search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232838"

    • பிளம்பிங் வேலை செய்வதற்காக சுவற்றில் ‘டிரில்லிங்’ எந்திரம் வைத்து துளையிடும் பணியில் அய்யப்பன் ஈடுபட்டார்.
    • சுவற்றில் இருந்த மின்சார வயரின் மீது ‘டிரில்லிங்’ எந்திரம் பட்டதில் மின்சாரம் தாக்கி அய்யப்பன் அலறினார்.

    பூந்தமல்லி:

    திருவாரூர் மாவட்டம் பெரம்பொன்னையூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யப்பன் (வயது 30). பிளம்பராக வேலை செய்து வந்தார். இவரது அக்காள் ராஜேஸ்வரி குன்றத்தூர் அடுத்த தரப்பாக்கம், முரசொலி மாறன் நகரில் வசித்து வருகிறார். இந்த நிலையில் ராஜேஸ்வரி வீட்டில் புதிதாக இரண்டு அறைகள் கட்டப்பட்டு உள்ளது. இதில் பிளம்பிங் வேலை செய்வதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு அய்யப்பன் வந்தார். நேற்று இரவு பிளம்பிங் வேலை செய்வதற்காக சுவற்றில் 'டிரில்லிங்' எந்திரம் வைத்து துளையிடும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது சுவற்றில் இருந்த மின்சார வயரின் மீது 'டிரில்லிங்' எந்திரம் பட்டதில் மின்சாரம் தாக்கி அலறினார். இதனை கண்டதும் அவரது அக்காள் ராஜேஸ்வரி தம்பியை காப்பாற்ற முயன்று தள்ளிவிட்டார். இதில் இருவர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. அய்யப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். ராஜேஸ்வரி லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

    இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அழகேசனின் உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அருகே நின்றிருந்த யுவராஜா தூக்கி வீசுப்பட்டார்.
    • சவப்பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    பழனி:

    பழனி மருத்துவ நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜா (வயது38). திருமணமாகாதவர். இவரது நண்பர் அழகேசன் (30). பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில் அழகேசன் உடல்நலக்குறைவால் நேற்று இறந்தார்.

    குளிர்சாதன பெட்டியில் அவரது உடல் வைக்கப்பட்டிருந்தது. அழகேசனின் உடல் வைக்கப்பட்டிருந்த குளிர்சாதன பெட்டியில் இருந்து எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் அருகே நின்றிருந்த யுவராஜா தூக்கி வீசுப்பட்டார். இதையடுத்து அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக பழனி அடிவாரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சவப்பெட்டியில் இருந்து மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • வழக்கம் போல் மாணவர் பிரவீன் இன்று காலை மளிகை கடையை திறக்க வந்தார்.
    • மின்கசிவு காரணமாக கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வடக்கு பேட்டையை சேர்ந்தவர் சண்முகராஜா. இவரது மகன் பிரவீன் (14). இவர் கொடிவேரியில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறை என்பதால் வீட்டில் இருந்து வந்தார்.

    சண்முகராஜா வடக்கு பேட்டை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி அருகே மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். தற்போது பள்ளி விடுமுறை என்பதால் மாணவர் பிரவீன் தினமும் காலையில் மளிகை கடையை திறந்து வியாபாரம் செய்து வந்தார். நேற்று இரவும் கடையில் வியாபாரம் முடிந்ததும் ஷட்டரை பூட்டி விட்டு சென்றனர்.

    வழக்கம் போல் மாணவர் பிரவீன் இன்று காலை 6.30 மணியளவில் மளிகை கடையை திறக்க வந்தார். அப்போது மின்கசிவு காரணமாக கடையின் ஷட்டரில் மின்சாரம் பாய்ந்து இருந்தது. இதுப்பற்றி தெரியாத பிரவீன் ஷட்டரை திறந்த போது மின்சாரம் தாக்கி அலறினார்.

    அவரது சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து மாணவர் பிரவீனை மீட்டு சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மாணவர் பிரவீன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து மின்சார துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு மின்இணைப்பு துண்டிக்கப்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • கவின் தனது பாட்டியுடன் புத்தா தெருவில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்றார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    கொருக்குப்பேட்டை ஆர்.கே. நகர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கார்த்திக். இவருடைய மகன் கவின் (வயது 13). இவர் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கவின் தனது பாட்டியுடன் புத்தா தெருவில் உள்ள கருப்பசாமி கோவிலுக்கு சென்றார்.

    அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு நடந்து வரும் வழியில் கோவிலில் சீரியல் பல்பு கட்டுவதற்கு கட்டப்பட்டிருந்த கட்டையில் கை வைத்துள்ளார். அதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே கவின் உயிரிழந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நல்லதங்காள் கோவில் அருகே உள்ள மின் மாற்றியில் பீஸ் போட ஏறியதாக கூறப்படுகிறது.
    • சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே உள்ள வானவரெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பார்த்திபன் (வயது 28) விவசாயி, சம்பவத்தன்று இவரது மின் மோட்டாருக்கு மின்சாரம் வரவில்லை. இதனால் அதே கிராமத்தில் நல்லதங்காள் கோவில் அருகே உள்ள மின் மாற்றியில் பீஸ் போட ஏறியதாக கூறப்படுகிறது. அப்போது மின் கம்பியில் தவறுதலாக கைபட்டது. இதில் மின்சாரம் தாக்கி பார்த்திபன் தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பார்த்தீபன் இறந்து போனார். இது குறித்து அவரது மனைவி பரமேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கேபிள் டி.வி. வயரில் ஈரமான துணிபட்டது. இதில் கீர்த்தனா மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.
    • திருவள்ளூர் தாலுகா போலீசார் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த வரதாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி கீர்த்தனா (வயது30).

    இவர் துணி துவைத்து விட்டு அதனை வீட்டின் வெளியே காய வைத்தார். அருகில் இருந்த கேபிள் டி.வி. வயரில் ஈரமான துணிபட்டது. இதில் கீர்த்தனா மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தார்.

    இதுபற்றி அறிந்ததும் 108 ஆம்புலன்சு ஊழியர்கள் விரைந்து வந்து பரிசோதித்தனர். ஆனால் கீர்த்தனா ஏற்கனவே மின்சாரம் தாக்கியதில் இறந்து இருப்பது தெரிந்தது.

    திருவள்ளூர் தாலுகா போலீசார் கீர்த்தனாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செந்தமிழன் சம்பவத்தன்றும் வழக்கம் போல் நிறுவனத்தில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
    • இரும்பு பட்டாக்களை வெல்டிங் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து செந்தமிழன் மயங்கி விழுந்தார்.

    ஈரோடு:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த இரட்டை புளியம்மரத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழன் (32). இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த கொள்ளுகாட்டு மேட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக வெல்டராக வேலை பார்த்து வந்தார்.

    இந்நிலையில் செந்தமிழன் சம்பவத்தன்றும் வழக்கம் போல் நிறுவனத்தில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இரும்பு பட்டாக்களை வெல்டிங் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து செந்தமிழன் மயங்கி விழுந்தார்.

    உடனடியாக அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செந்தமிழன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தாம்பரம் அடுத்த வேங்கைவாசலில் நடைபெறும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் சந்தன்குமார் தங்கி வேலை பார்த்து வந்தார்.
    • மின்சாரம் பாய்ந்து சந்தன்குமார் பரிதாபமாக பலியானார்.

    தாம்பரம்:

    பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தன்குமார் (22). இவர் தாம்பரம் அடுத்த வேங்கைவாசலில் நடைபெறும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டுமான பணியில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று இரவு அவர் கீழ் தளத்தில் வேலை பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த தண்ணீரில் கால் வைத்தார். இதில் மின்சாரம் பாய்ந்து சந்தன்குமார் பரிதாபமாக பலியானார்.

    இதுகுறித்து சேலையூர் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

    • காக்களூர் ஏரிக்கு செல்லும் நீர் போக்கு கால்வாயில் பன்றிகள் மேய்ந்து கொண்டு இருந்தார்.
    • மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட சந்திரன் சம்பவ இடத்திலே பலியானார்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர், அம்பேத்கர் தெரு ஏரிக்கரையை சேர்ந்தவர் சந்திரன் (வயது38). இவர் பன்றிகளை வளர்த்து விற்பனை செய்து வருகிறார்.

    இந்தநிலையில் காக்களூர் ஏரிக்கு செல்லும் நீர் போக்கு கால்வாயில் பன்றிகள் மேய்ந்து கொண்டு இருந்தார். அப்போது இதனை அருகே உள்ள காம்பவுண்ட் சுவர் மீது ஏறினார். இதில் அருகே சென்ற உயர் மின்னழுத்த மின்கம்பி சந்திரன் மீது உரசியது. மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்ட சந்திரன் சம்பவ இடத்திலே பலியானார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • விவசாய கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்த பூச்சிப்பாண்டி வழக்கம் போல் வயலுக்கு வேலைக்கு சென்றார்.
    • வழக்கமாக மதியம் சாப்பிட வீட்டுக்கு வர வேண்டியவர் வரவில்லை.

    சோழவந்தான்:

    மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள ஆலங்கொட்டாரம் கிராமத்தை சேர்ந்தவர் பூச்சிப்பாண்டி (வயது55), விவசாயி.

    இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இருவருக்கும் திருமணமாகி விட்டது. இதனால் பூச்சிப்பாண்டி தனது மனைவியுடன் வசித்து வந்தார். மேலும் விவசாய கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தி வந்த பூச்சிப்பாண்டி வழக்கம் போல் நேற்று வயலுக்கு வேலைக்கு சென்றார்.

    வழக்கமாக மதியம் சாப்பிட வீட்டுக்கு வர வேண்டியவர் வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவரது உறவினர்கள், மாலையில் அவர் வேலை பார்த்த விவசாய நிலத்துக்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பூச்சிப்பாண்டி மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    உறவினர்கள் அவரை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள சோழவந்தான் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பூச்சிப்பாண்டியை பரிசோதித்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சோழவந்தான் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து விவசாயி பூச்சிப்பாண்டியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். வயலில் இருந்த மோட்டார் சுவிட்சை தொட்டபோது மின்சாரம் தாக்கி அவர் இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மது போதையில் இருந்த அண்ணாமலை அதே பகுதி துலுக்காத்தம்மன் கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பத்தில் திடீரென ஏறினார்.
    • மின்சாரம் தாக்கியதில் உயிருக்கு போராடிய அண்ணாமலையை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    வேளச்சேரி:

    பள்ளிக்கரணை அருண் நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் அண்ணாமலை (வயது45). இவர் பிளம்பராக வேலை செய்து வந்தார். அண்ணாமலை குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்.

    இந்த நிலையில் மது போதையில் இருந்த அண்ணாமலை அதே பகுதி துலுக்காத்தம்மன் கோவில் மெயின் ரோட்டில் உள்ள ஒரு மின் கம்பத்தில் திடீரென ஏறினார்.

    அப்போது அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.

    உயிருக்கு போராடிய அவரை மீட்டு கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பெண்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    • சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அகே மகளிர் விடுதியில் உயர் அழுத்த மின்வயர் அருகே நின்று செல்போனில் பேசியபோது மின்சாரம் தாக்கி 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் 3 பெண்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இச்சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    ×