search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 232990"

    • புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது.
    • கோடி சக்தி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி சிறப்புப் பூஜை நடைபெற்றது. இதனையொட்டி கணபதி பூஜையுடன் தொடங்கி ஸ்தபன கும்ப கலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைபெற்றது.

    பின்னர் கோடி சக்தி விநாயகருக்கு மஞ்சள், பால், தேன், விபூதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. விநாயருக்கு கொழுக்கட்டை, சுண்டல் படைத்து சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார். இவ்விழாவில் கோவில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணியன், நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள், சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை சொர்ணமலை திருச்செந்தூர் பாதயாத்திரை மற்றும் அன்னதான குழு, முருகன், பிரேமா ஆகியோர் செய்தனர்.

    • சதுர்த்தி விரதம் கடைப் பிடிப்பவர்களுக்கு சங்கடங்கள் அழியும்.
    • இன்று விநாயகருக்கு உரிய சதுர்த்தி திதி.

    இன்று (செவ்வாய்க்கிழமை) மகம் நட்சத்திரம். மகம் என்பது கேதுவின் நட்சத்திரம். கேதுவிற்கு உரிய தெய்வம் விநாயகர். இன்று விநாயகருக்கு உரிய திதி (சதுர்த்தி திதி). எனவே சதுர்த்தி விரதம் கடைப் பிடிப்பவர்களுக்கு சங்கடங்கள் அழியும். அதாவது நீங்கும் என்பதால் சங்கடஹர சதுர்த்தி தினம்.

    இன்று அதிகாலை நீராட வேண்டும். விரதம் இருக்க வேண்டும். விநாயகருக்கு அறுகம்புல் மாலை சாத்த வேண்டும். கொழுக்கட்டை, அப்பம், அவல், பொரி, வெல்லம் முதலியவற்றை படைத்து பூஜை செய்ய வேண்டும்.

    மாலையில் விநாயகர் கோவிலுக்கு சென்று பூஜையில் கலந்துகொண்டு விநாயகரை வழிபாடு செய்து வேண்டும். பின்னர் வீட்டிற்கு வந்து நிலவை பார்த்த பின்னர் இரவு உப்பு சேர்க்காத உணவை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.

    இவ்வாறு ஒவ்வொரு மாதமும் வரும் சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து விநாயகரை வழிபாடு செய்து வந்தால் நம் துன்பங்கள் பனிபோல் கரைந்து ஓடிவிடும்.

    • விசாலாட்சி விநாயகர் கோவிலில் 10-ந்தேதி சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலைமையில் நடக்கிறது.
    • 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர்.

    மதுரை

    மதுரை மடப்புரம் விலக்கு விசாலாட்சி விநாயகர் கோவிலில் நாளை சங்கடஹர சதுர்த்தி விழா கரு.கருப்பையா தலையைில் நடக்கிறது.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்று பாலத்தை அடுத்து மடப்புரம் விலக்கு பேருந்து நிறுத்தம் ஆர்ச் எதிரில் உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது.

    இந்த மாதம் சங்கடஹர சதுர்த்தி வருகிற 10-ந்தேதி காலை 10 மணிக்கு கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது.

    பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள். ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால் கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை.

    இதற்கான ஏற்பாடுகளை கரு.கருப்பையா செய்து வருகிறார்.

    • சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டை,உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • பால், தயிர், தேன், சந்தனம், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெற்றது.

    பல்லடம்:

    சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு பல்லடம் பகுதியில் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதன்படி பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை கோவிலில், விநாயகப் பெருமானுக்கு, பால், தயிர், தேன், சந்தனம், உள்ளிட்ட 16 வகை திரவியங்களால் அபிஷேக பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் .இதே போல், பல்லடம் செல்வ விநாயகர் திருக்கோவில், பொன்காளியம்மன் கோவில், சித்தம்பலம் கோளறுபதி நவகிரக கோட்டை,உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் சங்கடஹர சதுர்த்தி முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    • பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.
    • திருமண தடை அகலும்.

    விநாயக பெருமானுக்கு உகந்த சங்கடஹர தினமான இன்று விநாயகரை நினைத்து வழிபாடு செய்வது பல நன்மைகளை தரும். விநாயகருக்கு உகந்த இந்த மந்திரத்தை சொல்லி வந்தால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.

    ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ஏகதந்தாய லம்போதராய

    ஹேரம்பாய நாலிகேர ப்ரியாய மோதபக்ஷணாய

    மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதிகூலம் மே நஸ்யது

    அநுகூலம் மே வஸமானய ஸ்வாஹா

    சங்கடஹர சதுர்த்தி நாளில் இந்த மந்திரத்தை கூறுவதன் பயனாக காரியம் சித்தி அடையும், திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும். இப்படி பல நன்மைகள் இந்த மந்திரத்தின் மூலம் கிடைக்கும்.

    • சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் கைகூடும்.
    • திருமண தடை அகலும், கடன் தொல்லை தீரும்.

    மூல முழு முதற் கடவுளான கணபதியின் 32 முக்கிய வடிவங்களில் சங்கடஹர கணபதியும் ஒருவர் ஆவார். இவர் சங்கடங்களை நீக்குவதால், சங்கடஹர கணபதி என்றழைக்கப்படுகிறார். எளிமையின் வடிவமான விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்து காலையும், மாலையும் பூஜிக்க நன்மைகள் யாவும் சேரும் என்பது ஐதீகம்.

    வெள்ளிக்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தியை சுக்கிர வார சங்கடஹர சதுர்த்தி என்கிறோம். சிவ பெருமானுக்கு உரிய விரதங்களில் பிரதோஷ விரதம் எப்படி உயர்வானதாக கருதப்படுகிறதோ, அதே போல் விநாயகரை வழிபாடு செய்வதற்கு பல விரத தினங்கள் இருந்தாலும் விரதத்தில் மிக சிறந்ததும், பழமையானதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் ஆகும். 'சங்கஷ்டம்" என்றால் கஷ்டங்கள் சேருதல் என்று பொருள். வாழ்வில் சேரும் சகல சங்கடங்களை நீக்க சதுர்த்தி விரதம் கடைபிடிக்கப்படுகிறது. சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவு கடந்த ஆனந்தத்தை அடையலாம். சகல சௌபாக்கியங்களையும் பெறலாம்.

    விநாயகரை போலவே விரதங்களில் முதன்மையானதும், எளிமையானதும் சதுர்த்தி விரதம் தான். சதுர்த்தி அன்று காலையில் குளித்துவிட்டு, வீட்டிற்கு அருகிலுள்ள கோவிலுக்கு சென்று, விநாயகரை 11 முறை வலம் வர வேண்டும். அறுகம்புல் கொடுத்து அர்ச்சனை செய்து விநாயகரை வணங்க வேண்டும். பின் வெள்ளெருக்கன் பூவை மாலையாக கோர்க்க வேண்டும். அம்மாலையில் உள்ள பூக்கள் 1008 அல்லது 21 என்ற எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும். அவ்வாறு கோர்க்கப்பட்ட மாலையை விநாயகருக்கு அணிவித்து அவரை வணங்க வேண்டும்.

    மேலும் இன்று விநாயகருக்கு நெய்வேத்தியமாக மோதகத்தை படைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் பண கஷ்டம், மன கஷ்டம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் என அனைத்தும் நீங்கி செல்வ வளம் நிச்சயம் பெருகும். கோயிலுக்கு செல்ல இயலாத நிலையில் வீட்டிலேயே விநாயகருக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடலாம்.

    சங்கடஹர சதுர்த்தி விரதம் இருப்பதால் நினைத்த காரியம் கைகூடும். வீண் பழி அகலும். பகைவர்களும் நண்பர்களாவார்கள். தீவினை அகலும். மனச்சுமை நீங்கும்.

    • சிறப்பு அலங்காரம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
    • அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் வளாக விநாயகர் கோவில், எல். கே. சி. நகர் புற்றுக்கண்ஆனந்த விநாயகர் கோவில்.திருவள்ளுவர் நகர் விநாயகர் கோவில், சக்தி நகர் விநாயகர் கோவில், குமார வலசு விநாயகர் கோவில்களில் நேற்று சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அலங்காரம், தேன், பன்னீர், பஞ்சாமிரம், கனி, விபூதி, மஞ்சள், சந்தனம்,பூ அபிஷேகம்,தீபாராதனை நடைபெற்றது.

    அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது, இதற்கான ஏற்பாடுகளை அந்த பகுதி பொதுமக்கள் செய்திருந்தனர்.

    • ஆவணி மாதத்திலேயே வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
    • இன்று விரதம் இருந்து விநாயகரை வழிபட்டால் திருமண தடை நீங்கும்.

    ஆவணி மாதத்தில் பல தெய்வங்களுக்குரிய பண்டிகை தினங்கள் வருகின்றன. இந்த ஆவணி மாதத்தில் தெய்வங்களுக்குரிய வழிபாடு மற்றும் விரதம் இருப்பதால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிச்சயமான வெற்றியை பெறும் என்பது பெரியோர்களின் அனுபவமாக இருக்கிறது. ஆவணி மாதத்திலேயே வருகின்ற சங்கடஹர சதுர்த்தி தினம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. காரணம் இந்த ஆவணி மாதத்தில் தான் விநாயகருக்குரிய விநாயகர் சதுர்த்தி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

    ஆவணி சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று அதிகாலை நீராடி, காலை முதல் மாலை வரை விநாயகப்பெருமான் நினைவோடு ஏதும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும். உணவு சாப்பிட வேண்டிய நிலையில் இருப்பவர்கள் உப்பு சேர்க்காத உணவு அல்லது பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் மேற்கொள்ளலாம். மாலையில் அருகிலுள்ள விநாயகர் கோயில், சந்நிதிக்கு சென்று விநாயகப் பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகதிற்கு பசும் பால் மற்றும் வாசமிக்க மலர்கள், மஞ்சள், விபூதி போன்ற அபிஷேக பொருட்களை தந்து, அபிஷேக பூஜையில் கலந்து கொண்டு விநாயகரை வழிபட வேண்டும். வழிபாடு முடித்து ஆலயத்தை எட்டு முறை வலம் வந்து வணங்க வேண்டும். கோயிலில் அனைத்து பூஜை வழிபாடுகள் முடிந்ததும் வீட்டிற்கு வந்து விநாயகரை வணங்கி பூஜையறையில் நைவேத்தியம் வைக்கப்பட்ட பழத்தை சாப்பிட்டு விரதத்தை முடித்து கொள்ளலாம்.

    ஆவணி மாத சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று விநாயகருக்கு விரதமிருந்து வழிபடுவதால் நீண்ட காலமாக திருமண தாமதமானவர்களுக்கு திருமணம் நடக்கும். புதிய வீடு, மனை போன்ற சொத்துகள் வாங்குவதில் இருந்து வந்த தடைகள் விலகும். உடல் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும். புதிய முயற்சிகள் அனைத்தும் சிறப்பான வெற்றிகளை பெறும். குழந்தைகளுக்கு அடிக்கடி ஏற்படும் நோய் பாதிப்புகள் நீங்கி அவர்கள் கல்வியில் சிறக்க செய்யும். தொழில், வியாபாரங்களில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்து லாபங்கள் பெருகும்.

    • விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள்.
    • இந்த கோவிலில் தேங்காய் மாலை சாத்தி வழிபடுகிறார்கள்.

    மதுரை அருகே திருப்புவனம் வைகை ஆற்றுப்பாலத்தை அடுத்த மடப்புரம் விலக்கு பஸ் நிறுத்தம் ஆர்ச் எதிரே உள்ள பிரசித்தி பெற்ற திசைமாறிய தெற்குமுக விசாலாட்சி விநாயகர் கோவிலில் மாதந்தோறும் சங்கடஹர சதுர்த்தி விழா நடைபெற்று வருகிறது. விநாயகருக்கு உகந்த சங்கடஹர சதுர்த்தி விழா, இந்த கோவிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

    கோவில் நிர்வாகியும், தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் இலக்கிய பேரவை தலைவருமான பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா தலைமையில் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. பொதுவாக விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுவார்கள்.

    ஆனால் மடப்புரம் விலக்கில் உள்ள இந்த கோவிலில் பக்தர்கள் விநாயகருக்கு 7 தேங்காய்களை மாலையாக சாற்றி 108 முறை வலம் வந்து வழிபடுகின்றனர். இதனால், கடன் தொல்லை, முன்னோர் சாபம், திருமண தடைகள் அகலும் என்பது பக்தர்கள் நம்பிக்கை. சங்கடஹர சதுர்த்தி விழாவிற்கான ஏற்பாடுகளை கரு. கருப்பையா செய்து வருகிறார்.

    • சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது.
    • கோடிசக்தி விநாயகருக்கு 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி சமேத சங்கரேஸ்வரி அம்பாள் புற்றுக்கோவிலில் சங்கடஹர சதுர்த்தி பூஜை நடைபெற்றது

    மாலை 6 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கி, ஸ்தபன கும்பகலச பூஜை, யாகசாலை பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மூல மந்திர ஹோமம், பூர்ணாகுதி தீபாராதனை நடைப்பெற்றது. பிறகு கோடிசக்தி விநாயகருக்கு மாலை, மஞ்சள், பால், தேன், விபுதி, பன்னீர், சந்தனம் போன்ற 18 வகையான சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடைபெற்றது. பூஜைகளை சுப்பிரமணிய அய்யர் செய்தார்

    விழாவில் கோவில் நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்று வட்டார மக்கள் திரளாக கலந்து கொண்டு முககவசம் அணிந்து சமூக இடைவெளி கடைப்பிடித்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    பக்தர்களுக்கு இனிப்பு பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கணேஷ் குமார் ஆனந்தவள்ளி, காளீஸ்வரி கர்ணிகா ஆகியோர் செய்திருந்தனர்.

    • சோழவந்தான் கோவிலில் சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.
    • இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

    சோழவந்தான்

    சோழவந்தானில் திரவுபதி அம்மன் கோவிலில் விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. பால், தயிர், வெண்ணை, திரவிய பொடி, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம், ஆராதனை, அர்ச்சனை செய்யப்பட்டது.

    இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பூசாரி திருப்பதி வெங்கடேசன்- சுமதி பவதாரணி ஆகியோர் செய்து இருந்தனர்.

    • ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது.
    • 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது.

    வீரபாண்டி :

    திருப்பூர் வீரபாண்டி மாகாளியம்மன் கோவிலில் வில்வ விநாயகர் பெருமானுக்கு ஆடி மாத சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு யாக பூஜை நடைபெற்றது.

    பின்பு 16 வகையான திரவியங்களை கொண்டு அபிஷேகம் நடைபெற்று மலர் மாலைகளால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்து கொண்டு வினை தீர்க்கும் வில்வ விநாயகரை வழிபாடு செய்தனர்.

    ×