என் மலர்
நீங்கள் தேடியது "அதிகாரி"
- பயன்படுத்தாத செட்டாப் பாக்ஸ்களை ஜூலை மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது.
- மொத்தம் 532 ஆபரேட்டர்கள் நிறுவனத்துக்கு, கட்டண பாக்கியும் வைத்துள்ளனர்.
திருப்பூர் :
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி., நிறுவனம், கடந்த ஜூன் மாதம் கணக்கிட்டு பயன்படுத்தாத செட்டாப் பாக்ஸ்களை ஜூலை மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டுமென கேபிள் ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டது. பிறகு செப்டம்பர் மாதம் இறுதிவரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.
இது குறித்து அரசு கேபிள் டி.வி., நிறுவன தனி தாசில்தார் ரவீந்திரன் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தில் அரசு செட்டாப் பாக்ஸ்களை, ஆபரேட்டர்கள் பயன்படுத்தாமல் வைத்துள்ளனர். மொத்தம் 532 ஆபரேட்டர்கள் நிறுவனத்துக்கு, கட்டண பாக்கியும் வைத்துள்ளனர். இவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு முதல்கட்டமாக போலீசில் புகார் அளிக்கப்படுகிறது. திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையில் திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, வீரபாண்டி, அனுப்பர்பாளையம், பூண்டி போலீஸ் நிலையங்கள், அவிநாசி, சேவூர், ஊத்துக்குளி, பல்லடம், உடுமலை, அமராவதி, மூலனூர் நிலையங்களில் 14 பேர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 56 லட்சம் ரூபாய் அளவுக்கு பாக்கி வைத்துள்ளனர். ஒரு செட்டாப் பாக்ஸ் மதிப்பு 1,726 ரூபாய் என கணக்கிட்டு அதற்கான தொகையை செலுத்தக்கோரி போலீசில் புகார் அளித்து வருகிறோம். மொத்தம் 20 வகை பட்டியல் தயாரிக்கப்பட்டு, ஒவ்வொரு பட்டியல் வரிசைப்படி புகார் அளிக்கிறோம் என்றார்.
- சேலம் ரோட்டில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடை பகுதியில் உள்ள மருந்து கடையில் டிப்டாப் உடை அணிந்த நபர் ஒருவர் வந்தார். அவர் தான் மருத்துவ அதிகாரி என்று கூறினார்.
- சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பதும், குடிபோதையில் சுகாதாரத்துறை மருத்துவ ஆய்வாளர் என்று கூறி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது.
நாமக்கல்:
நாமக்கல்லில் ஏராளமான மெடிக்கல் மற்றும் மருந்து விற்பனை பிரதிநிதிகள் உள்ளனர். இவர்களை குறி வைத்து ஒரு கும்பல் மிரட்டி பணம் பறிப்பதாக அடிக்கடி புகார்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று சேலம் ரோட்டில் உள்ள ஒரு பிரபல ஜவுளிக்கடை பகுதியில் உள்ள மருந்து கடையில் டிப்டாப் உடை அணிந்த நபர் ஒருவர் வந்தார். அவர் தான் மருத்துவ அதிகாரி என்று கூறினார். தொடர்ந்து அங்கு இருந்த கடை உரிமையா–ளரிடம் மருந்து கடைக்கு உரிய அனுமதி பெறப்–பட்டுள்ளதா, காலாவதியான மருந்துகள் விற்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பிய அவர், பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.
இதனால் கடை ஊழியருக்கும், அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. சந்தேகம் அடைந்த அந்த கடை ஊழியர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரைப் பிடித்து வைத்துக்கொண்டு நாமக்கல் நகர போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். உடனே அங்கு விரைந்து வந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்தனர்.
அப்போது அவர் சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்த சுந்தர்ராஜன் என்பதும், குடிபோதையில் சுகாதாரத்துறை மருத்துவ ஆய்வாளர் என்று கூறி பணம் கேட்டு மிரட்டியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
- ஒரு சில அரசுப் பேருந்துகள் மகளிா் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதாகவும், சற்று தொலைவு தள்ளி நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
- ஓட்டுநா் சற்று தொலைவு தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்தியதுடன், அவா்களை ஓடிவந்து ஏறும்படி அலட்சியமாகத் தெரிவித்துள்ளாா்.
திருப்பூர்:
திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து பல்வேறு ஊா்களுக்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் மேற்கொள்ளும் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும், ஒரு சில அரசுப் பேருந்துகள் மகளிா் நிறுத்தினாலும் நிற்காமல் செல்வதாகவும், சற்று தொலைவு தள்ளி நிறுத்துவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இத்தகைய நிலையில், திருப்பூா் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து குன்னத்தூருக்கு அரசு பஸ் இயக்கப்பட்டது. இந்தப் பேருந்தில் ஏறுவதற்காக பழைய பேருந்து நிலையத்தில் மகளிா் சிலா் காத்திருந்தனா். இதனிடையே பேருந்து நிலையத்தை விட்டு கிளம்பியபோது மகளிா் சிலா் பேருந்தை நிறுத்தியுள்ளனா். ஆனால், ஓட்டுநா் சற்று தொலைவு தள்ளிச் சென்று பேருந்தை நிறுத்தியதுடன், அவா்களை ஓடிவந்து ஏறும்படி அலட்சியமாகத் தெரிவித்துள்ளாா்.
ஆகவே அரசுப் பேருந்துகளில் மகளிருக்கு உரிய மரியாதை அளிக்க வேண்டும் என்றும், அலைக்கழிக்கும் ஓட்டுநா், நடத்துநா் மீது உயா் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பெண் பயணிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து அரசுப் போக்குவரத்துகழக திருப்பூா் 2 கிளை மேலாளா் வடிவேலிடம் கேட்டபோது, அரசுப் பேருந்துகளில் மகளிரை அலைக்கழிக்கக்கூடாது என்று ஏற்கெனவே ஓட்டுநா், நடத்துநா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஆகவே பாதிக்கப்பட்ட மகளிா் புகாா் அளித்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.
- மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தை செயல்ப டுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது.
- அதன்படி சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பா ளராக காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சேலம்:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி சட்டத்தின்
27வது பிரிவின் கீழ் குறைகளை நிவர்த்தி செய்வதற்கும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை
உறுதி சட்டத்தை செயல்ப டுத்துவது தொடர்பான புகார்களை தீர்ப்பதற்கு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு குறைதீர்ப்பாளர் பணி உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி சேலம் மாவட்டத்திற்கான குறைதீர்ப்பா ளராக காந்திமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
பொதுமக்கள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணிபுரிபவர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் தொடர்பான குறைகள் மற்றும் புகார் ஏதும் இருப்பின் மேற்கண்ட குறைதீர்ப்பாளரின் தொலைபேசி மற்றும் slmombuds@gmail.com மின்னஞ்சல் முகவரி மூலம் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், அவரை அறை
எண்.211, 2-ம் தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சேலம்-636001 என்ற முகவரியில் நேரிலும் தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பாலச்சந்தர் தெரிவித்துள்ளார்.
- குடிநீர் திட்ட பணிகள் குறித்தும் ஆய்வு
- நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்ட கலெக்டராக பி.என். ஸ்ரீதர் இன்று பதவி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து நாகர்கோவில் கலெக்டர்அலுவலகத்தில் அனைத்து துறை அதி காரிகளுடன் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை மேற் கொண்டார். கூட்டத்தில் கலெக்டர் பொறுப்புகளை ஒப் படைத்த அரவிந்த், நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த மோகன், சப்-கலெக்டர் கவுஷிக், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, தேசிய நெடுஞ்சாலை நிலம் எடுப்பு வருவாய் அதிகாரி ரேவதி, நாகர்கோவில் மாநகராட்சி மாநகர நல அதிகாரி ராம்குமார், என்ஜினீயர் பாலசுப்பிரமணியன், உதவி கலெக்டர் குணால் யாதவ், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் நடை பெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.நாகர்கோவில் மாநகரப் பகுதியில் நடைபெற்று வரும் வளர்ச்சி பணிகள் குறித்தும் கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் கேட்டறிந்தார். குடிநீர் திட்ட பணிகள், சாலை மேம்பாட்டு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
- செல்போனை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்
- கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு
நாகர்கோவில்:
தமிழகத்தில் கோவை, நெல்லை, தூத்துக்குடி உள்பட பல்வேறு இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று சோதனை மேற் கொண்டனர். கோவையில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு டையவர்கள் வீடுகளிலும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தூத்துக் குடியில் உள்ள காஜா முகைதீன் வீட்டிற்கு டெல்லி யில் இருந்து வந்த என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் கணேஷ் பாபு தலைமையிலான குழுவினர் சென்றனர். அப்போது காஜா முகைதீன் கடந்த சில ஆண்டுகளாக நாகர்கோவிலில் வசித்து வருவது தெரிய வந்தது.
இதையடுத்து என்.ஐ.ஏ. இன்ஸ்பெக்டர் கணேஷ் பாபு தலைமையில் 3 பேர் இன்று காலை நாகர்கோ விலுக்கு வந்தனர். அவர் கள் நாகர்கோவில் இசங்கன் விளையில் உள்ள காஜா முகைதீன் வீட்டிற்கு சென்ற னர். வீட்டில் இருந்த காஜா முகைதீனிடம் விசாரணை நடத்தப்பட்டது. காலை 9 மணிக்கு தொடங்கிய விசாரணை பகல் 12 மணி வரை நடந்தது. சுமார் 3 மணி நேரம் காஜா முகைதீனிடம் என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
இதை தொடர்ந்து அவரது செல்போனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இங்கிருந்து புறப்பட்டு தூத்துக்குடிக்கு சென்றனர்.
- 25 கிலோ தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
- பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக எச்சரிக்கை நோட்டீசும் கொடுக்க நடவடிக்கை
கன்னியாகுமரி:
தமிழ்நாடு மாசு கட்டுப் பாட்டு வாரியத்தின் குமரி மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டிய ராஜன் தலைமையில் உதவி மேலாளர்நாகராஜன், உதவிசுற்றுச் சூழல் பொறி யாளர் கலைவாணி, உதவி பொறியாளர் ஜெனிஷா, கன்னியாகுமரி சிறப்பு நிலைபேரூராட்சி சுகாதார அதிகாரிமுருகன் சுகாதார மேற்பார்வையா ளர் பிரதீஷ் மற்றும் அதிகாரிகள் கன்னியாகுமரியில் உள்ள ஓட்டல் மற்றும் கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னார்கள்.
கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் சங்கிலித் துறை கடற்கரைபகுதி, சன்னதி தெரு, ரத வீதிகள், மெயின் ரோடு, பழைய பஸ் நிலைய ரவுண்டானா சந்திப்பு, கடற்கரை சாலை உள்பட பல்வேறு இடங்களில் 150-க்கும் மேற்பட்ட ஓட்டல் மற்றும் கடைகளில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது ஒரு சில கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தி யது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தகடைகளில்இருந்து மொத்தம் 25 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும ஒரு சில கடைகளுக்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தியதற்காக எச்சரிக்கை நோட்டீசும் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
- காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.
- குளிர்சாதன பெட்டியில் சமைத்து வைக்கப்பட்ட சிக்கன் இருப்பது தெரிய வந்தது.
திருப்பூர் :
திருப்பூர் அவினாசி ரோடு புஷ்பா சந்திப்பு அருகே செயல்படும் ஒரு பேக்கரியுடன் கூடிய உணவகத்தில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதன் பேரில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த கடையில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, குளிர்பானங்கள், தின்பண்டங்கள் உள்பட அனைத்து உணவு பொருட்களையும் சோதனை செய்தனர். குளிர்சாதன பெட்டிகள் முறையாக பராமரிக்கப்படுகிறதா? சமைத்த அசைவ உணவு குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்கப்படுகிறதா? காலாவதி உணவுப் பொருட்கள் கொண்டு சமைக்கப்படுகிறதா? என்றும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் குளிர்சாதன பெட்டியில் சமைத்து வைக்கப்பட்ட சிக்கன் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அங்கிருந்த கெட்டுப்போன 2 கிலோ சிக்கனை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர்.
இதுகுறித்து உணவு பாதுகாபபுத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை கூறும்போது, இதுபோன்ற தொடர் ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடத்தப்படும் என்றும், விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். இதுதொடர்பான புகார்களை பொதுமக்கள் 94440-42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
- அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் வாலிபர்கள் ஈடுபட்டனர்
- பன்றிகளை பிடிக்கும் முயற்சி
அரியலூர் :
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சி பகுதியில் பொதுமக்களுக்கும் சுகாதா ரத்திற்க்கும் கேடு விளைவிக்கும் வகையில் நகர் முழுவதும் சுற்றித்திரியும் பன்றிகளை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக நகராட்சிக்கு கோரிக்கை விடுத்திருந்தனர்.
அதனடிப்படையில் நகர் மன்ற தலைவர் சுமதி சிவகுமார், துணைத் தலைவர் கருணாநிதி, நகராட்சி ஆணையர் மூர்த்தி, ஆகியோர் ஜெயங்கொண்டம் நகர் பகுதியில் சுற்றி திரியும் பன்றிகளை பிடிக்க உத்தரவிட்டனர். உத்தரவின் பேரில் சுகாதார ஆய்வாளர் சாம்கர்னல் தலைமையில் தூய்மை இந்தியா திட்டம் மேற்பா ர்வையாளர் ரமேஷ், துப்புரவு பணி மேற்பா ர்வையாளர்கள் நகர் பகுதி முழுவதும் சுற்றித்திரிந்த பன்றிகளை பிடித்தனர்.
அப்பொழுது பன்றிகளை வளர்க்கும் இளை ஞர்களுக்கும் நகராட்சி அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்கு வாதம் ஏற்பட்டது அப்போது ஆத்திரமடைந்த இளைஞர்கள் வண்டிகளை அடித்து உடைத்து விடுவதாக கூறியதால் மேலும் பதட்டமான சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் பன்றிகளை வளர்ப்போர் அதற்கான வழிமுறைகளுடன் வளர்க்க வேண்டும் நகர் பகுதியில் சுற்றி திரியும் பன்றிகள் தொடர்ந்து பிடிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
- கூடுதல் விசாரணை நடத்த ரவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளார்.
- விசாரணை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள வனவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-1 தேர்வு மையம் அமைக்கப்பட்டு உள்ளது. கடந்த 20-ந் தேதி இந்த தேர்வு மையத்தில் பொருளியல் தேர்வு நடைபெற்றது. அப்போது இந்த தேர்வு மையத்தின் ஒரு அறையில் சரியாக படிக்காத மாணவர்களை புத்தகத்தை பார்த்து எழுத மைய முதன்மை அலுவலர் ரவி அனுமதித்தாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக 8.30 நிமிட ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் உதவியாளர் மகாலிங்கம் தொலைபேசி அழைப்பில் தேர்வு மைய முதன்மை அலுவலர் ரவியிடம் புத்தகத்தை பார்த்து எழுவதை நீங்கள் கண்டு கொள்ளவில்லை. இது எல்லாருக்கும் பிரச்சினை ஆகி விடும் என்று கூறுகிறார்.
அப்போது பேசிய தேர்வு மைய முதன்மை அதிகாரி ரவி அவர்களுக்கு பாடங்கள் தெரியாது. அதனால் எழுதி தேர்ச்சி பெறட்டும் என்று விட்டு விட்டேன் என்று கூறுகிறார்.
இந்த ஆடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.
மேலும் இதுபற்றி கூடுதல் விசாரணை நடத்த ரவியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டு உள்ளார். விசாரணை நடத்திய பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- சட்ட விதிமுறைகளை கடைபிடித்துதான் ஆகவேண்டும்.
- ஆண்டு வரி கணக்குகளை உரிய காலத்துக்குள் முறையாக தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.
திருப்பூர் :
திருப்பூர் தென்னிந்திய பின்னலாடை உற்பத்தி யாளர் சங்க(சைமா) அரங்கில் நடந்த பின்ன லாடை துறையினர் சந்திப்பு கூட்டத்தில் வணிக வரித்து றை துணை கமிஷனர் முருக குமார் பேசியதாவது:- அதிகாரிகளானாலும் தொழில்முனை வோரா னாலும் சட்ட விதிமுறை களை கடைபிடித்துதான் ஆகவேண்டும். ஜி.எஸ்.டி., பதிவு எண் பெற்ற ஆடை உற்பத்தியாளர்கள், மாதா ந்திர ஆண்டு வரி கணக்கு களை உரிய காலத்து க்குள் முறையாக தாக்கல் செய்ய வேண்டியது அவசியம்.
ஆடிட்டர்கள் கவனித்து க்கொண்டாலும்கூட, நிறுவன உரிமையாளர்களும், வரி சார்ந்த அடிப்படை அம்சங்கள் குறித்து தெரிந்து வைத்திருக்கவேண்டும். ஒரு பொருள் அல்லது சேவையை பெறுபவர் மட்டுமின்றி அதனை வழங்குபவரும் முறையாக கணக்கு தாக்கல் செய்யவேண்டும். ஒரு தரப்பினர் கணக்கு தாக்கல் செய்யவில்லை யெ ன்றாலும், அது தொடர்பில் உள்ள மற்ற வருக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். எனவே, முறையாக ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் செய்வோருடன் மட்டும் வர்த்தக தொடர்புவைத்துக் கொள்ளவேண்டும். கணக்கு தாக்கல் செய்யாதது, முரண்பாடு உட்பட பல்வேறு காரண ங்களுக்காக வணிக வரித்து றையிலிருந்து நோட்டீஸ் வந்தால் பயப்பட வேண்டாம்.
நோட்டீஸ் அனுப்ப ப்பட்டால் உங்கள் நிறு வனம் சார்ந்த ஆடிட்ட ர்களிடம் வழங்கியோ அல்லது வணிக வரித்துறை அலு வலகத்தை அணுகியோ தெரிவித்து விளக்கம் பெ றலாம். நோட்டீ ஸ்களுக்கு உரிய காலத்து க்குள் சரியான பதில் அளிக்கவேண்டும். கால நீட்டிப்பு கேட்டுப் பெற லாம். இவ்வாறு அவர் பேசினார்.
- அதிகாரிகளுக்கு தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. பாராட்டினார்.
- கொள்முதல் நிலையம் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழிற்பேட்டை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ராஜபாளையம்
ராஜபாளையம் தொகுதியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மானியக்கோரிக்கையில் ராஜபாளையம் தொகுதியில் விவசாயிகளின் 50 வருட கோரிக்கையான மாம்பழம் பதப்படுத்துதல் மற்றும் மாழ்பழக்கூழ் தொழிற்பேட்டை, தேங்காய் கொள்முதல் நிலையம் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழிற்பேட்டை அமைக்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இந்த தொழிற்பேட்டை அமைக்க நிலம் எடுத்துத்தர முழு ஒத்துழைப்பு வழங்கிய வட்டாட்சியர் ராமச்சந்திரன், துணை வட்டாட்சியர் கோதண்டராமன், மற்றும் வருவாய்த்துறை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர், நில அளவையர்கள், தலையாரிகள் என அனைவரையும் தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சந்தித்து அவர்களுக்கு ராஜபாளையம் தொகுதி விவசாயிகள் சார்பிலும், ராஜபாளையம் தொகுதி பொதுமக்களின் சார்பிலும் பாராட்டு தெரிவித்தார்.