search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232927"

    • பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது.
    • சுமார் 4 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    பஞ்ச பூதஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    பவுர்ணமி மட்டுமின்றி விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் இக்கோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மாலை 6.25 மணியளவில் பவுர்ணமி தொடங்கி நேற்று முன்தினம் மாலை 4.35 மணிக்கு நிறைவடைந்தது. பவுர்ணமியையொட்டி கடந்த 9-ந் தேதி முதல் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர். மேலும் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் திருவண்ணாமலையில் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

    வரிசையில் காத்திருக்க முடியாமல் சிலர் இடையில் நுழைவதற்காக இரும்பு தடுப்பு கம்பிகள் மேல் ஏறி இறங்கி சென்றனர். இதனால் வரிசையில் வந்த பக்தர்கள் ஆத்திரம் அடைந்து கூச்சலிட்டனர். இதையடுத்து கோவில் பணியாளர்கள் வந்து அதனை சரி செய்தனர். இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.
    • அஷ்ட லிங்க கோவில்களில் பக்தர்கள் சாமி தாிசனம் செய்தவாறு கிரிவலம் சென்றனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று முன்தினம் மாலை 6.25 மணியளவில் தொடங்கியது. இரவு 7 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிப்பட்டனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    பவுர்ணமி நேற்று மாலை 4.35 மணி வரை இருந்தால் பக்தர்கள் இரவு வரை தொடர்ந்து கிரிவலம் சென்றனர். கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களில் அவர்கள் சாமி தாிசனம் செய்தவாறு கிரிவலம் சென்றனர்.

    தொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலை சுற்றியுள்ள ஒத்தவாடை தெருவை சுற்றி பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • தங்கம், வைர ஆபரணங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தார் உற்சவர் மலையப்பசாமி.
    • மலையப்பசாமி தங்கக் கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    திருப்பதி ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில், ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் கருடவாகன சேவை நடக்கிறது.

    பவுர்ணமி தினமான நேற்றிரவு ஏழுமலையான் கோவில் மாடவீதிகளில் கருட வாகன சேவை வெகுவிமரிசையாக நடந்தது . இதை முன்னிட்டு, உற்சவர் ஏழுமலையான் சர்வ நிலையில், அலங்கார திருக்கோலம் பூண்டு கோவிலிலிருந்து புறப்பட்டு வாகன மண்டபத்தை அடைந்தார்.

    அங்கு தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி சாமிக்கு தீப, நைவேத்திய சமர்ப்பணம் நடந்தது. தொடர்ந்து, பக்தர்களின் பக்தி கோஷங்களுக்கு இடையே கருடவாகன சேவை நடந்தது .

    பவுர்ணமி கருட சேவையொட்டி திருப்பதியில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    சாமி தரிசனத்திற்காக இலவச தரிசனத்தில் வைகுண்டம் காம்ப்ளக்ஸ் காத்திருப்பு அறைகள் அனைத்தும் நிரம்பி வழிந்தது.

    அதனை தாண்டி 5 கிலோமீட்டர் தூரத்திற்கு பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக காத்திருந்தனர். இன்று காலையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    சாமி தரிசனத்திற்கு 24 மணி நேரம் ஆனது. ரூ. 300 விரைவு தரிசன டிக்கெட்டில் 2 மணி நேரத்தில் சாமி தரிசனம் செய்தனர்.

    வருகிற 27-ந் தேதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடங்குகிறது. இந்த விழாவில் கருட சேவை இரவு 7 மணி முதல் அதிகாலை 2 மணி வரை நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • அம்மன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி முன்னிட்டு அம்மனுக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பா ளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயி அம்மன் கோவிலில் ஆவணி மாத பவுர்ணமி முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம் ,மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாரா தனை காட்டப்பட்டது.

    பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    அதேபோல் நன்செய் இடையாறு மகாமாரியம்மன், காவேரி ஆற்றங்கரை அருகே உள்ள பொன்னாச்சி அம்மன், பரமத்தி வேலூர் பகவதி அம்மன், செல்லாண்டி அம்மன் ,பாண்டமங்கலம் மாரியம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், கு.அய்யம்பாளையம் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன், வட கரையாத்தூர் மாரியம்மன், பரமத்தி அங்காள பர மேஸ்வரி அம்மன் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்க ளில் ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
    • பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 6.25 மணியளவில் தொடங்கியது. இதனால் நேற்று மாலை சுமார் 5 மணியில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், அருணாசலேஸ்வரர் கோவிலிலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    இரவு 7 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

    ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

    பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    பவுர்ணமி இன்று மாலை 4.35 மணி வரை இருந்ததால் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி வலம் வந்தனர்.
    • பவுணர்மியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

    திருப்பரங்குன்றம்:

    மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் முருகனின் அறுபடை வீடுகளில் முதலாவதாக படைவீடாக போற்றப்படும் கோவில் அமைந்துள்ளது. இங்குதான் தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்றது என்பது புராண தகவல்.

    பழமை வாய்ந்த இந்த கோவில் மலையில் அமைந்துள்ளது. இந்த மலையை பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் வலம் வருவது வழக்கத்தில் உள்ளது.

    ஆவணி மாத பவுர்ணமியை முன்னிட்டு நேற்று மாலை ஏராளமான பக்தர்கள் திருப்பரங்குன்றம் கோவில் அமைந்துள்ள மலையை சுற்றி வலம் வந்தனர். அப்போது மலை ஒரு சிவலிங்கம் போலவும், அதன் சிகர பகுதியில் பவுர்ணமி நிலவு காட்சி அளித்தது கண்கொள்ளா காட்சியாக இருந்தது.

    இதனை பார்த்து பரவசம் அடைந்த பக்தர்கள் சிவபெருமான் பிறை நிலவை சூடி இருப்பார். ஆனால் திருப்பரங்குன்றத்தில் சிவபெருமான் முழு நிலவை சூடி இருப்பதுபோல் அதிசய காட்சியை கண்டு மெய்சிலிர்த்தோம் என்று தெரிவித்தனர்.

    பவுணர்மியை முன்னிட்டு திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கிரிவல பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


    • திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
    • இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை தொடங்குகிறது.

    திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

    மேலும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை(வெள்ளிக்கிழமை) மாலை சுமார் 6.20 மணியளவில் தொடங்கி மறுநாள் மாலை 4.30 மணியளவில் நிறைவு பெறுகின்றது. பக்தர்கள் கிரிவலம் செல்வதையொட்டி அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இந்த கோவிலுக்கு மாதத்தில் 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்படுகிறது.
    • கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை .

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. மலை மேல் அமைந்துள்ள இந்த கோவிலுக்கு மாதத்தில் அமாவாசை, பவுர்ணமியை முன்னிட்டு தலா 4 நாட்கள் மட்டும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.

    ஆவணி மாத பவுர்ணமி 10-ந்தேதி வருகிறது. இதையொட்டியும், பிரதோஷத்தை (8-ந்தேதி) முன்னிட்டும் வருகிற 8-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை சதுரகிரிக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    மேற்கண்ட நாட்களில் காலை 7 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். மலைப்பாதையில் உள்ள ஓடைகளில் குளிக்கக்கூடாது, பிளாஸ்டிக், எளிதில் தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது, கோவிலில் இரவில் தங்க அனுமதி இல்லை போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    அனுமதி வழங்கப்பட்டுள்ள 4 நாட்களில் மலைப்பகுதிகளில் மழை அறிகுறியோ, நீர்வரத்துகளில் தண்ணீர் வரத்து அதிகமாக இருந்தாலும் சதுரகிரிக்கு செல்ல அனுமதி மறுக்கப்படும் என வனத்துறை தெரிவித்துள்ளது.

    ஆவணி மாத பவுர்ணமி, பிரதோஷத்தை முன்னிட்டு சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கத்துக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    • இந்த கிரிவலத்தில் சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் அருளாசி வழங்கினார்.
    • சிவத்திரு, இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

    சுவாமிமலை:

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டு குழு டிரஸ்ட் சார்பில் ஆடி மாத பவுர்ணமி கிரிவலம் நேற்று மாலை வல்லப கணபதி சன்னதியில் இருந்து தொடங்கியது.

    இந்த கிரிவலத்தில் சிவத்திரு திருவடிக்குடில் சுவாமிகள் அருளாசி வழங்கினார். சிவத்திரு, இறைநெறி இமயவன் வழிகாட்டுதலுடன் கூட்டு வழிபாடு நடைபெற்றது.

    சுவாமிமலை சுவாமிநாத சுவாமி வழிபாட்டுக்குழு டிரஸ்ட் நிர்வாகி கேசவராஜன், மேனேஜிங் டிரஸ்டி சிவசங்கரன், செயலாளர் சேகர், பொருளாளர் சுவாமிநாதன், ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரான், டிரஸ்டிஸ்கள் மாணிக்கம், சண்முகம், நெடுஞ்செழியன், கமிட்டி ஆலோசனைக்குழு உறுப்பினர்கள்கோவி.கல்யாணகுமார், ஜெமினி, வரதராஜன், ஆசிரியர்கள் ஜெயராமன், கணேசன், சிவக்குமார், சுவாமிநாதன், ராஜா ஆகியோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    கிரிவலத்தில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு சென்னை ஆஸ்கார் மீடியாஸ் மேனேஜிங் டைரக்டர் சாய்மோகன் பாலாஜி, மீனாட்சி பாலாஜி மற்றும் குடும்பத்தினர் உணவு வழங்கினர்.

    • பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
    • பக்தர்கள் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

    திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட மலையை சுற்றும் பாதையில் கிரிவலம் செல்வார்கள்.

    இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று காலை 10.16 மணிக்கு தொடங்கியது. இதனால் நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். நேற்று பகலில் வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    மேலும் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்ட லிங்க கோவில்களிலும், அருணாசலேஸ்வரர் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    மாலையில் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் ஆங்காங்கே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர்.

    பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர். பவுர்ணமி இன்று காலை 8 மணி வரை இருந்ததால் பக்தர்கள் விடிய, விடிய கிரிவலம் சென்றனர்.

    மேலும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    • அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பவுர்ணமி அன்று கிரிவலம் வருவது சிறப்பானது.
    • திருவண்ணாமலை மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

    திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். மேலும் திருவண்ணாமலையில் மலையையே சிவனாக வழிபடுவதால் பவுர்ணமி நாட்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து கோவிலின் பின்புறம் உள்ள அண்ணாமலை என்று பக்தர்களால் அழைக்கப்படும் மலையை சுற்றி 14 கிலோ மீட்டர் கிரிவலம் செல்வார்கள்.

    மாதந்தோறும் வரும் பவுர்ணமி மட்டுமின்றி முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை (வியாழக்கிழமை) காலை 10.16 மணிக்கு தொடங்கி மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு நிறைவடைகிறது.

    பவுர்ணமியை முன்னிட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்வதற்காக முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

    • திண்டிவனம் அருகே திருவக்கரையில் அமைந்துள்ளது வக்ர காளியம்மன் கோவில்.
    • வக்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திண்டிவனம் அருகே திருவக்கரையில் பிரசித்தி பெற்ற வக்ர காளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மாதந்தோறும் பவுர்ணமி அன்று நள்ளிரவு மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதன்படி ஆனி மாத பவுர்ணமியான நேற்று நள்ளிரவு 12 மணியளவில் கோவிலின் மேல் பிரகாரத்தில் அமைந்துள்ள பீடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

    அப்போது அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் ஓம் காளி, வக்ர காளி, வக்ரகாளி ஜோதியை பார்த்தால் பாவம் தீரும் என கோஷமிட்டனர். முன்னதாக வக்ரகாளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலை துறை உதவி ஆணையர் சிவாகரன், செயல் அலுவலர் சிவக்குமார், ஆய்வாளர் உமாமகேஸ்வரி, சிவாச்சாரியார் குருக்கள் சேகர், மேலாளர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.

    மகா தீபம் ஏற்றப்பட்டதையொட்டி விழுப்புரம், திண்டிவனம், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்து திருவக்கரைக்கு அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ×