search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளமடம்"

    • மற்றொருவர் படுகாயம்
    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    கன்னியாகுமரி:

    ராஜாவூரை அடுத்த ஆதலவிளை பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி சுபா (வயது 43). இவர், நாக்கால் மடம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று வேலை முடிந்து அதே ஊரைச் சேர்ந்த தங்கசெல்வி என்பவருடன் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்றார். மோட்டார் சைக்கிளில் சுபா பின்னால் அமர்ந்திருந்தார்.

    வெள்ள மடம் நான்கு வழிச்சாலையில் சென்ற போது பணகுடியில் இருந்து நாகர்கோவில் நோக்கி வந்த விஜய் என்பவர் அதிவேகமாக வந்து மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

    இதில் சுபா தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆசாரிபள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சுபா பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த தங்க செல்விக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து ஆரல்வாய் மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த விஜய் மற்றும் முடி சூடும் பெருமாள் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    இறந்து போன சுபாவுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவர் முருகன் வெல்டிங் தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார்.

    • மோட்டார் சைக்கிளில் சென்ற போது பரிதாபம்
    • ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    காவல்கிணற்றில் இருந்து திருவனந்தபுரத்திற்கு நான்கு வழி சாலை பணிகள் நடைபெற்று வருகிறது.இந்த பணிகள் இன்னும் நிறைவு பெறவில்லை.ஒரு சில இடங்களில் மட்டும் பணிகள் நிறைவடைந்து உள்ளது.

    வெள்ளமடம் பகுதியில் நான்கு வழி சாலை பகுதியில் சாலையில் சிமெண்ட் தடுப்புகள் அமைக்கப்பட்டு உள்ளன.இதனால் அந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தது. எனவே அந்த பகுதியில் உள்ள சிமெண்ட் தடுப்புகளை மாற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் வந்த சுமார் 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அந்த பகுதியில் உள்ள சிமெண்ட் தடுப்பு சுவர் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.

    இது பற்றி தகவல் தெரிந்ததும் ஆரல்வாய் மொழி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஆனால் இன்னும் பலியானவர் யார் என்ற விவரம் தெரியவில்லை. விபத்து குறித்து ஆரல்வாய்மொழி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

    • ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார்
    • கல்லூரி வாகனத்தை ஓட்டிய டிரைவரிடம் விசாரணை

    கன்னியாகுமரி:

    வெள்ளமடம் அருகே உள்ள கரையான் குழி பகுதியை சேர்ந்தவர் தவமணி (வயது 85). தற்போது திருப்பதிசாரம் பகுதியில் வசித்து வருகிறார்.

    சம்பவத்தன்று ரோட்டில் நடந்து சென்று வந்த போது தனியார் கல்லூரிக்கு சொந்தமான வாகனம் மோதியது மோதிய வேகத்தில் தூக்கி வீசப்பட்ட தவமணியை அக்கம்பக்கத்தினர் ஆசாரிபள்ளம் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு சென்ற னர்.

    அங்கு சிகிட்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்தார். இது குறித்து தவமணியின் உறவினர்கள் ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி வாகனத்தை ஓட்டிய டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உயர்மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • பூதப்பாண்டி மின் விநியோக உதவி செயற் பொறியாளர் தகவல்

    நாகர்கோவில்:

    பூதப்பாண்டி மின் விநியோகப் பிரிவுக்குட்பட்ட வெள்ளமடம் பீடரில் ஈசாந்திமங்கலம், நாவல்காடு மற்றும் ஞானதாசபுரம் பகுதி உயர்மின்னழுத்த பாதையில் நாளை (5-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக அன்றைய தினம் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை ஈசாந்தி மங்கலம், நாவல்காடு மற்றும் ஞான தாசபுரம் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    ஆரல்வாய்மொழி மின் விநியோகப் பிரிவுக்கு உட்பட்ட உயர் மின் அழுத்த ப்பாதையில் 5 மற்றும் 6-ந் தேதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே நாளை (5-ந் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை குருசடி, தேவசகாயம் மவுண்ட், மங்கம்மாள் சாலை பகுதி களில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

    6-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை காமரின் ஸ்கூல், நெசவாளர் காலனி, வேதாத்ரி நகர் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    மேற்கண்ட தகவல்களை பூதப்பாண்டி மின் விநியோக உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

    • உயர் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்பு மற்றும் மரக்கிளைகளை அகற்றும் பணி
    • காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது

    வெள்ளமடம்-இறச்சகுளம் பகுதிகளில் நாளை மின்தடை

    நாகர்கோவில்:

    தோவாளை மின் விநியோகப்பிரிவிற்குட் பட்ட வெள்ளமடம் உயர் மின் அழுத்தப் பாதையில் பராமரிப்பு மற்றும் மரக்கி ளைகளை அகற்றும் பணி நாளை (16-ந் தேதி) நடை பெற உள்ளது. இதேபோல் இறச்சகுளம் பீடரிலும் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடை பெற உள்ளன.

    எனவே நாளை காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை பீமநகரி, மகாத்மா நகர், திருப்பதிசாரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள், இறச்சகுளம், சன் காலேஜ் ரோடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

    இதேபோல தோவாளை உயர் மின் அழுத்தப் பாதையில் 17-ந் தேதி பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்றைய தினம் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை எல்.எச்.எல். நகர், ஆர்.டி.ஓ. அலுவலகம், விசுவாசபுரம், திருமலைபுரம், குமரன் புதூர், கிறிஸ்து நகர், ஈஸ்வர் காலனி, மணியா நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது. 18-ந் தேதி நாகர்கோவில் உப மின்நிலையத்தில் சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே வல்லன் குமாரன்விளை, தடிக்காரன் கோணம், வடசேரி, ஆசாரிபள்ளம், நாகர்கோவில், பெருவிளை, சுங்கான் கடை, கிருஷ்ணன் கோவில்,எம்.எஸ்.ரோடு, காலேஜ் ரோடு, கோர்ட் ரோடு, கே.பி. ரோடு, பால்பண்ணை, நேசமணி நகர், ஆசாரிபள்ளம், தோப்பூர், வேம்பனூர், அனந்தன் நகர், பார்வதிபுரம், புத்தேரி, இறச்சகுளம் பகுதிகளில் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று செயற்பொறியாளர் ஜவகர் தெரிவித்துள்ளார்.

    ×