் செல்லும் மக்கள் கடும் பாதிப்படைகிறார்கள்.

    இதுபோல தல்லாகுளம், கோரிப்பாளையம், பைபாஸ் ரோடு, பெரியார் பஸ் நிலையம், தெப்பக்குளம், வில்லாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் மணல் குவியல் அகற்றப்படாமல் உள்ளன. இதனால் அந்த சாலைகளிலும் தூசி பரவல் அதிகரித்துள்ளது.

    மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து முக்கிய சாலைகளை உடனடியாக சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களில் மண்ணை கொண்டு மூடுவதை தவிர்த்து தார் மற்றும் ஜல்லி கலவையை அந்த இடங்களில் நிரப்பினால் மீண்டும் சாலைகள் பழுதாகாமலும், அதிக அளவில் தூசி எழும்பாமலும் இருக்கும் என்பதும் பொதுமக்களின் கருத்தாக உள்ளது.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பொதுமக்கள் போக்குவரத்திற்கு வசதியாக தரமான சாலைகளை அமைத்து தர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் சாலைகளில் தேங்கியுள்ள மணல் குவியல்களை கூடுதல் பணியாளர்களை கொண்டு உடனடியாக அப்புறப்படுத்தவும் மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    • 2 கி.மீ. தூரத்துக்கு மேல் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில் படு மோசமாக சாலைகள் உள்ளது.
    • ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் சாமுண்டிபுரம் செல்லக்கூடிய சாலை போக்குவரத்து முக்கி–யத்துவம் வாய்ந்ததாகும். குமார் நகரில் தொடங்கி சாமுண்டிபுரம் வரை உள்ள குடியிருப்புகளில் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். குமார் நகர் பள்ளிக்கூடம், செல்லம்மாள் காலனி பள்ளிக்கூடம் மற்றும் தனியார் மருத்துவம–னைகளும் இந்த பகுதியில் உள்ளன. பெரும்பாலும் பனியன் தொழிலாளர்கள் குடும்பங்களும், தினசரி கூலி வேலை செய்யும் தொழிலாளர் குடும்பங்களும் இப்பகுதியில் வசித்து வருகின்றனர்.

    திருப்பூர் வீரபாண்டியில் இருந்து 15 வேலம்பாளையம் வரை செல்லக்கூடிய 1 ஏ/பி என்ற வழித்தடப் பேருந்து இந்த வழியில் இயங்கி வந்தது. அத்துடன் காவிலிபாளையம் மற்றும் வஞ்சிபாளையம் செல்லக்கூடிய சில பேருந்துகளும் இவ்வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்தன. ஆனால் கொரோனா பொது முடக்கத்தின்போது 2020-ம் ஆண்டு மார்ச் 25-ம் தேதி முதல் அனைத்து போக்குவரத்தும் நிறுத்தப்பட்ட நிலையில் இந்த சாலையிலும் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. அதன் பிறகு தற்போது வரை 27 மாதங்களுக்கு மேலாக பேருந்து போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்த சாலையில் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்ட 4- குடிநீர் திட்டம் மற்றும் பாதாளச் சாக்கடை அமைப்பதற்காக குழாய்கள் பதிக்கும் பணியை மேற்கொண்டதே ஆகும். இத்தகைய பணிகள் செய்தால் முடிந்தவுடன் சாலைகளைச் செப்பனிட வேண்டும். ஆனால் இந்த சாலையில் 2 கி.மீ. தூரத்துக்கு மேல் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையில், படு மோசமாக குண்டும், குழியுமாக உள்ளது. கற்கள் பெயர்ந்து சிதிலமடைந்து காணப்படுகிறது. மக்கள் நடந்து செல்வ தற்குக்கூட மிகவும் சிரமப்பட வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக கடந்த மாமன்ற கூட்டத்தில், இப்பகுதியைச் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் ரவிச்சந்திரன், நாகராஜ், குணசேகரன், தங்கராஜ் உள்ளிட்டோர் சரமாரியாக கேள்வி எழுப்பினர். 2 ஆண்டு காலமாக போக்குவரத்து முடங்கியிருக்கும் நிலையில் இந்த சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என வலியுறுத்தினர். மாநகராட்சி நிர்வாகம் மெத்தனப் போக்கை கடைபிடிக்காமல், அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் இந்த பகுதியில் மீண்டும் பேருந்து போக்குவரத்து நடைபெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை விரைந்து செய்ய வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தினர். ஆனால் தொடர்ந்து அதே நிலை நீடிப்பது பொதுமக்களை வேதனையில் ஆழ்த்தி உள்ளது.

    திருப்பூர் மாநகராட்சி 57-வது வார்டு திருக்குமரன் நகர் 1-வது வீதியில் சாக்கடை வசதி இல்லாததால் அப்பகுதி பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறும்போது," எங்கள் பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. ஆனால் சாக்கடை வசதி இல்லை. இதனால் வீட்டின் கழிவுநீர் அனை–த்தும் வீதிகளில் தேங்கி, சுகாதாரமற்ற நிலை நிலவுகிறது. நாள்தோறும் தேங்கிநிற்கும் நீரில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி கொசுத்தொந்தரவு மற்றும் துர்நாற்றம் உள்ளிட்டவை ஏற்படுகிறது. ஆகவே எங்கள் பகுதியில் சாக்கடை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்" என்றனர்.

    • அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சிகள் சேலம்–-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளன.
    • பெரும்பாலான தனியார் பஸ்கள் புறவழிச்சாலையில் இயக்கப்படுவதும், வாழப்பாடி பகுதி பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மறுப்பதும் தொடர்ந்து வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப் பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சிகள் சேலம்–-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளன. இந்த 4 பேரூராட்சிகளும் அருகிலுள்ள கிராம மக்களின் போக்குவரத்துக்கு முக்கிய மையமாக விளங்கி வருகின்றன.

    சேலம் –ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான தனியார் பஸ்கள், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, புத்திர–கவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் காரிப்பட்டி ஆகிய ஊருக்குள் செல்வதில்லை. சேலம்-சென்னை புறவழிச்சாலையிலேயே இயக்கப்படுகின்றன.

    இதனால், சேலம் மற்றும் ஆத்தூர் பஸ் நிலையங்களில், இப்பகுதியைச் சேர்ந்த பயணி–களை ஏற்ற மறுக்கின்றனர். இதனால், குறித்த நேரத்திற்கு பயணிக்க முடியாமல் இப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வாழப்பாடி வட்டாட்சியர், மோட்டார் வாகன ஆய்வாளர், தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து 3 ஆண்டுக்கு முன் அமைதிக்குழு கூட்டி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    சேலம்-–ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஊருக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல நடவடிக்கை எடுப்பதென இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    ஆனால், சேலம் மற்றும் ஆத்தூர் பஸ் நிலையங்களில் இருந்து பெரும்பாலான தனியார் பஸ்கள் புறவழிச்சாலையில் இயக்கப்படுவதும், வாழப்பாடி பகுதி பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மறுப்பதும் தொடர்ந்து வருகிறது. இதனால், சேலம்– ஆத்தூர் வழித்தடத்திலுள்ள பேரூராட்சிகள் மற்றும் கிராமப்புற பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே, சேலம் –ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் புறவழிச்சாலையில் இயக்கப்படுவதை தடுக்கவும், இந்த வழித்தடத்திலுள்ள அனுமதிக்கப்பட்ட பஸ் நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்–செல்வதற்கும், வருவாய்த்துறை, போக்கு–வரத்துத்துறை, காவல்த்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • மதுரையில் நேற்று கனமழை பெய்தது.
    • சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதியடைந்தனர்.

    மதுரை

    தமிழகத்தில் தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையாக வெயில் தாக்கம் இருந்து வந்தது. இதனால் பகல் நேர வெப்பமும் அதிகமாக இருந்து வருகிறது.

    இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் மதுரையில் கரு மேகங்கள் திரண்டு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதனால் மதுரை நகர் பகுதியில் அனைத்து சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அழகர் கோவில், கடச்சநேந்தல், திருப்பரங்குன்றம், விளாங்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் மழை காரணமாக சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது.

    திருப்பரங்குன்றத்தில் உள்ள ெரயில்வே சுரங்க பாதையில் மழை வெள்ளம் குளம் போல தேங்கியது.இதனால் அந்த வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

    சுமார் 1 மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை காரணமாக சில இடங்களில் மின் தடையும் ஏற்பட்டது. கடந்த சில நாட்களாக வெயில் காரணமாக அதிக வெப்பம் இருந்த நிலையில் நேற்று திடீரென பெய்த கன மழை காரணமாக மதுரையில் குளிர்ந்த காற்று வீசி இதமான சூழ்நிலை நிலவி வருகிறது.

    • விருதுநகரில் முன்னறிவிப்பில்லாத மின்தடை ஏற்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் மாதத்தில் ஒரு நாள் மின் பாதை பராமரிப்பு பணிக்காக ஒவ்வொரு மின் கோட்டத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இதற்காக காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை இருக்கும் என அறிவிக்கப்படுகிறது. ஆனால் அன்றைய நாளில் பல நேரங்களில் மாலை 5 மணிக்கு தான் மின்விநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக முறையான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வந்தன.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மின்தடை அறிவிப்பில் ஏற்பட்ட குளறுபடியால் திடீர் திடீரென மின்தடை ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள், வியாபாரிகள், குடும்ப பெண்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.

    விருதுநகர் நகர் பகுதியில் இன்று குறிப்பிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் விருதுநகர் நகர் முழுவதும் இன்று மின்தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டனர். சிறு தொழில் செய்வோர், வியாபாரிகளும் பாதிக்கப்பட்டனர்.

    எனவே இனிமேலாவது மின்வாரிய அதிகாரிகள் மின்தடை குறித்த பகுதிகள் தொடர்பான முறையான அறிவிப்பு செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சவேரியார் ஆலயம் முதல் கோட்டார் நாராயண குரு மண்டபம் வரை உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது
    • 4 சக்கர வாகனங்கள் செல்லும்போது இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் மீது சகதிகளை வீசி செல்வதால் அவர்கள் கடும் அவதி

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் மாநக ராட்சிக்குட்பட்ட பகுதி களில் பாதாள சாக்கடை பணிகள் 95 சதவீதம் முடிவ டைந்துள்ளது. பிரதான சாலையாக கருதப்படும் கோட்டார் சாலையில் பாதாள சாக்கடைக்கான பணிகள் முடிவடைந்து உள்ளது.

    ஆனால் அந்தபகுதி களில் இன்னும் சாலை அமைக்கப்படவில்லை சாலை அமைக்கப்படாததால் சவேரியார் ஆலயம் முதல் கோட்டார் நாராயண குரு மண்டபம் வரை உள்ள சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

    இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் மட்டுமின்றி இரு சக்கர வாகனங்களும் சென்று வருகிறது. வாகன ஓட்டிகள் சாலையில் உள்ள பள்ளங்களில் சிக்கித் தவிக்கும் அவல நிலையை சொல்லி மாளாது. அந்த அளவிற்கு படுமோசமாக இந்த சாலை காட்சி அளிக்கிறது.

    சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பின்னரும் பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் நாகர்கோ விலில் நேற்று இரவு பெய்த மழையின் காரணமாக இந்த சாலை சேறும் சகதியுமாக மாறி உள்ளது சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது .

    சாலையில் பொதுமக்கள் நடந்து செல்லக்கூடிய செல்லக்கூட முடியாத அள விற்கு மோசமாக உள்ளது. சாலையில் தேங்கி இருக்கும் தண்ணீரில் 4 சக்கர வாக னங்கள் செல்லும்போது இரு சக்கர வாகனங் களில் செல்பவர்கள் மீது சகதிகளை வீசி செல்வதால் அவர்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

    பள்ளி மாணவ- மாணவிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு செல்வோரும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். எனவே மாநகராட்சி மேயர் மற்றும் அதிகாரிகள் உடனடி நடவடிக்கையாக சாலையில் உள்ள பள்ளங்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என்று அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதே போல் சவேரியார் ஆலயத்தில் இருந்து செட் டிக்குளம் செல்லும் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் முடிவடைந்து பஸ் போக்கு வரத்து நடந்து வருகிறது. இந்த சாலையின் தற்போது சேறும் சகதியமாக மாறி உள்ளது. சாலைகள் சேறும் சகதிகமாக காட்சி அளிப்ப தால் விபத்துக்கள் நடக்க வும் வாய்ப்புள்ளது. அதற்கு முன்னதாக உரிய நடவ டிக்கை எடுக்கவேண்டும் என்பதை அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    • இணைப்பு ரெயில்களை பிடிக்க முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
    • ரெயில் நிலையங்களில் ரெயில்கள் ஒன்றையொன்று இணைப்பு பெற்று பயணிகள் பயன்பெறும் வகையில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    மதுரை

    மதுரை, மானாமதுரை ரெயில் நிலையத்தில் இணைப்பு ரெயில்களை பிடிக்க முடியாமல் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

    ராமேசுவரத்திலிருந்து காலை 5.30 மணிக்கு புறப்பட்டு மதுரை வரும் பயணிகள் ரெயிலில் சிவகங்கை, தேவகோட்டை, காரைக்குடி செல்ல பயணிகள் வருகின்றனர்.

    இவர்கள் மானாமதுரை ரெயில் நிலையத்தில் இறங்கி அங்கிருந்து மன்னார்குடி செல்லும் டெமு ரெயிலில் பயணம் செய்வார்கள்.

    ராமேசுவரம்-மதுரை ரெயில் மானாமதுரை வருவதற்கு முன்பாக மன்னார்குடி செல்லும் ரெயில் புறப்பட்டு விடுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    அதே போல் ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரெயிலில் வரும் பயணிகள் மதுரையில் இறங்கி திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலில் பயணம் செய்வார்கள்.

    ராமேசுவரம்-மதுரை ரெயில் வருவதற்கு முன்பாக இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் புறப்பட்டு விடுவதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.

    மதுரை ரெயில்வே கோட்டத்தில் மானாமதுரை, மதுரை சந்திப்பு ரெயில் நிலையங்களில் ரெயில்கள் ஒன்றையொன்று இணைப்பு பெற்று பயணிகள் பயன்பெறும் வகையில் இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

    ×