search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன ஓட்டுனர்கள்"

    • பொதுமக்களுக்கு விபத்து காலங்களில் முதலுதவி அளிக்கப்படுவது குறித்து செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.
    • வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் உத்தரவின் பேரில் 108 அவசர கால விபத்து முதலுதவி செயல் விளக்கம் அளிப்பது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் மேலாளர்கள் சாம் சுந்தர், சவுரிராஜன் தலைமையில் நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலை விபத்தில் முதலுதவி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடை பெற்றது.

    இதில் ஓட்டுனர்கள் மற்றும் பொது மக்களுக்கு விபத்து காலங்களில் முதலுதவி அளிக்கப்படுவது குறித்து செய்முறை செயல் விளக்கத்துடன் செய்து காண்பிக்கப்பட்டது.

    இதில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பழனிச்சாமி, மோட்டார் வாகன ஆய்வாளர் பிரபு, அனைத்து ஓட்டுநர் பயிற்சி உரிமையாளர்களும் வாகன ஓட்டுனர்களும் மற்றும் பொதுமக்களுக்கு கலந்து கொண்டனர்.

    • ஆயிரத்து 218 வாகன ஓட்டுனர்களுக்கு 16 லட்சத்து 21 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
    • ஊத்துக்குளி, மங்கலம் என 10 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    திருப்பூர்:

    சாலை விதிமுறைகளை மீறி இயங்கி வரும் வாகனங்களை கண்டறியும் வகையில் திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டது.வட்டார போக்குவரத்து இணை கமிஷனர் சிவகுமரன் உத்தரவின் பேரில், பல்லடம், சின்னக்கரை, வீரபாண்டி பிரிவு, பலவஞ்சிபாளையம், காங்கயம் ரோடு, மாநகராட்சி சந்திப்பு, ரெயில் நிலையம் அருகில், 63 வேலம்பாளையம், ஊத்துக்குளி, மங்கலம் என 10 இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    இதில் 9 வட்டார போக்குவரத்து அலுவலர்கள், 21 மோட்டார் வாகன ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.ஆய்வில் உரிய ஆவணம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது உட்பட பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக ஆயிரத்து 218 வாகன ஓட்டுனர்களுக்கு 16 லட்சத்து 21 ஆயிரத்து 800 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.தகுதிச்சான்று இல்லாத 53 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் ஒரே நேரத்தில் பல இடங்களில் அதிகாரிகள் வாகனத்தணிக்கை மேற்கொண்டது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

    • சின்னாறு அருகே அபாய வளைவு பகுதி உள்ளது.
    • போக்குவரத்து தடைபட்டால் இரு மாநில மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

    உடுமலை:

    உடுமலையிலிருந்து மூணாறு செல்லும் ரோட்டில், சின்னாறு வரையுள்ள 28.80 கி.மீ., மாவட்ட முக்கிய ரோடு பிரிவின் கீழ் நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்டத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

    ஆனைமலை புலிகள் காப்பகம், உடுமலை, அமராவதி வனசரகங்களின் வழியாக செல்லும் ரோட்டில், 18வது கி.மீ.,ல் சின்னாறு அருகே அபாய வளைவு பகுதி உள்ளது.இருபுறங்களிலும் மலைச்சரிவுடன் குறுகலாக செல்லும் இந்த கொண்டை ஊசி வளைவில், நாள்தோறும் உடுமலையிலிருந்து கேரள மாநிலத்திற்கு நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இந்த அபாய வளைவில், இரு வாகனங்கள் விலகிச்செல்ல முடியாததால், வளைவின் முதற்பகுதியிலுள்ள இடைவெளியில், வாகனங்கள் நிறுத்தப்பட்டு, ஒவ்வொரு வாகனமாக அப்பகுதியை கடந்து செல்கின்றன.இவ்வாறு வனப்பகுதியில்மலைச்சரிவில் அமைந்துள்ள பாலத்தில், விபத்துகளை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரோட்டின் இருபுறங்களிலும் இரும்பு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.இதனால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து சென்றாலும் மலைச்சரிவில் விழுந்து விபத்திற்குள்ளாவது தவிர்க்கப்பட்டு வருகிறது.

    இருப்பினும் பல்வேறு காரணங்களால், தடுப்பு சரிவது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.இந்த அபாய வளைவு பகுதியை மேம்படுத்த வேண்டும் என இரு மாநில வாகன ஓட்டுனர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.நாள்தோறும் உடுமலை பகுதியிலிருந்து காய்கறிகள் மற்றும் இதர பொருட்கள் மறையூர் வழியாக மூணாறுக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும், சுற்றுலா பயணிகள்,இரு மாநில தொழிலாளர்கள் இந்த ரோட்டை நம்பியே உள்ளனர்.அபாய வளைவு பகுதியில் தடுப்பு கம்பிகள் விழுந்து போக்குவரத்து தடைபட்டால் இரு மாநில மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

    இந்த அவலத்தை தவிர்க்க, நெடுஞ்சாலைத்துறை சார்பில் வளைவு பகுதியை மேம்படுத்தி, பாலம் அமைக்க வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.எனவே உடுமலை-மூணாறு ரோட்டில், அபாய வளைவு பகுதியை மேம்படுத்த வேண்டும் என வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×