search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுரண்டை"

    • சம்பவத்தன்று சண்முக சுந்தரியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு பேச்சிமுத்து வீ.கே.புதூருக்கு சென்று கொண்டிருந்தார்.
    • அப்போது நடந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பேச்சிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    சுரண்டை:

    வீ.கே.புதூர் அருகே உள்ள வெள்ளக்கால் பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்தவர் பேச்சிமுத்து(வயது 54). இவர் வீ.கே.புதூரில் டீக்கடை நடத்தி வருகிறார்.

    இவரது மகள் சண்முகசுந்தரிக்கு வீ.கே.புதூரை சேர்ந்த ஒருவருடன் திருமணம் ஆகி உள்ளது. சம்பவத்தன்று சண்முக சுந்தரியை மோட்டார் சைக்கிளில் அழைத்துக்கொண்டு பேச்சிமுத்து வீ.கே.புதூருக்கு சென்று கொண்டிருந்தார்.

    அப்போது எதிரே ராஜபாண்டி கிராமத்தை சேர்ந்த சூர்யா(20) என்ற வாலிபர் வந்த மோட்டார் சைக்கிளும், பேச்சிமுத்துவின் வாகனமும் நேருக்கு நேர் மோதியது.

    இதில் தூக்கி வீசப்பட்ட பேச்சிமுத்து சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுதொடர்பாக சுரண்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழாவிற்கு சுரண்டை காமராஜர் நற்பணி இயக்க தலைவர் வழக்கறிஞர் சின்னதம்பி தலைமை தாங்கினார்.
    • வெற்றி பெற்ற 60 பேருக்கு சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் பரிசு வழங்கி பாராட்டினார்.

    சுரண்டை:

    சுரண்டை காமராஜர் நற்பணி இயக்கம் சார்பில் காமராஜரின் 120-வது பிறந்த நாள் விழா சுரண்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

    சுரண்டை காமராஜர் நற்பணி இயக்க தலைவர் வழக்கறிஞர் சின்னதம்பி தலைமை தாங்கினார். நெல்லை மாவட்ட காங்கிரஸ் இணைச் செயலாளர் ராமநாதன் முன்னிலை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் நாகரத்தினம் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். ஆசிரியர் கலைச்செல்வன் வரவேற்று பேசினார். தலைமை ஆசிரியர் கனகராஜ் சிறப்புரையாற்றினார்.

    விழாவில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டி,ஒவியம், நடனம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற 60 பேருக்கு சுரண்டை நகராட்சி சேர்மன் வள்ளி முருகன் பரிசு வழங்கி பாராட்டினார்.

    விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கூட்டுறவு பண்டகசாலை தலைவர் ஜெயபால், ஊர் கமிட்டி நிர்வாகி பால்சாமி, வார்டு கவுன்சிலர்கள் ராஜ்குமார், அமுதா சந்திரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தபேந்திரன், நாடார் எழுச்சி பேரவை மாவட்ட செயலாளர் மாடசாமி, வியாபாரிகள் சங்கம் செய்தி தொடர்பாளர் ராஜ்குமார் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உதவி தலைமை ஆசிரியர் கனகராஜ் நன்றி கூறினார்.

    • அரசு மற்றும் முஸ்லிம் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடந்தது.
    • விழாவில் பொதுமக்களும், ஆசிரியர்களும், மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    சுரண்டை:

    வீராணம் அரசு மற்றும் முஸ்லிம் பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தி.மு.க. சார்பில் பாராட்டு விழா நடந்தது.

    ஆலங்குளம் ஒன்றிய கவுன்சிலர் ஷேக் முகம்மது ஏற்பாட்டில் நடந்த விழாவிற்கு, மாவட்ட தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாபன் தலைமை தாங்கினார். ஆலங்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் தியாகராஜன், வீராணம் பஞ்சாயத்து தலைவர் வீரபாண்டியன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் இருதாலய மருதப்ப பாண்டியன், ஆலங்குளம் வடக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பழனி நாடார் எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார்.

    விழாவில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி, ஒன்றிய குழு தலைவர் திவ்யா, அரசு பள்ளி தலைமை ஆசிரியர் ஜர்னாஸ் ஜான், உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை மைதீன் நிஷா, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் பாலசுந்தரம், ஆலங்குளம் வட்டார காங்கிரஸ் தலைவர் முஸ்தபா, கிளைக் கழகச் செயலாளர் பாலசுப்ரமணியன், வீரபுத்திரன், அப்துல் காதர், முஸ்தபா கமால், பாலமுருகன், சதாம் உசேன், அன்சார் அலி உட்பட ஏராளமான பொதுமக்களும், ஆசிரியர்களும், மாணவ- மாணவிகளும் கலந்து கொண்டனர்.

    • பேரிடர் நேரங்களில் தீயணைப்பு துறையினரின் உதவிகளை பெறுவது, குறித்து விளக்கி பயிற்சி அளித்தனர்.
    • தாசில்தார் தெய்வசுந்தரி முன்னிலை வகித்தார்

    சுரண்டை:

    சுரண்டை தீயணைப்பு நிலையம் சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை நிகழ்ச்சி வீ.கே.புதூர் அருந்தவபிராட்டி குளத்தில் நடந்தது.

    நிகழ்ச்சிக்கு தாசில்தார் தெய்வசுந்தரி முன்னிலை வகித்தார். ‌சுரண்டை தீயணைப்பு நிலைய அலுவலர் முத்து செல்வன், தலைமையில் போக்குவரத்து அலுவலர் பாலச்சந்தர், சிறப்பு நிலைய அலுவலர் ரவீந்திரன், சாமி, உலகநாதன், குமார் பொன்ராஜ் ஆகியோர் தீயணைப்பு துறையின் பணிகள் தீவிபத்து, வெள்ளம், கட்டிட இடிபாடுகள் மற்றும் பேரிடர் நேரங்களில் தீயணைப்பு துறையினரின் உதவிகளை பெறுவது, குறித்து விளக்கி பயிற்சி அளித்தனர்.

    ஆர்.ஐ. ராசாத்தி, கண்ணன், கிராம நிர்வாக அதிகாரி ராதாகிருஷ்ணன், கிராம உதவியாளர் முருகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • முகாமில், பிறந்த தேதி, பாலினம் போன்றவற்றை திருத்தம் செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.
    • ஆதார் சேவை முகாமில், 350-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர்.

    சுரண்டை:

    சுரண்டை கருவந்தா ஆர்.சி. கோவில் வளாகத்தில் 3 நாட்கள் நடந்த ஆதார் சேவை முகாமில், குழந்தைகளுக்கான புதிய ஆதார் அட்டை எடுத்தல், 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கான கைரேகை மற்றும் கருவிழி பதிவுகளை மேற்கொள்ளுதல், பெயர், முகவரி, செல் நம்பர், பிறந்த தேதி, பாலினம் போன்றவற்றை திருத்தம் செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 350-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர்.

    முகாமில் போஸ்ட் மாஸ்டர்கள் தனுசியா, ஞான துரை, ஆய்வாளர் வேதமாணிக்கம், ஓவர்சியர் கள் முத்துராஜ், கணேசன், அலுவலகப் பணியாளர்கள் கலையரசன், கார்த்தி, சேகர், பிச்சை பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு ஆதார் சேவைகளை வழங்கினர்.

    முகாம் ஏற்பாடுகளை கருவந்தா பஞ்சாயத்து தலைவர் தானியேல், துணைத்தலைவர் மங்களம் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.

    • மக்கள் பணிக்கான தூய்மை இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமையில் நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    சுரண்டை:

    சுரண்டை நகராட்சியில் மக்கள் பணிக்கான தூய்மை இயக்க விழிப்புணர்வு ஊர்வலம் சுரண்டை மகாத்மா காந்தி பஸ் நிலையத்தில் நகராட்சி தலைவர் வள்ளி முருகன் தலைமையில் நடைபெற்றது.

    துணை தலைவர் சங்கராதேவி முருகேசன் முன்னிலை வகித்தார். நகராட்சி ஆணையாளர் பாரிஜான் தூய்மை பணிக்கான மக்கள் இயக்கம் குறித்து விளக்க உரையாற்றி, தூய்மை பணிக்கான மக்கள் இயக்க செயல்பாடுகள் குறித்து சிறப்புரையாற்றி, மக்களின் பங்கு குறித்து விளக்கினார்.

    தொடர்ந்து ஆணையாளர் உறுதிமொழி வாசிக்க மஸ்தூர் பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், நகராட்சி கவுன்சிலர்கள், கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    தொடர்ந்து சுரண்டை பஸ் நிலையத்திலிருந்து தொடங்கிய விழிப்புணர்வு ஊர்வலம் அண்ணாசிலை வழியாக நகராட்சி அலுவலகத்தை சென்றடைந்தது. நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் சாந்தி தேவேந்திரன், அருணகிரி சந்திரன், பாலசுப்பிரமணியன், கல்பனா அன்ன பிரகாசம், உஷா பிரபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×