என் மலர்
நீங்கள் தேடியது "மழை நீடிப்பு"
- நேற்று மதியத்துக்குப் பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது.
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது.
நேற்று மதியத்துக்குப் பிறகு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இரவும் விட்டுவிட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய்தது.
தக்கலை, களியக்காவிளை, குழித்துறை, இரணி யல், பூதப்பாண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. மயிலாடியில் அதிகபட்சமாக 69.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் கன மழை கொட்டி தீர்த்து வருவதால் அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது.இதனால் அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர தொடங்கியுள்ளது.அணைகளில் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள்.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து தற்போது உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் குழித்துறை ஆறு கோதை ஆறு பரளியாறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. குழித்துறை ஆற்றில் சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் செல்கிறது.ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக கரையோரப் பகுதியில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.
திற்பரப்பு அருவியில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் இன்றும் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து உள்ளனர்.
பேச்சிபாறை அணை நீர்மட்டம் இன்று காலை 41.70 அடியாக இருந்தது. அணைக்கு 1077 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 546 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 72.05 அடியாக உள்ளது.அணைக்கு 1136 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1020 கன அடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. சிற்றார்-1 நீர்மட்டம் 12.86 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 21.6 அடியாகவும், பொய்கை அணை நீர்மட்டம் 16 அடியாகவும், மாம்பழத்து றையாறு நீர்மட்டம் 38.71 அடியாக உள்ளது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணை நீர்மட்டம் 13.20 அடியாக உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழை யின் காரணமாக செங்கல் உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.தோவாளை செண்பகராமன்புதூர் தடிக்காரன்கோணம் பகுதிகளில் உள்ள செங்கல் சூளைகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் ஏற்கனவே தயார் செய்து வைக்கப்பட்டிருந்த செங்கல்களும் மழையில் சேதம் அடைந்து உள்ளது. தொடர்மழையின் காரணமாக செங்கல் சூளை தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள்.
கீரிப்பாறை தடிக்காரன்கோணம் குலசேகரம் பகுதிகளில் உள்ள ரப்பர் தோட்டங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. ரப்பர் மரங்களில் கட்டப்பட்டுள்ள சிரட்டைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் ரப்பர் பால் உற்பத்தியும் பாதிப்புக்கு உள்ளது. நாகர்கோவிலில் நேற்று இரவு பெய்த மழைக்கு கம்பளம் பகுதியில் வீடு வந்து இடிந்து விழுந்தது.இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிபாறை-53.8, பெருஞ்சாணி-20, சிற்றார்-1-6.2, சிற்றார்-2-21.6, பூதப்பாண்டி-11.2, களியல்-2.4, கன்னிமார்- 18.6, கொட்டாரம்-18.4, குழித்து றை-14, மயிலாடி- 69.2, நாகர்கோவில்-34.8, சுருளோடு-18.6, தக்கலை- 23.2, குளச்சல்-4.4, இரணியல்-8, பாலமோர்- 38.2, மாம்பழத்துறை யாறு-19, திற்பரப்பு- 8.2, கோழிபோர் விளை- 37.6, அடையாமடை- 31, குருந்தன்கோடு-5.2, முள்ளங் கினாவிளை-18.6, ஆணைக் கிடங்கு-17.
- குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது
- கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாகர்கோவில் :
வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வருகிற 6-ந்தேதி உருவாகிறது. இதனால் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித் துள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை கொட்டி தீர்த்து வந்த நிலையில் நேற்று இரவு மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இன்று காலையிலும் மழை பெய்து கொண்டே இருக்கிறது.கன்னியாகுமரி கொட்டாரம் மயிலாடி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.
கொட்டாரம் பகுதியில் சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை கொட்டி தீர்த்தது. அங்கு அதிக பட்சமாக 70.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அங்கு தொடர்ந்து பெய்து வந்த மழையினால் மின்னல் தாக்கி பெருமாள்புரம் வெட்டி முறிச்சான் இசக்கி அம்மன் கோவில் கோபுர கலசம் ஒன்று உடைந்து கீழே விழுந்தது.
நாகர்கோவிலில் இன்று காலை முதலே வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பும் மந்தாரமுமாக காணப்பட்டது. அவ்வப்போது மழை பெய் தது. இதனால் ரோடு களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இரணியல், ஆரல் வாய்மொழி, கோழிப் போர்விளை, அடையா மடை, குருந்தன்கோடு, முள்ளங்கினாவிளை, ஆணைக்கிடங்கு உட்பட அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.
தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதையடுத்து பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைகளில் இருந்து 3000 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைகளில் இருந்து உபரிநீர் வெளி யேற்றப்படுவதால் கோதை ஆறு, குழித்துறை ஆறு, தாமிரபரணி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
கோதை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணி கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மாவட்டம் முழுவதும் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை-52.2, பெருஞ்சாணி-57.2, சிற்றார்-1-28.4, சிற்றார்- 2-43.8, பூதப்பாண்டி-10.4, களியல்-43.7, கன்னிமார்- 9.2, கொட்டாரம்-70.4, குழித்துறை-34, மயிலாடி- 32.2, நாகர்கோவில்-2, சுருளோடு-28, தக்கலை-39.2, இரணியல்-4.6, பால மோர்-10.2, மாம்பழத்துறை யாறு-6.33, திற்பரப்பு- 47.4 ஆரல்வாய்மொழி- 2.2, கோழிப்போர்விளை- 18, அடையாமடை-29.4, குருந்தன்கோடு-2.8, முள்ளங்கினாவிளை- 12.6, ஆணைக்கிடங்கு-34.
பேச்சிப்பாறை அணை யின் நீர்மட்டம் இன்று காலை 42.38 அடியாக உள்ளது. அணைக்கு 1175 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 1016 கனஅடி உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71.07 அடியாக உள்ளது. அணைக்கு 1112 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது.அணை யில் இருந்து 1872 கன அடி தண்ணீர் வெளியேற் றப்படுகிறது.
சிற்றார்-1 அணை நீர்மட்டம் 13.61 அடியாக வும், சிற்றார்-2 அணை நீர்மட்டம் 13.71 அடியா கவும், பொய்கை நீர்மட் டம் 16 அடியாகவும், மாம்ப ழத்துறையாறு நீர்மட்டம் 39.62 அடியாகவும், முக்கடல் நீர்மட்டம் 13.4 அடியாகவும் உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக பாசன குளங்களும் நிரம்பி வருகிறது. விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
மாவட்டம் முழுவதும் செங்கல் உற்பத்தி ரப்பர் பால் உற்பத்தி பாதிக்கப்பட் டுள்ளது. ஏராளமான தொழிலாளர்கள் வேலை இன்றி தவித்து வருகிறார்கள். செங்கல் உற்பத்தி பாதிக்கப் பட்டுள்ளதையடுத்து செங்கல் விலை சற்று உயர்ந்துள்ளது.
- வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- மாவட்டம் முழுவதும் மொத்தம் 159.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
நாமக்கல்:
மாண்டஸ் புயலின் தாக்கம் இன்று வரை இருக்கும் என்றும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாமக்கல்
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று இரவு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக கொல்லிமலை, எருமப்பட்டி, மங்களபுரம், நாமக்கல் நகர பகுதி உட்பட பல பகுதிகளில் மழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது.மாவட்டத்தில் அதிக–பட்சமாக கொல்லிமலையில் 27 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
கலெக்டர் அலுவலகப் பகுதி- 5, எருமைப்பட்டி- 10, மங்களபுரம் -7 , மோகனூர்- 7, நாமக்கல் -7, பரமத்தி- 5, புதுசத்திரம் -2, சேந்தமங்கலம் -2.4, திருச்செங்கோடு -1 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் 73.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சியளித்தது.
சேலம்
சேலம் மாவட்டத்தில் வீரகனூர், ஆத்தூர், ஏற்காடு, தலைவாசல், சேலம், ஓமலூர், தம்மம்பட்டி, சங்ககிரி, கெங்கவல்லி, எடப்பாடி ஆகிய பகுதிகளில் மழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் குளிர் நிலவுகிறது. நேற்று வீரகனூர், தம்மம்பட்டி, தலைவாசல் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வீரகனூரில் அதிகபட்சமாக 45 மில்லிமீட்டர் பதிவாகி உள்ளது. இந்த மழையினால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:
வீரகனூர் - 45 மி.மீ, தம்மம்பட்டி - 27, தலைவாசல் - 23, மேட்டூர் - 12.2, எடப்பாடி - 11, கெங்கவல்லி - 10, ஏற்காடு-8, ஆத்தூர் - 7.6, பெத்தநாயக்கன்பா–ளையம்-6, ஆணைமடுவு -3, சேலம்- 2.6, ஓமலூர்- 2, கடையாம்பட்டி-1, கரிய கோவில்- 1 என மாவட்டம் முழுவதும் மொத்தம் 159.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.A
- கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது
- அஞ்சுகிராமம் மயிலாடி, கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதிகளில் மழை பெய்யவில்லை.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. காலை நேரங்களில் வெயில் அடித்து வரும் நிலையில் மதியத்திற்கு பிறகு சீதோசன நிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு மழை பெய்து வருகிறது.
குறிப்பாக மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பரவலாக மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து காணப்படுகிறது. ஆனால் கிழக்கு மாவட்ட பகுதிகளான அஞ்சுகிராமம் மயிலாடி, கன்னியாகுமரி நாகர்கோவில் பகுதிகளில் மழை பெய்யவில்லை. தொடர்ந்து சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. பூதப்பாண்டி பகுதியில் நேற்று மதியம் கனமழை கொட்டி தீர்த்தது.
முக்கடல் அணைப்பகுதி யிலும் ஒரு மணி நேரத்துக்கு மேலாக மழை பெய்தது. அங்கு அதிகபட்சமாக 24.9 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.பேச்சிப்பாறை பெருஞ் சாணி அணை பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.
திற்பரப்பு அருவிப்பகுதி யில் பெய்து வரும் சாரல் மழை காரணமாக ரம்மிய மான சூழல் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. பேச்சி பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 34.71 அடியாக உள்ளது. அணைக்கு 216 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 223 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 33.25 அடியாக உள்ளது. அணைக்கு 78 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. நாகர்கோவில் நகருக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும் முக்கடல் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. இந்த நிலையில் அணைப்பகுதியில் மழை பெய்துள்ளது.முக்கடல் அணையின் நீர்மட்டம் இன்று காலை 10.70 அடியாக உள்ளது.
மாவட்ட முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பேச்சிபாறை 9.4 பெருஞ்சாணி 14.4 சிற்றாறு1-11 சிற்றாறு2-14.2 பூதப்பாண்டி 20 கன்னிமார் 9.2 புத்தன் அணை 12.8 பாலமோர் 9.4 மாம்பழத்துறையாறு 19.2 திற்பரப்பு 8 முக்கடல் 24.9
- பெருஞ்சாணியில் 34 மில்லி மீட்டர் பெய்தது
- பல இடங்களிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் மக்களை சுட்டெரித்து வந்தது. அக்னி நட்சத்திரத்தை நினைவு படுத்தும் வகையில் வெப்பத்தின் தாக்கம் இருந்து வந்தது.
இந்த நிலையில் வளி மண்டலத்தில் ஏற்பட்ட திடீர் மாற்றம் காரணமாக குமரி மாவட்டத்தில் பல இடங்களிலும் நேற்று முன்தினம் மழை பெய்தது. பகலிலும் வெப்பம் குறைந்து மேகமூட்டமாகவே காணப்பட்டது. நேற்று 2-வது நாளாக அணைப்பகுதிகளில் பரவலாக மழை நீடித்தது. இதனால் மாவட்டம் முழுவதும் வெப்பம் தணிந்து இரவிலும் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
பெருஞ்சாணியில் அதிக பட்சமாக 34 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. புத்தன் அணையில் 30.2, சுருளோட்டில் 27, பூதப்பாண்டியில் 22.4, சிற்றாறு-1 பகுதியில் 20.6, பேச்சிப்பாறையில் 16.8, முக்கடல் அணையில் 10, தக்கலையில் 9.2, ஆரல்வாய் மொழியில் 6.2, நாகர்கோவி லில் 5, பாலமோரில் 4.2, கன்னிமார், சிற்றாறு-2 பகுதிகளில் தலா 2.2, மாம்பழத்துறையாறு 1 மில்லி மீட்டர் மழை பெய்த தாக பதிவாகி உள்ளது.
மழையின் காரணமாக சிற்றாறு-1 அணைக்கு விநாடிக்கு 6 கன அடி நீரும், சிற்றாறு-2 அணைக்கு 10 கன அடி நீரும், பேச்சிப்பாறை அணைக்கு 244 கன அடி நீரும், பெருஞ்சாணி அணைக்கு 34 கனஅடி நீரும் வந்து கொண்டிருக்கிறது.
77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையில் தற்போது 36.90 அடியும், 48 அடி கொண்ட பேச்சிப்பாறையில் 36.05 அடியும் தண்ணீர் உள்ளது. சிற்றாறு-1 அணையில் 8.10 அடியும், சிற்றாறு-2 அணையில் 8.20 அடியும், பொய்கை அணையில் 13.70 அடியும், மாம்பழத்துறை யாறு அணையில் 2.30 அடியும் தண்ணீர் உள்ளது. இதில் பெருஞ்சாணி அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளியேற்றப் பட்டு வருகிறது.
- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39.95 அடியாக உள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தின் அணை பகுதிகளிலும், மலையோர பகுதிகளிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. பேச்சிப் பாறை, பெருஞ்சாணி அணைப்பகுதியில் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. சுருளோடு பகுதியிலும் கனமழை பெய்தது.
அங்கு அதிகபட்சமாக 55.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கும் மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 38.20 அடியாக உள்ளது. அணைக்கு 235 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 39.95 அடியாக உள்ளது. அணைக்கு 217 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 51 கன அடி தண்ணீர் வெளி யேற்றப்படுகிறது.
- சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம்
- அணையிலிருந்து குடிநீருக்காக 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் இரவு நேரங்களில் குளுகுளு சீசன் நிலவுகிறது. காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தாலும் இரவில் மழை பெய்து வருவதால் ரம்மியமான சூழல் நிலவுகிறது.
நேற்றும் பூதப்பாண்டி, தக்கலை, புத்தன் அணை பகுதிகளிலும் மழை பெய்தது. திற்பரப்பு அருவி பகுதியிலும் விட்டுவிட்டு மழை பெய்து வருவதால் குளுகுளு சீசன் நிலவுகிறது. அருவியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது. தற்பொழுது கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் திற்பரப்பில் குவிந்த வண்ணம் உள்ளனர். கேரளாவில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் இன்று வருகை தந்திருந்தனர்.
இதையடுத்து திற்பரப்பு அருவியில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பொதுமக்கள் குடும்பத்தோடு வந்து அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். திற்பரப்பு அருவியில் கூட்டம் அலைமோதியதையடுத்து அங்கு கடுமையான போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 38.50 அடியாக இருந்தது.
அணைக்கு 190 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 41.10 அடியாக உள்ளது. அணைக்கு 110 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து குடிநீருக்காக 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. தொடர் மழையின் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள பாசன குளங்களும் நிரம்பி வருகிறது.
200-க்கும் மேற்பட்ட குளங்கள் முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். சாகுபடி பணியில் விவசாயிகள் தீவிரம் காட்ட தொடங்கியுள்ளனர்.
நாகர்கோவில் :
தென்மேற்கு பருவமழை வருகிற 4-ந்தேதி தொ டங்கும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. இந்த நிலையில் குமரி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
குறிப்பாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. பேச்சிப் பாறை அணைப்பகுதியில் நேற்று 2-வது நாளாக பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக அங்கு மழை நீடித்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அங்கு அதிகபட்ச மாக 44 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை அணைக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிக ரித்துள்ளது.
பெருஞ்சாணி, புத்தன் அணை, சிற்றாறு, களியல் பகுதிகளிலும் மழை பெய்தது. மழையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திற்பரப்பு அருவி பகுதியில் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.
அருவியில் குளிப்பதற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து ஏராள மான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 44, பெருஞ்சாணி 19.8, சிற்றார் 1- 9.4, களியல் 12.8, குழித்துறை 12.4, புத்தன் அணை 17.2, குளச்சல் 3, பாலமோர் 7.5
அணை பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் குமரி மாவட்டத்தில் கிழக்கு பகுதிகளில் சுட்டெரிக்கும் வெயில் அடித்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் சுட்டெரிக்கும் வெயில் அடித்தது. கன்னியா குமரி, அஞ்சுகிராமம், ஆரல் வாய்மொழி பகுதியிலும் வெயில் கொளுத்தியது. வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்பட்டதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதற்கே சிரமப்பட்டனர். நாகர்கோ வில் பகுதியில் உள்ள சாலை களில் மதியம் நேரங் களில் கானல் நீராக காட்சி அளித்தது.
- சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
- அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.
குறிப்பாக பெத்த நாயக்கன்பாளையம், ஆத்தூர், கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான பகுதி களில் தண்ணீர் தேங்கியது. கோடைகாலத்தில் பெய்த மழை, பயிர்களுக்கு உகந்ததாக இருக்கும் என்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக பெத்தநாயக்கன்பாளை யத்தில் 7 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. ஆத்தூர் - 6, கெங்கவல்லி - 5, வீரகனூர் - 4, தலைவாசல் - 4 என மாவட்டம் முழுவதும் 26 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இன்று காலையும் வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.
- பெருஞ்சாணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறப்பு
- புத்தன் அணையில் அதிகபட்சமாக 3.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில் கொளுத்தி வருகிறது. மேற்கு மாவட்ட பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்றும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் சாரல் மழை நீடித்து வருகிறது.
புத்தன் அணையில் அதிகபட்சமாக 3.2 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. 50 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் இன்று 150 கனஅடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்துவிடப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 715 கன அடி தண்ணீர் வெளியே ற்றப்ப ட்டு வருகிறது. பேச்சி ப்பாறை அணையின் நீர்ம ட்டம் இன்று காலை 36.67 அடியாகவும், பெருஞ்சானி அணை நீர்மட்டம் 21.35 அடியாகவும் உள்ளது.
- சிற்றார் 2- 32.4 மில்லி மீட்டர் பதிவு
- பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது.
நாகர்கோவில் :
கன்னியாகுமரி மாவட் டத்தில் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.
இதனால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசியது. நாகர்கோவிலில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. இன்று காலையிலும் மழை பெய்தது. இதையடுத்து பள்ளிக்கு சென்ற மாணவ-மாணவிகள் குடை பிடித்த வாறு சென்றனர்.
தொடர்ந்து மழை விட்டு விட்டு பெய்து கொண்டே இருக்கிறது. இதனால் குளுகுளு சீசன் நிலவுகிறது. பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், ஆரல்வாய் மொழி, மயிலாடி, குளச்சல், அடையாமடை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது.
பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றாறு அணை பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. சிற்றாறு 2 அதிகபட்சமாக 32.4 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து அதிகரித்துள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவும் குறைக்கப்பட்டுள்ளது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 35.10 அடியாக உள்ளது. அணைக்கு 603 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 641 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 17.45 அடியாக உள்ளது. அணைக்கு 103 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை யின் நீர்மட்டம் 10.66 அடியாகவும், சிற்றாறு-2 அணை நீர்மட்டம் 10.76 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 12.10 அடியாகவும் மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாகவும் உள்ளது.
மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
பேச்சிப்பாறை 23.4, பெருஞ்சாணி 9.6, சிற்றாறு 1-26, சிற்றார் 2-32.4, மயிலாடி 1.6, இரணியல் 2, ஆணைக்கிடங்கு 1.2, அடையாமடை 7.2, முள்ளங்கினாவிளை 4.6, நாகர்கோ வில் 1.2, பூதப்பாண்டி 7.2, சுருளோடு 9.2, கன்னிமார் 9.6, பாலமோர் 18.6, புத்தன் அணை 8.8, திற்பரப்பு 9.6.
சாரல் மழையுடன் சூறைக் காற்றும் வீசி வருவதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மரங்கள் முறிந்து விழுந்து. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததில் மின்தடை ஏற்பட்டது.
நாகர்கோவில் நகரில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. கோட்டார் ரெயில் நிலையம் செல்லும் சாலையில் தென்னை மரம் முடிந்து விழுந்ததில் மின் வயர்கள் அறுந்து விழுந்தன. பார்வதிபுரம், கன்னியாகுமரி, சுங்கான்கடை பகுதிகளிலும் மரங்கள் முறிந்து விழுந்ததில் மின்கம்பங்கள் சேதம் ஏற்பட்டது. மின் வாரிய ஊழியர்கள் உடனடியாக அதை சரி செய்தனர்.
- பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 5 நாட்களில் 11 அடி உயர்வு
- மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாக உள்ளது.
நாகர்கோவில் :
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து இதமான குளிர் காற்று வீசி வருகிறது. நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்தது.
திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்யமான சூழல் நிலவுகிறது. இன்று காலையில் அங்கு மழை பெய்தது. அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது. அருவியில் குளிப்பதற்கு இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர்.
கன்னிமார், பூதப்பாண்டி, தக்கலை, மாம்பழத்துறையாறு, நாகர்கோவில் மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை பெய்தது. சிற்றாறு-2 அதிகபட்சமாக 11 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. மலையோர பகுதிகளிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
அணைகளின் நீர்மட்டமும் வெகுவாக உயர்ந்து வருகிறது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் கடந்த 5 நாட்களில் 11 அடி உயர்ந்துள்ளது. அணை நீர்மட்டம் இன்று காலை 28.60 அடியாக உள்ளது. அணைக்கு 294 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையிலிருந்து 20 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 35.93 அடியாக உள்ளது. அணைக்கு 972 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 646 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றாறு-1 அணை நீர்மட்டம் 11.31 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 11.41 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 12 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 3.28 அடியாக உள்ளது.
விட்டு விட்டு பெய்து வரும் மழையின் காரணமாக பாசன குளங்களிலும் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. இதையடுத்து விவசாயிகள் சாகுபடி பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த மழை விவசாயிகளுக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது. இதனால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.