search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஜாஜ் ஆட்டோ"

    • பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்திய சந்தையில் புது பல்சர் N160 மாடலை அறிமுகம் செய்தது.
    • இந்த மாடல் முற்றிலும் புது பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய பல்சர் N160 மோட்டார்சைக்கிள் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த மாடல் முற்றிலும் புதிய பல்சர் 250 பிளாட்பார்மில் உருவாகி இருக்கிறது. புதிய பல்சர் மாடலின் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வெர்ஷன் விலை ரூ. 1 லட்சத்து 23 ஆயிரம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் டூயல் சேனல் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 28 ஆயிரம் ஆகும்.

    தோற்றத்தில் புதிய பல்சர் N160 மாடல் பல்சர் N250 போன்றே காட்சி அளிக்கிறது. இதில் ப்ரோஜெக்டர் லென்ஸ் ஹெட்லேம்ப், எல்.இ.டி. டி.ஆர்.எல்.கள், பக்கவாட்டில் பல்சர் N250 மாடலில் உள்ளதை போன்ற பேனல்கள் வழங்கப்பட்டு உள்ளன. இந்த மாடலில் மிகப் பெரும் மாற்றமாக சிறிய என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது.


    பஜாஜ் பல்சர் N160 மாடலில் 164.82 சிசி, சிங்கில் சிலிண்டர், ஏர் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இந்த என்ஜின் 15.7 ஹெச்.பி. பவர், 14.65 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் முன்புறம் டெலிஸ்கோபிக் போர்க், பின்புறம் மோனோஷாக் யூனிட் உள்ளது. இதில் செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கிறது.

    புதிய பஜாஜ் பல்சர் N160 மாடல் சிங்கில் சேனல் ஏ.பி.எஸ். வேரியண்ட் ரேசிங் ரெட், டெக்னோ கிரே மற்றும் கரீபியன் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் டூயல் சேனல் ஏ.பி.எஸ். வேரியண்ட் புரூக்லின் பிளாக் நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.

    • பஜாஜ் பல்சர் பிளாக் எடிஷன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
    • இது புதிய தலைமுறை பல்சர் N250 சீரிசை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    பஜாஜ் ஆட்டோ நிறுவனம் இந்தியாவில் புது மோட்டார்சைக்கிள் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. புதிய பிளாக் எடிஷன் மாடல் பல்சர் N250 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு உள்ளது. டீசர் வெளியாகி இருப்பதை அடுத்து, புதிய பல்சர் 250 பிளாக் எடிஷன் மாடல் விரைவில் அறிமுகம் செய்யப்படலாம். புது மாடல் பற்றிய விவரங்கள் வெளியாகாத நிலையில், இந்த மாடல் பல்சர் N250 பிளாக் அல்லது N250 பிளாக் எடிஷன் என்று அழைக்கப்படுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    டீசர் தவிர இந்த மாடல் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. மேலும் இந்த பைக்கின் வெளியீட்டு தேதியும் அறிவிக்கப்படவில்லை. எனினும், இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த மாடல் பல்சர் N250 சீரிஸ் மாடல்களை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என தெரிகிறது. இதன் என்ஜின் பல்சர் N250 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படலாம். மெக்கானிக்கல் மாற்றங்கள் எதுவும் இன்றி இந்த மோட்டார்சைக்கிள் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்படும் என தெரிகிறது.


    புதிய பல்சர் N250 பிளாக் மாடல் பிளாக்டு-அவுட் எலிமண்ட்களை கொண்டிருக்கும் என எதிர்பார்க்கலாம். அதன்படி பிளாக் நிற என்ஜின் கவர்கள், எக்சாஸ்ட் சிஸ்டம் மற்றும் வீல்களை கொண்டிருக்கும் என தெரிகிறது. இன்த மாடலில் 249.07சிசி என்ஜின் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த என்ஜின் 24.5 பி.எஸ். பவர், 21.5 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது.

    டிரான்ஸ்மிஷனுக்கு 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்படலாம். இத்துடன் அசிஸ்ட் மற்றும் ஸ்லிப்பர் கிளட்ச், கியர் இண்டிகேட்டர், யு.எஸ்.பி. மொபைல் சார்ஜிங் போர்ட் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம்.

    ×