என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பயணிகளை புறக்கணித்து பைபாசில் செல்லும் தனியார் பஸ்கள்
- அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சிகள் சேலம்–-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளன.
- பெரும்பாலான தனியார் பஸ்கள் புறவழிச்சாலையில் இயக்கப்படுவதும், வாழப்பாடி பகுதி பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மறுப்பதும் தொடர்ந்து வருகிறது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் அயோத்தியாப் பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சிகள் சேலம்–-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளன. இந்த 4 பேரூராட்சிகளும் அருகிலுள்ள கிராம மக்களின் போக்குவரத்துக்கு முக்கிய மையமாக விளங்கி வருகின்றன.
சேலம் –ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான தனியார் பஸ்கள், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, புத்திர–கவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் காரிப்பட்டி ஆகிய ஊருக்குள் செல்வதில்லை. சேலம்-சென்னை புறவழிச்சாலையிலேயே இயக்கப்படுகின்றன.
இதனால், சேலம் மற்றும் ஆத்தூர் பஸ் நிலையங்களில், இப்பகுதியைச் சேர்ந்த பயணி–களை ஏற்ற மறுக்கின்றனர். இதனால், குறித்த நேரத்திற்கு பயணிக்க முடியாமல் இப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வாழப்பாடி வட்டாட்சியர், மோட்டார் வாகன ஆய்வாளர், தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து 3 ஆண்டுக்கு முன் அமைதிக்குழு கூட்டி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
சேலம்-–ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஊருக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல நடவடிக்கை எடுப்பதென இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
ஆனால், சேலம் மற்றும் ஆத்தூர் பஸ் நிலையங்களில் இருந்து பெரும்பாலான தனியார் பஸ்கள் புறவழிச்சாலையில் இயக்கப்படுவதும், வாழப்பாடி பகுதி பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மறுப்பதும் தொடர்ந்து வருகிறது. இதனால், சேலம்– ஆத்தூர் வழித்தடத்திலுள்ள பேரூராட்சிகள் மற்றும் கிராமப்புற பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
எனவே, சேலம் –ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் புறவழிச்சாலையில் இயக்கப்படுவதை தடுக்கவும், இந்த வழித்தடத்திலுள்ள அனுமதிக்கப்பட்ட பஸ் நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்–செல்வதற்கும், வருவாய்த்துறை, போக்கு–வரத்துத்துறை, காவல்த்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்