search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232838"

    • மனோஜ், விக்னேசுவரன் பள்ளிக்கு வெளியே சென்று, சிறிது தூரத்தில் உள்ள நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்தனர்.
    • நாவல் பழங்களை பறித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக மரக்கிளை முறிந்து மின்சார வயர் மீது விழுந்தது.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் சீனிமடை கிராமத்தை சே்ாந்த மருதுபாண்டி மகன் மனோஜ் (வயது 13). இவர் கீழ கொம்புகாரனேந்தல் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார்.

    மிளகனூர் கிராமத்தை சேர்ந்த கந்தசாமி மகன் விக்னேசுவரன் (15). அதே பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார்.

    நேற்று மனோஜ், விக்னேசுவரன் பள்ளிக்கு சென்றிருந்த நிலையில், மதிய உணவு இடைவெளியின்போது அவர்களும், மேலும் சில மாணவர்களும் சேர்ந்து பள்ளிக்கு வெளியே சென்று, சிறிது தூரத்தில் உள்ள நாவல் மரத்தில் ஏறி நாவல் பழம் பறித்தனர். அந்த மரத்தை தொட்டு மின்சார வயர் சென்றது.

    நாவல் பழங்களை பறித்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக அந்த மரக்கிளை முறிந்து மின்சார வயர் மீது விழுந்தது. இதில் வயர் மீது விழுந்த மனோஜ் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விக்னேசுவரன் பலத்த காயம் அடைந்தார்.

    • ஐ.டி.ஐ. மாணவர் வீட்டில் நேற்று மாலை மின் கசிவு ஏற்பட்டுள்ளது.
    • விக்னேஷின் தாயார் கற்பகம் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    செய்யாறு:

    செய்யாற்று வென்றான் பகுதியைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 19). இவர் செய்யாறு டவுன் பகுதியில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.யில் வயர்மேன் எலக்ட்ரீசியன் படித்து வந்தார்.

    நேற்று மாலை இவரது வீட்டில் மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சரி செய்வதற்காக விக்னேஷ் சுவிட்ச் போர்டில் கை வைத்துள்ளார்.

    அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதனைக் கண்ட உறவினர்கள் விக்னேசை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து விக்னேஷின் தாயார் கற்பகம் செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விக்னேஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அமைத்த பந்தலில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • உமாராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சின்ன பள்ளி குப்பம் இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி ஜானகி (வயது 69). இதே பகுதியில் நேற்று இளம்பெண் ஒருவருக்கு மஞ்சள் நீராட்டு விழா நடந்தது. இதற்காக இரும்பு கம்பிகளை வைத்து பந்தல் அமைத்திருந்தனர். மேலும் மின்விளக்கு அலங்காரமும் செய்யப்பட்டுள்ளது.

    விடிய விடிய மழை பெய்ததின் காரணமாக அலங்கார விளக்குகளுக்கு செல்லக்கூடிய ஒயரிலிருந்து மின் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பந்தல் அமைக்கப்பட்டுள்ள கம்பி வலியாக மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்தது. இதனை அறியாத ஜானகி இன்று காலை பந்தல் அருகே சென்று சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டார். அப்போது இரும்பு கம்பியில் உரசினார். அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. அவர் அலறி துடித்தார்.

    அங்கு வந்திருந்த கடலூர் குள்ளஞ்சாவடி இலங்கைத் தமிழர் முகாமை சேர்ந்த ஸ்ரீதர் (30) என்பவர் ஓடிச்சென்று காப்பாற்ற முயன்றார். அவரும் படுகாயம் அடைந்தார். அங்கிருந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே ஜானகி பரிதாபமாக இறந்தார். ஸ்ரீதருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். இது குறித்து உமாராபாத் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மஞ்சள் நீராட்டு விழாவிற்கு அமைத்த பந்தலில் மின்சாரம் பாய்ந்து மூதாட்டி இறந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பலத்த மழை பெய்ததால் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு கட்டிடத்தின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
    • அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த உயர் கோபுரம் மின்விளக்கின் சுவிட்ச் பாக்சில் கை வைத்து விட்டார்.

    அய்யம்பேட்டை:

    தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டை அருகே வேம்பக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மதன் (வயது 24). இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் அய்யம்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஜீப் டிரைவராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் அவர் வேலை முடிந்து நள்ளிரவு வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அப்போது பலத்த மழை பெய்ததால் மோட்டார் சைக்கிளை ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு கட்டிடத்தின் அருகில் நின்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த உயர் கோபுரம் மின்விளக்கின் சுவிட்ச் பாக்சில் கை வைத்து விட்டார். உடனடியாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே மதன் உயிரிழந்தார்.

    இதுபற்றி தகவலறிந்த அய்யம்பேட்டை போலீசார் விரைந்து சென்று மதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அய்யம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • மலையையொட்டியுள்ள ராஜாங்கம் என்பவரின் தோட்டத்திற்கு சென்ற போது அங்கு காட்டு பன்றிகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியை எதிர்பாராத விதமாக ராஜாங்கம் மிதித்ததாக தெரிகிறது.
    • மின்சாரம் தாக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த வளர்ப்பு நாயும் மின்வேலியில் சிக்கி இறந்தது.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள நக்கலப்பட்டி ஊராட்சி, முத்துப்பாண்டி பட்டியை சேர்ந்தவர் கணேசன் (வயது 62), விவசாயி. இவர் தினமும் காலையில் வளர்ப்பு நாயுடன் தோட்டத்துக்கு சென்று வருவது வழக்கம். அதன்படி இன்று காலை கணேசன் வளர்ப்பு நாயுடன் தோட்டத்துக்கு சென்றார்.

    மலையையொட்டியுள்ள ராஜாங்கம் என்பவரின் தோட்டத்திற்கு சென்ற போது அங்கு காட்டு பன்றிகளுக்காக போடப்பட்டிருந்த மின்வேலியை எதிர்பாராத விதமாக ராஜாங்கம் மிதித்ததாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி துடிதுடித்து சம்பவ இடத்திலேயே கணேசன் பரிதாபமாக இறந்தார். இதைப் பார்த்த வளர்ப்பு நாயும் மின்வேலியில் சிக்கி இறந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த உசிலம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கணேசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தோட்ட உரிமையாளர் ராஜாங்கத்திடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்வேலியில் சிக்கி விவசாயியும், உடன் சென்ற அவரது வளர்ப்பு நாயும் இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • முருகதாஸ், வெங்கடேசன், சுப்பிரமணி ஆகிய 3 பேரும் மின்வேலியில் சிக்கினர்.
    • போலீசார் அனுமதியின்றி மின்வேலி அமைத்த விவசாயி பத்மநாபனை தேடி வருகிறார்கள்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள வன்னிப்பேர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் முருகதாஸ், (வயது 45), வெங்கடேசன் (44) சுப்பிரமணி (38) இவர்கள் அடிக்கடி இரவு நேரங்களில் முயல் வேட்டைக்கு செல்வது வழக்கம்.

    அதன்படி இந்த 3 பேரும் நேற்று இரவு முயல்வேட்டைக்கு சென்றனர். அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டுபன்றிகள் அட்டகாசம் நீடித்து வருகிறது. இந்த பன்றிகள் வாழை, மரவள்ளி கிழங்கு செடியை நாசம் செய்து வருகிறது. எனவே காட்டுபன்றி தொல்லையால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயி பத்மநாபன் தனது நிலத்தை சுற்றி மின்வேலி அமைத்து இருந்தார்.

    இதனை கவனிக்காமல் முயல்வேட்டைக்கு சென்ற 3 பேரும் நிலத்தை தாண்டினர். அப்போது முருகதாஸ், வெங்கடேசன், சுப்பிரமணி ஆகிய 3 பேரும் மின்வேலியில் சிக்கினர். இதில் மின்சாரம் தாக்கி 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இன்று காலை அந்தவழியாக சென்ற விவசாயிகள் 3 பேர் இறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இந்த தகவல் அந்த பகுதியில் காட்டு தீ போல பரவியது. தகவல் அறிந்த கிராம மக்கள் திரண்டனர்.

    தகவல் அறிந்த பிரம்மதேசம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். உயிரிழந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் அனுமதியின்றி மின்வேலி அமைத்த விவ சாயி பத்மநாபனை தேடி வருகிறார்கள். ஒரே கிராமத்தைச் சேர்ந்த 3 பேர் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருமுனையில், ப்ளூ பைக்ஸ் சந்திப்பில் உயர் மின்னழுத்தத்தின் மின்சார பெட்டி உள்ளது.
    • சாலையில் வெளியே தெரியும் மின் வயர்களை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ஆலந்தூர்:

    ஆதம்பாக்கம், பழவந்தாங்கல், நங்கநல்லூர், ஆலந்தூர் ஆகிய பகுதிகளில் நேற்றிரவு பலத்த மழை பெய்தது.

    ஆதம்பாக்கம் மேற்கு கரிகாலன் தெருமுனையில், ப்ளூ பைக்ஸ் சந்திப்பில் உயர் மின்னழுத்தத்தின் மின்சார பெட்டி உள்ளது. இதன் அருகே எதிரெதிர் இரண்டு டாஸ்மாக் பார் உள்பட வணிக வளாகங்களும் உள்ளது. அதனால் இந்த இடம் பகல் நேரம் அல்லாமல் இரவு நேரத்திலும் அதிக கூட்ட நெரிசலாக காணப்படும். நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் இந்த உயர் மின்னழுத்தம் மின்சார பெட்டி அருகே மாடு ஒன்று நடந்து சென்றது. அப்போது எதிர்பாராதவிதமாக அந்த மாட்டின் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதைப் பார்த்த டாஸ்மாக் பாருக்கு வந்தவர்கள், வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடினர். உடனடியாக மின்சார ஊழியர்கள் வந்து மின்சாரத்தை துண்டித்து மாட்டை சாலையில் போட்டு விட்டு சென்றனர். சுமார் மூன்று மணி நேரம் சாலையில் கிடந்த மாட்டை துப்புரவு பணியாளர்கள் அகற்றினர்.

    மழையின் காரணமாக சாலையில் நடந்து சென்ற மாடு மீது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது. சாலையில் வெளியே தெரியும் மின் வயர்களை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஆதம்பாக்கம், மேற்கு கரிகாலன் தெருவில் மின் இணைப்பு பெட்டி உள்ளது. இதன் அருகே 2 டாஸ்மாக் பார்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன.
    • நேற்று இரவு 8 மணி அளவில் மழை பெய்து கொண்டு இருந்தபோது மின் இணைப்பு பெட்டி அருகே சென்ற மாடு ஒன்று திடீரென மின்சாரம் தாக்கி இறந்தது.

    வேளச்சேரி:

    பள்ளிக்கரணையை அடுத்த பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (வயது50). மாநகராட்சியில் ஒப்பந்த துப்புரவு ஊழியராக பணியாற்றி வந்தார்.

    இன்று காலை அவர் வழக்கம் போல் வேளச்சேரி, வெங்கடேஸ்வரா நகர், 3-வது மெயின் ரோடு பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

    அப்போது அங்குள்ள குப்பை தொட்டி அருகே தரையில் சரிவர புதைக்கப்படாமல் இருந்த மின் கம்பியில் இருந்து மின்கசிவு ஏற்பட்டது. இதனை கவனிக்காமல் சேகர் அதன் மீது கால் வைத்து குப்பைகளை அகற்ற முயன்றார்.

    இதில் மின்சாரம் தாக்கியதில் சேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதனை பார்த்து அங்கிருந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து உடனடியாக மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மின் வயர்கள் சரி செய்யப்பட்டது.

    நேற்று இரவு அப்பகுதியில் பரவலாக மழை பெய்து இருந்தது. மழை நீரின் ஈரத்தால் சரியாக புதைக்கப்படாத மின் கம்பியில் இருந்து கசிந்த மின்சாரம் தொழிலாளி சேகரின் உயிரை பறித்து விட்டது.

    பருவமழை தொடங்குவதற்கு முன்பு இதே போல் ஆபத்தாக உள்ள மின் வயர்களை சரி செய்ய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ஆதம்பாக்கம், மேற்கு கரிகாலன் தெருவில் மின் இணைப்பு பெட்டி உள்ளது. இதன் அருகே 2 டாஸ்மாக் பார்கள் மற்றும் வணிக வளாகங்கள் உள்ளன. நேற்று இரவு 8 மணி அளவில் மழை பெய்து கொண்டு இருந்தபோது மின் இணைப்பு பெட்டி அருகே சென்ற மாடு ஒன்று திடீரென மின்சாரம் தாக்கி இறந்தது. இதனை பார்த்து அவ்வழியே சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மின் ஊழியர்கள் விரைந்து வந்து மின்சாரத்தை துண்டித்து மின்கசிவை சரிசெய்தனர். மின்சாரம் தாக்கி இறந்த மாடு சுமார் 3 மணி நேரத்திற்கு பின்னர் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. மின்இணைப்பு பெட்டி அருகே தரையில் இருந்து வெளியே தெரியும் வகையில் உள்ள மின் வயர்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • மோட்டார் மூலமாக தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் பார்த்தசாரதி ஈடுபட்டிருந்தார்.
    • ஈரக்கையுடன் சுவட்சை போட்ட பாரத்தை மின்சாரம் தாக்கியது.

    சென்னை:

    சென்னை மயிலாப்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட டி.டி.கே. சாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணி நேற்று நடைபெற்றது.

    இந்த பணியில் கண்ணகி நகரை சேர்ந்த பார்த்தசாரதி என்கிற 18 வயது வாலிபர் ஈடுபட்டிருந்தார். மோட்டார் மூலமாக தொட்டியில் இருந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் பார்த்தசாரதி ஈடுபட்டிருந்தார்.

    அப்போது திடீரென மின்சாரம் தாக்கியது. இதில் அவர் மயக்கமாகி சுய நினைவை இழந்தார். உடனடியாக அங்கிருந்தவர்கள் 108 ஆம்பு லன்சை வரவழைத்தனர். அதில் இருந்த மருத்துவ பணியாளர்கள் பார்த்தசாரதியின் உடலை பரிசோதித்தனர். இதில் அவர் உயிரிழந்திருப்பது தெரியவந்தது.

    இது பற்றி தகவல் அறிந்ததும் மயிலாப்பூர் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மற்றொரு சம்பவம்...

    சென்னை குமரன் நகர் பகுதியை சேர்ந்தவர் பாஸ்கர். இவரது மகன் பாரத். 9-ம் வகுப்பு படித்து வந்தான். வீட்டில் தனியாக இருந்த பாரத், கதவை உள்பக்கமாக தாழ்பாள் போட்டுவிட்டு குளித்துள்ளான்.

    பின்னர் ஈரக்கையுடன் மின்சார சுவட்சை போட்டுள்ளார். இதில் பாரத்தை மின்சாரம் தாக்கியது. மயங்கி விழுந்த அவன் வீட்டுக்குள்ளேயே உயிருக்கு போராடி உள்ளான். அவனது முனகல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து உள்ளே சென்று மீட்டனர்.

    பின்னர் கே.கே.நகரில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவனின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது தொடர்பாக குமரன்நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தாம்பரம் அருகே மின்சாரம் தாக்கியதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
    • இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் அடுத்த முடிச்சூர், தெற்கு லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவரது மகன் பாபு (வயது27). இவர் புது பெருங்களத்துாரில் உள்ள தனியார் ஐ.டி.நிறுவனத்தில் கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இவர், வீட்டில் உள்ள மின்விசிறி பழுதடைந்ததால் காரில் பயன்படுத்தப்படும், சிறிய மின் விசிறியை பயன்படுத்த அதற்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியது. இதில் பாபு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முத்துசாமி குளித்துக்கொண்டிருந்தபோது அருகில் தொங்கிய மின் ஒயரை கையால் அப்புறப்படுத்தியுள்ளார்.
    • அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி முத்துசாமி உயிரிழந்தார்.

    சித்தோடு:

    சித்தோடு அருகே உள்ள ஆட்டையாம்பாளையம், கிழக்கு காலனியைச் சேர்ந்தவர் முத்துசாமி (77). இவரது மனைவி அன்ன பூரணி(57). இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    இவர்களது வீட்டுக்கு அருகில் அவர்களது மகன் செந்தில்குமார் புதிதாக வீடு கட்டி வருகிறார். அந்த வீட்டுக்கு, முத்துசாமியின் வீட்டில் இருந்து தற்காலிகமாக மின் இணைப்பு எடுத்து பயன்படுத்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று முத்துசாமி குளித்துக்கொண்டிருந்தபோது அருகில் தொங்கிய மின் ஒயரை கையால் அப்புறப்படுத்தியுள்ளார். அப்போது அவரை எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியது.

    இதையடுத்து அருகில் இருந்தவர்கள் முத்துசாமியை மீட்டு நசியனூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி முத்துசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து அவரது மனைவி அன்னபூரணி அளித்த புகாரின் பேரில் சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கார்த்திகேயன் பாத்ரூம் போக சுவிட்ச் போட்டபோது மின்சாரம் தாக்கி அலறி அடித்து விழுந்தார்.
    • திருமணமான 7 நாட்களில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் அடுத்த கதிரிமங்கலம் ஊராட்சி சி.கே.ஆசிரமம் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் கார்த்திகேயன் (வயது 25). அதே பகுதியில், பேட்டரி கடை நடத்தி வருகிறார்.

    அதே ஊரைச் சேர்ந்த இவரது அக்கா மகள் ஸ்ரீப்ரியா (வயது19), இருவருக்கும் கடந்த 7 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் கார்த்திகேயன் பாத்ரூம் போக சுவிட்ச் போட்டபோது மின்சாரம் தாக்கி அலறி அடித்து விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு மனைவி ஸ்ரீபிரியா மற்றும் கார்த்திகேயன் குடும்பத்தினர் ஓடிவந்து பார்த்தபோது மயங்கிய நிலையில் இருந்த கார்த்திகேயனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கார்த்திகேயன் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்து திருப்பத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 7 நாட்களில் புது மாப்பிள்ளை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×