search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சந்தை"

    • பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது.
    • பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டையானது கோவை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. காரணம்பேட்டை பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன இதனால் காரணம்பேட்டை நால் ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது உண்டு. இதையடுத்து போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அப்போது இருந்த தமிழக அரசு புதிதாக பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு கடந்த 2014 -15ம் ஆண்டில், ரூபாய் 1.78 கோடி செலவில், புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டு முதல்வர் ஜெயலலிதா வீடியோ காணொளி காட்சி மூலம் 16.6.2015ல் திறந்து வைத்தார்.

    இதையடுத்துஅந்த வளாகத்தில் இரண்டு சக்கர வாகனநிறுத்தம், வணிக வளாகம்,சுகாதார வளாகம் ஆகியவை சுமார் ரூ.1 கோடியில் கட்டப்பட்டது ஆனால் இந்த புதிய பஸ் நிலையம் இன்று வரை பயன்பாட்டிற்கு வரவில்லை .காரணம்பேட்டை நால்ரோட்டில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் இருப்பதாலும், ஊருக்கு ஒதுக்குப்புற பகுதியில் இருப்பதாலும் இந்த பஸ் நிலையத்தை பொதுமக்கள் பயன்படுத்தவில்லை, போக்குவரத்து துறையினர் அரசு பஸ்கள் உள்ளே சென்று வர, உத்தரவிட்டும்,பயணிகள் யாரும் இல்லாததால் அரசு பஸ்கள் தொடரந்து அங்கு செல்வதில்லை தனியார் பஸ்கள் கோவையில் ஓய்வு எடுத்துவிட்டு புறப்பட்ட அரைமணிநேரத்தில் காரணம்பேட்டை வந்துவிடுவதால் அவர்களும் இந்த பஸ் நிலையதித்திற்குள் செல்லாமல் காரணம்பேட்டை நால்ரோட்டில் பயணிகளை இறக்கிவிட்டு சென்றுவிடுகின்றனர்.

    இதனால் இந்த பஸ் நிலையம் கடந்த 8 ஆண்டுகளாக காட்சிப்பொருளாகவே இருந்து வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை அடுத்து கடந்த 2020ல் கோடாங்கிபாளையம் ஊராட்சிமன்றத்தின் முயற்சியால், இந்த பஸ் நிலையம் காய்கறி சந்தையாக்கப்பட்டது. பஸ் நிலையம் காய்கறி சந்தை அமைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியிட்டதும், ஏராளமான விவசாயிகள்,வந்து காய்கறி கடைகள் அமைத்தனர்*.தனால் கோடங்கிபாளையம், இச்சிபட்டி, பருவாய்,கரடிவாவி,சுக்கம்பாளையம், செம்மிபாளையம், காடாம்பாடி,காங்கேயம்பாளையம் மற்றும் சூலூர் விமானப்படைதள குடியிருப்பு பகுதி உள்ளடக்கிய சுமார் 25 ஆயிரம் மக்கள் காய்கறிகள் வாங்கி பயன் அடைந்தனர்.

    எனவே காரணம் பேட்டையில் பயன்படாமல் உள்ள பஸ் நிலையத்தை, விவசாயிகள், பொதுமக்கள், பயன்பெறும் வகையில் காய்கறி சந்தையாக மாற்ற வேண்டும் என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து காரணம்பேட்டையைச் சேர்ந்த பழனிசாமி என்ற விவசாயி கூறியதாவது:- காரணம் பேட்டை பஸ்நிலையம் ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ளதால், பொதுமக்கள் செல்வதற்கு தயங்குகின்றனர்.மேலும் பஸ் நிலையம் திறக்கப்பட்ட புதிதில் டவுன் பஸ்கள் மட்டுமே வந்து சென்றன. வெளியூர் பஸ்கள் காரணம் பேட்டையில் உள்ள நால்ரோடு பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கி சென்றனர். இதனாலும் பஸ் நிலையம் பயன்படாமல் போனது. இதன் பிறகு சிங்காநல்லூர் பஸ் நிலையம் துவக்கப்பட்டதால், மதுரை, திருச்சி, உள்ளிட்ட பஸ்கள் சிங்காநல்லூர் பஸ் நிலையத்திற்கு மாற்றப்பட்டன. வெளியூரிலிருந்து வந்து ஓய்வெடுத்த பின் மதுரை திருச்சிக்கு புறப்படும் பஸ்கள், சிங்காநல்லூரில் இருந்து புறப்பட்ட அரைமணி நேரத்தில் காரணம்பேட்டைக்கு பஸ் வந்துவிடுகிறது. இதனால், ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் ஓய்வெடுக்கவோ, டீ சாப்பிடவோ, விரும்புவதில்லை மேலும் தற்பொழுது வாகனப் போக்குவரத்து அதிகரித்ததால், போக்குவரத்து நெரிசலால் காலதாமதம் ஏற்படுகிறது. இதனை சரிசெய்ய வேண்டிய நிலை ஓட்டுனர்களுக்கு உள்ளது. இதனாலும் காரணம்பேட்டை பஸ் நிலையத்திற்குள் பஸ் வருவதில்லை, இந்த நிலையில் கடந்த "கொரோனா" காலத்தில், பஸ் நிலையத்தை காய்கறி சந்தையாக மாற்றினார்கள். இதனால் அருகே உள்ள கிராமங்களிலிருந்து காய்கறிகள், பழங்களைக் கொண்டுவந்து விவசாயிகள் விற்பனை செய்தனர். சுற்றுப்புறத்தை சேர்ந்த, கோடங்கிபாளையம், கரடிவாவி, பருவாய், இச்சிப்பட்டி, செம்மிபாளையம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் காய்கறிகளை வாங்கி பயனடைந்தனர். விவசாயிகளுக்கும் போக்குவரத்து அலைச்சல் இன்றி விளை பொருட்களை விற்பனை செய்ய வழி கிடைத்ததால், மகிழ்ச்சி அடைந்தனர். பொதுமக்களுக்கும் புத்தம் புதிய காய்கறிகள் விலை மலிவாக கிடைத்ததால் அவர்களும் பயன் அடைந்தனர்.

    எனவே பயன்பாடு இல்லாமல் இருக்கும் காரணம்பேட்டை பஸ் நிலையத்தை, விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் காய்கறி சந்தை ஆக மாற்ற வேண்டும். மேலும் இதே பஸ்நிலையத்தில் கால்நடை சந்தையும் செயல்பட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    காரணம்பேட்டை பஸ் நிலையத்தை விசைத்தறி ஜவுளி சந்தையாக மாற்ற வேண்டுமென விசைத்தறியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து திருப்பூர்,கோவை மாவட்ட விசைத்தறி உரிமையாளர் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியம் கூறுகையில், திருப்பூர்,கோவை மாவட்டங்களில் சுமார் 2லட்சம் விசைத்தறிகள்,20 ஆயிரம் நாடா இல்லா விசைத்தறிகள் இயங்கிவருகின்றன. இந்த நிலையில், பல்லடம் சுற்றுவட்டார பகுதியில் ஜவுளி சந்தை அமைக்க நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.ஜவுளி சந்தை அமைப்பதற்கான இடத்தை விசைத்தறியாளர்கள் தங்களது பங்களிப்பு மூலம் வாங்க வேண்டும். ஆனால் இப்போதுள்ள தொழில் நிலையில், இடத்தை வாங்குவது விசைத்தறியாளர்களால் முடியாது. இதுதவிர வீட்டு மனை இடங்கள் விலை உயர்ந்துள்ளதால், விசைத்தறியாளர்கள் இடத்தை வாங்குவது சிரமமான காரியம்.

    ஜவுளி சந்தை உருவாக்க அரசே இடத்தை வழங்கி உதவ வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகிறோம்.இந்த நிலையில் கடந்த 8 ஆண்டுகளாக பயன்பாடின்றி கிடக்கும் காரணம்பேட்டை பஸ் நிலையத்தை, ஜவுளிச்சந்தையாக மாற்ற வேண்டும்.காரணம்பேட்டை வளர்ந்து வரும் பகுதி என்பதால், அங்கு ஜவுளிச்சந்தை அமைந்தால்,விசைத்தறி தொழிலும் வளர்ச்சி பெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் காவி.பழனிச்சாமி கூறியதாவது:-பஸ் நிலையம் அமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகிறது. ஊராட்சி நிர்வாகம் தரப்பில், சுகாதார வளாகம், வாகன நிறுத்துமிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மாவட்ட நிர்வாகம், போக்குவரத்து துறை இணைந்து, பஸ் நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், விரைவில்,பஸ் நிலையம் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 80 விவசாயிகள் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
    • சென்னை, கோவை, பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கல்கத்தா ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு முருங்கைக்காய் வியாபாரி அனுப்பி வைத்தனார்.

    வெள்ளகோவில்

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 80 விவசாயிகள் 30 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.

    இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம், மூலனூர் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ.12 முதல் 15 வரைக்கும், மரம் முருங்கை ரூ.10 முதல் 12 வரைக்கும், கரும்புமுருங்கை ரூ.16 முதல் 20 வரைக்கும் கொள்முதல் செய்தனர். நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர், சட்டீஸ்கர், மும்பை,நாக்பூர், பூனே, கல்கத்தா ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக முருங்கைக்காய் வியாபாரி கே.ஆர்.கே.நாச்சிமுத்து கூறினார்.

    • பொதுமக்கள் மற்றும் வடமாநில தொழிலாளர்கள் ஒரு வாரத்திற்கான மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கி பயன் பெற்று வந்தனர்.
    • வார சந்தைக்கு உண்டான ஏற்பாடுகளை வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தையை வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்களது விளை பொருட்களை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றன்றனர். இங்கு வெள்ளகோவில் பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வடமாநிலத்தில் இருந்து வந்து வெள்ளகோவில் பகுதியில் தங்கி வேலை செய்து வரும் மில் தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஒரு வாரத்திற்கான மளிகை மற்றும் காய்கறிகளை வாங்கி பயன் பெற்று வந்தனர்.

    இந்நிலையில் வாரச்சந்தை வளாகத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தினசரி மார்க்கெட் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் தற்காலிகமாக வெள்ளகோவில் வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 4ம் வாரமாக நேற்று வாரச்சந்தை செயல்பட்டது. இதில் வழக்கம்போல் விவசாயிகள், பொதுமக்கள் ,வியாபாரிகள் வந்திருந்தனர். வட மாநில மில் தொழிலாளர்கள் பொதுமக்கள் சந்தைக்கு வந்து ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வாங்கி சென்றனர்.வார சந்தைக்கு உண்டான ஏற்பாடுகளை வெள்ளகோவில் நகராட்சி நிர்வாகம் செய்திருந்தது.

    • வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்.
    • ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 7 க்கும், மரம் முருங்கை ரூ.6 க்கும், கரும்புமுருங்கை ரூ.10 க்கும் கொள்முதல் செய்தனர்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் வாரச்சந்தையொட்டி ஞாயிறுதோறும் முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது, இந்த முருங்கைக்காய் கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள்,

    நேற்று 75 விவசாயிகள் 15 டன் முருங்கைகாய் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், வெள்ளகோவில், காங்கேயம் பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடிமுருங்கை ரூ. 7 க்கும், மரம் முருங்கை ரூ.6 க்கும், கரும்புமுருங்கை ரூ.10 க்கும் கொள்முதல் செய்தனர். நேற்று கொள்முதல் செய்த முருங்கைக் காய்களை வியாபாரிகள் சென்னை, மதுரை, கோவை, ஒட்டன்சத்திரம், பெங்களூர் ஆகிய பகுதியில் உள்ள ஹோட்டல் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்ததாக வெள்ளகோவிலைச் சேர்ந்த முருங்கைக்காய் வியாபாரி எம்.பி.முருகேசன் கூறினார்.

    • நடை பாதை கடைகளை அகற்றுவது தொடர்பாக அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
    • வியாபாரிகள் தாமாகவே முன்வந்து தங்களது பொருட்களை கடைக்குள் வைத்து வியாபாரம் செய்வதாக உறுதி அளித்தனர்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் வடசேரியில் மாநகராட்சிக்கு சொந்தமான கனகமூலம் சந்தை உள்ளது. இங்கு 250-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.

    ஆனால் 150 கடைகளில் மட்டுமே வியாபாரிகள், காய்கறிகள் மற்றும் பல்வேறு விதமான பொருட்கள் வைத்து வியாபாரம் செய்து வருகிறார்கள். 100-க்கும் மேற்பட்ட கடைகள் காலியாகவே உள்ளது. சந்தையின் தெற்குபுற த்தில் உள்ள நடைபாதையில், வியாபாரிகள் மேல் கூரை அமைத்து கடை அமைத்திருந்தனர்.

    காய்கறிகள், வெற்றிலை பாக்கு, பலசரக்கு பொருட்கள் வைத்து அங்கு விற்பனை செய்து வந்தனர். இங்கு கடையை விட்டு வெளிப்புறமாக வைத்திருந்த பொருட்களை அகற்ற வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகள் வியாபாரிகளிடம் பலமுறை தெரிவித்து வந்தனர்.

    பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வியாபாரம் செய்ய வேண்டும் என்றும் கூறி வந்த நிலையில் இன்று காலை மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் ஞானப்பா, சுப்பையா, சேகர், ஆல்ரின் மற்றும் சுகாதார ஆய்வாளர் ராஜேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் சந்தையின் தெற்கு புறத்தில் நடைபாதையில் வைத்திருந்த கடைகளை அப்புறப்படுத்தும்படி வியாபாரிகளிடம் கூறினார்கள்.

    இதையடுத்து ஒரு சில வியாபாரிகள் அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களை வேறு இடத்திற்கு மாற்றினார்கள். ஆனால் சில வியாபாரிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கொரோனா காலத்தில் மிகவும் வியாபாரம் இன்றி பாதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது நடைபாதையில் வைத்து விற்பனை செய்தால் தான் வியாபாரம் நடக்கிறது.

    இதன் மூலம் பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாது. எனவே நடைபாதையில் வைத்து வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் அதிகாரிகள் மறுப்பு தெரிவி த்தனர். இதனால் அதிகாரி களுடன் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதைத் தொடர்ந்து வியாபாரிகளிடம் போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் பேச்சு வார்த்தை நடத்தினர். வியாபாரிகள் தாமாகவே முன்வந்து தங்களது பொருட்களை கடைக்குள் வைத்து வியாபாரம் செய்வதாக உறுதி அளித்தனர்.

    பின்னர் பொருட்களை அவர்களாகவே தங்களது கடையின் உள் பகுதியில் எடுத்து வைத்தனர். இதைத் தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் சந்தையின் உள்புறமாக சென்று நடை பாதையில் வைத்திருந்த கடைகளை அகற்றுமாறு தெரிவித்தனர்.

    இதை தொடர்ந்து வியாபாரிகள் சந்தையின் உள் பகுதியிலும் நடைபாதையில் வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் மற்றும் பொரு ட்களை அகற்றினார்கள்.

    இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது:-

    நாகர்கோவில் மாநகராட்சி நிர்வாகம் எங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரவில்லை. மாநகராட்சி சந்தைக்கான நுழைவாயிலில் கேட் இல்லாமல் திறந்து கிடப்பதால் அடிக்கடி திருட்டு சம்பவங்களும் நடந்து வருகிறது.

    மேலும் தற்பொழுது குப்பைகளையும் கொட்டி வருகிறார்கள். வியாபாரிகளுக்கு தேவை யான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் இது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது வியாபாரிகளின் வயிற்றில் அடிப்பது ஆகும்.

    எனவே மாநகராட்சி நிர்வாகம் வியாபாரி களுக்கு சாதகமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • விற்பனை உரிமம் பெற்றுள்ள விவசாயிகளின் விலை பொருள்களான காய்கறிகள் கீரைகள் பழங்களின் தரத்தை பார்வையிட்டார்.
    • உழவர் சந்தைக்கு காய்கறி வரத்தை அதிகரிக்கவும், சாகுபடி தீவிரபடுத்தவும் ஆலோசனைகள் வழங்கி னார்.

    பாபநாசம்:

    ேவளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையினரால் பாபநாசத்தில் நடத்தப்படும் பாபநாசம் உழவர் சந்தையை தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    விற்பனை உரிமம் பெற்றுள்ள விவசாயிகளின் விலை பொருள்களான காய்கறிகள் கீரைகள் பழங்களின் தரத்தை பார்வையிட்டார். தராசுகள் மற்றும் எடைகளை சரி பார்த்தார்.

    உழவர் சந்தைக்கு காய்கறி வரத்தை அதிகரிக்கவும், சாகுபடி தீவிரபடுத்தவும் ஆலோசனைகள் வழங்கி னார். விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது பாபநாசம் தோட்டக்கலை உதவி இயக்குனர் பரிமேலழகன், தோட்டக்கலை அலுவலர் தேவதர்ஷினி, உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திகேயன், வேளாண் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ஈரோடு ஜவுளி சந்தைக்கு வெளிமாநில வியாபாரிகள் வருகை இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
    • சில்லரை வியாபாரம் 30 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு ஜவுளி சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை நடைபெறுவது வழக்கம். இந்த ஜவுளி சந்தையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வியாபாரிகள், வெளிமாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான வியாபாரிகள் வந்து ஜவுளி ரகங்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

    கொரோனா தாக்கம் காரணமாக ஜவுளி சந்தை வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர் படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்த நிலையில் நூல் விலை உயர்வு காரணமாக கடந்த சில வாரங்களாக ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்து வந்தது. இந்நிலையில் தொடர் முகூர்த்த நாள், பள்ளி திறப்பையொட்டி கடந்த வாரம் ஜவுளி சந்தையில் வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது.

    அதேபோல் இந்த வாரமும் ஜவுளி சந்தையில் சில்லரை வியாபாரம் விறுவிறுப்பாக நடந்தது. பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து திறக்கப்ப ட்டுள்ளன. இதனால் பள்ளி சீருடைகள் வாங்க பெற்றோர்கள் திரண்டனர். ஜவுளி சந்தையில் பள்ளி சீருடைகளுக்கு கிராக்கி நிலவுகிறது.

    இதேப்போல லஞ்ச் டவல், பனியன் ஜட்டிகள் விற்பனையும் சிறப்பாக இருந்தது. இன்று சில்லரை விற்பனை 30 சதவீதம் நடந்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர். ஆனால் அதேநேரம் மொத்த வியாபாரம் சுமாராகவே நடந்தது.

    இப்போதும் ஆந்திரா, கர்நாடகா மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்து ஜவுளி ரகங்களை அள்ளி செல்வார்கள். ஆனால் இன்று ஆந்திரா, கர்நாடகா வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக மொத்த வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. 10 சதவீதம் அளவு கூட நடைபெறவில்லை. ஒரு சில கேரளா வியாபாரிகள் மட்டும் வந்திருந்தனர். ஆனி மாதம் தொடங்கி விட்டதால் அதிக அளவு முகூர்த்தம் இல்லை. இதனால் ஜவுளி வியாபாரம் சுமாராகவே நடந்தது.

    • சுவாமி தாஸ் குடித்துவிட்டு ஆபாச வார்த்தையால் பேசியவாறு கையில் இருந்த அரிவாளால் ரெத்தின மணியை சரமாரியாக வெட்டியுள்ளார்
    • மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    கன்னியாகுமரி :

    கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட காட்டுவிளை குளக்கச்சி பகுதியை சேர்ந்தவர் ரெத்தினமணி (வயது62).

    இவர் மார்த்தாண்டம் சந்தையில் சுமைதூக்கும் தொழிலாளராக பணிபுரிந்து வருகிறார்.

    இவர் வீட்டின் அருகாமையில் நின்று கொண்டிருந்தபோது குளக்கச்சி நெடுவிளை பகுதியை சேர்ந்தவர் சுவாமி தாஸ் (52), குடித்துவிட்டு ஆபாச வார்த்தையால் பேசியவாறு கையில் இருந்த அரிவாளால் ரெத்தின மணியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

    இதனால் பலத்த காயமடைந்த ரத்தின மணியை அக்கம்பக்கத்தினர் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்து ள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல மார்த்தா ண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட குளக்கச்சி நெடுவிளையை சுவாமிதாஸ் (52) என்பவர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரில் தான் எலக்ட்சியனாக பணிபுரிந்து வருவதாகவும்,

    வீட்டின் அருகாமையில் நின்றபோது ரெத்தினமணி குடித்துவிட்டு கம்பால் சரமாரியாக தாக்கி முதுகு, நெஞ்சு, உடல் முழுவதும் காயப்படுத்தியதாகவும் இதனால் படுகாயம் அடைந்த மார்த்தா ண்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். கொடுத்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவிநாசி கைகாட்டிப்புதூா் ஈரோடு நெடுஞ்சாலை அருகே புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது.
    • சந்தை வளாகத்துக்குள் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும்.

    அவினாசி :

    அவிநாசி வாரச் சந்தை சாலையோர கடைகளால் ஏற்படும் போக்குவரத்து இடையூறை தடுக்க, பயன்படுத்தாத உள்புறக் கடைகளை வியாபாரிகளுக்கு பிரித்து வழங்க பேரூராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து அவிநாசி தனியார் அறக்கட்டளை நிா்வாகி ரவிகுமாா் கூறியதாவது:-

    அவிநாசி கைகாட்டிப்புதூா் ஈரோடு நெடுஞ்சாலை அருகே புதன்கிழமை தோறும் வாரச் சந்தை நடைபெறுகிறது. இதில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள், வெளி மாநிலத்தவா்கள் கூடுகின்றனா். சந்தையின் வெளியே இருபுறமும் அமைக்கப்படும் கடைகளால் போக்குவரத்து இடையூறுகள் ஏற்பட்டு வந்ததால், அவிநாசி காவல் துறை, பேரூராட்சி நிா்வாகம் சாா்பில் தடுப்பு அமைத்து சந்தையின் உள்புறமாக கடைகள் அமைக்க அறிவுறுத்தி உள்ளனா். இருப்பினும் இதற்கு நிரந்தரத் தீா்வாக வாரச் சந்தை வளாகத்தில், பல காலமாக பயன்படுத்தாமல் உள்ள கான்கிரீட் கடைகளை வியாபாரிகளுக்கு பிரித்து வழங்கி கடைகள் அமைக்க அறிவுறுத்த வேண்டும். மேலும் சந்தையில் வழிப்பாதை கடைகள் அனைத்தையும் முறைபடுத்த வேண்டும். சந்தை வளாகத்துக்குள் உயா் கோபுர மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.

    ×